4 Apr 2017

மெளலானா மெளலவி தாரிக் ஜமீல் தாமத் பரகாதுஹும் அவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டும் நமது பதிலும்.

தேவ்பந்திகளின் வீட்டு சண்டை என்பதாக பரேல்வியின் குற்றச்சாட்டிற்கு தக்க பதில்:

பரேல்வியின் குற்றச்சாட்டு தேவ்பந்த் பெரியோர்கள் மெளதூதி அவர்களை வழிகேடர் என்கின்றனர்.மெளலானா தாரிக் ஸாஹிப் மெளதூதியை புகழ்ந்து கூறுகிறார்.

இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரேல்விகளின் அறியாமையின் வெளிப்பாடு.
எவரைக் குறித்து வழிகேடர் காபிர் என்பதாக தீர்ப்பு அளிப்பதானது  ஆய்வு ரீதியானது தக்லீத் அல்ல. ஒருவரின் வழிகேடான கொள்கையை அறிந்து வழிகேடர் என்பதாக  தீர்ப்பு அளிப்பது,எனினும் அவரின் கொள்கையை அறியாதவர் நற்சான்று அளிப்பது குற்றமாகிவிடாது.

ஆக ஒருவரைக் குறித்து நல்லவர் அல்லது தீயவர் என்பது அவரின் கொள்கையை நிலைப்பாட்டை அறிவதன் மீது தான் அமைந்துள்ளது. ஒருவரின் நிலைப்பாட்டை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவரைக் குறித்த தீர்ப்பிலும் கருத்து வேறுபாடு ஏற்படும்.

பிக்ஹில் பிரபல்யமான கருத்து வேறுபாடு:

ஸாபியீன்களை இமாம் அஃளம் (ரஹ்) அவர்கள் வேதக்காரர்கள் என்பதாக கருதுகிறார்கள்.இமாம் அவர்கள் திருமணம் முடிப்பதை  அனுமதி என்கிறார்கள்.(ஸாஹிபைன்) இமாமின் இருமாணவர்கள் இப்பிரிவினரை நெருப்பு வணங்கி என்கிறார்கள்.இதனால் நிகாஹ் செய்வது கூடாது என்கிறார்கள்.

இதனை முன்வைத்து இமாம் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் தீர்ப்பையும் இருவரின் தீர்ப்பையும் குறித்து, ஹள்ரத்  தாரிக் ஜமீல் மெளலானாவின் மீது சுமத்தும் குற்றச்சாட்டை போன்று
இமாம்களின் மீது சுமத்துபவர் பெரும் அநியாயக்காரராக அறிவிலியாக தான் இருக்க முடியும்.

இது குறித்து நூற்றுக்கணக்கான ஆதாரங்களை தரமுடியும்.பரேல்விகளுக்கு எதிராக நாம் அடுக்கடுக்கான வலுவான ஆதாரங்களை முன்வைத்தாலும் எந்த தாக்கமும் ஏற்படபோவதில்லை.அவர்கள் தங்களின் பிடிவாதத்தின் மீது நிலைத்து நிற்பார்கள்.

பரேல்விய ஹனீஃப் குரைஷி ஒருவரைக்கு குறித்து புகழ்ந்துரைக்கிறார். இதனை குறித்து ஜைத் ஹாமித் என்ற பரேல்வி ஹனீஃப் குரைஷியை குறித்து எழுதுகிறார்:

حنیفی قریشی کا بیان بے خبری اور حسن ظنی پر مبنی ہے

 ஹனீஃப் குரைஷி கூறியது அறியாததின் பேரில் அமைந்துள்ளது.நல்ல எண்ணத்தில் மீது அமைந்துள்ளது.

இதே பதிலை நாம் பரேல்விகளுக்கு கூறுகிறோம் தாரிக் ஜமீல் ஹள்ரத் அவர்கள் அறியாததின் பேரில் கூறிவிட்டார்கள்.நல்ல எண்ணத்தின் மீது அமைந்துள்ளது.

(ஆதாரம்:
http://www.islamimehfil.com/topic/14987-%DA%A9%DB%8C%D8%A7-%DB%8C%D9%88%D8%B3%D9%81-%DA%A9%D8%B0%D8%A7%D8%A8-%D8%A8%DA%BE%DB%8C-%D9%85%D8%B3%D9%84%D9%85%D8%A7%D9%86-%D8%AA%DA%BE%D8%A7%D8%9F-%DB%8C%D8%A7-%D9%88%DB%81-%DA%A9%D8%A7%D9%81%D8%B1-%D9%88%DA%AF%D9%85%D8%B1%D8%A7%DB%81-%D8%AA%DA%BE/)

மெளலானா அவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.உண்மையில் சத்தியத்தை, அசத்தியத்தை அறிய வேண்டும் என்பதாக ஆசையிருந்தால் மெளதூதி அவர்களை குறித்து நமது பெரியோர்களின் தீர்ப்புகளை காண்பித்து தெளிவுப்படுத்தும்படி கேளுங்கள்!

பரேல்விய மெளலவி மன்ஜுர் அஹ்மத் பைஜ் உம்ததுல் முஃபஸ்ஸிரீன் ஹாபிள் இப்னு கஸீர் ரஹ் அவர்களை குறித்து எழுதுகிறார்:

 இப்னு தைய்மிய்யாவின் அனைத்து வழிகேடுகளையும் முழுமையாக பின்பற்றியவர் இப்னு கஸீர்.
 (நூல் மகாமே ரஸுல் 209)


பரேல்விகளால் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள்  வஹ்ஹாபி என்பதாக விமர்சிக்கப்பட்டடவர் பழித்துரைக்கப்பட்டவர்
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இவரை முழுமையாக பின்பற்றுபவரும் பரேல்விகளின் கண்ணோட்டத்தின்படி வஹ்ஹாபி

பரேல்வி சுல்தானுல் முனாஜிரீன் மெளலவி அஷ்ரப் ஸய்யாலவி கூறுகிறார்கள்;

 حافظ ابن کثیر علیہ الرحمہ

(நூல்:தஹ்கீகாத் 103)


வஹ்ஹாபிகளை குறித்து 'அலைஹிர் ரஹ்மா, என்பதாக பிரார்த்தனை புரிந்தால் இவரைக் குறித்து பரேல்விய ஷரீஅத்தில் என்ன தீர்ப்பு? பரேல்விகளே பதில் கூறுங்கள்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live