13 Apr 2017

அஷ்ரஃபுஸ்ஸவானிஹில் அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் சம்பவத்தை குறித்து பரேல்விகளின் குற்றச்சாட்டும் நமது மறுப்பும்.

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களிடத்தில் அஜீஜுல் ஹஸன் (ரஹ்)
கூறுகிறார்கள்:

எனக்கு ஒரு அருவருப்பான சிந்தனை மீண்டும் மீண்டும் வருகிறது.இதனை வெளிப்படுத்த
வெட்கமாக உள்ளது.தயக்கமாக உள்ளது.இதனை கேட்டவுடன் அஷ்ரப் அலி தானவி (ரஹ்)
அவர்கள் இருக்கையில் எழுந்து பள்ளியில் நுழைந்தவாறு சொல்லுங்கள்! சொல்லுங்கள்!
என்றார்கள்.அதற்கு அவர்கள் நிறைந்த வெட்கத்துடன் தலைகுனிந்த நிலையில் நான்
பெண்ணாக இருந்து உங்களுடன் திருமணம் முடித்து இருக்க கூடாதா என்றார்கள்? நான்
இதனை வெளிப்படுத்தியவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கட்டுப்படுத்த முடியாத
அளவிற்கு சிரித்தார்.இது உங்களின் நேசம் இன்ஷா அல்லாஹ்! இதற்கு நன்மை
பெறுவீர்கள் என்றார்கள்.

[அஷ்ரஃபுஸ்ஸவானிஹ்]


பரேல்விகள் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால்
குற்றம் சுமத்துகிறார்கள். காழ்ப்புணர்ச்சியினால் சரியான விஷயத்தை கூட தவறானது
என வாதிக்கின்றனர்.இது ஒன்றும் புதிய ஒன்றில்லை மாறாக தொன்று தொட்டு நடக்கும்
ஒன்றே.முதலில் இது வெறும் சம்பவம் மட்டும்தான்.அடிப்படையான சட்டமோ
கடைப்பிடிக்கும் வழிமுறையோ இல்லை.இதனை ஏற்றாலும் ஏற்கவில்லையென்றாலும்
பிரச்சனையில்லை.எனினும் இந்த சம்பவமானது முற்றிலும் தவறானது.அடிப்படையற்றதும்
கிடையாது. பரேல்விகள் இந்த சம்பவத்தை விளங்கி கொள்வதற்கு சிறிது
முயற்சித்தாலும் கூட புரிந்து கொள்வதற்கு பாரதூரமான ஒன்றல்ல.

அஷ்ரப் ஸவானிஹில் மெளலானா அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் நிலைகள் சம்பவங்கள்
நிறைந்துள்ள நூலாகும்.இந்த நூலை காஜா அஜீஜுல் ஹஸன் மஜ்தூப் (தன்னிலை மறந்தவர்)
எழுதியது.

மஜ்தூபை குறித்து அஹ்மத் ரிளாகான் பரேல்வி நிலைப்பாடு
அஹ்மத் ரிளாகான் பரலேவி "மல்பூஜாதில்"  ஒரு மஜ்தூபின் சம்பவத்தை
எடுத்தெழுதியுள்ளார்கள் அதனின் சுருக்கம்:

