19 Feb 2017

பரேலவிகளின் கொள்கையும் (இல்முல் கைப்), இஸ்லாமிய கொள்கையும் பாகம் 1.

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ.

 குர்ஆன்,ஹதீஸ் மற்றும் பிக்ஹ் நூல்களுக்கு எதிரான
பரேல்விகளின் வழிகெட்ட கொள்கைகள் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் விஷயங்கள்
குறித்து இந்த கட்டுரையில் சுருக்கமாக காண்போம்! இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம்
கிடைக்கும் போது ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான விளக்கங்களை,மறுப்புகளை
பார்ப்போம்!

பரலேவிகளின் வழிகேடான கொள்கைகளுக்கு மறுப்பு:

முதல் கொள்கை: 

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது.
நல்லோர்களுக்கும் உண்டு.

இதனை குறித்து பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிளாகான் எழுதியுள்ளார்: 

(நபி (ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்)
எனக்கு மறைவான ஞானம் உண்டு என நான் உங்களிடத்தில் சொல்லவில்லை.அதனை (அறிந்து
கொள்ள) காபிர்களான உங்களுக்கு தகுதி இல்லை.உண்மையில் நமக்கு நடந்து முடிந்தது
நடக்க இருப்பதின் அனைத்து ஞானம் உள்ளது.

 (ஆதாரம்:خالص الاعتقاد)



மற்றோர் இடத்தில்...

 லவ்ஹுல் மஹ்பூல் மற்றும் எழுதுகோலின் நடந்த முடிந்த நடக்க
இருப்பவையின் ஞானமானது நபி ஸல் அவர்களின் ஞானங்களின் ஒரு
பகுதியாகும்.

(ஆதாரம்:தவ்லதுல் மக்கிய்யா)




நயீமுத்தீன் முராதாபாதி பரிசுத்தமான வேதத்தின் மூலம், பரிசுத்தமான ஆத்மா
(அண்ணலார்) அர்ஷ் மற்றும் அதனின் உயர்தல்,இறங்குதல்,உலகம் மறுஉலக,சுவனம்,நரகம்
அறிந்துள்ளது எவையும் அதற்கு மறைவானது இல்லை என்பதை அறியமுடிகிறது. ஏனெனில்
இந்த அனைத்தும் அந்த ஆத்மாவிற்கு பரிபூரணமாக ஒன்றினைக்க
படைக்கப்பட்டது.

(ஆதாரம்:كلمة العلماء لاعلام علم المصطفى)



அந்த நூலின் பல்வேறு பக்கங்களில் பெருமானார் (ஸல்)
அவர்கள் நடந்து முடிந்த நடக்க இருக்கிற அனைத்தையும் அறிவார்கள்.

மேலும் முழு உலகத்தையும் அல்லாஹ் அண்ணலாருக்கு உள்ளங்கையில் பார்ப்பது போன்று
காட்டினான்.

மற்றோர் இடத்தில் ..

ஆதம் (அலை) அவர்களின் பிறப்பு முதற்கொண்டு, முதல் சூர் ஊதும்
வரை உள்ள அனைத்து நிலைகளையும் அண்ணலாருக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான்.

தாங்கள் அல்லாஹ்வையும் அனைத்து பொருள்களையும் படைப்புகளின் நிலையையும்
முக்கியத்துவத்தையும் பூரணமாக அறிந்துள்ளீர்கள்.இறந்த கால நிகழ்கால எந்த
ஒன்றும் எந்த நிலையிலும் நபி ஸல் அவர்களுக்கு மறைவானது இல்லை.

(ஆதாரம் تسكين
الخواطر فى مسئلة الحاضر و الناظر) 



பரேல்விகள்
மறைவான ஞானம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மட்டும் இருப்பதாக கூறவில்லை.மாறாக,
நல்லோர்களுக்கும் உண்டு என வாதிக்கின்றனர்.

