23 Apr 2017

அமல்களின் சிறப்புகளில் இட்டுக்கட்டும் பரேலவிகளை வாயடைக்கச் செய்யும் நமது பதில்.

அல்லாஹ்வின் கிருபையால் தப்லீக் ஜமாத் மூலம் உலகம் முழுக்க பல்வேறு பயன்கள்
கிடைத்து கொண்டிருக்கிறது.பூட்டிக்கிடந்த பள்ளிகள் தொழுகைக்காக
திறக்கப்பட்டன.மதுவில் வாழ்க்கையை தொலைத்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றியது
தப்லீக்.சினிமா எனும் போதையில் மூழ்கியவர்களை மீட்டெடுத்தது தப்லீக்.அதனை
வெறுக்க வைத்தது தப்லீக்.பள்ளியின் பக்கம் ஒதுங்காதவர்களை அதன் பக்கம்
ஈர்த்தது தப்லீக்.பாமரர்கள் கூட தொப்பி,தலைப்பாகை, தாடி போன்ற சுன்னத்தான
கோலத்தில் மாற்றியமைத்தது தப்லீக்.
தப்லீக் ஜமாஅத்தின் வேதநூல் அமல்களின் சிறப்பு என்பதாக பெரும் அபாண்டத்தை
அள்ளிவீசுகிறார்.உண்மையில் குர்ஆன் ஓதி பழக வேண்டும் என்ற ஆசையை விதைத்தது
அமல்களின் சிறப்பு நூல்தான்.தப்லீக் ஜமாஅத் சென்ற பிறகு எத்தனையோ நபர்கள்
அல்லாஹ்வின் கிருபையால் குர்ஆன் வாசிப்பவர்களாக மாறினார்கள்.பரேல்விகளுக்கு
சுப்ஹான  மெளலூத் வேதநூலாக இருக்கலாம்.பிள்ளைகளை ஆலிம்களாக,ஹாபிள்களாக ஆக்க
அஞ்சி வரும் சூழ்நிலையில் தப்லீக் ஜமாஅத்தினர் தங்களை பிள்ளைகளை மதரஸாவில்
சேர்க்கின்றனர். ஜகாத் மார்க்கத்தில் உண்டு என்பதை மறந்திருந்த எத்தனையோ
செல்வந்தர்கள் ஜமாஅத்தினால் ஜகாத்தை கொடுக்கும் வள்ளல்களாக மாறினார்கள்.ஹஜ்ஜை
நிறைவேற்றுவதில் பொடுபோக்குடன் இருந்தவர்கள் தப்லீகினால் ஹாஜிகளாக
மாறினார்கள்.

தஃவத் வேலையினால் இஸ்லாத்தின் எதிரிகள் கலக்கமடைந்து வரும்
வேளையில் இஸ்லாத்தில் இருக்கும் நயவஞ்சகர்கள்   கலக்கமடைவதை பார்க்கும் போது
இவர்களும் அவர்களை சேர்ந்தவர்கள்தான் என்பதாக எண்ணத் தோன்றுகிது.இல்லை இல்லை
அவர்களை சேர்ந்தவர்கள் தான். பரேல்விகள் தொழாதவர்களை தொழுகையின் பக்கம்
அழைக்கலாம். அவர்களிடத்தில் சென்று தீனின் பக்கம் அழைக்கலாம் என்ற சிந்தனை
வருவதில்லை.இதற்கு நேர்மாற்றமாக தஃவத் வேலை செய்பவர்களை எப்படி தடுக்கலாம்?
அவர்களின் முயற்சியை எப்படி தகர்த்தெறியலாம்? என்கிற சூழ்ச்சியில்
ஈடுபடுகின்றனர்.அசத்தியவாதிகள் மக்களை நல்வழியின் பக்கம் அழைக்க
மாட்டார்கள்.அதுமட்டுமின்றி பிறரையும் நற்பணியை செய்யவிடமாட்டார்கள்.

