29 Mar 2017

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் அண்ணலாரை நூர் என்று கூறினார்களா? (பரேல்வி ஜவ்வாதிற்கு மறுப்பு).

அல்லாஹுதஆலா நபி (ஸல்) அவர்களின் ஒளியை முதன் முதலில் படைத்தான் என்ற ஹதீஸ்
அடிப்படை ஆதாரமற்றது.அறிவிப்பாளர் தொடர்பற்றது என்பதை அடுக்கடுக்கான
ஆதாரங்களின் மூலம் நிரூபித்தோம்.
இதற்கு பதிலளிக்க முடியாத பரேல்வி ஜவ்வாத், அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின்
'நஸ்ருத்தய்யிப்' என்ற நூலை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளார்.

பரேல்வி ஜவ்வாதின் வாதமும் நமது மறுப்பும்:

நபி (ஸல்) அவர்களின் ஒளியை அல்லாஹ் முதன் முதலில் அல்லாஹ் படைத்தான் என்ற
ஹதீஸை பொய் என்பதாக கூறுகிறீர்கள்,எனினும் அஷ்ரப் அலி தானவி (ரஹ்)
அவர்கள் அந்த ஹதீஸை ஆதாரம் எடுத்துள்ளார்கள்.எனவே அவரை பொய்யர் என்பதாக
கூறுகிறீர்களா? அவரை பரேல்வி என்பதாக ஏற்கதயாரா?

நமது பதில்:

 'மிக்யாஸ் ஹனஃபிய்யத்' என்ற நூலில் பரேல்வி அறிஞர் 247 ம்
பக்கத்தில் ஆயிஷா (ரளி) அண்ணலார் மனிதரிலிருந்து  மனிதர் என்பதாக அறிவிக்கும்
ஹதீஸை கடுமையான பலகீனம் பொய் என்பதாக வாதிடுகிறார்.


மற்றொரு பரேல்வி முஃப்தி யார் கான் நயீமி அவர்கள்  'ஜாஅல் ஹக்' என்ற நூலில்
ஆயிஷா (ரளி) அவர்களின் ஹதீஸை மறுக்கவில்லை.இதனால் முஃப்தி யார் கான் நயீமி
பொய்யரா? தேவ்பந்தியா? பரேல்வி ஜவ்வாத் ஏற்கதயாரா?




அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் ஜாபிர் (ரளி) ஹதீஸை ஏற்றாலும் பெருமானார் மனிதர்
என்பதை மறுக்கவில்லை.நிராகரிக்கவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக ஏற்பது ஈமான்
இல்லை.அண்ணலார் மனிதர் என்பவர் காஃபிர்.அண்ணலார் அவர்கள் மனித போர்வையில்
வந்துள்ளார்கள். அண்ணலார் (நூரே முஜஸ்ஸம்) பரக்கத்துமிக்க உடல்  நூர் என்பதாக
பரேல்விகளைப் போன்ற கொள்கைகளை  அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் அறவே
ஏற்கவில்லை.

அது மட்டுமின்றி அன்னார் பல நூல்களில் அண்ணலார் (ஸல்)அவர்கள்
மனிதர் என்பதாக ஏற்றுள்ளார்.அதிலும் குறிப்பாக 'நஸ்ருத்தய்யிப்' நூலிலேயே
அண்ணலார் மனிதர் என்பதை ஏற்றுள்ளார்.

நபி (ஸல்) அவர்களும் மனிதத்தன்மையில் மூலத்தில் தனிமத்தில் உம்மத்துடன்
ஒன்றிணைந்துள்ளார்கள்.
அதிகப்படியான விஷயங்களில் அதிக செல்வம் மற்றவைகளில் மற்றவர்களுடன் சரிசமமாக
கூட இல்லை.
(நஸ்ருத் தய்யிப்)





ஆக இதன் மூலம் தானவி (ரஹ்) அவர்கள் கொள்கையானது  அண்ணலார் மனிதர் என்பதாக தான்
இருந்தது என்பதை புரியமுடிகிறது.