( ஆதாரம்: مختصر عقائد اهل سنت و
الجماعت بريلوي)









நமது பதில்:

குர்ஆன் ஹதீஸ் இஜ்மா ஒன்றுப்பட்ட கருத்தின்படி மறைவான ஞானம்
அல்லாஹ்விற்கு உரிய பண்பாகும்.மறைவான ஞானம் என்பது இதுவரையில் இயல்பில்
(மெய்உரு) இல்லை அல்லது மெய்உருவில் (இயல்பில்)உள்ளது எனினும் எந்த ஒரு
படைப்புகளும் அறியவில்லையோ அதற்கு சொல்லப்படும்.

நபிமார்கள் ரசூல்மார்களுக்கு
வஹியின் மூலம் நல்லோர்களுக்கு கஷ்ஃப் எனும் அகப்பார்வை (ஞானப்பார்வை) அல்லது
இறைஉதிப்பின் மூலம் மறைவான விஷயங்கள் அளிக்கப்பட்டால் அவைகள் மறைவானவை
என்பதாகாது.இதே போன்றுதான் எந்தப் பொருளின்  ஞானம்
புறக்காரணிகள்,புறச்சாதனங்களின் மூலம் வெளிப்படுகிறதோ அதற்கு மறைவானவை என்று
சொல்லப்படாது.இனி இது குறித்து குர்ஆனின் வசனங்களைப் பார்ப்போம்..!

27:65 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا
اللّٰهُ‌ؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏ 

27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும்,
பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்:
(மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள்
அறியமாட்டார்கள்.”

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ
مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا
يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا
يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ 

6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி
எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்;
அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த)
இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப்
பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.

قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ
اللّٰهُ‌ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ
ۖ ‌ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ‌ ‌ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ
وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏ 

7:188. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு
நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான்
அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில்
எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது -நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு
நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.

20:110 يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ
بِهٖ عِلْمًا‏ 

20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும்
அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய
மாட்டார்கள்.

31:34 اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ
وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ
غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ
عَلِيْمٌ خَبِيْرٌ ‏ 

31:34. நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது;
அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும்
அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும்
அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை.
நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

பாடம் : 6 பாதையில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டால்...

2431. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள்.
'இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான்
தின்றிருப்பேன்' என்று கூறினார்கள்.


2432. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகிறேன். என் படுக்கையின் மீது பேரீச்சம்
பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கிறேன். அதற்குள் அது
சதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது; உடனே அதைப்
போட்டு விடுகிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.
(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் (ரஹ்) அவர்களிடம்)
'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய
விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில
(முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப்
போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்
கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர்
இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்' என்று கூறினாள். உடனே
நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லதே! (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக்
கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்:
ருபய்யி(ரழி) நூல்: புஹாரீ: 4001

இந்த ஹதீஸை குறித்து  முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் மிஷ்காதின் விரிவுரை
நூலான 'மிர்காதில்'
நபி (ஸல்) அவர்கள் நாளை நடப்பதையும் அறிவார் என்பதை வெறுத்துதான் அதனை
விட்டுவிட சொன்னார்கள்.ஏனெனில் மறைவான ஞானம் அல்லாஹ் மட்டும்தான் அறிவான்
என்று கூறியுள்ளார்கள்.இவ்வாறே புகாரியின் விரிவுரை நூலான உம்ததுல் காரியில்
வருகிறது.



2016. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம்.
அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை
நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு
காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே,
நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான்
(லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்!
எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!'
என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப்
பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை
பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை
பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும்
நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன்.
அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்

முல்லா அலி காரி (ரஹ்)
அறிந்து கொள்ளுங்கள் !
அல்லாஹ் அறிவித்து தந்ததை தவிர உறுதியாக நபிமார்கள் மறைவான விஷயங்களை
அறிவதில்லை.எவரேனும் ஒருவர் அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் மறைவானதை அறிவார் என வாதிட்டால் அவர் இறைநிராகரிப்பாளர் இந்த
கொள்கையானது அல்லாஹ்வின் இறைவசனத்திற்கு எதிரானது.

