14 Apr 2017

பரேலவி கொள்கை (ஹாளிர் , நாளிர்), இஸ்லாமிய கொள்கை பகுதி-4

மெளலவி ஷாஹ் மஸ்ஊத் கூறுகிறார்கள்:

 யாரசூலுல்லாஹ்! என்பதை நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் என்பதின் எண்ணத்தில் சொல்வதானது இணைவைப்பை ஏற்படுத்தும்.
(பதாவா மஸ்ஊத் பக்கம்:531)




அன்னார் கூறினார்கள்: 

மீலாத் சபைகளில் நிற்பதானது இணைவைப்பு ஏற்படும் அளவிற்கு இருந்தால் தான் கூடாது.ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மணித்துளியும் ஹாளிர் நாளிர் என்பது அல்லாஹ்வின் பண்பாகும்.
(ரஸாயிலே மீலாத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பக்கம்:567)




ஷைக்கை ஆழ்ந்து நினைப்பது இணைவைப்பு என  கருதவேண்டாம்! ஷைக் ஹாளிர் நாளிர் என்கிற எண்ணம் இருக்கும் பொழுதுதான் இணைவைப்பாகிவிடும்.ஏனெனில் ஹாளிர் நாளிர் என்பது அல்லாஹ்வின் பண்பாகும்.
(அஸ்ஸைஃபுஸ்ஸாரிம் 2011,22)

பரேல்விகளிடத்தில் நமது கேள்வி:

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போன்று ஹாளிர் நாளிர் என்பதாக ஏற்கிறீர்களா? இல்லையா?

இல்லையென்று சொன்னால்
முதலில் இதற்கு பதிலை கூறுங்கள்!

தொழுகையாளி அல்லாஹ்வை ஹாளிர் நாளிர் என்பதாக எவ்விதமாக ஏற்பாரோ அவ்விதமாக அண்ணல்
நபி (ஸல்) அவர்களையும் ஏற்கவேண்டும்.
(தப்ஸீர் நயீமி 1/58)



மனிதன், அல்லாஹ்தஆலா எல்லா நிலையிலும் வெளிரங்க அந்தரங்க நிலையை அறிந்துள்ளான் என்பதை ஏற்கிறான்.இவ்விதமாக நபி (ஸல்) அவர்களையும் வெளிரங்க அந்தரங்க நிலைகளில் ஹாளிர் நாளிர் என்பதாக ஏற்கவேண்டும்.
(ஹக் பர் கோன் பக்கம்: 170)



இனி இதற்கு எதிராக பரேல்வி அறிஞர்களின் கொள்கையின் பேரில் பரேல்விகள்  காபிராகிராகிவிடுகிறார்கள்.

அல்லாஹ்வைப் போன்று நபி (ஸல்) அவர்களை ஹாளிர் நாளிர் என்பதாக ஏற்பவர் அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களிடத்தில் காபிர்
(அன்வாரே அஹ்னாஃப் பக்கம்: 200)



நபி (ஸல்) அவர்களை 
ஹாளிர் நாளிர் என்பதாக நிரூபிப்பதற்கு தொலைக்காட்சியுடன் ஒப்பிட்டு கூறலாமா? 
கூடாது என்றால் 
பரேல்விகளே பதில் சொல்லுங்கள்!

ஹாளிர் நாளிர் கொள்கையை விளக்குவதற்கு தொலைக்காட்சி மிகவும் உதவியாக உள்ளது. (தஹப்ஃபுள் அகாயிதே அஹ்லுஸ்ஸுன்னத் பக்கம்:567)



தொலைக்காட்சியை உற்று நோக்கினால் இந்த   மஸ்அலாவை எளிதாக அறிவதற்கு புதிய சிந்தனைகள் உண்டாகும்.

இது எவ்வாறு ஏற்படும்? நபி (ஸல்) அவர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும்

பதில்:

 அல்லாஹ் அனைத்தையும் செயல்படுத்த கூடியவன்.நீங்கள் பார்க்கவில்லையா? இன்று மனிதன் இஸ்லாமாபாத்தில் இருந்து கொண்டு செய்திகளை வாசிக்கிறான்.நாம் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.எல்லோர் வீட்டிலும் ஒரே காட்சிதான் தெரிகிறது.(அகாயித் இபாதாத் பக்கம்:19)



நபி (ஸல்) அவர்களின் விஷயத்தில் லேசான உதாரணம் கூறுவது லேசான வார்த்தைகளை உபயோகிப்பது குப்ராகும்.
(நூருல் இர்ஃபான்)





அருவருப்பானவைகளைக் கொண்டு ஒன்றை ஒப்புமையாக கூறினால் அதன் மூலம்
இழிவுப்படுத்துதலும் களங்கப்படுத்துதலும் பெறப்படும்.

(அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யா)




நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் என்பதை தொலைக்காட்சியுடன் ஒப்பிட்டு விளக்குவதன் மூலம் பரேல்வி அறிஞர் காபிர் என கூற தயாரா? 

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live