3 Apr 2017

அஷ்ரஃப் அலி தானவி(ரஹ்) அறைக்கு மாணவர்கள் தனியாக செல்லுவதற்கு தடை ! ஏன் ? பரேலவிகளை வாயடைக்கச் செய்யும் பதில்.

பரேலவிகளின் குற்றச்சாட்டும் நமது பதிலும் இதில் உள்ளது.

https://youtu.be/xJpzeQ_XRiE

அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டும் மறுப்பும்:

பரேல்விகளின் அசுத்தமான நம்பிக்கைகள்.

ஆபாசத்திற்கும் அசிங்கத்திற்கும் தகுதியானவர்கள் பரேல்விகள்தான். தேவ்பந்தின்
அசிங்கமான கனவுகள் என்பதாக பரேல்விய அறிவிளி ஆரம்பிக்கிறார்.முதலில் மனிதர்
என்றால் நாணமும் வெட்கமும் வேண்டும்.பரேல்விகள் நாணம் வெட்கமின்றி இந்த
குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.கனவுகள் குறித்து நமது நிலைப்பாட்டை நமது
நூல்களிலிருந்தும், பரேல்விய நூல்களிலிருந்தும் எத்தனை முறை எடுத்து காண்பித்த
போதும் திரும்ப திரும்ப குற்றம் சுமத்துவது செவிடன் காதில் ஊதும் சங்கைப்
போன்றுதான் உள்ளது.பரேல்விகளின் மரமண்டைக்கு எத்தனை முறை எடுத்து கூறினாலும்
உரைப்பதில்லை.

தேவ்பந்திகளின் அசிங்கமான கனவுகள் என்பதாக பரேல்விகள் வாதமும் அதற்கு நமது
வாயடைக்க செய்யும் பதிலும்:

ஒரு தடவை கூறினார்கள்
ரஷீத் அஹ்மத் கங்கோஹியான
நான், 'மெளலவி முஹம்மது காசிம் ஸாஹிப் அவர்களை மணமகன் தோற்றத்தில் கனவில்
பார்த்தேன்.எனக்கு அவரின் மூலம் திருமணம் நடைபெற்றது.கணவன் மனைவிக்கு
மத்தியில் ஒருவொருக்கொருவர் பலன் பெறுவார்களோ அவ்வாறு எனக்கு அவரின் மூலமும்,
அவர் என்னின் மூலமும் பலன் பெற்றார்.

இதற்கு அல்லாமா இப்னு சீரின் ரஹ் அவர்களின் விளக்கம் :

من راى انه ينكح رجلا
فان كان ذلك
الرجل مجهولا و هو شاب فإنه يظفر بعدوه وان كان معروفا و ليس
بينهما عداوة فان المفعول يصيب من الفاعل خيرا

அறியாத நபர் வாலிபராக இருக்கும்
நிலையில் இவரை ஒருவர் திருமணம் செய்வதாக கனவு காண்கிறார்.இதனின் விளக்கம்
விரோதியை வெற்றிகொள்வார். அறிந்தவராக இருவருக்கும் மத்தியில் விரோதம்
இல்லையெனும் போது கனவு கண்டவரிடமிருந்து கனவில் அறியப்பட்டவர் நலவை
பெறுவார்.

(ஆதாரம்: தஃபீருர் ருஃயா)
இதனை வரலாறும் சான்றளிக்கிறது.

ஹள்ரத் கங்கோஹி (ரஹ்) அவர்கள் ஹள்ரத் நானூதவி (ரஹ்)
அவர்களிடமிருந்து வெறும் நலவுகள் மட்டுமல்ல.மாறாக எண்ணற்ற ஏராளமான நன்மைகளை
பெற்றுள்ளார்கள்.மேலும் ஹள்ரத் ரஷீத்  கங்கோஹி (ரஹ்)
அவர்கள் அல்லாமா அப்துல்
கனி (ரஹ்) அவர்களின் கனவின் விளக்கத்திற்கு முற்றிலும் பொருந்துகிறார்.கனவை
குறித்து கூறும் போது அதனின் விளக்கத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.அதனை
பரலேவிகள்  அறியவில்லை அல்லது அறிந்தும் மறைத்துவிட்டனர்.

