18 Apr 2017

சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்கிற குற்றச்சாட்டும் மறுப்பும் (இரண்டாவது பகுதி)

ஷைக் அப்துல் ஹக் (ரஹ்) அவர்களின் இரு முரண்பட்ட கருத்துக்களில் ஒன்றிணைத்தல்:

ஹதீஸ் கலையில் கடும் போக்கு கொண்ட முஹத்திஸ் ஹாபிள் இப்னு ஜவ்ஜி (ரஹ்) அவர்கள்
இந்த ரிவாயத்தை அறிவிப்பாளர் தொடரின்றி சில நூல்களில்
எடுத்தெழுதியுள்ளார்கள்.இதன் காரணமாக ஷைக் (ரஹ்) அவர்கள் நம்பந்தகுந்தது
என்பதாக எண்ணி தனது வாதத்திற்கு வலுவூட்ட பயன்படுத்தியருக்கலாம்.எனினும் இந்த
ரிவாயத்தின் அறிவிப்பாளர் தொடரானது எடுத்து சொல்லப்படவில்லை.இதனால் மதாரிஜுன்
நுபுவ்வத்தில் இதற்கு எந்ந ஒரு அடிப்படையும் இல்லை என கூறியுள்ளார்கள்.

இதன் கருத்து அறிவிப்பாளர் தொடர் இல்லை.இதன் மூலம் ஷைக் (ரஹ்) அவர்களின்
கூற்றில் முரண்பாடு நீங்கிவிடும்.இதில் எந்தவித சந்தேகமும் ஏற்படாது.

இதில் ஆச்சரியத்தக்க எதார்த்தம் என்னவெனில் ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின்
கூற்றிலும் இது போன்ற முரண்பாடு தென்படுகிறது. கஸ்தலானி (ரஹ்) அவர்கள்
'மவாஹிபு லதுன்னியாவில்' ஹாபிள் ஸஹாவி ( ரஹ்) அவர்களின்
'மகாஸித் ஹஸனா' விலிருந்து எனக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்ற
அறிவிப்பை எடுத்தெழுதியுள்ளார்கள்.
நமது ஷைகுல் இஸ்லாம் ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இது குறித்து
கூறியுள்ளார்கள்.இந்த ஹதீஸிற்கு அடிப்படை இல்லை என்று கூறியிருந்தும்
(நான் கூறுகிறேன்) அஹாதீஸ் ராஃபியின் தல்கீஸில் (ஆதாரத்திற்கு)
கொண்டுவந்துள்ளார்கள்.நபி (ஸல்) அவர்கள் தனக்கு முன்னால் இருப்பதை பார்ப்பதை
போன்று பின்னால் பார்ப்பார்கள்
அண்ணலாரின் தனிச்சிறப்பம்சங்களில்
உள்ளது.பிறகு ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்.இந்த ரிவாயத்தானது ஹள்ரத்
அனஸ் (ரளி) மற்றும் பலரின் வாயிலாக ஸஹீஹைன் மற்றும் அது அல்லாத மற்ற
நூல்களிலும் வருகிறது.

எந்த ஹதீஸ்களில் இந்த சம்பவம் வருகிறதோ அது தொழுகையின் நிலையுடன்
குறிப்பானது.எனவே நபி (ஸல்) அவர்கள் எனக்கு சுவருக்கு பின்னால் இருப்பது
தெரியாது என்று கூறியதின் கருத்திற்கு  (தொழுகை அல்லாத நிலைக்கு உள்ளதென)
சரியான விளக்கம் பெறப்படுகிறது.



இதன் பிறகு ஹாபிள் ஸஹாவி (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்: 

நமது ஷைகின் கூற்றின் மூலம் ஹதீஸ் (சுவருக்கு பின்னால்
இருப்பது தெரியாது) இருக்கிறது என்பது விளங்குகிறது.