அமல்களின் சிறப்பு நூலில் விமர்சனமும் நமது மறுப்பும்:

குற்றச்சாட்டு:

தொழுகையின் முக்கியமான பகுதி இறைதியானம்.அதாவது குர்ஆன் ஓதுவது. இந்த
விஷயங்களை முழுமையாக கவனமின்றி ஓதினால் அது அல்லாஹ்விடம் உரையாடுவதாக
இருக்காது.இது வீண்பேச்சு மற்றும் காய்ச்சலின் போது பேசும் தேவையில்லாத பேச்சை
போன்றாகும்.குர்ஆன் ஓதுவதை தேவையில்லாத பேச்சுடன் ஒப்பிட்டு கூறப்படுகிறது.இது
அவமரியாதை.


நமது மறுப்பு:

பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் அறியாமைக்கு மறுப்பு:

முதலில் உர்து மொழியை நன்கு கற்றிருந்தால் இது போன்ற குற்றச்சாட்டு
எழாது.மெளலவி ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் இது வீண்பேச்சு மற்றும்
காய்ச்சலின்போது மக்கள் பேசும் தேவையில்லாத பேச்சு போன்றது என உவமையாக
கூறியுள்ளார்கள்.

எல்லா மொழியிலும் விஷயத்தை விளங்குவதற்கு உதாரணம் கூறப்படும்.ஜைத் சிங்கம்
என்றால் அதனைக் கொண்டு உவமையாக கூறப்படுகிறது என்பதாகதான்
விளங்குவார்கள்.ஒப்புமையானது ஒட்டுமொத்தமாக பார்க்கப்படாது. உதாரணமாக ஜைத்
சிங்கம் என்றால் சிங்கத்தின்  வால் உண்டு.சிங்கத்தின்  பல் உண்டு .சிங்கத்தின்
தோற்றம் என்பதாக அறிவுள்ள எவரும் விளங்கமாட்டார்கள்.இதனை கொண்டு கருத்து ஜைத்
சிங்கத்தை போன்று வீரன்.

முஸ்லிமில் வருகிற ஹதீஸ் நபி ஸல் அவர்களுக்கு வஹி வரும் விதம் கூறப்படுகிறது:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "தங்களுக்கு வேத
அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சில
நேரங்களில் மணியோசையைப் போன்று எனக்கு வேத அறிவிப்பு வரும். அவ்வாறு வருவது
எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். பிறகு அச்செய்தியை நான் மனனமிட்டுக்கொண்ட
நிலையில் அந்நிலை என்னை விட்டு விலகிவிடும். இன்னும் சில நேரங்களில், வானவர்
ஒருவர் மனித உருவில் என்னிடம் வ(ந்து செய்திகளைத் த)ருவார். அவர் கூறுவதை நான்
நினைவிலிருத்திக்கொள்வேன்"என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இந்த ஹதீஸில் வஹி வரும் விதமானது மணியோசையை போன்றது என்பதாக வந்துள்ளது.வேறு
ஹதீஸ்களில் மணி சப்தமானது ஷைத்தானுடன் வந்துள்ளது. இதன் மூலம் அறிவுள்ள எவரும்
வஹியானது மணி சப்தமாக மாறிவிட்டது என்பதாக கூறமாட்டார்கள்.இது போன்றுதான்
மறதியுடன் தொழுகையில் குர்ஆன் ஓதுவது ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.இதனைக்
கொண்டு அறிவுள்ள எவரும் குர்ஆன் ஓதுவது முற்றிலும் தேவையில்லாத பேச்சாக
மாறிவிட்டது என கூறமாட்டார்கள்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு மூளையில் எட்டும் பதிலடி:

முஃப்தியார் கான் சூரா முஃமீனின் 97 ஆயத்தின் விளக்கம்:

ரப்பி அவூது பிக என்பது
பிரார்த்தனையாகும்.(ﻗﻞ ) நபியே சொல்லுங்கள்! என்பதில்  அண்ணலாரின் நாவானது
சுட்டிகாட்டப்படுகிறது.அதாவது பிரியத்திற்குரியவரே! துஆவானது நாம் கூறியது
நாவானது உம்முடையதாக இருக்கிறது. துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள்
சீறிப்பாய்வது போன்று.
 (ஆதாரம் நூருல் இர்பான்)



பெருமானாரை குறித்து சீறிப்பாயுடன் தோட்டவுடன் ஒப்பிட்டு கூறுவது அவமரியாதையா?
இல்லையா?

