15 Apr 2017

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை தேவ்பந்த் பெரியார்களுக்கு மறைவான ஞானம் உண்டு எனும் குற்றச்சாட்டும் நமது மறுப்பும்.

மறைவான ஞானம் குறித்து விரிவான ஆய்வுகளுடன் அனைத்து வாதங்களுக்கும்
மறுப்புகளுடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் தொடராக கட்டுரை வெளியிடுவோம்!

இப்பொழுது இது குறித்த சுருக்கமான பரேல்விகளை வாயடைக்க செய்யும் பதில்களை
பார்ப்போம்!

பரேல்விகளிடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் என்பது பரிபூரண
கொள்கையாகும்.இதனை மறுப்பவர் காபிர் .
(இபாராத் அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி
ஜாயிஜா பக்கம்:69)



இதனை நன்றாக மனதில் பதியவைத்துக் கொண்டு.

மல்பூஜாதில் பரேல்விகளின் தலைவர் ரிளாகான் பரேல்வி கூறுவதை பாருங்கள்! அதில்
கழுதைக்கும் மறைவான ஞானம் இருப்பதை ஏற்கிறார் (சம்பவத்தின் சுருக்கமான கருத்து).


ஒரு அரசர் மனதில் இறைநேசராக சந்திக்க சென்றார். அவருக்கு முன்பாக ஏராளமாக
ஆப்பிள் வைக்கப்பட்டுள்ளது. அதில் நல்ல ஆப்பிள் இருந்தது அரசர் மனதில்
சொல்லிக்கொண்டார் .இறைநேசர் தன்னுடைய கரத்தால் நல்ல ஆப்பிளை எடுத்துக்
கொடுத்தால் அவரை இறை நேசர் என்பதாக ஏற்பேன் .அந்த இறைநேசர் தன்னுடைய கரத்தால்
அதே ஆப்பிளை எடுத்து கொடுத்தவாறு கூறினார். நாங்கள் மிஸ்ர் சென்றிருந்தோம்
அங்கு ஒரு கழுதையைப் பார்த்தோம் அது மறைவானவற்றை அறிந்திருந்தது.
( மல்பூஜாத் பாகம் :4)





இதனின் இறுதியில் வரும் வாசகம்:

எந்த தன்மை மனிதன் அல்லாததிற்கு இருக்கமோ அதில்
மனிதனுக்கு பரிபூரணம் என்பது இல்லை.எந்த தன்மை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு
இருக்குமோ அதில் முஸ்லிமுக்கு பரிபூரணம் இல்லை.

ரிளாகான் பரேல்வியிடத்தில் கழுதைக்கும் மறைவான ஞானம் உண்டு.எனவே இதில்
மனிதர்களுக்கு பரிபூரணத்துவம் இல்லை.பரேல்வி அறிஞர் குலாம் நஸீருத்தீன் மறைவான
ஞானம் பரிபூரணத்துவம் என்கிறார்.இதனை ரிளாகான் பரேல்வி  மறுக்கிறார் எனவே
பரேல்விகளிடத்தில் காபிரா? இல்லையா?

அடுத்து இதில் வேடிக்கை என்னவெனில் பரேல்விய 'தஃவதே இஸ்லாமியினரால்'
வெளியிடப்பட்ட மல்பூஜாத் அஃலா ஹஜ்ரதில் இந்த சம்பவம் அவர்களுக்கு எதிராக
இருப்பதால் அமைதியாக நீக்கிவிட்டனர்.


வாசகத்தை நீக்குவது குறித்து பரேல்விகளின் நிலைப்பாடு:

தேவ்பந்த் வஹ்ஹாபிகள் தங்களின் பெரியோர்களின் நூல்களில் உள்ள அவமரியாதையான
வாக்கியங்களை திரிக்கின்றனர்.நீக்கிவிடுகின்றனர்.
இவர்கள் தங்களின் பெரியோர்களின் நூல்களிலிருந்து வாக்கியங்களை மாற்றுவதன்
மூலம் உறுதியாக அவர்களிடத்திலும் அந்த வாக்கியங்கள் அவமரியாதையும்
இறைநிராகரிப்புமாகும் என்பதைதான் இவர்களின் செயல்கள் நிரூபிக்கிறது.அந்த
வாக்கியங்கள் இறைநிராகரிப்பு அவமரியாதை இல்லையெனில் பிறகு அந்த வாக்கியங்களை
நீக்கும் திரிபு செய்யும் தேவை ஏன் ஏற்பட்டது?
(اکابر دیوبند کا تکفیر کا افسانہ)


