11 Apr 2017

பரேலவி கொள்கை (ஹாளிர் , நாளிர்), இஸ்லாமிய கொள்கை பகுதி-2

அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் என்பது கொள்கையா? அல்லது
ஒழுக்க கேடா?

நாம் அதிகமாக யோசிக்கிறோம்.
சாமானியார்கள் மிகவும். அறியாதவர்களாக இருக்கிறார்கள்.பரேல்விகள் அவர்களின்
இறைநம்பிக்கையை பறித்துக் கொண்டு விளையாடிகின்றனர்.அவர்களுக்கு இதனை குறித்து
எதுவும் தெரியாது.இந்த கொள்கையில் அவமரியாதையும் ஒழுக்கக் கேடும்
நிறைந்துள்ளது.எனினும் சாமானியார்கள் இதனின் அபாயத்தை குறித்து எதையும்
உணரவில்லை.இந்தக் கொள்கையின் மூலம் பரேல்விகள் கடுமையான கொல்லும் விஷயத்தை
திறந்துவைத்துள்ளனர்.
அல்லாஹ் அவர்களுக்கு  நேர்வழியை காட்டுவானாக!

சுருக்கமான விளக்கம் :

பெரியோர்களின் சமூகத்தில் சிறியவர் ஹாளிராக
இருப்பார்.பெரியோர்களை (حضور) தலைவர் என்று சொல்லப்படும்.உதாரணமாக பீர்
(பெரியோர்) முரீத் (சிஷ்யரிடம்) கூறுவார்.இந்த செயலை வரும் காலங்களில்
செய்யாதீர்! அவர் கூறுவார் சரி (حضور) தலைவர்
முழு உலகத்தில் நபி (ஸல்)
அவர்களின் சமூகத்திற்கு வருபவர்கள் ஹாளிராக இருப்பார்கள்.அண்ணலார் حضور
(தலைவராக) இருப்பார்கள்.ஏனெனில் பெரியோர்களை حضور (தலைவர்) என்றும்
சிறியவர்களை ஹாளிர் என்று சொல்லப்படும்.பீர், முர்ஷித்,உஸ்தாத் அனைவரும்
(حضور) தலைவர்கள் சிஷ்யர், மாணவர் ஹாளிர்
நபி (ஸல்) அவர்கள் தலைவர் (حضور) எனினும் அல்லாஹ் இனத்தை விட்டு தூய்மையானவன்
இதன்படி அவனை ஹாளிர் என்பதில் தவறில்லை.ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் ஒழுக்கம்
பேணுதல் பேணிக்கை என்பது அண்ணலாரை (حضور) தலைவர் என சொல்வதில்தான் உள்ளது.ஆக
அல்லாஹ்வை ஹாளிர் என்றும் பெருமானாரை ( حضور) தலைவர் என்று சொல்வதுதான்
பேணிக்கையும் ஒழுக்கமுமாகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் என்ற கொள்கையால் அண்ணலாருக்கு
அவமரியாதை நபி (ஸல்)அவர்கள் எல்லா இடங்களிலும் ஹாளிர் நாளிர் என்பதன் மூலம்
ஏற்படும் அவமரியாதை சிறிது நாணமும் வெட்கமும் உள்ள நபர் கூட சுய தேவையை
நிறைவேற்றுதல் மனைவியிடத்தில் ஒன்று சேர்தல் இதனை தவிர பல்வேறு நிலைகளில்
எவரும் தன்னை பார்ப்பதை விரும்ப மாட்டார்.அடுத்தவரின் இது போன்ற நிலையை
பார்க்க மாட்டார் எனும் போது நபி ஸல் அவர்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள்
என்பதானது பெரிய அவமரியாதை இல்லையா
சிறிதளவு இறைநம்பிக்கையிருப்பவரும்   அண்ணலாரை குறித்து கற்பனையில் கூட
இவ்வாறு எண்ணமாட்டார்.

பரேல்விய அறிஞர் கூறுவதை பாருங்கள் :

காரிருளில் தனியாக வீட்டில் மறைவாக இருந்து
கொண்டு எந்த ஒரு செயலை செய்தாலும் அண்ணலாரின் பார்வையை விட்டும்
மறைந்ததில்லை.
(ஜாஅல் ஹக் 72)




இப்பொழுது கூறுங்கள்! ரோஷமுள்ள நபர் வீட்டினரின் முன்னிலையில் மனைவியிடத்தில்
தாம்பத்தியத்தில் ஈடுபடமாட்டார்.ஆனால் இந்த ரோஷமானது பரேல்விகளிடமிருந்து
நீங்கிவிட்டது.

விமர்சனமும் விரிவான விளக்கமும்: 

அல்லாஹ் நமது அனைத்து நிலைகளையும்
பார்க்கிறான் இது அவமரியாதை இல்லையா?

நமது பதில்: 

புகாரியில் வரும் ஹதீஸ் அதனின் சுருக்கமான கருத்து:

மனிதன் தனது சுயதேவைகளை நிறைவேற்றும் நேரத்தில் உடலின் குறிப்பிட்ட பகுதி
வெளிப்பட்டு நிர்வாணம் ஏற்படுகிறது.இதனை அல்லாஹ் பார்க்கிறான் என்பதால்
மர்மஸ்தானத்தை மறைப்பதற்காக வேண்டி குனிந்துகொள்கின்றனர்.இவ்வாறு செய்யும்
முஸ்லிமை தடுக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

الا انهم يثنون صدورهم ليستخفوا منه

அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள்
இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்)
போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக்
காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின்
(இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்” (என்பதை அறிந்து
கொள்வீர்களாக)!

