13 Apr 2017

பரேலவி கொள்கை (ஹாளிர் , நாளிர்), இஸ்லாமிய கொள்கை பகுதி-3

பரேல்வி வாதங்கள் : 

உலகத்திலே ஹாளிர் நாளிர் என்பதானது ஆற்றல்மிக்க பரிசுத்தமான நபர் ஒரு இடத்தில் இருந்து கொண்டு முழு உலகையும் தனது உள்ளங்கையை பார்ப்பது போன்று பார்ப்பார்.தூரமான நெருக்கமான அனைத்து சப்தங்களையும் கேட்பார்.
(ஜாஅல்ஹக்)



நமது மறுப்பு :

நபி (ஸல்) அவர்களுக்கு ஹாளிர் நாளிர் என்பதானது பரிபூரணமாக உள்ளது என்பதாக  ஏற்கிறீர்களா? இல்லையா?
இல்லையெனில் விஷயம் இத்துடன் முடிந்து விட்டது. ஆம் என்று பரேல்வி வாதிட்டால்.

நமது அடுத்த கேள்வி: 

அந்த பரிபூரணத்தில் ஏதேனும் இணைவைப்பாளரை  கூட்டாக்குபவர்.அதுமட்டுமின்றி பெருமானார் (ஸல்) அவர்களை விட பரிபூரணத்தில் அதிக ஆற்றல் பெற்றவர்  காபிரா? இல்லையா ?

பரேல்விகளின் பதில்:

 காபிர் இல்லை என்று வாதிட்டால் பரிபூரணத்தை பரேல்விகள் ஏற்கவில்லை என்பதானது தெளிவாகிவிடும்.பரிபூரணத்தை ஏற்றால் காபிரை அதில் கூட்டாக்குபவர் அதோடு மட்டுமின்றி பரிபூரணத்தில் காபிர் அதிக ஆற்றல் பெற்றவர் என்பதாக சொல்வது சரியா?

இதனைக் குறித்து பரேல்வி அறிஞர்கள் கூறுவதையும் பரேல்வி அறிஞர்கள் அதற்கு முரண்படுவதையும் பார்க்கிறோம்:

எந்த தன்மை மனிதன் அல்லாததிற்கு இருக்கமோ அதில் மனிதனுக்கு பரிபூரணம் என்பது இல்லை.எந்த தன்மை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இருக்குமோ அதில் முஸ்லிமுக்கு பரிபூரணம் இல்லை.
(மல்பூஜாத் அஃலா ஹள்ரத்)



மற்றொரு பரேல்விய அறிஞர்:

 ஹாளிர் நாளிர் போன்ற  அண்ணலாரின் பரிபூரணத்தை மறுப்பதன் மூலம் அவரின் கண்ணியத்தில் வித்தியாசம் ஏற்படாது.எனினும் பரிபூரணத்தை நிராகரிப்பதால் அன்னாருக்கு துன்பம் கட்டாயம் ஏற்படும்.நபி ஸல் அவர்களுக்கு துன்பம் கொடுப்பது கடுமையான வேதனைக்கு உரித்தானது.
(பீடே நுமா பீட்யே)




நபி ஸல் அவர்களுக்கு துன்பம் கொடுப்பதின் காரணமாக மனிதன் காபிராகிவிடுவான்.
(ஙாஜி மும்தாஜ் ஹுஸைன் காதிரி)



இப்பொழுது பாருங்கள்! 
பரேல்விய பெரும் அறிஞர்கள் 
இதன் மூலம் காபிராகிவிடுகிறார்கள்.

பரேல்வி அறிஞர் கூறுகிறார்:

ஷைத்தான் எல்லா இடங்களிலும் ஹாளிர் நாளிர் இருக்கிறான்.
(நூருல் இர்பான்)

மேலும் பரேல்வி அறிஞர் மற்றோர் இடத்தில் கூறுகிறார்:

இப்லீஸின் பார்வை முழு உலகமும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்க்கிறது.அனைத்து முஸ்லிம்களின் நாட்டங்கள் அது மட்டுமின்றி உள்ளத்தின் சிந்தனையும் அறிகிறான்.நல்ல எண்ணத்தை விட்டு விலக வைக்கிறான்.கெட்ட எண்ணத்தை பாதுகாக்கிறான்.
(தப்ஸீர் நயீமி 3/114)




மெளலவி அஹ்மத் ரிளாகானி அணிந்துரை வழங்கிய நூல் 'அன்வாரே ஸாதிஆ' வில் வரும் வாசகம்:

 மீலாத் சபைகள் பூமியில் அனைத்து இடங்களிலும் தூய்மையான தூய்மையற்ற இடங்களில் நடைபெறுகிறது.மார்க்க ரீதியான சபைகள் அது அல்லாதவைகள் அனைத்து சபைகளில் நபி ஸல் அவர்கள் ஹாளிர் நாளிர் என்பதாக நாம் சொல்லவில்லை.மலகுல் மெளத் இப்லீஸ் ஹாளிர் இதை விட அதிகமான இடங்களான தூய்மையான தூய்மையற்ற குஃப்ரான குப்ரற்ற இடங்களில் பெறப்படும்.
(அன்வாரே ஸாதிஆ 359)







இப்பொழுது கூறுங்கள்! பரேல்விகள் அதிகமான ஆற்றலை ஷைத்தானுக்கு தந்துள்ளார்களா? இல்லையா? இதன் காரணமாக பரேல்விய அறிஞர் காஃபிரா இல்லையா?

இறுதியாக பாருங்கள்!

பரேல்விய காஜிமி ஸாஹிப் நபியின் அற்புதங்கள் மற்றும் பரிபூரணத்துவங்களில் நபியை விட நபி அல்லாதவர் அதிகம் பெற்றவர் என்றால் நுபுவத்திற்கு அவமரியாதையாகும்.
(ஹக்குல் முபீன்)




ஷைத்தானுக்கு நபியை விட அதிகமான ஆற்றல் உண்டு என்பதன்  மூலம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் பரேல்வி அறிஞர் காஃபிரா? இல்லையா? பரேல்விகளே பதில் கூறுங்கள்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live