5 Apr 2017

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் கால்களை கழுவி குடிப்பது குறித்து நமது மறுப்பு.

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் மீது பரேல்விகளின் பொய்யான அபாண்டமும் நமது மறுப்பு:

கால்களை கழுவி குடித்தல் குற்றச்சாட்டு:

அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் கால்களை கழுவி குடிப்பது மறுமையின் வெற்றிக்கு காரணமாகும்.

(தத்கிரதுர் ரஷீத் 1/113)

நமது மறுப்பு:

குற்றச்சாட்டை சுமத்தும் பரேல்விகள் நூல்களை புரட்டிப் பார்த்திருந்தால் இது போன்ற அறியாமை நிறைந்த வாதத்தை வைத்திருக்க மாட்டார்கள்.

پاووں دھو دھو کر پینا 

உர்து அகராதியில் இதனின் அர்த்தம் எல்லையற்ற கண்ணியம் அல்லது நேசம் அல்லது கட்டுப்படுவதை வெளிப்படுத்தும் இடம்,கட்டுப்படுதல், செவி சாய்த்தல் (நூருல் லுஹாத் 1/790)

கண்ணியம்,சங்கை செய்தல்,மிகவும் நேசித்தல், கட்டளை ஏற்குதல் (ஃபைரோஜுல் லுஹாத்)



ஆக சுருக்கம் என்னவெனில் ஹள்ரத் தானவி (ரஹ்) அவர்கள் இறைநேசர் என்ற கண்ணோட்டத்தில் அணுகும் போது அன்னாருக்கு கட்டுப்படுவது,நேசிப்பது மறுமை நாளின் வெற்றிக்கு காரணியாகும்.

பரேல்விய அறிஞர் அஹ்மத் யார் குஜராத்தி எழுதியுள்ளார்:

நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவது போன்று மார்க்கத்தின் அறிஞருக்கு கட்டுப்படுவது நபி ஸல் அவர்களுக்கு கட்டுப்படுவதாகும்.
(தப்ஸீர் நூருல் இர்ஃபான் 106)




மார்க்க அறிஞருக்கு கட்டுப்படுவது நபிக்கு கட்டுப்படுவது என்பதாக பரேல்வி அறிஞர் கூறுவதன் மூலம் ஹள்ரத் தானவி (ரஹ்)அவர்களுக்கு கட்டுப்படுதல் மறுமை வெற்றிக்கு காரணியாக இருக்கும்.ஏனெனில்
நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவது மறுமை வெற்றிக்கு காரணியாக இருக்கும் போது மார்க்க அறிஞருக்கு கட்டுப்படுவதும் மறுமை வெற்றிக்கு காரணியாகும்.

இறுதியாக முஃப்தி யார் குஜராத்தி கூறுவதை பரேல்விகள் பார்க்கட்டும்! வெட்கமுற்று செத்து தொலையட்டும்!

முஃப்தி அஹ்மத் யார் குஜராத்தி:

பெரியோர்களை பார்ப்பது,அவர்களின் கால்களின் நீரானது தூய்மையான பானம் இதன் மூலம் உடல் மற்றும் ஆன்மாவின் நோயிலிருந்து நிவாரணம் பெறப்படும்.
(நூருல் இர்பான் 875)




ரோஷமும் வெட்கமுள்ள பரேல்விகள் முஃப்தி யார் குஜராத்தி சொல்வதை பார்த்து செத்துவிடுவார்கள் என எண்ணுகிறோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live