27:65 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا
اللّٰهُ‌ؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏ 

27:65. (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும்,
பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்:
(மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள்
அறியமாட்டார்கள்.

(ஆதாரம் :شرح فقه الاكبر)



நபி (ஸல்) அவர்கள் மறைவானதை அறிவார்கள் என்பதாக நம்பிக்கை கொள்பவர் மீது
இறைநிராகரிப்பை ஹனபியாக்கள் சுமத்தியுள்ளனர். வானம்,பூமியில் மறைவானவற்றை
அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார்கள் என்ற குர்ஆனின் வசனத்திற்கு எதிராக
அமைந்துள்ளதின் காரணத்தினாலாகும்.

(ஆதாரம்:அல்முஸாமிராதுல் முஸாயிரா)



விதியின் அடிப்படையானது படைப்புகளிலிருந்து அல்லாஹ்விடத்தில் உள்ள
ரகசியமாகும்.அதனை அல்லாஹ் எந்த நெருக்கமான மலக்கு அனுப்பப்பட்ட ரஸுலுக்கு
அறிவித்துக்கொடுக்கவில்லை

(ஆதாரம்:முஹத்தப் ஷர்ஹுல் அகீததுத் தஹாவிய்யா)



ஒருவர் அல்லாஹ் அவனின் தூதரைக் கொண்டு சாட்சியாக நிக்காஹ் முடித்தால்
நிகழாது.மேலும் நபி ஸல் அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்கிற நம்பிக்கையின்
காரணமாக காபிராகிவிடுவார் .

(ஆதாரம்:بحر الرئق)



சுருக்கம் என்னவெனில் மறைவான ஞானம் என்பது அல்லாஹ் மட்டும்
அறியக்கூடியதாகும்.அடியார்களின் தலையீடு  இல்லை.அல்லாஹ் வஹி அல்லது உள்ள
உதிப்பின் மூலம் அறிவிப்பதை மட்டும்தான் அறியமுடியும்.

(ஆதாரம்: شرح عقائد
النسفى)




சில மார்க்க அறிஞர்கள் இதனை குப்ர் என்பதாக தீர்ப்பு கொடுத்துள்ளனர்.ஏனெனில்
நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்பதாக நம்பிக்கை கொள்வது
குப்ராகும்.

(ஆதாரம் :فتاوى قاضى خان)




அல்லாஹ் அவனின் தூதரின் சாட்சியைக் கொண்டு திருமணம் முடித்தால் கூடாது மற்றொரு
கருத்தின்படி அவரின் மீது குப்ரானது தீர்ப்பளிக்கப்படும்.குப்ர் என்பது இரண்டு
காரணங்களின் காரணமாக என்பதாக எடுத்து சொல்லப்படுகிறது.ஹராமை ஹலாலாக
ஆக்கினார்.அதாவது அல்லாஹ் ரசூலை திருமணத்தின் சாட்சியாக மக்களுக்காக
ஆக்குவது.இதனை அல்லாமல் வேறு எந்த சாட்சியை வலியுறுத்தவில்லை.
இரண்டாவது ஆதாரம் நபி (ஸல்) அவர்களை சாட்சியாளராக ஆக்குவதால் நபி
(ஸல்)அவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதானது நிரூபணமாகிவிடும்.ஏனெனில் மறைவான
ஞானம் அல்லாஹ்விற்கு மட்டும் உரியும் பண்பாகும்.

(ஆதாரம்: துர் முஹ்தார்
ஙாயதுல் அவ்தார் இரண்டாம் பாகம்)




இது அல்லாமல் பல்வேறு முஹத்திஸீன்கள் புகஹாக்கள் இது குறித்து தெளிவாக குஃப்ர்
என அறிவித்துள்ளார்கள்.அதனை சுருக்கமாக கூறுகிறோம்.

(ஆதார நூல்கள்:பதாவா ஆலம்கிரி,குலாசதுல் பதாவா,பதாவா பஜ்ஜாஜிய்யா,உம்ததுல்
காரி ஷர்ஹு புகாரி,ஷாமி,மாலா புத்து மின்ஹு)









0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live