26 Feb 2017

பரேலவிய கொள்கையும் (நூர் & பஸர்), இஸ்லாமிய கொள்கையும் பாகம் :1

 நபி (ஸல்)
அவர்கள் நூர்
இது குறித்து பரேல்விகளின் கருத்துக்கள்..!

 ரிளாகான் பரேல்வி கூறுகிறார்:

 நபி ஸல்
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியில் பாதி மனிதப் போர்வையில் பூமியில்
இறங்கியுள்ளார்கள்.

 (ஆதாரம் :حدائق بخشش)மற்றோர் இடத்தில் எழுதியுள்ளனர்:

நபி ஸல் அவர்களின் ஒளியிலிருந்துதான் அனைத்து படைப்புகளும் உருவானது.

 (مواعظ نعیمیہ)
அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவத்தை தனது முன்மாதிரியின்றி
படைப்பவன், ஆற்றல் மிக்கவன் என்ற  பரிசுத்தமான பெயரிலிருந்து
உருவாக்கினான்.ஆயிரக்கணக்கான வருடம் பரிசுத்தமான அல்லாஹ்வே அண்ணலாரை
பார்த்துக்கொண்டிருந்தான்.
பிறகு கிருபையாளன், அடக்கிஆள்பவன், மன்னிப்பாளன்,உள்ளத்தில் உள்ளதை அறிபவன்
போன்ற பண்புகளின்  மூலம் கம்பீரத்தை வெளிப்படுத்தினான்.

 (فتاوى نعيمية)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்கள்:

 வானவர்கள் அண்ணலாரின் நூரிலிருந்துதான்
உருவானார்கள். ஏனெனில் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் தனது நூரிலிருந்து தான்
படைத்தான் என அண்ணலார் கூறியுள்ளார்கள்

 (ஆதாரம் :صلوة الصفا مندرجه مجموعه
رسائل)

நமது ஒவ்வொரு உறுப்பிற்கும் நிழல் உண்டு.எனினும் நபி ஸல் அவர்களின் எந்த
உறுப்பும் நிழல் இல்லை.

(ஆதாரம்: மவாயிள் நயீமிய்யா)

அஹ்மத் ரிளாகான்  எழுதியுள்ளார்கள்:

பர்தாவை திறங்கள் அல்லாஹ்வின் ஹிஜாபில்
முகத்தின் நூரை திறந்து காட்டுங்கள் காலம் இருளாகி கொண்டிருக்கிறது.
எப்பொழுதிலிருந்து சூரியன் பர்தாவிலே இருக்கிறது.

நபி ஸல் அவர்களை மனிதர் என்பதாக கூறுபவர்களை அல்லாஹ் காபிர் என்கிறான்.

(ஆதாரம்:கன்ஜுல் ஈமான் மஅ கஜாயினுல் இர்ஃபான் )

பெருமானார் (ஸல்) அவர்களை மனிதர் என்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.அல்லது
அண்ணலாரே தன்னை மனிதர் என்பதாக கூறியுள்ளார்கள்.அல்லது காபிர்கள்
கூறியுள்ளார்கள் எனவே நபியை எவர் மனிதர் என்கிறாரோ அவர் அல்லாஹ்வாக நபியாக
இருக்கமுடியாது.எனவே  காபிர்களில் நுழைவார்.

(ஆதாரம்:ருஷ்துல் ஈமான் பக்கம் 45)எனது எஜமானரே தாங்கள் அல்லாஹ்வின் நூரிற்கு பிரதிபிம்பாக இருக்கிறீர்கள்.நிழல்
மற்றும் இருந்தால் தங்களின் நூரான புனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் நூரின்
பாதியாகும்.இதனால்தான் தங்களுக்கு நிழல் இல்லை.நூருக்கு எங்கு நிழல்
இருக்கும்?