அல்லாமா ஜர்கானி ஷரஹ் 'மவாஹிபில்'
ஹாபிள் ஸஹாவி (ரஹ்) கூறியதை எடுத்து சொன்ன பிறகு  ஷைகு ஹாபிள் இப்னு ஹஜர்
(ரஹ்) அவர்களின் கூற்றில்முரண்பாடு பெறப்படுகிறது.அந்த ஹதீஸை அடிப்படை இல்லை
என்றார்கள்.ஆனால் அதனை கொண்டு ஆதாரம் எடுத்துள்ளது முரண்பாடாகும்.
இதற்கு வாய்ப்புள்ளது ஷைக் அவர்களின் கூற்றின் விளக்கம் இந்த ஹதீஸிற்கு
ஏற்கத்தக்க அறிவிப்பாளர் தொடர் இல்லை என்பதாகும்.மாறாக முற்றிலும் வீணானது
என்பது அர்த்தம் இல்லை.

அடுத்து இந்த ஹதீஸானது முற்றிலும் சரியானது.ஏனெனில் இதனை உறுதிப்படுத்தும்
ஆதாரங்கள் உண்டு.

புகாரி முஸ்லிமில் வருகிற ஹதீஸ் இப்னு மஸ்ஊது ரளி அவர்களின் மனைவியார் ஜைனப்
ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஹதீஸின் சுருக்கம் நபி ஸல் அவர்களிடத்தில் ஜைனப்
ரளி
சென்றார்கள்.அப்பொழுது வேறு பெண்மனியும் இருந்தார்கள்.அந்நேரத்தில் பிலால் ரளி
வெளியே வந்தார்கள்.நான் அவரிடத்தில் கூறினேன் கதவுக்கு அருகில் இரு பெண்கள்
நிற்பதாக கூறுங்கள் மேலும் அவர்கள் இருவரின் கணவன்மார்களுக்கும் இருவரின்
மடியில் வளரும் அநாதை குழந்தைகளுக்கும் தர்மம் அளிப்பது கூடுமா என கேளுங்கள்!

மேலும் நாங்கள் யார் என்பதை கூற வேண்டாம்! பிலால் (ரளி) அவர்கள் நபியிடத்தில்
சென்றார்கள்.அந்த இருபெண்களின் ஐயத்தையும்  பிலால் (ரளி) அவர்கள்
நபியிடத்தில் கேட்டார்கள்.நபி (ஸல்) அவர்கள் இருவரும் யார் என கேட்டார்கள்?
அதற்கு பிலால் (ரளி) கூறினார்கள்: அன்சாரிப் பெண் மற்றும் ஜைனப் என்றார்கள்.
அதற்கு நபி (ஸல்)  அவர்கள் எந்த ஜைனப் என்று கேட்டார்கள்? அதற்கு அப்துல்லாஹ்
(ரளி) அவர்களின்  மனைவி என பிலால் ரளி கூறினார்கள்.

ஜைனப் ரளி அவர்கள் வாயிலில் தாங்கள் நிற்பதாக ஏன் கூற சொல்ல வேண்டும்?
அதுமட்டுமின்றி தாங்கள் யார் என்பதை கூறவேண்டாம்! என ஏன் சொல்ல வேண்டும்? நபி
(ஸல்) அவர்கள்  அவர்கள் இருவரும் யார் என ஏன் கேட்கவேண்டும்? பிலால் (ரளி)
அவர்கள், ஜைனப் (ரளி)  என்பதாக கூறிய பிறகும் கூட எந்த ஜைனப் என ஏன்
கேட்கவேண்டும்? இந்த அனைத்து வாதங்களும் நபி ஸல் அவர்களுக்கு அது குறித்து
தெரியவில்லை என்பதைதான் தெளிவுப்படுத்துகிறது.