حضرت سید موسی سہاگ
ஹள்ரத் ஸய்யித் மூஸா  (ரஹ்) அவர்கள் பிரபல்யமான மஜ்தூப்களிலே
கட்டுப்பட்டவர்.அஹமதாபாத்திலே அவர்களின் மிர்ஜா ஷரீப் உள்ளது.நான் அதனை
ஜியாரத் செய்துள்ளேன்.மூன்றாம் பாலின (அலியாக  செயற்கையான)தோற்றத்தில்
இருந்தார்கள்.ஒரு தடவை கடுமையான பஞ்சம் அரசர்,நீதிபதிகள்
ஒன்று கூடி ஹள்ரதிடம் துஆவிற்கு சென்றார்கள்.அவர்கள் துஆ செய்வதை மறுத்தார்கள்
ஏனெனில் நான் துஆ செய்வதற்கு என்ன தகுதி உள்ளது? என்றார்கள் இதனால் மக்கள்
கைசேதத்தால் கதறல்கள் எல்லையை எட்டியது.ஒரு கல்லை எடுத்தார்கள்.வளையில்
அணிந்திருந்த மற்றொரு கையின் பக்கம் கொண்டு சென்றார்கள் வானத்தை நோக்கி
முகத்தை உயர்த்தி கூறினார்கள் மழையே பொழி! அல்லது என்னை உயர்த்தி கொள்!
மேகங்கள் மலையைப் போன்று நீரை கொட்டியது.மழை நீர் பெருக்கெடுத்து
ஓடியது.மேலும் பெருக்கெடுத்த நீரால் வரண்ட பூமி நிரம்பியது.ஒருநாள் ஜும்ஆ
நாளில் ஜும்ஆ நேரத்தில் கடைவீதியில் சென்று கொண்டிருந்தார்கள்.மற்றொரு பக்கம்
நீதிபதிகள் ஊரின் ஜாமிஆ மஸ்ஜிதின் பக்கம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள்
அன்னாரிடத்தில் நன்மையை ஏவினார்கள்.இந்த தோற்றமானது ஆண்களுக்கு
ஹராமாகும்.ஆண்களுக்குரிய ஆடைகளை அணியுங்கள்!தொழுகைக்கு வாருங்கள்
என்றார்கள்.இதனை அன்னார் எதிர்க்கவில்லை. மறுக்கவில்லை.வளையல்கள்,
ஆபரணங்கள்,பெண்களுக்கு ஒப்பான ஆடையை கழற்றி விட்டு மஸ்ஜிதுக்கு சென்று குத்பா
கேட்டார்கள்.எப்பொழுது ஜமாஅத் தொழுகை ஆரம்பமாகி இமாம் அல்லாஹ் என்று தக்பீர்
கூறினாரோ அப்பொழுது அன்னாரின் நிலை மாறியது கூறினார் அல்லாஹ் அக்பர் எனது
கணவன் உயிருள்ளவன்.மரணிக்க மாட்டான்.எப்பொழுதும் மரணம் அடையமாட்டான்.இதனை
என்னைப் போன்ற விதவைக்கு கொடுக்கிறான்.இந்தளவிற்கு
கூறியிருப்பார்.தலையிலிருந்து பாதம் வரையிலும் அதே சிவப்பான ஆடையாக இருந்தது.

[மல்பூஜாத்]


இந்த சம்பவத்தில் மார்க்கத்திற்கு எதிரான பல காரியங்கள் அரங்கேறியுள்ளது
என்றாலும் கூட ரிளாகான் பரலேவி அவர்கள், ஹள்ரத் ஸய்யித் மூஸா அவர்களை இறைநேசர்
என்பதாக கூறிகிறார்

.(1) அவர் ஆணாக இருந்தும் கூட பெண்ணைப் போன்று நடந்துள்ளார் இவ்வாறு
நடப்பதானது ஆண்களுக்கு ஹராமாகும்.ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்  பெண்களுக்கு
ஒப்பாக நடக்கும் மனிதனை சபித்துள்ளார்கள்

(2) அவர் சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளார் இது ஆண்களுக்கு ஹராமாகும்
.

(3) ஆபரணங்கள் அணிந்துள்ளார் இதுவும் ஆண்களுக்கு ஹராமாகும்

.(4) ஜும்ஆ தொழுகைக்கு செல்லாமல் கடைவீதியில் சுற்றி திரிந்துள்ளார்.

(5)ஆணாக இருப்பதுடன் அல்லாஹ்வை கணவன் என்கிறார் அல்லாஹ் பாதுகாப்பானாக!

   ஆக இறைநிராகரிப்பும்,மார்க்கத்திற்கு எதிரானவைகளும் அவரிடம் இருப்பதுடன்
ரிளாகான் அவர்கள்,அவரை இறைநேசர் என்பதாகவும்,பிரார்த்தனை ஏற்கப்படதகுதியானவர்
என்பதாக கூறியுள்ளார்.

காஜா
அஜீஜுல் ஹஸன் ஸாஹிப் அவர்கள் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் மீது எல்லையற்ற
பிரியம் கொண்டவர்.அவர்களின் கொள்கை பிரியத்தை அவர்களின் உணர்வு ஒன்று சேருதலை
மஜ்தூப் (மெய்நிலை மறந்தவர்) என்ற தோற்றத்தில் பார்க்கப்படவேண்டும்.
வேண்டும்.ஒருவர் இன்னொருவரை நேசித்தால் அவருடன் இருக்க வேண்டும்.அருகில்
இருக்க வேண்டும்.அவரின் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க
வேண்டும்.அவரிடத்தில் உரையாட வேண்டும் என்பதாக விரும்புவார்.இது தான் அவரின்
விருப்பமாக நேசமாக ஆசையாக உள்ளத்தின் ஆவலாக இருக்கும்.

ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடினார்கள்.மூஸாவே! உமது கையில்
என்ன இருக்கிறது? என அல்லாஹ் கேட்டான்.அவர்கள்
எனது கையில் தடி உள்ளது என சொல்லி இருக்கலாம்.இது போதுமானதுதான்.எனினும்
பிரியமான நபரிடத்தில் பேசும் போது இவ்வளவு சுருக்கமாக பேச எப்படி இயலும்?
அவர்கள் கூறினார்கள் இது எனது தடி
இதன் மீது சாய்ந்து கொள்வேன்.ஆடுகளுக்கு இலைகளை பறிப்பேன்.இது அல்லாத வேறு
தேவைகளை பூர்த்தி செய்வேன். இவை பிரியத்தின் வெளிப்பாடு இதைப் போன்று தான்
பீர் முரீதிக்கும் உள்ள பிரியத்தின் தொடர்பு இதனை புரிந்து கொண்டால் இந்த
சம்பவத்தையும் புரிந்து கொள்ள முடியும்.எவரிடத்தில் அதிகமாக தொடர்பு நெருக்கம்
இருக்கும்.வாழ்க்கை துணை, பணிவிடை செய்வது , பிரயாணம் சந்தோஷத்திலும்
துக்கத்திலும் அனைத்திலும் பங்கெடுப்பது,எவர் என்று கேட்டால் அனைவரும்
ஒருமித்த குரலில் மனைவி என்பார்கள்.மனைவிதான் ஒர் ஆணிற்கு மிக நெருக்கமாக
இருப்பாள்.இதனால் தான் அஜீஜுல் ஹஸன் மஜ்தூப் அவர்கள் மனைவியாக இருக்கும் ஆசையை
வெளிப்படுத்தியதானது மனைவியைப் போன்று அன்னாருடன் மிக நெருக்கமாக இருக்க
வேண்டும்.பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான். இரண்டாவது விஷயம் இது போன்ற
பேச்சுக்கள் மனிதனின் பிரியம் மிகைக்கும் போது வெளியாகிவிடும்.எனினும் பொதுவான
சமயத்தில் கூறமாட்டான்.கவலை மகிழ்ச்சி மிகைக்கும் போது மனிதன் தன்னிலை மறந்து
சுய விருப்பமின்றி விரும்பத்தகாத பேச்சுக்கள் வெளிப்பட்டுவிடும்.இதன் பேரில்
ஷரீஅத்தில் எந்த குற்றமும் பிடிக்கப்படாது. இதற்கு முஸ்லிம் ஷரீபில் வரும்
ஹதீஸ் சான்றாக உள்ளது.

5300. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர்
ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடி
விட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத்
தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு
அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.
தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன்
இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே
அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர்,
("இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை" என்று சொல்வதற்குப் பதிலாக) "இறைவா!
நீ என் அடிமை; நான் உன் இறைவன்" என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த
மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ்
அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இந்த ஹதீஸின் மூலம் நாம் அறிய முடிகிறது.ஓர் அடியான் மகிழ்ச்சி மிகுதியால் யா
அல்லாஹ்! நீ எனது அடிமை என  கூறினாலும் தவறு என்பதாக சொல்லப்படும் எனினும்
இதன்பேரில் ஷரீஅத் ரீதியாக குற்றம் பிடிக்கப்படாது.இதே விஷயம்தான் காஜா
அஜீஜுல் ஹஸன் மஜ்தூப் தன்னிலை மறந்தவர் சம்பவத்திலும் பெறப்படுகிறது.அவர்கள்
பிரியத்தின் மிகைப்பில் இந்த விஷயத்தை கூறிவிட்டார்கள்.இதற்கு ஆதாரம் அந்த
சம்பவத்திலே جوش محبت (நேசத்தின் உணர்வில்) என்ற வார்த்தை உள்ளது.எனவே குறித்த
சம்பவத்தில் பிரியம் நேசம் மிகைத்து காஜா அஜீஜுல் ஹஸன் ஸாஹிப் அவர்கள் தனது
ஆர்வத்தை வெளிப்படுத்துவதில் தவறான உதாரணத்தை கூறிவிட்டார் என்பதாக மட்டும்
கூறமுடியும்.
எனினும் பிரியத்தின் மிகைப்பில் தவறு நிகழ்ந்ததால் ஷரீஅத் ரீதியாக குற்றமும்
பிடிக்கப்படாது.

