24 Feb 2017

பரலேவிய அறிஞர், நாகூர் முஹம்மது காஸிம் மஹ்ளரி பிஹிஸ்தி ஜேவர் மறுப்பிற்க்கு நம் மறுப்பு.

பரலேவிய அறிஞர், நாகூர் முஹம்மது காஸிம் மஹ்ளரி
தேவ்பந்த் உலமாக்களின் மீது சுமத்தும் குற்றச்சாட்டு உண்மையில் அவர்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியும் குரோதமும் விரோதமும்தான் காரணமாகும்.

இதில் அவரது வாய்ஸ்சும், நம் மறுப்பும் உள்ளது.

https://m.youtube.com/watch?v=qbH2ppSSbxA

அவர்களிடத்தில் உள்ள தவறுகளை வழிகேடுகளை சுட்டி காட்டுவதான் எங்களின் நோக்கம் என்பதாக பரலேவிய அறிஞர் கூறுவது வெறும் வெற்றுப்பேச்சு வாயளவில் மட்டும்தான்.நம்மை எதற்கெடுத்தாலும் வஹ்ஹாபிகள் என்பதாக விமர்சிப்பவர்கள் உண்மையில் ஆய்வுத்திறன் இருந்திருந்தால் பிஹிஸ்திஜேவர் என்ற நூலில் மார்க்க அறிஞரும் மேதையும் சிறந்த ஆய்வாளருமான அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக பிக்ஹ் நூல்களை புரட்டிப் பார்த்திருக்க வேண்டும்.

எதார்த்தத்தில் நம்மீது குற்றம் சுமத்துவதில்லை மாறாக ஹனஃபி பிக்ஹை விமர்சிக்கிறார்.அது மட்டுமின்றி பரலேவிய அறிஞர்  ஹனஃபி பிக்ஹிற்கு எதிராக இருப்பதுடன்  மத்ஹப் மறுப்பாளர்களுக்கு துணை நிற்கிறார்.மத்ஹபை பின்பற்றுகிறோம் என்பது போலியான வாதம் என்பதை அறிய முடிகிறது.

பிஹிஷ்திஜேவர் நூலில் உள்ள அந்த சட்டமானது சுய ஆய்வில் எழுதப்பட்டதல்ல மாறாக பிக்ஹ் நூல்களில் இருந்துதான் எழுதப்பட்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்!

பரலேவிய அறிஞர் பிஹிஷ்திஜேவரில் குற்றம் சுமத்துகிற வாசகம் :

அசுத்தத்தை ஒருவர் மூன்று முறை நாவினால் நக்கினால் சுத்தமாகிவிடும் என்று உள்ளது இது சரியா முறையா என்பதாக கேள்வி எழுப்புகிறார்.அதுமட்டுமின்றி வரம்பு கடந்து விமர்சிக்கிறார்.



இதை வைத்து குற்றம் சுமத்தும் முஹம்மது காஸிம் மஹ்ழரி அவர்களுகள் கண் இருந்தும் குருடர் என்பதை நம்மால் அறிய  முடிகிறது.

ஏனெனில் இந்த மஸ்அலா எந்த நூலில் உள்ளது என்பதையும் தெளிவாக எடுத்தெழுதியுள்ளார்கள்.


இதே சட்டமானது பதாவா ஆலம்கிரி நூலில் அசுத்தத்தை நீக்கும் முறை என்ற தலைப்பில் அந்த வாசகம் வருகிறது :

ஏதேனும் உறுப்பில் அசுத்தம் ஒட்டிக்கொண்டு மேலும் அதனை நாக்கால் சூப்பி அதனின் பிரதிபலிப்பு சென்று விட்டால் தூய்மையாகிவிடும் .
(ஆதாரம்:பதாவா ஆலம்கிரி)

Urdu:



Arabi:



மேலும் இதே விசயம் பதாவா காளிகானிலும் உள்ளது.





சுத்தம் ஈமானில் பாதி அசுத்தமானவர்களுடன் மலக்குகள் வரமாட்டார்கள் என்பதாக பாடம் எடுக்கிறார்.பாடம் நமக்கு மட்டும் நடத்தவில்லை மாறாக ஹனஃபி பிக்ஹை ஏற்றுக்கொண்ட அறிஞர்களுக்கும் சாமானியர்களுக்கும் நடத்துகிறார்.ஆக பிஹிஸ்திஜேவரில் வரும் மஸ்அலா முழுக்க பிக்ஹ் நூல்களை அடிப்படையாக கொண்டது என்பதை தெளிவாக விளக்கிவிட்டோம்.

இன்னும் பீர் மெஹ்ர் அலி ஷாஹ் பரேலவி கூறுகிறார் :

மெளலவி அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் ஒவ்வொரு சட்டத்தையும் முழுமையாக நுணுக்கத்துடன் அணுகுவார்கள்.
(மெஹ்ர்இ முனீர் 268)



ஒரு வேளை பரலேவிய அறிஞர் பிக்ஹ் நூலில் உள்ளதை ஏற்க தயங்கலாம் எனவே

 இது குறித்து பரலேவிகளின் தலைவர் ரிளாகான் பரலேவி அவரது நூலான பதாவா ரிஜ்விய்யாவில் எழுதியுள்ளார்:


ஏதேனும் உறுப்பில் அசுத்தம் ஒட்டிக்கொண்டு மேலும் அதனை ஏதேனும் காரணத்தால் அறியாமல் மூன்று முறை  நாக்கால் சூப்பி அதனின் பிரதிபலிப்பு சென்று விட்டால் தூய்மையாகிவிடும் .

(நூல்:பதாவா ரிஜவிய்யா நான்காம் பாகம் பக்கம் 464,465) 







முக்கிய குறிப்பு:

நமது இந்த மறுப்பின் நோக்கம் பரேல்விகளின் போலி முகத்தை தோலுரிப்பதும்,முஹம்மது காஸிம் மஹ்லரியின் வஹ்ஹாபிய சிந்தனையை வெளிக்காட்டுவதுதான்.இந்த மஸ்அலா மார்க்கத்திற்கு உட்பட்டதுதான்.இன்ஷா அல்லாஹ் அது குறித்த விளக்கத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live