ஃபாஜில் பரேல்வி மல்பூஜாதில் ஒரு ஹதீஸை எடுத்தெழுதியுள்ளார்:

ஜிப்ரயீல் (அலை) அவர்கள்  நாளை வருவதாக வாக்குறுதி அளித்தார்கள்.மறுநாள் நபி
(ஸல்) அவர்கள் எதிர்பார்த்தார்கள்.எனினும் வாக்குறுதியில் தாமதமானது.ஜிப்ரயீல்
(அலை) அவர்கள் வரவில்லை.
நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து பார்வையிட்டார்கள்.ஜிப்ரயீல் (அலை) அவர்கள்
வருகை புரிந்தார்கள்.பெருமானார் தாமதம் ஏன் என  காரணம் கேட்டார்கள்? அதற்கு
ஜிப்ரயீல் (அலை) கூறினார்கள் ரஹ்மத்தின்  வானவர் உருவப்படம் நாய் இருக்கும்
வீட்டில் நுழையமாட்டார்கள்.பிறகு அண்ணலார் வீட்டில் நுழைந்து தேடி
கிடைக்கவில்லை.எனினும் கட்டிலுக்கு கீழ் நாய் இருந்தது.அதனை வெளியேற்றிய பிறகு
ஜிப்ரயீல் அலை வந்தார்கள்.
(மல்பூஜாத் பக்கம்:354,பாகம்:3)



நபி ஸல் அவர்களுக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியவில்லை.அவ்வாறு
இல்லையெனில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.நபி
(ஸல்) அவர்களுக்கு கட்டிலுக்கு கீழ் நாய் இருப்பது தெரியாது.அவ்வாறு
இல்லையெனில் நாயை தேடியிருக்க மாட்டார்கள்.

பரேல்வி ஸயீத் ஸாஹிப் அவர்கள் ஒரு வினாவிற்கு பதில் தருகிறார்கள் அண்ணலாரின்
முதுகின் மீது அசுத்தம் வைக்கப்பட்ட பொழுதும் பிறகு எவ்வாறு அதனுடன்
தொழுதிருப்பார்கள்?

சரியான பதில்: 

நபி ஸல் அவர்களின் முதுகின் மீது என்ன வைக்கப்பட்டது என்பது
அவர்களுக்கு  தெரியவில்லை.
(ஷரஹ் ஸஹீஹ் முஸ்லீம் பாகம்:5 பக்கம்:564)



சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதற்காக கொதித்தெழுந்த பரேல்விகள்
முதுகில் இருந்தது தெரியாது என்பதற்காக கொதித்தெழ தயாரா?

பரேல்வி மெளலவி உமர் எழுதியுள்ளார்:

 நபி (ஸல்) அவர்கள் கணவன் மனைவி தாம்பத்திய
சமயத்தில் ஹாளிர் நாளிர் எனினும் கிராமன் காதிபீனை போன்று அண்ணலார் (ஸல்)
அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் பார்வையை பேணிக் கொள்வார்கள்.
(மிக்யாஸ்
ஹனஃபிய்யத்)



பார்வையை பேணுதல் என்பது

இரு நிலைகள்: கண்ணை மூடிக்கொள்ளுதல் அல்லது முகத்தை வேறு பக்கம் திருப்பி
கொள்ளுதல்

முதல் நிலை: கண்களுக்கு முன்னால் மிகவும் மெல்லிய திரை இதன் மூலம் பார்வை
தென்படாது  என்பது பெரியதா? அல்லது சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது
என்பது பெரியதா?

இரண்வது நிலை: தலைக்கு பின்னால் பார்வை தென்படாது என்பது பெரியதா? அல்லது
சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பது பெரியதா?

உண்மையில் மோசடி என்றால் என்ன என்பதை பரேல்வியின் நூலிலிருந்து இன்ஷா அல்லாஹ்
விரைவில் எடுத்து காட்டுகிறோம்!


நபி ( ஸல் ) அவர்களுக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்கிற குற்றச்சாட்டும் நமது மறுப்பும்.


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live