16 Apr 2017

நபி ( ஸல் ) அவர்களுக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்கிற குற்றச்சாட்டும் நமது மறுப்பும்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மற்றும் பரேல்விகளின் பொய் முகத்திரையை கிழித்தெறியும் மறுப்பு:

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி அவரின் தலைவர் அஹ்மத் ரிளாகானியின் அடிச்சுவட்டை நுனிபிசகாமல் பின்பற்றுபவர் என்பதை அவரைப் போன்று பொய்யையும் அபாண்டத்தையும் அள்ளிவீசுவதன் மூலம் நிரூபித்துள்ளார்.
பராஹீனே காதிஆவில் மோசடி செய்தது யார் உண்மையில்  இதுபோன்ற மோசடிக்கு சொந்தக்காரர்கள் கரைகண்டவர்கள் பரேல்விகள்தான்.
இதனால்தான் மற்றவர்களையும் இவ்வாறு எண்ணிக்கொண்டார்கள்.
இது போன்ற மோசடிகள் அசத்தியவாதிகளுக்கு தான் தேவை ஏற்படும்.கைவந்த கலை சத்தியவாதிகளுக்கு தேவை இல்லை. பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு முதல் பதிலடி!

நபி ஸல் கூறினார்கள்:

எனக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதாக ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதை கலீல் அஹ்மத் ரஹ் அவர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள்.

இதற்கு மறுப்பளிக்க புகுந்த பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மதாரிஜுன் நுபுவ்வத்தில் இருப்பதை வாசித்து காட்டுகிறார். கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் மதாரிஜுன் நுபுவ்வத்தில்  ஷைக் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாக அறவே கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் தான் மோசடியாகும்.எனவே பரேல்வி ஜவ்வாத் ரப்பானி தான் அபாண்டத்தையும் பழியையும் சுமத்துகிறார்.

மதாரிஜுன் நுபுவ்வத்தில் வருவதாக பராஹீனுல்  காதிஆவில் கூறியிருந்தால், பரேல்வி ஜவ்வாத் ரப்பானி எடுத்து காட்டட்டும்! திராணி உள்ளதா?

உண்மையில் பராஹீனே காதிஆவில் கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் ரஹ் அவர்களின் நூலான மதாரிஜுன் நுபுவ்வத்தில் இருப்பதாக குறிப்பிடவில்லை.மாறாக பொதுவாக  ஷைக் அப்துல் ஹக் (ரஹ்) அவர்கள் கூறுவதாக தான் எடுத்தெழுதியுள்ளார்கள்.

ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் (ரஹ்) அவர்களின் நூலான 'அஷிய்யதுல் லம்ஆத்' என்ற நூலில் நபி (ஸல்) அவர்களுக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதாக கூறியுள்ளார்கள்.



அதுமட்டுமின்றி இந்த ரிவாயத்தை ஷைக் (ரஹ்) அவர்கள் விமர்சனம், மறுப்பும் இன்றி அங்கீகரித்துள்ளார்கள்.
எனவே கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அங்கிருந்துதான் எடுத்தெழுதியுள்ளார்கள் என்பதை தெளிவாகிறது.இதன் மூலம் கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்களை விமர்சிப்பதாக இருந்தால்
ஷைக் (ரஹ்) அவர்களையும் பரேல்விகள் விமர்சிக்க தயாரா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஷைக் (ரஹ்) அவர்கள் 'மிஷ்காதுல் மஸாபீஹில்' பாபு ஸிஃபதிஸ்ஸலாத் என்ற தலைப்பில் வரும் ஹதீஸிற்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு லுஹர் தொழவைத்தார்கள்.
பின்வரிசையில் நின்றிருந்த நபர் தொழுகையை சரியாக நிறைவேற்றவில்லை.நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்த பிறகு  அந்த நபரை அழைத்து சொன்னார்கள். ஓ மனிதரே! உமக்கு அல்லாஹ்வின் அச்சம் இல்லையா?  நீர் எப்படி தொழுதீர்? என்பதை பார்க்கவில்லையா?  "நீங்கள் செய்யும் செயல் எனக்கு மறைவானது என்பதாக எண்ணிக்கொண்டீர்கள்"
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு முன்னால் பார்ப்பது போன்று பின்னால் பார்க்கிறேன்.
(அஹ்மத்)

இதனின் விளக்கவுரையில் ஹள்ரத் ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அஷிய்யத்துல் லம்ஆத்தில் பக்கம் 392 ல் குறிப்பிடுகிறார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்!
முன்னால் பின்னால் பார்ப்பது வழமைக்கு மாற்றமானது.வஹியின் மூலம் அல்லது எண்ண உதிப்பின் மூலம் சில சமயங்களில் பெறப்படும்.எப்பொழுதும் பெறப்படாது.இதனை உறுதிப்படுத்தும் ஹதீஸ் உள்ளது.நபி (ஸல்) அவர்களின் ஒட்டகமானது தொலைந்துவிட்டது.எங்கு சென்றது? என தெரியவில்லை.
முனாபிகுகள் கூறினார்கள்: முஹம்மத் கூறுகிறார்கள் வானத்திலிருந்து செய்திகளை கூறுகிறேன் (ஆனால் இப்பொழுது) ஒட்டகம் எங்கு சென்றது? ' என தெரியவில்லை என்கிறார்.

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் அறிவித்து கொடுத்ததை தவிர எனக்கு தெரியாது.இப்பொழுது அல்லாஹ் எனக்கு அறிவித்து கொடுத்துவிட்டான் இந்த இடத்தில் உள்ளது.அதனின் கடிவாளம் மரத்தில் சிக்கியுள்ளது.மேலும் கூறினார்கள் நான் மனிதன் இந்த சுவருக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது தெரியாது.அல்லாஹ் எனக்கு அறிவித்து கொடுத்தால் தவிர.
 (அஷிய்யதுல் லம்ஆத்) 


இங்கு ஷைக் (ரஹ்) அவர்கள் இந்த ரிவாயத்தை எடுத்தெழுதியுள்ளார்கள். எந்த வித விமர்சனமும் செய்யவில்லை.
இதன்பேரில் ஹள்ரத் மெளலானா கலீல் அஹ்மத் ஸாஹிப் (ரஹ்) அவர்களின் கூற்றானது சரியானது.இது மட்டுமின்றி ஆழ்ந்து சிந்தித்தால் ஷைக் (ரஹ்) அவர்களிடத்தில் இந்த ரிவாயத்தானது ஏற்கத்தக்கது என்பதை அறிய முடிகிறது.ஏனெனில் ஷைக் (ரஹ்) அவர்கள் தனது வாதத்தை வலுப்படுத்த இந்த ஹதீஸை கூறியுள்ளார்கள்.ஹதீஸ் அடிப்படையின்றி இருந்தால் தனது வாதத்திற்கு வலுசேர்க்க கூறியிருக்க மாட்டார்கள்.வாதத்தை வலுப்படுத்த இந்த ரிவாயத்தை எடுத்தெழுதியதன் மூலம் ஷைக் (ரஹ்) அவர்களிடத்தில் ஏற்கத்தக்கது.

இப்பொழுது நமக்கு ஒரு கேள்வி தோன்றலாம்.
மதாரிஜுன் நுபுவ்வத்தில் இந்த ரிவாயத்தை கூறிய பிறகு இதற்கு அடிப்படையுமில்லை என்கிறார்களே அதற்கு பதில் என்ன?

இதற்கு பதில் அளிப்பது நமது பொறுப்பில்லை.எனினும் நடுநிலையாளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்ப்பதற்கு சுருக்கமான விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live