அடியார்களின் எந்த நிலையும் அல்லாஹ்விற்கு மறைவாக இருப்பதில்லை. ஆடையுடன்
இருப்பது ஆடையில்லாமல் இருப்பது சமம்தான்.வெறும் அடியான் தன் மீது நெருக்கடியை
ஏற்படுத்திக் கொள்கிறான்.உள்ளத்தில் இருப்பதை அறிபவனுக்கு உடலின் வெளிரங்கத்தை
யாரால் மறைக்க முடியும்?

அல்லாஹ்வை விட்டும் மறைப்பதானது மனிதனின் சக்திக்கு
அப்பாற்பட்டது.இதனால் மனிதனுக்கு அல்லாஹ் மறைக்கும்படி
கட்டளையிடவில்லை.ஏனெனில் அல்லாஹ் தனது அடியார்களின் சக்திக்கு மீறியதை
கட்டளையிடமாட்டான்.நபிமார்கள் ஸஹாபாக்கள் அனைத்து முஸ்லிம்களும் அல்லாஹ்
ஹாளிர்  நாளிர் அறிந்தவாறு அனைத்து மனித தேவைகளையும் நிறைவேற்றினார்கள்.
நிறைவேற்றுகிறார்கள்.
இது அல்லாஹ் தனது அடியார்களின் மீது அருளுகிற  அதிகப்படியான
கருணையாகும்.

ஏனெனில் அடியார்கள் சுயதேவைகளை நிறைவேற்றும் நேரத்தில் எந்த ஒரு
நெருக்கடியை நெருடலை  உணர்வதில்லை.ஒரு முஸ்லிம் அல்லாஹ் ஹாளிர் நாளிர்
அறிந்தவாறு பகல் இரவில் சுயதேவைகளை நிறைவேற்றுகிறார்.தாம்பத்தியம்
கடைப்பிடிக்கிறார்.எனினும் துளியளவும் மனஅழுத்தம் சுமை பாரத்தை உணர்வதில்லை
என்பதால் சிந்தனை ரீதியான நெருக்கடியிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளான்.

சிந்தித்துப் பார்ப்போம்! குளிக்கும் இடத்தில் மறைவான அங்கம் வெளிப்படுவதை
குழந்தை பார்த்தாலும் அவர் நெருக்கடியை உணர்வார்.எனினும் அல்லாஹ் அனைத்தையும்
பார்க்கிறான் என்பதை உறுதியாக அறிந்தும் கூட நெருக்கடியை உணர்வதில்லை.இவ்வாறு
இல்லையெனில் வாழ்க்கை நரகமாகிவிடும்.எனவே,அடியான் அல்லாஹ்விடமிருந்து மறைப்பை
பேணுவதை விட்டும் சுதந்திரமாக இருக்கிறான்.

இது உண்மையில் அல்லாஹ்
அடியார்களுக்கு அருளிய உபகாரமும் அருளுமாகும்.இதற்கு மாற்றமாக நபி (ஸல்)
அவர்களுக்கு முன்பாக மறைப்பை கடைப்பிடிப்பது மனிதனின் சுயகட்டுப்பாட்டில்
உள்ளது.இதனால்தான் அனைத்து ஸஹாபாக்களும் சுயதேவைகளை நிறைவேற்றும் போது
நபியிடத்திலும் மறைவாக இருந்திருக்கிறார்கள்.சுயதேவைகள், தாம்பத்தியத்தின்
போது ஸஹாபாக்கள் எவரும் அண்ணலாருக்கு முன்பாக நிறைவேற்றமாட்டார்கள்.இதன்
காரணம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடத்தில் மறைவை கடைப்பிடிப்பது
அவசியம்.

இரண்டாவது அல்லாஹ்விற்கு முன்பாக சுயதேவைகளை நிறைவேற்றும் நேரத்தில்
அடியான் நெருக்கடியை உணர்வதில்லை.அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக எவராவது
சுயதேவையை  நிறைவேற்றுவாரா?

கற்பனையாக யோசித்துப் பாருங்கள்! இன்றும் கூட பரேல்விகள் தவிர எவரும்
குளியலறையில்   குளிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார் எனில்
முஸ்லிம் மட்டும் இல்லை காபிர்களின் கால்களுக்கு கீழாக  பூமி
பிளந்துவிடும்.அவர்கள் வெட்கத்தினால் கைசேதப்படுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் இருந்தால் உருண்டையான பூமியில் பரேல்விகள்
தவிர எவரும் வசிக்கமாட்டார்கள்.

சிந்தித்துப் பாருங்கள்!
நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் என்றால் ஸஹாபாக்கள், அண்ணலாருக்கு முன்பாக
ஒழுக்கம் சங்கையின் காரணமாக பேசமாட்டார்கள் எனும் போது சுயதேவைகளை எப்படி
அண்ணலாருக்கு முன்பாக நிறைவேற்றி இருக்க முடியும்?

உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! ஸஹாபாக்கள் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை
ஹாளிர் நாளிர் என்பதாக நம்பிக்கை கொண்டிருந்தால் சுயதேவையை பூர்த்தி
செய்திருக்க மாட்டார்கள்.அவர்களுக்கு குழந்தையும் பிறந்திருக்காது.

குறிப்பாக
கண்ணியமான ஹஸன் ஹுஸைன் (ரளி) இருவரின் பரக்கத்துமிக்க பிறப்பு
நிகழ்ந்திருக்காது.ஏனெனில் அலி ரளி அவர்கள் ஸஹாபி உறுதியாக பரேல்வி
அல்ல.(இன்ஷா அல்லாஹ்)

பரேலவி கொள்கை (ஹாளிர் , நாளிர்), இஸ்லாமிய கொள்கை பகுதி-1 கான இங்கு கிளிக் செய்யவும் 👇


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live