மேலும் தானவி (ரஹ்) அவர்கள்,
நபி (ஸல்)அவர்கள் நூர் என்பதை கொண்டு ரூஹ் என்பதாக கருத்து எடுத்துள்ளார்கள்.இதன்படி பார்க்கும் போது அண்ணலார் உள்ளமை படி மனிதராக,
பண்புகள் மற்றும் குணங்கள் அடிப்படையில் நூராக உள்ளார்கள் என்பதை தான் தானவி
(ரஹ்)அவர்கள் கொள்கையாக ஏற்றிருந்தார்கள் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணமாகிறது.





ஜாபிர் ரளி ஹதீஸ் பொய்யானது அறிவிப்பாளர் தொடர்பற்றது இதுதான் நமது அசலான
வாதமாகும்.தானவி ரஹ் அவர்கள் இதனை ஆதாரமாக எடுத்தாலும் கூட நபி (ஸல்) அவர்கள்
மனிதர் என்பதை மறுக்கவில்லை. எனவே நமது கொள்கைக்கு எதிராகாது.

ரிளாகான் பரேல்வி கூட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் பக்கம் இணைத்து
சொல்லப்படுவதற்கு ஆதாரம் தேவை என்பதை ஏற்கிறார்.

ஹதீஸை ஏற்பது
நபி (ஸல்) அவர்களின் பக்கம் இணைத்து சொல்லப்படுவதற்கு ஆதாரம் தேவை ஆதாரமின்றி
நபி (ஸல்) அவர்களின் பக்கம் இணைத்து சொல்வதற்கு அனுமதியில்லை .
(இர்ஃபானே ஷரீஅத்



அஹ்மத் ரிளாகான் பரேல்வி ஒரு ஹதீஸை  கூறுகிறார்:

சங்கைமிகுந்த உலமாக்கள் இதனை ஏற்றுள்ளனர்.............
ஆய்வின்படி பார்க்கும் போது இந்த ஹதீஸானது நிரூபணமாகவில்லை (மல்பூஜாத் பாகம்
2,172)



ஹதீஸ்களில் சிலதை உலமாக்கள் தவறுதலாக "ஸஹீஹ்" என்று கூறினால் அல்லது அதனை
அங்கீகரித்து ஏற்றுக்கொண்டாலும் அதனை ஸஹீஹ் என்று சொல்லக்கூடாது என்பதை
ரிளாகான் பரேல்வியின் இந்த கூற்றின் மூலம்  அறியமுடிகிறது.

சங்கைமிகுந்த உலமாக்கள்  ஏற்றுள்ளனர் எனினும் நிரூபணமாகவில்லை இதனால்
சங்கைமிகுந்த உலமாக்கள் நிரூபணமாகாத ஹதீஸை ஏற்றதால் பொய்யரா? என்பதை
ஜவ்வாதிற்கு சவாலாக முன்வைக்கிறோம்.

பாஜில் பரேல்வி முஹத்திஸ் அப்பாஸ் ரிஜவி எழுதியுள்ளார்:

ஏதேனும் பலகீனமான ஹதீஸை ஸஹீஹ் என்றும்,ஸஹீஹான ஹதீஸை பலகீனம் என்பதால் பலகீனம்
ஸஹீஹாகிவிடாது.
 (முனாஜிரே ஹி முனாஜிரே பக்கம் 292)




பலகீனமான ஹதீஸ் ஸஹீஹ் என்பதாக கூறினால் ஸஹீஹ் ஆகிவிடாது எனும் போது அறவே
அறிவிப்பாளர் தொடறற்ற ஹதீஸை  பிறகு எப்படி ஆதாரம் பிடிப்பது?

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்: 

ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன்
அறிவிக்கப்படவில்லை.அவ்வாறு இருந்தால் அதனின் அறிவிப்பாளர் தொடரை சொல்லுங்கள்
ஏனெனில் அறிவிப்பாளர் தொடரின்றி எந்த ஒரு ஹதீஸும் ஏற்கத்தக்கதாக இருக்காது.
(முனாஜிரே ஹி முனாஜிரே பக்கம் 300)



0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live