தடியானது பாம்பின் வடிவத்தில்  சாப்பிடும் குடிக்கும் எனினும் தடியாக
இருக்கும்.சாப்பிடுவது குடிப்பது அதனின் தோற்றத்தின் தாக்கம்.இவ்வாறே நபி ஸல்
அவர்களும் நூர் மனித ஆடையில் வரும் பொழுது நூரே பஷர்
(நூருல் இர்ஃபான் பக்கம்:805)




உண்மையான தேட்டமுள்ளவர் தொழுகையில்  சுருக்கமாக குர்ஆன் ஓதவேண்டும்.ஏனெனில்
உள்ளத்தில் கவனமின்மையில் மறதி ஏற்பட்டுவிடக்கூடாது.ஏனெனில் உள்ளத்தின்
கவனமின்றி தொழுதால் தொழுகை பயனளிக்காது.வெறும் வீண் அசைவாகும்.
(மிர்ஆதுல் ஆஷிகீன் 75)



கவனமின்றி தொழும் தொழுகையை வெறும் வீண்பேச்சு அசைவு என்பதாக கூறியுள்ளார்கள்.
இது அவமரியாதையா? இல்லையா?

உள்ளத்தில் இறையச்சம் பணிவின்றி நிறைவேற்றப்படும் தொழுகையானது திருட்டாக
எண்ணப்படும்.இவ்வாறான தொழுகை வெறும் அசைவாகும்.உண்மைத்துவம் உள்ள உயிர்
மற்றும் உள்ரங்கத்தின் தனித்தன்மை இழந்துவிடுகிறது.
(ஃபல்ஸஃபா நமாஜ்)



நபிமார்கள் தங்களை குறித்து அநியாக்காரர் வழிகேடர் தவறு செய்பவர் என்பதாக
கூறினார்கள்.இந்த வார்த்தைகளை நாம் கூறினால் காபிராகிவிடுவோம்.இவ்வாறே நபி
(ஸல்) அவர்கள் தன்னைத்தானே மனிதர் என்பதாக கூறியதும்
(நூருல் இர்ஃபான்)

நபி (ஸல்) அவர்களின் மனிதத்தன்மையை அநியாக்காரர் வழிகேடர் என்பதற்கு
ஒப்பிட்டு  கூறியுள்ளாரா?இல்லையா?

வெளிப்படையான தோற்றத்தில் ஒன்றுப்பட்டு இருப்பதை கவனித்து நபிமார்கள்
நல்லோர்கள் நம்மை போன்று எண்ணிவிடவேண்டாம்.வேம்பு மலைவேம்பு  இரண்டும் ஒன்றாக
தெரியும்.எனினும் பலன்களில்  வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் வேறுபாடு
உள்ளது.
(நூருல் இர்ஃபான் 169 ஸுரதுல் அன்ஆம் ஆயத் 99)





 பெருமானாரை மலைவேம்புடன்
ஒப்பிட்டு கூறியிருப்பது அவமரியாதையா? இல்லையா?

குளவி மற்றும் தேனி ஒரே பூவைதான் உறிஞ்சுகிறது.எனினும் பூவின் குளவியின்
வயிற்றை அடைந்து விஷமாகவும் தேனியின் வயிற்றை அடைந்து தேனாகவும்
மாறிகிறது.இவ்வாறுதான் நமது உணவானது  கவனமின்மைக்கு காரணியாகும்.நபிமார்களின்
உணவானது நூரானிய்யத்தின் வளர்ச்சிக்கு காரணியாகும்.
(நூருல் இர்ஃபான் சூரா முஃமினூன்)




நபிமார்களின் உணவிற்கு தேனியும் குளிவியை ஒப்பிட்டு சொல்லப்படுகிறது.இது
அவமரியாதையா இல்லையா?

பரேல்வி யார்கான் நயீமி:

பாம்பு எருமை அல்லாஹ்வின் படைப்பு இரண்டும் உண்கிறது.எனினும் பாம்பில் விஷம்
உள்ளது.எருமையில் பால் உள்ளது.இதனால்தான் பாம்பை அடிக்கிறார்கள்.எருமையை
பராமரிக்கிறார்கள்.இவ்வாறுதான் காபிர்களிடத்தில் விஷம் உள்ளது.நபிமார்கள்
நல்லோர்கள் உலமாக்களிடத்தில் இறைநம்பிக்கையின் பால் உள்ளது.
(தப்ஸீர் நயீமி
ஸுரா ஆலஇம்ரான் ஆயத்து 6)




நபிமார்கள் நல்லோர்கள் உலமாக்கள் அனைவரையும் எருமை மற்றும் அதனின் பாலிற்கு
ஒப்பிட்டு  கூறியுள்ளார்.இது அவமரியாதையா?  இல்லையா?

