19 Dec 2016

மீலாது - ஒரு வரலாற்று பார்வை.

முன்னுரை


அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்)
மீலாத் வரலாறு என்ற கட்டுரையை படிக்கும் அன்பான வாசகர்களுக்கு இந்த
கட்டுரையானது  "தாரீஹே மீலாத்" என்ற உர்தூ நூலின் சுருக்கமான
மொழிபெயர்ப்பாகும். நடுநிலையான கண்ணோட்டத்துடன்
எழுதப்பட்டுள்ளது.வாசகர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக இந்த
தலைப்பில் தொடராக கட்டுரை எழுதப்படுகிறது.நாம் அறிந்த வரையில் தமிழ் மொழியில்
இது குறித்த விரிவான ஆய்வு நூல் வெளிவரவில்லை.

இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையானது
அதனை நிவர்த்தி செய்யும் என ஆதரவு வைக்கிறோம்!

அல்லாஹுதஆலா நமக்கு சத்தியத்தை சத்தியமாக காட்டுவானாக! அதனைப் பின்பற்றும்
வாய்ப்பை நல்குவானாக! மேலும் அசத்தியத்தை அசத்தியமாக காட்டுவானாக! அதனை
தவிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நல்குவானாக!

   
நபி (ஸல்) அவர்களின் பிறப்பைப் பற்றி பேசுதல் மற்றும் இன்று நடைமுறையில் உள்ள
மீலாத் சபைகள் அல்லது மெளலிது சபைகள் இரண்டும் தனித்தனியானது.இரண்டிற்கும்
மத்தியில் சாதாரண வித்தியாசமில்லை.மாறாக வானம் பூமி அளவிற்கு  வித்தியாசம்
உள்ளது.

   நபி (ஸல்) அவர்களின் பிறப்பை பற்றி பயான் செய்யும் விஷயத்தில் எவருக்கும்
மாற்றுக் கருத்து கிடையாது.அனைவரும் ஒருமித்துள்ளனர்.எந்த ஒரு சந்தேகமின்றி
அனுமதி உள்ளது.மாறாக நன்மையையும்,பரக்கத்தையும் பெற்றுத்தரும்.ஆக நபி (ஸல்)
அவர்களின் பிறப்பை பற்றி பேசுவதை எவரும் தடுக்கவில்லை.

எனினும் இன்று
நடைமுறையில் உள்ள மெளலித்,மீலாத் விழாக்களின் விஷயத்தில் கருத்துவேறுபாடு
உள்ளது.

இதனை குறித்து குர்ஆன், ஹதீஸ்களில்,திருக்குர்ஆன் விளக்கவுரைகள்,பிக்ஹ்,
வரலாறு சரிதைகளிலும் நீண்ட தேடலுக்குப் பிறகும் அண்ணல் நபியவர்களின்
காலத்திலோ, ஸஹாபாக்களின் காலத்திலோ, தாபியீன்கள், தப்உத்தாபியீன்களின்
காலத்திலோ காணமுடியவில்லை.

மெளலானா ஸய்யித் ஸுலைமான் நத்வி (ரஹ்) ஸீரத்துன் நபியில் மூன்றாம் பாகம் 668
பக்கம் இரண்டாம் பதிப்பில் ஆதாரமின்றி குறிப்பிட்டுள்ளார்கள். இஸ்லாத்தில்
மீலாத் நடைமுறையானது நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆரம்பமானது.ஆனால்
எதார்த்தம் என்னவெனில் இஸ்லாமிய வரலாற்றில் 600 வருடம் வரை அதைக் குறித்த எந்த
குறிப்பும் இல்லை.இதன் படி அறிஞர்களின் ஒன்றுப்பட்ட கருத்தானது 600 வருடம் வரை
மீலாத் நடைமுறையில் இல்லை.

