12 Apr 2017

ஹிப்ளுல் ஈமானில் குற்றச்சாட்டிற்க்கு பரேலவிகளை வாயடைக்கச் செய்யும் பதில்.

பரேலவிகளின் குற்றச்சாட்டு :

நபி (ஸல்) அவர்கள் அறிந்திருப்பது போன்று அறிவை  சாதரன மனிதர்கள் ,குழந்தைகள் , பைத்தியக்காரர்கள், இன்னும் ஏனைய விலங்கினங்களும் அறிந்து வைத்துள்ளார்கள்.
[ஹிப்ளுல் ஈமான்]அஸ்ரப் அலி தானவி (ரஹ்)  அவர்களின் மீதுள்ள குற்றச்சாட்டிற்க்கு தக்க மறுப்பு :

ரிழா கான் பரேலவி நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிட்டார். அதற்க்கு மறுப்பாக அவரிட்தில் கேட்கப்பட்டது.

குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான் :

عالم الغيب و الشهادة

மறைவான வற்றை அல்லாஹ் அறிவதாக தான் உள்ளது. பிறகு நபி (ஸல்) அவரகளை மறைவானவற்றை அறிபவரென எப்படி கூறுகிறீர்கள்?

அதற்க்கு ரிழா கான் கூறினார்:

மறைவான விஷயங்களை விலங்குகளும் அறியும்.

அஹமது ராஜா கான் பரேலவி எழுதுகிறார்:

ஒரு அரசர் மனதில் இறைநேசராக சந்திக்க சென்றார். அவருக்கு முன்பாக ஏராளமாக ஆப்பிள் வைக்கப்பட்டுள்ளது. அதில் நல்ல ஆப்பிள் இருந்தது அரசர் மனதில் சொல்லிக்கொண்டார் .இறைநேசர் தன்னுடைய கரத்தால் நல்ல ஆப்பிளை எடுத்துக் கொடுத்தால் அவரை இறை நேசர் என்பதாக ஏற்பேன் .அந்த இறைநேசர் தன்னுடைய கரத்தால் அதே ஆப்பிளை எடுத்து கொடுத்தவாறு கூறினார். நாங்கள் மிஸ்ர் சென்றிருந்தோம் அங்கு ஒரு கழுதையைப் பார்த்தோம் அது மறைவானவற்றை அறிந்திருந்தது.
( மல்பூஜாத் பாகம் :4)
இதன் மூலம் அல்லாஹ்வின் அடியார்கள் கழுதைகளுக்கும் மறைவான ஞானம் இருப்பதாக ஏற்க்கின்றார்கள். ஆக நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதை நிரூபிக்க கழுதையின் உதாரணத்தை கூறுவது ரிழாகான் பரேலவி இவருக்கு எதிராக தீர்ப்பு கொடுக்க தயாரா?

இதற்கு அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் பதில் கொடுத்தார்கள் நாயகம் (ஸல்)  அவர்களை ஆலிமுல் கைப் என்ற அல்லாஹ்வின் தன்மையை கொடுக்ககூடாது. சில மறைவானவற்றை அறிந்தவர்கள் என்ற அர்த்தத்தில் கூறுகிறோம் என்று கூறினால்  சில மறைந்தவை எனும் போது நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அவற்றை அறிந்திருக்கலாமே! நபியவர்களுக்கு இதில் என்ன விஷேசம் உள்ளது?

இதனை திரித்து தானவி (ரஹ்) அவர்கள் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் தானவி (ரஹ்) அவர்கள் அந்த ஹிப்ளுல் ஈமானில் சில வரிகளுக்கு பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு ஷரீஅத்தின் அறிவானது பரிபூரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. என தெளிவுபடுத்தியுள்ளார்கள்.அடுத்து நபி (ஸல்) அவர்களுடன் குழந்தை, கழுதையை ஒப்பிடுவது சரியானதா?

 மறுப்பு :

நபி (ஸல்)  அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என வாதிட்டதே ரிழா கான் பரேலவி தான் என நிரூபித்தோம் .

அதனின் தொடர்ச்சியில் தக்க மறுப்புகள் :

தானவி (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அருவருப்பான பொருளின் பக்கம் ஒப்பிட்டது தவறு என்றும் அவரை காபிர் என்றும் வாதிட்டால்!

இந்த குப்ரு பத்வாவை சுயூதி (ரஹ்) அவர்களின் மீதும் ,இயாள் மாலிகி (ரஹ்) அவர்களின் மீதும் ,ரிழா கான் பரேலவியின் மீதும் கொடுக்க தயாரா?

இமாம் அல்லாமா ஜலாலுத்தீன் சுயூதி (ரஹ்)  அவர்கள் :

ما المسيح عبن مريم الا رسول قد خلت من قبله الرسول

 இந்த ஆயத்தை தொடர்ந்து வரும்

كانا ياكلان الطعام

என்பதின் விளக்கத்தில்

كانا ياكلان الطعام کغير هما من الحيوانات

ஈசா அலை அவர்கள் மர்யம் அலை அவர்கள் இருவரும் விலங்குகள் உணவு சாப்பிடுவதை போன்று உண்டார்கள்
(جلالين)


சுயூதி (ரஹ்) அவர்கள் இருவரையும் விலங்குகளுடன் ஒப்பிட்டு உள்ளார்கள் இதற்க்கு பரேலவிகள் பதில் சொல்ல தயாரா?