லாஹுரில் ஸியானதுல் முஸ்லிமீன் மற்றும் இர்ஷாதுல் முஸ்லிமின் பெயரில்
சங்கங்கள் உள்ளது.அந்த நிறுவனத்தினர் இந்த மோசடி செய்கின்றனர்.அவர்களது
பெரியோர்களின் குஃப்ரான வாசகங்களில் மாற்றம் செய்ய
ஆரம்பித்துவிட்டனர்.வருங்கால சந்ததியினர் பழைய நூல்களில் உள்ள குஃப்ரான
வாசகங்கள் அறியக்கூடாது என்பதினாலாகும்.புதிய பதிப்புகள் இதனை தான்
உறுதிப்படுத்துகிறது.எதார்தத்தை பொய்யாக்குவது,குஃப்ரை ஈமானாக காட்டுவது
மற்றொரு பாவமாகும்.இவர்களின் செயல்களின் மூலம் இதனைதான் அறிய முடிகிறது.இன்றைய
தேவ்பந்த் உலமாக்களிடத்திலும் இந்த  குப்ரான வாசகங்கள் உறுதியாக
குஃப்ராகும்.அவ்வாறு இல்லையெனில் அவைகளை மாற்றும் தேவை ஏன் ஏற்பட்டது?
(سفید و
سیاہ )


நூல்களில் வாசகங்களை நீக்குவதன் பிண்னனியை பரேல்விகளின் எழுத்தின் மூலம்
நிரூபித்துவிட்டோம்.

பரேல்விகள் பெருமானாருக்கு மறைவான ஞானம் உண்டு என்பதன் லட்சணம் இதுதான்.

அடுத்து தேவ்பந்த் பெரியோர்களுக்கு மறைவானம் ஞானம் உண்டு என்பதன் மூலம்
பெருமானாரை விட தேவ்பந்த் பெரியோர்களுக்கு ஞானம் அதிகம் (அல்லாஹ்
பாதுகாப்பானாக!) என்பதாக அபாண்டத்தை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி அள்ளி வீசுகிறார்.

நாம் ஜவ்வாத் ரப்பானியின் இந்த வாதத்திற்கு நீண்ட விளக்கத்திற்குள் செல்ல
தேவையில்லை.மாறாக பரேல்விய அறிஞரின் வாதத்தை முன்வைத்து மறுப்பளிக்கிறோம்.

இது நமது கொள்கை அல்ல.மாறாக பரேலவிகளின் கொள்கையாகும்.

பரேல்விகள்
மறைவான ஞானம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மட்டும் இருப்பதாக கூறவில்லை.மாறாக,
நல்லோர்களுக்கும் உண்டு என வாதிக்கின்றனர்.

ஆதாரம்: مختصر عقائد اهل سنت و
الجماعت بريلوي)







பரேல்வி அறிஞர் அஹ்மத் யார் கான் கூறுகிறார்:

 நபி (ஸல்) அவர்களின் அறிவானது
படைப்புகளின் அனைத்தை விட அதிகம் என்பதை தேவ்பந்திகளும் ஏற்கிறார்கள்.
(ஜாஅல் ஹக்:119)




ஆக இதன் மூலம் பரேல்விய ஜவ்வாத் ரப்பானி தேவ்பந்த் பெரியோர்கள் மீது
இட்டுகட்டியுள்ளார் என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.

அடுத்து நபி ஸல் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் என்ன நடக்கிறது? என்பது
தெரியாது என குற்றச்சாட்டிற்கு இந்த மறுப்பு  போதுமானது.எனினும் இது குறித்து
இன்ஷா அல்லாஹ் அடுத்து பார்ப்போம்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live