ஆக பரேல்விகள் இதனை குறித்து காழ்ப்புணர்ச்சியால்  அசிங்கமாக
சித்தரிக்கிறார்கள்.

அடுத்த விமர்சனமும்  பதிலும்: 

மெளலானா ஹள்ரத் அஷ்ரப் அலி தானவி ரஹ் நன்மை
என்பதாக எவ்வாறு சொன்னார்கள்?

பதில்: 

மெளலானா அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் மற்றும் அஜீஜுல் ஹஸன்
இருவருக்கும் மத்தியில் உள்ள தொடர்பானது உலகரீதியானதா?  இருவருக்கும்
மத்தியில் உலக ரீதியான கொடுக்கல் வாங்கல் இருந்ததா? இல்லை உறுதியாக
இல்லை.அவர்கள் தனது சீர்திருத்திற்காக வேண்டி தான் மெளலானா அஷ்ரப் அலி தானவி
(ரஹ்) அவர்களின் சகவாசத்தில் இருந்தார்கள்.மெளலானா அஷ்ரப் அலி தானவி (ரஹ்)
அவர்கள் மார்க்க ரீதியான பிரியத்தின் காரணமாக சுபச்செய்தி கூறினார்கள்.இதில்
என்ன தவறு உள்ளது? அல்லாஹ்விற்காக இருவர் தங்களுக்கு மத்தியில் பிரியம்
கொள்வது தோழமையுடன் இருப்பதற்கு ஹதீஸில் நன்மை என்பதாக உள்ளது.

அடுத்த விமர்சனமும் நமது மறுப்பும்:

அஜீஜுல் ஹஸன் ஸாஹிப் அவர்களுக்கு அஷ்ரப்
அலி தானவி (ரஹ்) அவர்களுடன் அருகில் இருக்கும் தோழமையில் இருக்கும் ஆசையில்
தேட்டத்தில் கூறியிருந்தால் அழகான வார்த்தையில் அழகான முறையில்
கூறியிருக்கலாமே? ஆபாசமாக ஏன் கூற வேண்டும்?

நமது பதில்: 

நாம் ஆரம்பத்திலேயே கூறிவிட்டோம்.அஜீஜுல் ஹஸன் மஜ்தூப் அவர்கள்
உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்துவதிலே நேசம் மிகைத்து  தவறான உதாரணத்தை
கூறிவிட்டார்.

முஸ்லிம் ஷரீபில் வருகிற ஹதீஸ்.

209. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்கள்
உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்)
பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி
தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
"உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?" என்று
கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்)
அவர்கள், "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று கூறினார்கள்

காஜா அஜீஜுல் ஹஸன் அவர்களுக்கும் தனது சிந்தனை தவறு என்பது தோன்றுகிறது.இதன்
காரணமாக வெட்கம் ஏற்படுகிறது.இதனை கூறுவதை விட்டும் தயக்கம் எனினும் பிரியம்
மிகைத்து நாவிலிருந்து வெளியாகிவிட்டது.மெளலானா தானவி (ரஹ்) அவர்கள் அசலான
விஷத்தை கூர்ந்து நோக்கினார்கள்.இது பிரியத்தின் வெளிப்பாடு தீன்தான்.இதில்
உலக ரீதியான பிரயோஜனம் தொடர்பு இல்லை.இதனால் நன்மை என்பதாக சுபச்செய்தி
கூறினார்கள்.இதன் பிறகு காஜா அஜீஜுல் ஹஸன் ஸாஹிப் அவர்களுக்கு சந்தேகம்
நிவர்த்தியாகிறது.இதன் பிறகு நிகழ்வை குறித்து நூலில் எழுதிவிட்டார்கள்.

☆ உண்மையில் ஆபாசம் எது என்பதை பரேல்விகளே பாருங்கள். 