அடுத்து, கியாமத் நெருங்கும் சமயம் தஜ்ஜால் வெளிப்படுவான் அவர் தூங்கும் நிலையைப் பற்றி கூறப்படுகிறது.

அவனின் உள்ளம் விழித்திருக்கும் கண்கள் தூங்கும் இதை பற்றி ஹதீஸ்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

 தஜ்ஜாலின் இந்நிலையை தெளிவுபடுத்தியவாரு முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் இயாள் (ரஹ்) அவர்கள் இருவரின் கருத்தை ரிழாகான் எடுத்தெழுதுகிறார் :

قال القاري قال القاضي  - رحمه الله : أي لا تنقطع أفكاره الفاسدة عنه عند النوم ; لكثرة وساوسه وتخيلاته وتواتر ما يلقي الشيطان إليه ، كما لم يكن ينام قلب النبي - صلى الله تعالى عليه وسلم - من أفكاره الصالحة ; بسبب ما تواتر عليه من الوحي والإلهام . 
(فتاوي رضوية)


கருத்து :

தஜ்ஜாலின் தவறான சிந்தனைகள் தூங்கும் நேரத்தில் அவனை விட்டுவிட்டு நீங்காது .ஏனெனில் ஊசலாட்டமும் ,சிந்தணையும் அந்நிலையில் அதிகமாகும் .மேலும் ஷைத்தான் அவனின் உள்ளத்தில் செலுத்தும் விஷயமும் அதிகமாக நிகழும் எதைப் போன்று எனில் நபி (ஸல்)  அவர்கள் தூங்கும் போது உள்ளம் விழித்திருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹி , இல்ஹாம் வந்துக் கொண்டிருப்பதை போன்றதாகும்.

இங்கு தஜ்ஜாலுடன் நபி (ஸல்) அவர்களை இணைத்து ஒப்பிடப்பட்டுள்ளது. இதனை முன்வைத்து ரிழாகானிற்க்கு எதிராக காபிர் பத்வா கொடுப்பார்களா?

மேலும் இதன் மூலக் கருத்து مرقاة المفاتيح شرح مشكاة المصابيح ج10 லும் உள்ளது அதனால் பரேலவிகளே காளி இயாள் (ரஹ்) அவர்களையும் காபிரென கூற தயாரா?? (நஊதுபில்லாஹ்)


قال القاضي - رحمه الله : أي لا تنقطع أفكاره الفاسدة عنه عند النوم ; لكثرة وساوسه وتخيلاته وتواتر ما يلقي الشيطان إليه ، كما لم يكن ينام قلب النبي - صلى الله تعالى عليه وسلم - من أفكاره الصالحة ; بسبب ما تواتر عليه من الوحي والإلهام . 
நபி (ஸல்) அவர்களை ஹாளிர், நாளிர் என்பதை கூறியவாறு முப்தி அஹ்மது யார் கான் குஜராத்தி கூறுகிறார் :

شيطان بر جک ہم سب نظر رکھتا اور ہماری حالات خير ركھتا ہے اسری طرح جناب پاک محمد (مصطفي) نبئ  تقري ص100

ஷைத்தான் அனைத்து இடத்திலும் நம்மை கண் கானிக்கின்றான் மேலும் நம்முடைய நிலைகளும் அறிந்து உள்ளான் .இதே போன்று தான் நபி முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள்.

தப்ஸீர் நயீமியில் எழுதுகிறார்:

ஷைத்தான் அவனுக்கு உலகத்தை பார்க்க கூடிய ஆற்றல் இருக்கிறது. மனிதனுடைய சிந்தனைகளையும் , நாட்டங்களையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான். நல்ல நாட்டமாக இருந்தால் தடுக்கு முயற்ச்சி செய்வான் கெட்டதாக இருந்தால் அதை பாதுகாப்பான். மனிதனை ஏமாற்றும் ஷைத்தானுக்கே இப்படி அறிவு இருக்கும் போது மக்களின் நேர்வழிக்காட்டியான நபிமார்கள் , நல்லோர்களுக்கு இருக்காதா?

[தப்ஸீர் நயீமி]இதில் நபிமார்கள் என்பதில் நபி (ஸல்) அவர்களும் அடங்குவார்கள்.

கண்ணியத்திற்க்குறியவன்களே எவ்வளவு பகிரங்கமாக நபி (ஸல்) அவர்களை ஷைத்தானுடன் ஒப்பிட்டுள்ளார்கள் இதை விட பெரிய அவமறியாதை இருக்குமா??

அஹமது யார் கானை விமர்ச்சிக்க திராணியற்றவர்கள் , மௌலான அஸ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களை விமர்ச்சிப்பதற்க்கு அருகதையற்றவர்கள்..

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live