27 Mar 2017

மௌலான தாரிக் ஜமீல் அல்லாஹ் ﷻ நபிகளாரின் ﷺ ஜனாஸா தொழுகை தொழுவதாக கூறும் குற்றச்சாட்டுக்கு பரேலவிகளுக்கு வாயடைக்கும் பதில்.

மெளலானா மெளலவி ஹள்ரத் தாரிக் ஜமீல் ஸாஹிப் அல்லாஹ்வை அவமதித்தாக பரேல்விகளின்
குற்றச்சாட்டும் நமது பதிலும்:

இந்த குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் பரேல்விகளையும் அறியாமையும் பிரிக்க
முடியாது என விளங்க முடிகிறது.
மெளலானா மெளலவி ஹள்ரத் தாரிக் ஜமீல் ஸாஹிப் அவர்கள் ஒரு பயானில் அதில்
பெருமானாரின் மரணத்திற்கு பிறகு முதன் முதலாக அல்லாஹ் அர்ஷுக்கு மேல் இருந்து
ஜனாஸா தொழுவான் என்று கூறினார்கள். 


அந்த வீடியோவை இதில் கானலாம்..



இதன் மூலம் தாரிக் ஜமீல் ஹள்ரத் அவர்கள்
அல்லாஹ்வை அவமதித்ததாக பரேல்விகள் கூறுகிறார்கள். இதன் மூலம் அவர்கள்
அல்லாஹ்விற்கு அவமரியாதை ஏற்படுத்தினார்கள் என்று பரேல்விகள் வாதிட்டால் இந்த
சம்பவத்தை தங்களது நூல்களில் பதிவு செய்துள்ள இமாம்களை விமர்சிக்க தயாரா?
இமாம்கள் அல்லாஹ்விற்கு அவமரியாதை செய்தார்கள் என கூறத்தயாரா? (அல்லாஹ்வை
பாதுகாப்பானாக)

இந்த சம்பவத்தை ஹள்ரத் ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸானது
முஃஜமுல் கபீரில், ஹில்யதுல் அவ்லியாவில், இஜ்திமாவுல் ஜுயூஷில்
இஸ்லாமிய்யாவில் வருகிறது.










இந்த சம்பவத்தை தங்களது நூல்களில் பதிவு செய்துள்ள இமாம்களை விமர்சிக்க தயாரா?

ஒரு வாதத்திற்கு இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்களை ஏற்க மாட்டோம் என
பரேல்விகள் வாதிட்டாலும் மற்ற இரு இமாம்கள் அல்லாஹ்வை அவமதித்தாக கூற தயாரா?
ஏனெனில்  மெளலானா ஹள்ரத் தாரிக் ஸாஹிப் அவர்கள் இந்த சம்பவத்தை எடுத்துதான்
கூறினார்கள்.உண்மையில் இப்னு கையிம் (ரஹ்) அவர்களை பரேல்வி அறிஞரும்
அங்கீகரித்துள்ளனர். 

அன்னார் அஹ்லுஸ்ஸுன்னாவை சேர்ந்தவர் என்று
ஏற்றுள்ளனர்.
(ஆதாரம் பதாவா நிஜாமிய்யா)







இதனை  இந்த ஹதீஸ் பலகீனமானது என்றாலும் பெரும்பான்மையான உலமாக்களின்
நிலைப்பாடு ஆர்வப்படுத்த எச்சரிக்கை செய்ய பலகீனமான ஹதீஸ்களை எடுக்கலாம். இதனை
பரேல்விகளும் ஏற்றுள்ளனர்.
 (ஆதாரம் ஹள்ரத் ஸய்யிதினா அஃலா ஹள்ரத் பக்கம்:4)


இந்த ஹதீஸ் பொய்யானது என்று பரேல்விகள் வாதிட்டாலும் ஏற்புடையது அல்ல.ஏனெனில்
பரேல்விகளின் நிலைப்பாடு பொய்யான ஹதீஸை நல்லதற்காக எடுக்கலாம்
என்பதாகும்.
(ஆதாரம் ஹள்ரத் ஸய்யிதினா அஃலா ஹள்ரத் பக்கம்:4,5,6)




கேள்வியும்,பதிலும்:

பொய்யான ஹதீஸை நல்லதற்காக ஏற்கலாம் என்பது பரேல்விகளின் நிலைப்பாடு என்றாலும்
உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:

பொய்யான ஹதீஸை நல்லதிற்காக சொல்வது கூடாது.எனினும் பொய்யான ஹதீஸை பொய்
என்பதை அறியாமல் திட்டமிடாமல் கூறினால் குற்றமாகாது.இதனை பரேல்விய அறிஞர்
நஸீருத்தீன் ஸய்யாலவி அவரது நூலான "பரலேவிய்யத் அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி
ஜாயிஜாவில்" முதல் பாகம் 114 ல் குறிப்பிட்டுள்ளார்கள்.



0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live