உண்மையான சீடரின் உள்ளமானது கர்பப்பை போன்றது.உண்மையான ஷைகின் உள்ளமானது
விந்துத்துளி போன்றது.
  (தப்ஸீர் நயீமி)




 இது அவமரியாதையா? இல்லையா?

நல்லோர்களின் கூற்றுக்கள்:

ஷைக் அப்துல்காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் கூற்று கோழிகொத்துவதைப் போன்று
(வேகமாக)தொழுபவனுக்கு தொழுகை இல்லை (குன்னியத்துதாலிபீன்)

(பரேல்வி அறிஞர் தாஹிர் காதிர் அவர்கள் இதே வாசகத்தை ஃபல்ஸலஃபா நமாஜ் நூலில்
கூறியுள்ளார்கள்)

இங்கு தொழுகைக்கு உவமையாக கோழி கொத்துவது கூறப்பட்டுள்ளது.இதனால் தொழுகைக்கு
அவமரியாதையா?  இல்லையா?

ஷைகு ஷிஹாபுத்தீன் ஷஹ்ரவர்தி ரஹ் அவர்கள் 'அவாரிஃபுல் மஆரிஃபில்'
கூறுகிறார்கள்:(சுருக்கமான கருத்து) 

சிந்தனையில்லாமல் தொழுபவனும் மது போதையில்
தொழுபவனும் ஒன்றுதான்.
(அவாரிஃபுல் மஆரிஃப்)




கவனமின்றி தொழும் தொழுகையை மது போதைக்கு ஒப்பாக சொல்லப்பட்டுள்ளது. இது
அவமரியாதையா? இல்லையா?

ஹள்ரத் அபுல்ஹஸன் ஹஜ்வரி (ரஹ்) அவர்கள் 'கஷ்ஃபுல் மஹ்ஜுப்' என்ற நூலில் இமாம்
குஷைரி (ரஹ்) அவர்களின் அறிமுகத்தில் எழுதியுள்ளார் அன்னாரிடமிருந்து
கேட்டுள்ளேன்.சூஃபியின் உதாரணமானது நெஞ்சலியாகும்.அதனின் ஆரம்பம்
வீண்சிந்தனை.அதனின் இறுதி அமைதியாகும்.
(கஷ்ஃபுல் மஹ்ஜுப்)




இங்கு ஞானப்பாதையை நெஞ்சுவலியுடன் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

ஆக  இது போன்றுதான் மறதியுடன் தொழுகையில் குர்ஆன் ஓதுவது ஒப்புமையாக
கூறப்பட்டுள்ளது.இதனைக் கொண்டு அறிவுள்ள எவரும் குர்ஆன் ஓதுவது முற்றிலும்
தேவையில்லாத பேச்சாக மாறிவிட்டது என கூறமாட்டார்கள்.

அடுத்து தேவ்பந்திகள் பத்வா நபருக்கு தகுந்தவாறு கூறுவார்கள் என்பதாக
பழிசுமத்தியுள்ளார்.இதற்கும் நம்மிடத்தில் பதில் உண்டு.எனினும் முதலில்
குர்ஆனை அவமதித்தாக சொன்ன வாதத்திற்கு பரேல்வி ஜவ்வாத் ரப்பானி  பதில்
தரட்டும்!

ஹள்ரத் மெளலானா ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் குர்ஆனை அவமரியாதை செய்யவில்லை
என்பதை ஏற்கட்டும்! ஒத்து கொள்ளட்டும்! அல்லது நாம் வைத்த வாதங்களுக்கு சரியான
பதிலை தரட்டும்! பிறகு தேவ்பந்த் உலமாக்களின் பத்வாவில் விளையாடும் ஜவ்வாத்
ரப்பானியின் பித்தலாட்டங்கள் தோலுரிக்கப்படும்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live