 (ஆதாரம்:ஹதாயிக் பக்ஷிஷ்  பக்கம்713)


நமது பதில்: 

 இதற்கு மாற்றமாக குர்ஆன் ஹதீஸ் இஜ்மா ஒட்டுமொத்த உம்மத்தின்
கொள்கையானது நபிமார்கள் மனிதர்கள்தான்.நபி (ஸல்) அவர்கள் நூர் என்பதானது
அசத்தியத்தை அழித்து சத்தியத்தை நிலைநாட்டுவதிலும் குப்ரின் இருளை அகற்றி
இஸ்லாத்தின் ஜோதியை பரவச்செய்வதில் பண்புகள் நூராக இலங்கியது.நபிமார்கள்
இனத்தின் அடிப்படையில் மனிதர்கள் என்பதற்கான ஆதாரங்களை குர்ஆனின் ஒளியில் இனி
பார்ப்போம்.

18:110 قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ
اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌ ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ
فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ
اَحَدًا‏ 

18:110. (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே!
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ
அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு
வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில்
வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”

42:51 وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ
مِنْ وَّرَآىٴِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِىَ بِاِذْنِهٖ مَا
يَشَآءُ‌ؕ اِنَّهٗ عَلِىٌّ حَكِيْمٌ‏ 

42:51. அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ;
அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு
தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்;
ஞானமுடையவன்.

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰـكِنَّ
اللّٰهَ يَمُنُّ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ؕ وَمَا كَانَ لَنَاۤ
اَنْ نَّاْتِيَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَعَلَى اللّٰهِ
فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏ 

14:11. (அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, “நாங்கள் உங்களைப்
போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை; எனினும் அல்லாஹ் தன் அடியார்களில் தான்
நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு
எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை; இன்னும் உறுதியாக நம்பிக்கை
கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்” என்று
கூறினார்கள்.

17:93 اَوْ يَكُوْنَ لَـكَ بَيْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰى فِى
السَّمَآءِ ؕ وَلَنْ نُّـؤْمِنَ لِرُقِيِّكَ حَتّٰى تُنَزِّلَ عَلَيْنَا
كِتٰبًا نَّـقْرَؤُهٗ‌ ؕ قُلْ سُبْحَانَ رَبِّىْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا
رَّسُوْلًا‏ 

17:93. “அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை
கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து)
எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும்
வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று
கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு
மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.

وَلَوْ جَعَلْنٰهُ مَلَـكًا لَّـجَـعَلْنٰهُ رَجُلًا وَّلَـلَبَسْنَا
عَلَيْهِمْ مَّا يَلْبِسُوْنَ‏ 

6:9. நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ்
சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே
ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது)
குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.

முஸ்லிம் நூலில் 4782. யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்), உமர் பின் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரும் ஸைத்
பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்றோம். நாங்கள் அவர்கள் அருகில் அமர்ந்தபோது,
அவர்களிடம், ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைத் அவர்களே! தாங்கள் பல்வேறு
நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக்
கண்டுள்ளீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளீர்கள். அவர்களுடன்
சேர்ந்து அறப்போர்களில் கலந்துகொண்டுள்ளீர்கள். அவர்களுக்குப் பின்னால்
தொழுதுள்ளீர்கள். ஸைதே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். ஸைதே!
தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எங்களுக்கு
அறிவியுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "என் சகோதரர் புதல்வரே! அல்லாஹ்வின்
மீதாணையாக! எனக்கு வயது அதிகமாகிவிட்டது; எனது காலம் கழிந்துவிட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட சில ஹதீஸ்களை நான்
மறந்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்கு அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான்
அறிவிக்காதவற்றைப் பற்றி என்னிடம் கேட்டு என்னைச் சிரமப்படுத்தாதீர்கள்" என்று
கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும்
இடையிலுள்ள "கும்மு" எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக்
கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்)
நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, "இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே!
கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின்
தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான்
உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று
அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே,
அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறி,
அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும்
ஊட்டினார்கள்.
பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில்
(அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான்
அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.என் குடும்பத்தார் விஷயத்தில்
(அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான்
அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில்
(அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான்
அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்" என்று (மூன்று முறை) கூறினார்கள்.
அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள்,
"ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின்
துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "நபியவர்களின் துணைவியரும் அவர்களின்
குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம்
கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்"
என்று கூறினார்கள்.
அதற்கு ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் "அவர்கள் யார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின்
குடும்பத்தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின்
குடும்பத்தாரும்,ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும்,
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே
(நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)" என்று பதிலளித்தார்கள்.
ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை
செய்யப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி)
அவர்கள், "ஆம்"  என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் நூலில்
பாடம் : 3 வெளிப்படையான நிலையையும் சாதுரியமாக ஆதாரம் காட்டுவதையும் வைத்துத்
தீர்ப்பளித்தல்.

