9 Apr 2017

மல்பூஜாத் ஹள்ரத் ஹகீமுல் உம்மத் தானவி (ரஹ்) அவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டும் நமது மறுப்பும்.

பரேல்விகள் மல்பூஜாதின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்:

அதனின் சுருக்கம்..
 சாமானிய மக்களின் நம்பிக்கை குறித்து மெளலானா முஹம்மத் யஃகூப் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் உதாரணத்தின் விளக்கியுள்ளார்கள்.

உதாரணமானது அருவருப்பாக இருந்த போதிலும் எனினும் முற்றிலும் பொருத்தமானது.கழுதையின் குறிப்பிட்ட உறுப்பானது பெரிதானால் பெரிதாகி கொண்டே செல்கிறது.மறைந்து விடும் பொழுது முற்றிலும் தெரியாமல் போய்விடுகிறது.உண்மையில் ஆச்சரியமான உதாரணமாகும்.

 (மல்பூஜாத் பாகம்:3 பக்கம் 292)


மல்பூஜாத்தை முன்வைத்து குற்றச்சாட்டு சுமத்துவது பரேல்விகளின் அறியாமையும் மடத்தனமுமாகும்.

ஏனெனில் பரேல்விகளின் நிலைப்பாடு பெரியோர்களின் பக்கம் இணைத்து சொல்லப்படும் மல்பூஜாத் ஆதாரமில்லை.அதன் பேரில் ஆதாரம் எடுப்பது அனுமதியில்லை.
 (நூல் இபாரத் அகாபிர் கா தஹ்கீகி தன்கீதி ஜாயிஸா)


பரேல்விகளிடத்தில் மல்பூஜாத் ஆதாரமில்லை எனும் போது சத்திய உலமாக்களை விமர்சிப்பதற்காக வேண்டி அவர்களின் கொள்கையை விட்டு விலகி எங்களின் பெரியோரை விமர்சிப்பது முற்றிலும் வெட்கமும் நாணமற்ற செயல் இல்லையா?

மல்பூஜாதில் வந்துள்ள வாசகத்திற்கு நமது  விளக்கம்: 

ஹள்ரத் தானவி (ரஹ்) அவர்கள் ஒரு மஸ்அலாவை புரிய வைப்பதற்கு கூறுகிற உதாரணம் எனினும் அருவருப்பானது என்பதையும் விளங்கி கொள்வதற்காக கூறப்படுகிறது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

சாமானியர்களின் நம்பிக்கையானது மார்க்க காரியங்களில் சில சமயங்களில் மார்க்கத்தின் எல்லையை விட கூடுதலையும் சில சமயங்களில் மார்க்கத்தின் எல்லையை விட்டும் குறைந்து செல்வதையும் காணமுடிகிறது.

இது போன்ற உதாரணத்தை பரேல்விகளின் நூல்களிலும் உள்ளது.

பரேல்வி ரிளாகானி
ஷம்சுத்தீன் கவாஜா ஷம்சுத்தீன் ஸயாலவி எழுதியுள்ளார் :

கன்னிப் பெண்கள் எண்ணுகிறார்கள் தேன் கூட்டில் உள்ள தேனின் சாறு நிரம்பி இருப்பதைப் போன்று பெண்ணின் இரண்டு தொடைக்கு மத்தியில் இருப்பதானது உள்ளது.திருமணம் நிகழ்ந்த பிறகு கட்டுப்பாட்டை மீறி வெளியேறி நிற்கிறது.ஒரு போதும் இல்லை இது குளவிகளின் கூடு !

(மிர்ஆதுல் ஆஷிகீன் பக்கம் 171)இனி பரேல்விகள் பதில் கூறட்டும்! 

அவர்களின் காஜா ஸாஹிப் பிரியமான பெரியோர் அவர்களின் சீடர்களுக்கு எவ்வளவு அழகாக குணத்தை பண்படுத்துகிறார். இது ஆபாசம் இல்லையா? அசிங்கம் இல்லையா? பரேல்விகளில் சிலர் வெட்கமற்று வரம்பு மீறி ஹகீமுல் உம்மத் தானவி (ரஹ்) அவர்களை குறித்து அருவருப்பான தலைப்பு இடுகின்றனர். நாமும் பரேல்வி காஜா ஸாஹிப் கூறியதற்கு தலைப்பு கூறமுடியும் எனினும் அமைதியாக விட்டுவிடுகிறோம்.

ஹள்ரத் தானவி (ரஹ்) அவர்கள் ஒரு மஸ்அலாவை புரியவைப்பதற்கு உதாரணத்தை எடுத்தெழுதியதால் விமர்சிக்கும் பரேல்விகள் புகாரி முஸ்லிமில் வருகிற ஹதீஸையும் விமர்சிக்க தயாரா?

புகாரியில் வரும் 7367 ஹதீஸ் 

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே அறிவித்தார்.
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்து சேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து விடும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி(ஸல்) அவர்கள், 'இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்' என்றார்கள். ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். 'நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவுகொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?' என்று நாங்கள் பேசிக் கொள்வதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.
---'நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?' என்று சொல்லும்போது ஜாபிர்(ரலி) அவர்கள், 'இப்படி' என்று சைகை செய்து கை அசைத்தார்கள்.
உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து, 'நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்னுடைய குர்பானிப் பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்கமாட்டேன்' என்றார்கள். எனவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி(ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.

2328. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கள் சிலருடன் இருந்தபோது, ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:
முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் தனியாக ஹஜ்ஜுக்காக மட்டும் "இஹ்ராம்" கட்டி "தல்பியா" சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (ஹஜ்ஜுக்கு "இஹ்ராம்" கட்டியவர்களாக) வந்தார்கள். அப்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள்: "இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (உங்கள்) மனைவியருடன் உடலுறவு கொள்ளுங்கள்" என்றார்கள்.
- அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடுவதை நபி (ஸல்) அவர்கள் கட்டாயமாக்கவில்லை. மாறாக, அதை அனுமதிக்கவே செய்தார்கள். -
தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அப்போது நாங்கள், "நமக்கும் அரஃபாவுக்குமிடையே ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாம் நம் மனைவியருடன் உறவுகொள்ள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்களே! நம் இனஉறுப்புகளில் இந்திரியத் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க, (மனைவியருடன் கூடிய பின் உடனடியாக) நாம் அரஃபாவுக்குச் செல்வதா?" என்று (வியப்புடன்) பேசிக்கொண்டோம்.
- அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையை அசைத்து சைகை செய்து காட்டியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

5260. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத் தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன். ஆனால், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்' என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச் சாட்டை அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.)
அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீ (உன் பழைய கணவர் 'ரிஃபாஆ'விடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்துகொள்ள முடியாது; உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை மணக்கமுடியாது)' என்று கூறினார்கள்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live