அதனின் விபரம்:

எனக்கு அவரின் மூலம் அவருக்கு என்னின் மூலம் நன்மை ஏற்படுகிறது.எவ்வாறு கணவன்
மனைவிக்கு மத்தியில் ஒருவர் மற்றவரிடமிருந்து நன்மையை பெறுவாரோ அதைப்
போன்றாகும்.அவர்கள், ஹள்ரத் (ரஹ்)  அவர்களை புகழ்ந்தவாறு நம்மை
முரீதாக்கினார்.(சிஷ்யர்) நாம் ஹள்ரத் அவர்களிடமிருந்து சிபாரிசு பெற்று
அவர்களின் முரீதாக்கிவிட்டோம்.

ஆதாரம் தத்கிரதுர் (ரஷீத் பாகம்:2 பக்கம்:289)

ஆபாசமான கனவிற்கு அற்புதமான விளக்கத்தை எழுதி வைத்த இமாம் இப்னு ஸிரீன் (ரஹ்)
அவர்களை அசுத்தமான நம்பிக்கையாளர் என சித்தரிக்க தயாரா? (அல்லாஹ்
பாதுகாப்பானாக!)

பரலேவி ஷைகுல் ஹதீஸ் தப்ஸீர் பைஜ்மில்லத் பைஜ் அஹ்மத் உவைஸி
எழுதியுள்ளார்:

ஒருவர் தான் பிறரிடம் ஒன்று சேர்வதாக கனவு கண்டால் அத்துடன்
எவரைக் கண்டாரோ அவர் கண்ணியமானவராக இருந்தால் கனவு காண்பவர் நலவுகளை
பெறுவார்.
(ஆதாரம் கவாபோ கி தஃபீர்)

ஆபாசமான கனவிற்கு அற்புதமான விளக்கத்தை எழுதி வைத்த பரலேவி ஷைகுல் ஹதீஸ்
தப்ஸீர் பைஜ்மில்லத் பைஜ் அஹ்மத் உவைஸி அவர்களை அசுத்தமான நம்பிக்கையாளர் என
சித்தரிக்க தயாரா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

உண்மையில் புத்தி மழுங்கியவர்கள்தான் பரேல்விகள். கனவு குறித்த விளக்கத்தை
பார்த்திருந்தால் புரிந்திருக்கும்.கோட்டாவிற்கு செல்லும் நேரத்தை
குறைத்திருந்தால் மார்க்க நூல்களை புரட்டி பார்த்திருக்கலாம்.

மஜாலிஸே ஹகீமுல் உம்மத்தில் வருகிற சம்பவமும் அதன் உண்மை நிலையும்:

இளவயது சிறுவர்களிடத்தில் கலந்துறவாடுவதில் பேணிக்கை அவசியம் நூல்கள் எழுதும்
அறையில் தனியாக இருக்கும் போது இளவயது   சிறுவர்களை அனுப்பவேண்டாம்!
எனகூறியிருந்தேன்.
எனக்கு என் உள்ளத்தின் மீது நம்பிக்கை இல்லை.இதனின் தாக்கமானது மெய்ஞான
சபைகளில் உள்ள அனைவரும் சிறுவர்களிடம் பேணுதலை பேணிக்கையை கடைப்பிடிக்க
ஆரம்பித்தார்கள்.இந்த சம்பவத்தில் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் பேணிக்கையையும்
இறையச்சைத்தையும் அறியமுடிகிறது.மாணவர்கள் வரவேண்டாம் என்பதாக வரவில்லை.இது
பரேல்விகளின் திரிபு.மாறாக இளவயது சிறுவர்கள் என்றுதான்
வந்துள்ளது.இவர்களிடத்தில் பேணிக்கையாக இருப்பது ஆபாசமா?

இளவயது சிறுவர்களிடம் பழகுவது குறித்து பரேல்வி நூல்களை இனி காண்போம்!

'ஜஹன்னம் மே லேஜானே வாலே  அஃமால்'
என்ற நூலில்
ஒரு தாபியி கூறுகிறார்:

வணக்கசாலியான வாலிபர்களுடன் சிறுவர்கள் அமர்வதை ஏழு
கீறிகிழிக்கும் பறவைகளை விட பெரும் அபாயமாக கருதுகிறேன்.எவரும் இளவயது
சிறுவருடன் தனியாக இரவு கழிக்க வேண்டாம்.தாபியி கூறுவது ஆபாசமா?  அசிங்கமா? பரேல்விகளே பதில் கூறுங்கள்!