ரிளாகானின் சிறுவயதில் பாலியல் கலை:

ஜனாப் ஸய்யித் அய்யூப் அலி ஸாஹிப் கூறுகிறார்:

    "கண்ணியத்திற்குரிய ரிளாகான் ஹள்ரத் அவர்களின் வயது ஐந்து அல்லது ஆறாக
இருந்த பொழுது பெரிய குர்தா (மேலாடை) அணிந்து வெளியே செல்வது வழக்கமாகும்.ஒரு
நாள் வழக்கம் போல் அதே ஆடையில் வெளியில் சென்று கொண்டிருந்தார்கள்.அவருக்கு
முன்பாக சில ஆபாசமான நங்கைகள்  கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அன்னார் ஆடையை
கழற்றி முகத்தை மூடிக்கொண்டார்கள்.இந்த நிலையைப் பார்த்த பெண்கள் கூறினார்கள்:
"முகத்தை மூடிவிட்டு மர்மஸ்தானத்தை திறந்து விட்டீரே?"
அதற்கு அன்னார் பதில் கூறினார் பார்வை தடுமாறும் பொழுதுதான் உள்ளம்
தடுமாறும்.உள்ளம் தடுமாறினால் மர்மஸ்தானம்  தடுமாறும்.இதனைக்கேட்ட அந்தப்
பெண்கள் மூர்ச்சையாகினர்.எதனையும் பேசுவதற்கு தைரியம் இல்லை.

(ஆதாரம்:ஹயாத் ஆலா ஹஜ்ரத்)


முக்கிய குறிப்பு: 
அன்வாரே  ரிஜா நூலில் மூன்றறை வயது என வந்துள்ளது.

சிறுவயதில் மர்மஸ்தானத்தை வெளிப்படுவது இயல்பான ஒன்றுதான்.இதனை நாம் இங்கு
விமர்சனத்திற்கு எடுத்த பின்னணி இனி பார்ப்போம்!

மூன்றறை  வயதில் இந்தளவிற்கு தெளிவான சிந்தனை விழிப்புணர்வு பேணிக்கை
கற்பொழுக்கம் மேலோங்கி இருந்தது ஆச்சரியம் குறைந்த ஒன்றல்ல.மாறாக அன்னார் தந்த
பதிலில்தான் ஷரீஅத் மற்றும் இறைஞானப் பாதையின் நுணக்கம்
பொதிந்துள்ளது.சிறுவயதில்  நிறைந்த அனுபவம் இன்றைய சூழ்நிலையில்
வயோதிகரிடத்தில் கூட இருப்பது கடினம்தான்.

(ஆதாரம்: அன்வாரே ரிளா பாகம்:1 பக்கம்:254)


இந்நிகழ்வை குறித்து பெருமிதம் கொள்ளும் அளவிற்கு தகுதியுள்ளதா? பொருத்தமானதா?
என்பதை  கவனமாக பார்ப்போம்!

அஃலா ஹள்ரத் மறைப்பதாக இருந்தால் கைவைத்து கண்களை மூடியிருக்கலாம்.அல்லது
மேலாடையின் கையால் கண்களை மறைத்து இருக்கலாம்.அல்லது கண்களை
தாழ்த்தியிருக்கலாம்.அல்லது முகத்தை வேறு பக்கம் திரும்பியிருக்கலாம்.தவறான
பார்வையை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கு அறிவார்ந்த அணுகுமுறைகள் எத்தனையோ
உண்டு.எனினும்,இதற்கு மாற்றமாக நிர்வாணமாக நின்றுள்ளார்.எனவே கண்களை மூடுவது
நோக்கமல்ல. மாறாக,ஆணுறுப்பை திறந்து காட்டுவதுதான் நோக்கமாகும்.