3527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களே!) நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகிறீர்கள். உங்களில்
ஒருவர் மற்றொருவரைவிடத் தமது ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு
சாதுரியமிக்கவராக இருக்கக்கூடும். இந்நிலையில் நான் அவரிடம் கேட்ட (திறமையான
வாதத்)துக்கு ஏற்ப அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்துவிடுகிறேன். (அதனால்
அவர் அடையும் ஆதாயம் அவருக்கு அனுமதிக்கப்பட்டதெனக் கருதிவிட வேண்டாம்.)
எனவே, யாருக்கு (அவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் ஒன்றை
அவருக்குரியது என்று (உண்மை நிலை அறியாமல்) நான் தீர்ப்பளித்து விடுகிறேனோ,
அவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவருக்கு நான் (நரக) நெருப்பின்
ஒரு துண்டையே ஒதுக்கித் தருகிறேன்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்
தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

5067. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் ஒரு மனிதனே. ஆகவே, நான்
முஸ்லிம்களில் எவரையேனும் ஏசியிருந்தால், அல்லது சபித்திருந்தால், அல்லது
அடித்திருந்தால் அவற்றை அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் அருளாகவும்
மாற்றிடுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மற்றோர் அறிவிப்பாளர்
தொடரில் வந்துள்ளது.
ஆயினும் அதில், "பாவப்பரிகாரமாகவும், நன்மையாகவும் (மாற்றிடுவாயாக!)" என்று
இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் "நன்மையாகவும்" என்பதை அபூ ஹுரைரா
(ரலி) அவர்களின் அறிவிப்பிலும், "அருளாகவும்” என்பதை ஜாபிர் (ரலி) அவர்களது
அறிவிப்பிலும் இடம்பெறச்செய்துள்ளார்கள்.

5068. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு
நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை
நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால்,
ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும்
அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("அவரை அடித்திருந்தால்" என்பதைக் குறிக்க) "ஜலத்துஹு"
என்றே இடம்பெற்றுள்ளது. இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழி வழக்காகும்.
(ஹதீஸின் மூலத்தில் இருப்பது) "ஜலத்துஹு"(ஷீóகூóகுúஸீõடூõ) என்பதேயாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்
தொடர் வழியாகவும் வந்துள்ளது.

5069. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மத் ஒரு மனிதரே! (எல்லா)
மனிதர்களும் கோபப்படுவதைப் போன்றே அவரும் கோபப்படுவார். நான் உன்னிடம் ஓர்
உறுதிமொழி எடுத்துள்ளேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். அதாவது நான் எந்த இறை
நம்பிக்கையாளரையாவது மனவேதனைப் படுத்தியிருந்தால், அல்லது
ஏசியிருந்தால்,அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும்
அவருக்கு மறுமை நாளில் உன்னிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும்
மாற்றிடுவாயாக!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

5072. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒரு மனிதரே. நான் வல்லமையும் மாண்பும்
மிக்க என் இறைவனிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளேன். (அது) நான்
முஸ்லிம்களில் ஓர் அடியாரை ஏசியிருந்தால், அல்லது திட்டியிருந்தால், அதை
அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் நன்மையாகவும் மாற்றி விடுவாயாக (என்பதாகும்)"
என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்
தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள் (விவசாயம் போன்ற) உலக நடைமுறைகள் தொடர்பாக
ஆலோசனை என்ற முறையில் குறிப்பிட்டவை தவிர, மார்க்க விஷயங்களில் அவர்கள் கூறிய
அனைத்துக்கும் கட்டுப்படுவது கடமையாகும்.

