25 Dec 2016

அப்துல் முத்தலிப் கொண்டாடின மீலாதா? - பரேலவிகளுக்கு தக்க மறுப்பு.

மீலாத் குறித்து பரலேவியின் வாதமும் நமது மறுப்பும்:

அப்துல் முத்தலிப் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பிறப்பை முன்னிட்டு அறுத்து  மக்களுக்கு உணவு அளித்து மீலாத் கொண்டாடினார்கள்.நபி (ஸல்) அவர்களும் நுபுவ்வத்திற்கு பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.அகீகா என்பது ஒரு முறை தான் கொடுக்கப்படும்.இரண்டு தடவை கொடுக்கப்படாது. இதன் மூலம் நபி ஸல் அவர்கள் நுபுவ்வத்திற்கு பிறகு அகீகா கொடுத்ததானது பிறப்பை கொண்டாடும் வகையில் உள்ளதாகும் என விளங்கமுடிகிறது.

நமது பதில்: 

குழந்தை பிறப்பை முன்னிட்டு மகிழ்ச்சியடைதல், விருந்தளித்தல் ஏறத்தாழ எல்லா சமூகங்களின் நடைமுறையில் உள்ளதாகும்.இஸ்லாத்திலும் இந்த சந்தர்ப்பத்தில் அகீகா கொடுக்கும் நடைமுறை உள்ளது.அதுவும் குழந்தை பிறந்தப் பிறகு ஒருமுறை மட்டும்தான்.

ஸல்மான் இப்னு ஆமிர் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதை கேட்டதாக அறிவிக்கிறார்கள்:

குழந்தை பிறந்த பிறகு அகீகா உண்டு.அதன் பேரில் அறுத்துப் பலியிடுங்கள்! குழந்தையின் முடியை களையுங்கள்!

ஹள்ரத் உம்மு கர்ஜ்(ரளி) அவர்கள், நபி (ஸல்)அவர்கள் கூறியதை கேட்டதாக அறிவிக்கிறார்கள்:

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடு. பெண்குழந்தைக்கு ஒரு ஆடு.
(அபூதாவூத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள்
ஹள்ரத் ஹஸன் (ரளி) ஹுஸைன் (ரளி) இருவரின் பிறப்பிற்கு ஆடு அறுத்தார்கள். அறியாமைக்கால சமூகத்தின் நடைமுறைக்கு ஏற்ப அப்துல் முத்தலிப் அவர்கள் தனது பேரர் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பிற்கு மகிழ்வுற்று அகீகா கொடுத்தார்கள்.

நமது ஷரீஅத்திற்கு ஏற்ப நபி (ஸல்) அவர்களும் ஹள்ரத் ஹஸன் (ரளி)  ஹுஸைன் (ரளி) இருவரின் பிறந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆடு அறுத்தார்கள்.இப்பொழுது நமது கேள்வியெனில் நபி (ஸல்) அவர்கள் தனக்காக நுபுவத்திற்கு பிறகு அகீகா கொடுத்தார்கள்.எனினும் ஒரு தடவை மட்டும்தான் தனது பிறப்பிற்கு  கொடுத்தார்கள்.வருடந்தோறும் அகீகா கொடுக்கவில்லை.எனவே இதனை வைத்து நபி (ஸல்) அவர்களின் மீலாத் வருடந்தோறும் கொண்டாட ஆதாரமில்லை.

மேலும்  நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்திற்கு பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்பதால் மீலாத் கொண்டாடலாம் எனில் ஹள்ரத் ஹஸன் (ரளி) ஹுஸைன் (ரளி) பிறப்பிற்காக அகீகா கொடுத்ததின் காரணமாக ஏன் அவர்கள் இருவரின் மீலாத் கொண்டாடக்கூடாது? பரலேவிகள் இன்று வரை ஹஸன் (ரளி) ஹுஸைன் (ரளி) மீலாத் ஏன் கொண்டாடுவதில்லை?

(2) நபி (ஸல்) அவர்கள் அகீகா என்ற வகையில் செய்தார்கள்.தனது தாதாவின் அகீகா ஏற்புடையதில்லை என்பதாக  கருதியிருப்பார்கள்.ஏனெனில் தாதாவின் அகீகா அறியாமைக்காலத்தில் உள்ளதாகும். எனவே தனது அகீகாவை நிறைவேற்றினார்கள்.அதுவும் தனது வாழ்நாளில் ஒரு தடவை மட்டும்தான்.

(3) நபி (ஸல்) அவர்கள் தனக்காக அகீகா கொடுத்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதும் அல்ல. இதனால்தான் ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்)அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தனது  அகீகாவை நுபுவ்வத்திற்கு பிறகு கொடுத்தது நிரூபணமாகவில்லை என்கிறார்.

(பத்ஹுல் பாரி )

Source:



.


(4) ஒரு வாதத்திற்கு இதன் மூலம் வருடந்தோறும் மீலாத் கொண்டாட ஆதாரம் உள்ளது எனும் போது நபி (ஸல்)அவர்களும், அன்னாரின் தோழர்களும், இமாம்களும் அதன்பேரில் ஏன் அமல் செய்யவில்லை?

(5)பிதாயா வந்நிஹாயாவில் வந்துள்ளது.

 فلما كان يوم السابع ذبح عنه و دعا له قريشا فلما اكلوه 

வேறு கிதாபுகளிலும் வந்துள்ளது...

Source :





.                     




இன்னும் ஜமாதுல் உலமா சபை website லும் பதியப்பட்டுள்ளது..



நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஏழாம் நாளின் போது அப்துல் முத்தலிப் அவர்கள் அறுத்தார்கள்.இதன் பேரில் குறைஷிகளுக்கு விருந்து கொடுத்தார்கள்.

அனைவரும் உணவு உண்டார்கள்.ஆக
12 ரபியுல் அவ்வல் நபியின் பிறப்பிற்கு விருந்தளிக்கவில்லை மாறாக பிறந்த ஏழாம் நாளில் ரபியுல் அவ்வல் 19ல் விருந்தளித்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.மீலாத் என்ற பேரில் அல்ல.மாறாக அக்கால சமூகத்தின் வழக்கில் இருந்த நடைமுறையாகும்.

மேலும் நபி ஸல் அவர்கள் தனக்காக அகீகா கொடுத்தது  ரபியுல் அவ்வல் 12ம் நாளில் என்பதாக வரவில்லை.  மாறாக நுபுவ்வத்திற்கு பிறகு கொடுத்தார்கள் என்பதாக தான் வந்துள்ளது எனவே இதனை வருடந்தோறும் மீலாதிற்கு ஆதாரமாக கூறமுடியாது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live