இதனால் தான் நல்லோர்கள் இளவயது சிறுவர்களை பார்ப்பது அவர்களுடன்
கலந்துறவாடுவதையும்  அமருவதை விட்டும் தவிர்ந்து கொள்ள வலியுறுத்தினார்கள்.

ஹள்ரத் ஸய்யித் ஹஸன் இப்னு தக்வான் கூறுகிறார்கள்: 

தலைவர்களின் (இளவயது)
குழந்தைகளுடன் அமராதீர்.அவர்களின் தோற்றம் கன்னிப் பெண்ணின் தோற்றத்தைப்
போன்றது.அவர்கள் பெண்களை விட குழப்பத்தில் போடுபவர்கள்.

பெண்களை போன்று வீடு,கடை, குளியல் அறையில் இளவயது சிறுவருடன் கலந்து இருப்பதை
ஹராம்  என்பதாக உலமாக்கள் கூறுகிறார்கள்.

ஹள்ரத் ஸய்யித் ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்)அவர்கள் ஒரு முறை குளியலறையில்
நுழைந்தார்கள்.அன்னாரிடத்தில் அழகான சிறுவர் வந்தார்.அன்னார் கூறினார் அவரை
என்னை விட்டு தூரமாக்குங்கள்! ஏனெனில் பெண்களுடன் ஒரு ஷைத்தான் உள்ளான்.இளவயது
சிறுவருடன் 17 ஷைத்தான்களை பார்க்கிறேன்.

ஒருவர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் சபைக்கு வந்தார்.அவருடன்
அழகான சிறுவர் இருந்தார்.உன்னுடன் இருப்பவர் யார்? என கேட்டார்கள்.அதற்கு அவர்
கூறினார் எனது மருமகன்
அதற்கு அன்னார் கூறினார் இனி வரும் காலங்களில் இவரை அழைத்து வரவேண்டாம்!
அவருடன் செல்லாதீர்! அவரையும் உன்னையும் அறியாதவர்கள் தவறாக எண்ணி கொள்ள
வேண்டாம்!
கபீலா அப்துல் கைஸ்,
அண்ணலார் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு
வந்த பொழுது அவர்களுடன் அழகான சிறுவர் இருந்தார்.நபி (ஸல்)
அவர்கள் சிறுவரை தனது முதுகுக்கு பின்னால் அமரவைத்து கூறினார்கள். ஹள்ரத்
தாவூத் (அலை)
அவர்களுக்கு பார்வையின் மூலம் தான் சோதனை ஏற்பட்டது.(நூல்:ஜஹன்னம் மே லேஜானே
வாலே  அஃமால் பக்கம்:31,32,33)ஹள்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்கள் ஸய்யிதுனா அபூஹனீபா (ரஹ்)
அவர்களின் சமூகத்திற்கு வந்த பொழுது இளவயது சிறுவராகவும் அழகாகவும்
இருந்தார்கள். இமாம் அவர்கள் அன்னாரின் தலையை மழிக்கும் படி
கட்டளையிட்டார்கள்.தலையை மழித்த பிறகும் அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக
அவர்களை இமாம் தனக்கு முன்னால் அமரவைக்கவில்லை.மாறாக பார்வை படாமல் இருக்க
சுவற்றுக்கு பின்னால் அமரவைத்தார்கள்

(நூல்: அம்ரத் பஸந்தி கி தபாஹ் காரியா மஅ பர்பாத் ஜவானி)இந்த சம்பவங்கள் அனைத்தும் நல்லோர்கள் இளவயது சிறுவர்களுடன் நடந்து கொண்ட
பேணிக்கையான வாழ்விற்கு எடுத்து காட்டாகும்.ஹள்ரத் தானவி (ரஹ்) அவர்களின்
நூல்களில் வந்துள்ள ஒரு சம்பவத்தை குறித்து அசுத்தமான நம்பிக்கைகள் என
தலைப்பிட்ட

பரேல்விகள் உண்மையில் திராணி இருந்தால் அவர்களின் பெரியோர்களின் நூல்களில்
உள்ள சம்பவங்களுக்கு ஆபாசமான அசிங்கமான தலைப்பிட தயாரா?

அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் இந்த சம்பவத்தில் எனது உள்ளத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதாக கூறியதால் தான் ஆபாசமான நம்பிக்கை என பரேல்விகள் வாதிட்டால் நமது பதில் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் முஹம்மது ரஹ் அவர்களின் தலையை மழிக்க சொல்லி கட்டளையிட்டார்கள் பிறகும் அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக தனக்கு முன்னால் அமரவைக்கவில்லை.
மாறாக சுவற்றுக்கு பின்னால் அமரவைத்தார்கள்.

இந்த சம்பவத்தில் அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக என்பது எதனை நமக்கு புரியவைக்கிறது.அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் குறித்து பரேல்விகள் எதனை அசிங்கமான நம்பிக்கை என சித்தரிக்கிறார்களோ அதே கருத்துதான் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் விஷயத்திலும் பெறப்படுகிறது (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரேல்விகளின் சிந்தனையை முன்வைத்து இமாம் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சம்பவத்தை பார்ப்போம்!

இமாம் அவர்கள், முஹம்மத் (ரஹ்) தலை மழித்த பிறகும் அவர்களை தனக்கு முன்னால் அமரவைக்கவில்லை.ஏனெனில் முன்னால் அமரவைத்தால் ஏதாவது தவறு நிகழ்ந்து விடும் என்ற அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக சுவற்றுக்கு பின்னால் அமரவைத்தார்கள். அஷ்ரப் அலி தானவி (ரஹ்) சம்பவத்தில் எனது உள்ளத்தின் மீது நம்பிக்கை இல்லை என நேரடியாக வருகிறது. இந்த சம்பவத்தில் அந்த கருத்து மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.ஆக பரேல்விகள் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் ஆபாசமான நம்பிக்கை என்று வாதிட்டால் அல்லாஹ் பாதுகாப்பானாக இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் சம்பவத்திலும் இவ்வாறு வாதிட வேண்டும் பரேல்விகள் தயாரா?

உண்மையில் ஆபாசம் என்றால் என்ன?  என்பதை பரேல்விகளின் நூல்களிலிருந்து எடுத்து
காட்டுகிறோம்..

ஒரு நாள் ஹள்ரத் ஸுல்தான் ஆஷிக் மஹ்பூப் இலாஹி தனது சில குறிப்பான நபர்களுடன்
கடைவீதியில் சென்று கொண்டிருந்தார்.அமீர் خسرو இருந்தார்.கடைவீதியில் ஹள்ரதின்
பார்வை ஒரு இளவயது சிறுவரின்  மீது பட்டது.அமீர் ரஹ் அவர்கள், அன்னாரின்
குணத்தையும் இயற்கை சுபாவத்தையும் அறிந்திருந்தார்.
அன்னாரின் தேடுதலானது,
ஒரு விநாடி நின்றவாறு, இளவயது சிறுவனின் அழகான முகத்தை முன்னோக்கி  அதன் மூலம்
அல்லாஹ்வின் பேரழகை கண்கொண்டு காணவேண்டும்.அமீர் ஸாஹிப் சிறுவரை
நிற்கவைப்பதற்காக கடைவீதியின் பொதுவெளியில் ஆட்டமாடினார்.அந்த சிறுவரும்
வேடிக்கையை கண்டு நின்று விட்டார்.பிறகு பெரும் திரளான கூட்டம்
ஒன்றுதிரண்டிருந்தது.

(ஆதாரம்: மல்பூஜாத் முஹ்ரிய்யா பக்கம் 48)பரேல்விய அசிங்கங்கள் ஆபாசங்களின் நீண்ட பட்டியல் தெளிவான ஆதாரத்துடன் உள்ளது.
பரலேவிய
பெரியோரும் கழுதை புணர்தலும், ரிளாகானும் பிரத்தியேக கட்டிலும், பரலேவிய
ஜுபைரும் கவர்ச்சி வசீகரிப்பும்,பரலேவிய பெரியோரும் சிறுவர்களை
முத்தமிடுவதும்,பரலேவிய பெரியோரும் தாடிமுளைக்காத சிறுவரை ரசித்து இன்பம்
பெறுவதும், ரிளாகானும் ஆணுறுப்பும் இவைகளை குறித்து இன்ஷா அல்லாஹ் பிறகு
பேசுவோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live