அன்னார் பெரும்
அறிவிலி, அறியாமை நிறைந்தவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.எத்தனையோ
அறிவார்ந்த அணுகுமுறையை சாமானியர்கள் கூட அறியும் பொழுது, அன்னார்
அதனையெல்லாம்  புறந்தள்ளி, வெட்கக் கேடான செயலை கடைப்பிடித்திருப்பது
பரலேவிகளின் இமாமிற்கு சாமானிய அறிவு, புத்திகூர்மை கூட அறவே இல்லை என்பதை
தெளிவாக அறியமுடிகிறது."அஃலா ஹள்ரத் அவர்கள் சீரிய அறிவு,விழிப்புணர்வு,
பேணிக்கை, கற்பொழுக்கம் போன்ற உன்னதமிக்க பண்புகளால் உயர்ந்து நிற்கிறார்" என
இதன் பிறகும், பரலேவிகள், இமாமின் மீதுள்ள கண்மூடித்தனமான பற்றால்
வாதிக்கின்றனர்.அடுத்த ஆச்சரியம் என்னவெனில் ரிளாகான் மர்மஸ்தானத்தை  திறந்து
காட்டிவிட்டு வெற்று உடம்புடன் நிற்கிறார்.உண்மையில் கண்ணியமான வெட்கம்
நிறைந்த மனிதர் கண்களை தாழ்த்தி விரைவாக சென்று இருப்பார்.ஆனால் ரிளாகான்
பரலேவி அதை செய்யாமல் மர்மஸ்தானத்தை திறந்து காட்டிவிட்டு ஆபாசமான
நங்கைகளுக்கு மனித சுபாவத்தை குறித்து பாடம் நடத்தியுள்ளார்.

முதலில் கண்
தடுமாறும் பிறகு உள்ளம் தடுமாறும் உள்ளம் தடுமாறினால் மர்மஸ்தானம் தடுமாறும்
ஹள்ரத் அவர்கள் மர்மஸ்தானத்தை திறந்து காட்டி கண்களை மூடியது, நங்கைகளான
தங்களை கண்டுதான் என்பதை எப்படி  அவர்கள் அறிந்தார்கள்? ஹள்ரத் கண்களின் மீது
மேலாடையால் மறைத்ததை பார்த்து ஆபாசநங்கைகள்   சிறுகுழந்தையின் செயல் என்பதாக
எண்ணி,
கண்டு கொள்ளாமல் சென்று இருக்கலாமே? ஆக, ரிளாகான் பரலேவி குறும்புத்தனம்,கேலி
செய்யும் விதத்தில் மேலாடையை உயர்த்தி உள்ளார் 'என்பதை ஆபாச நங்கைகள்
அறிந்ததால்தான் இதனைக் குறித்து ரிளாகானிடத்தில் கேட்டுள்ளனர்.சிறுவயது
குழந்தைகள் பாலியல் உணர்வை ஆன்மீக விளக்கத்தை அறியாமல் இருக்கும்.மூன்றை வயது
குழந்தைக்கு இதனைப் பற்றிய வாடை கூட இருக்காது.ஆனால்,உலகத்திலே இந்த குழந்தை
மட்டும்தான் இது போன்ற அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளது.குழந்தைகளுக்கு
"ஆண்குறி தடுமாறும்" என்கிற அறிவு இருக்காது.

மெளலவி ரிளாகான் வேறு கலையில்
பாண்டித்துவம் பெற்றவரல்ல.எனினும் எதார்தத்தில்  பாலியல் கலையில் இமாமாக
இருந்துள்ளார்.மூன்றை வயதில் அக்கலையில் தனக்குரிய தனித்துவமான ஆற்றலை
வெளிப்படுத்தி ஆபாசமான பெண்களை மூர்ச்சையாக்கியுள்ளார்.இந்நிகழ்வை முன்வைத்து
பரலேவியர்களுக்கு நாம் கொடுக்கும்,ஆலோசனை.மெளலவி அஹ்மத் ரிளாகான் ஐம்பது
கலைகளில் திறமையாளர் என்பதாக பொய்யாக எழுதப்பட்டுள்ளது.எனினும்,அன்னார் ஐம்பது
கலைகளில் ஒன்றான காமம், காதற் செய்கை துறையில் எங்களது இமாம் பாண்டித்துவம்
பெற்றவர் என்கிற உண்மையை எழுதிவிடுங்கள் முழு உலகத்திலும் அவருக்கு நிகரான
நபர் இருப்பதாக கற்பனை கூட செய்யமுடியாது.
  ஆக சிறுபிராயத்திலேயே காமம் பாலியல் கலைகளை கரை கண்டவரை   இமாமாக கருதும் பரலேவிகளே! "நீங்கள் எங்களின் கண்ணியமிக்க பெரியோர்களின் மீது ஆபாச அவதூறை
அள்ளிவீசுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது"?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live