4711. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக்
கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது,
"இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து
(பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்" என்று கூறினர். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான்
கருதவில்லை" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா
விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது,அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை
விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது,
"அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து
கொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து
என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி
ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும்
மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4712. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை
ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச்
செய்வதாக அவர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று
கேட்டார்கள். மக்கள் "(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்" என்று
கூறினர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால்
நன்றாயிருந்திருக்கலாம்" என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை
விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் "உதிர்ந்துவிட்டன" அல்லது "குறைந்து
விட்டன".
அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள்,
"நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும்
கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக்
கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே" என்று
சொன்னார்கள்.
(இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர்
இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின்
ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆகவே, (அந்த ஆண்டில்) கனிகள்
உதிர்ந்துவிட்டன" என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் நபி ஸல் அவர்களின் மரணத்திற்கு பிறகு
பிரசங்கத்தில் கூறினார்கள் நிச்சயமாக நபி ஸல் அவர்கள் மரணித்து
விட்டார்கள்.ஏனெனில் நிச்சயமாக நபி ஸல் அவர்கள் மனிதர்தான்.

(ஆதாரம்: தாரமி)

ஆயிஷா ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல் அவர்கள் மனிதர்.
 (ஆதாரம்:ஷமாயில்
திர்மிதி பக்கம் 24,அதபுல் முஃப்ரத் பக்கம் 79)

அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளி அவர்களும் அண்ணலாரை மனிதர்
என்றார்கள்.
(ஆதாரம்:தல்கீஸுல் முஸ்தத்ரக் 8/108)

காளி அபுல் பள்ல் இப்னு ஈயாள் இப்னு மூஸா மாலிகி எழுதியுள்ளார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மற்றும் அனைத்து நபிமார்களும் மனிதர்கள்தான் என்பதை நாம்
முன்னால் சொல்லிவிட்டோம்.அவர்களின் பரிசுத்தமான உடலானது வெளிப்படையில்
முற்றிலும் மனிதராகதான் இருந்தார்கள்.பிற மனிதர்களுக்கு ஏற்படும்
அனைத்துவிதமான சோதனைகள், நோய்கள்,வேதனைகள் போன்றவை ஏற்படும்.இதனால் அவர்களின்
கண்ணியத்தில் குறைவு இழுக்கு ஏற்படாது.(ஆதாரம்:அஷ்ஷிஃபா பாகம்2/157)

அல்லாமா ஜலாலுத்தீன் தவானி ஷாஃபியி எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ்தஆலா படைப்புகளின் பக்கம் அழைப்பு பணிக்காக நபியை அனுப்புவார்.அவர்
மனிதர் .
(ஆதாரம்:ஷர்ஹு அகாயித் ஜலாலி)

ஆய்வாளர் ஹனபி ஹாபிள் இப்னுல் ஹுமாம் எழுதியுள்ளார்கள்: 

அல்லாஹுதஆலா தனது
சட்டங்களை எத்திவைப்பதற்காக அனுப்பிய மனிதர்தான் நபியாவார்.மேலும் இவ்வாறே
ரசூல் இரண்டிற்கும் மத்தியில் வித்தியாசமில்லை.(ஆதாரம்:முஸாயிரா  மஅல்
முஸாமிரா பாகம்:2 பக்கம்:83)

அமீர் யமானி முஹம்மத் இப்னு இஸ்மாயில் ஷரீஅத்தின் இஸ்திலாஹ் புழக்கரீதியில்
அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஷரீஅத் எவருக்கு அருளப்படுமோ அந்த மனிதருக்கு நபி
என்று சொல்லப்படும்.ஷரீஅத்தை மற்றவர்களுக்கு எத்திவைக்கப்படும்படி
கட்டளையிடப்படுமோ அவருக்கு ரஸுல் என்று சொல்லப்படும்.
(ஆதாரம்:ஸுபுலுஸ்ஸலாம்
1/9)

அல்லாமா முஹம்மத் ஆபிதீன் இப்னுஷ்ஷாமில் ஹனஃபி:

மனிதர்கள் மூன்று வகையினர்
முதல் வகையினர்:குறிப்பானவர்கள் தனித்துவமிக்கவர்கள் உதாரணமாக நபிமார்கள்
இரண்டாமவர்கள்: நடுத்தரமானவர்கள் உதாரணமாக ஸஹாபா பெருமக்கள் மூன்றாமவர்கள்:
சாமானியர்கள் உதாரணமாக பொதுமக்கள்
(ஆதாரம் ஷாமி 1/492)

நபி என்பவர் மனிதர் ஷரீஅத்தின் சட்டங்களை எத்திவைப்பதற்காக அல்லாஹ் அவரை
அனுப்பினான் ஆதாரம்
இதில் கருத்து வேறுபாடு இல்லை.நபி ஸல் அவர்கள் மனிதர்களில் மிகவும்
சங்கையானவர்கள்.ஆதமின் சந்ததிகளில் மனிதர்களின் தலைவர் .
(ஆதாரம் :كتاب الشفاء
فى حقوق المصطفى)

சந்தேகமின்றி அல்லாஹ் மனிதர்களின் பக்கம் அவர்களிலிருந்தே முஃமீன்களில்
கட்டுப்படுபவர்களுக்கு நற்செய்தி கூறுபவர்களாக தூதர்களை அனுப்பினான்.
(ஆதாரம்
:شرح عقائد)

நபி ஸல் அவர்களும் அனைத்து நபிமார்களும் மனித இனத்தில்
உள்ளவர்கள்தான்.மனிதர்களின் பால் அனுப்பப்பட்டார்கள்.

(ஆதாரம் :كتاب الشفاء)

இதில் அல்லாஹ்வின் அறிவிப்பானது தூதர் எவர்களின் பக்கம் அனுப்பப்படுவார்களோ
அவர்களின் இனத்திலிருந்து தான் தகுதியானது (ஆதாரம் :تفسير فتح القدير)

அறிஞர்களின் கொள்கை :

இதில் கருத்து வேறுபாடு இல்லை.நபி ஸல் அவர்கள் மனிதர்களில் மிகவும்
சங்கையானவர்கள்.ஆதமின் சந்ததிகளில் மனிதர்களின் தலைவர் (ஆதாரம் :كتاب الشفاء
فى حقوق المصطفى)

சந்தேகமின்றி அல்லாஹ் மனிதர்களின் பக்கம் அவர்களிலிருந்தே முஃமீன்களில்
கட்டுப்படுபவர்களுக்கு நற்செய்தி கூறுபவர்களாக தூதர்களை அனுப்பினான்.

(ஆதாரம்
:شرح عقائد)

நபி ஸல் அவர்களும் அனைத்து நபிமார்களும் மனித இனத்தில்
உள்ளவர்கள்தான்.மனிதர்களின் பால் அனுப்பப்பட்டார்கள்.
(ஆதாரம் :كتاب الشفاء)

இதில் அல்லாஹ்வின் அறிவிப்பானது தூதர் எவர்களின் பக்கம் அனுப்பப்படுவார்களோ
அவர்களின் இனத்திலிருந்து தான் தகுதியானது (ஆதாரம் :تفسير فتح القدير)

அல்லாஹ் கூறுவதின் கருத்தானது நாம் தூதரை அவர்களின் சமுதாயத்திலிருந்தே
அனுப்புகிறோம்.ஏனெனில் அவர்களுடன் ஒன்றிணைந்து இருப்பதன் மூலம்  (மார்க்கத்தை
போதிப்பதற்கும்) அவர்களிலிருந்து நலனை பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
(ஆதாரம் تفسير مظهري)

ஒன்று  அற்புதங்களை நீங்கள் உங்களின் புறத்திலிருந்து செய்கிறீர்களா? அல்லது
நான், அல்லாஹ்விடம் வேண்டி அற்புதங்களை எனது கையில் அவன் வெளிப்படுத்துகிறானா?
என்பதுதான் உங்களின் கேள்வியாக உள்ளது.ஏனெனில் சத்தியத்தை மக்கள் புரிந்து
கொள்ளவேண்டும் என்பதற்காகும்.உண்மையில் நான் அல்லாஹ்வின் தூதர் முதல்
விஷயமானது தவறானது.ஏனெனில் நான் மனிதன் அவனுக்கு எதன் மீதும் சுய அதிகாரம்
இல்லை.(تفسير كبيري)


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live