மீலாது விழாக்களை ஆதரிக்கும் அறிஞர் மெளலவி அப்துஸ்ஸமீஃ ஸாஹிப்
அன்வாருஸ்ஸாதிஆவில் பக்கம் 159ல்  குறிப்பிட்டுள்ளார் மகிழ்ச்சியை
வெளிப்படுத்துவது, சந்தோஷமாக இருப்பது அதுவும் குறிப்பிட்ட மாதமான ரபியுல்
அவ்வலில் அதிலும் குறிப்பாக 12ம் நாளில் மீலாத் கொண்டாடுதல் பிற்காலத்தில்
தோன்றியது.ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலாகும்.

Source:

                                  

ஷைக் அலி மஹ்பூஜ் (ரஹ்) எழுதுகிறார்கள் :

மீலாதை உருவாக்கியவர்கள் பாத்திமியீன்கள்.
மீலாது ஹிஜ்ரி 524 ல் தான் நடைமுறைக்கு வந்தது.

Source:
   

மஜ்லிஸ் (சபை)மீலாதை உருவாக்கியவர் யார்?
நபி ஸல் அவர்கள், குலஃபாயே ராஷிதீன்கள், இமாம்கள், இவர்களின் காலத்தில்
நடைமுறையில் இல்லை என்பதால் பிறகு இதனை நடைமுறைப்படுத்தியவர் உருவாக்கியவர்
யார்?

மஜ்மூஆ ஸஆதத்தின் ஆசிரியர் (2/12,13) எழுதியுள்ளார்: 

ஒரு மார்க்க அறிஞர்
இந்தியாவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மக்காவிலே வசிப்பிடத்தை
தேர்ந்தெடுத்துக்கொண்டார்.அவர் மீலாத் குறித்த உண்மை நிலையை கூறுகிறார்: ரோம்
நாட்டிலிருந்து பாஷ் என்று சொல்லப்படும் படைத்தளபதி மக்காவிற்கு வந்தார்.அவர்
மீலாத் சபைகளை பார்த்துவிட்டு மக்காவில் உள்ள முஃப்தியிடம் இதனைக் குறித்து
தீர்ப்பு என்ன? எந்த காலத்தில் உருவானது? ஷரீஅத்தில் இதன் அந்தஸ்த்து என்ன?
அதனுடன் ஆதாரங்களை என்னிடம் அனுப்புங்கள் என்றார்.

பிறகு முஃப்தி அவர்கள்
பல்வேறு நூல்களை ஆராய்ந்த பிறகும் இது குறித்த ஆதாரம் கிடைக்கவில்லை.எனினும்
வரலாற்று நூலிலே ஹிஜ்ரி 700 வருடத்தில் மிஸ்ரிலே ஒரு நபர் முஸ்லிம்களுக்கு
விருந்தளித்தார்.விருந்து உபசரிப்புக்கு முன்பாக ஓர் மார்க்க ஆறிஞர்
உறையாற்றினார்.

அவர் ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமாக  அறிவிக்கப்படுபவைகளை எடுத்து கூறினார்.மக்கள்
இந்நிகழ்ச்சியினால் பெரிதும் மகிழ்ந்தனர்.பிறகு வேறொரு நபர் இதே முறையில்
சபையை ஏற்படுத்தினார்.பிறகு மூன்றாவது நபர் இதே போங்கில் நடத்தினார்.பிறகு
நாட்கள் செல்ல செல்ல மீலாத் சபைகள் பிரபல்யமானது என்கிற செய்தியானது மக்கா
முஃப்திக்கு கிடைத்தது.இந்த நடைமுறையை படைத்தளபதிக்கு எழுதி
அனுப்பினார்.எனினும் இந்த அமலை குறித்து கூடும் கூடாது என்ற தீர்ப்பை
அளிக்கவில்லை.

   எனினும் இந்த நிகழ்வின் மூலம் ஹிஜ்ரத் செய்த மார்க்க அறிஞர், மக்கா
முஃப்தி, படைத்தளபதி இவர்களின் நிலைகளை நாம் அறியமுடியவில்லை.700ம் வருடத்திலே
முதலில் மீலாது சபையை உருவாக்கியவர் யார்? அதில் உரையாற்றிய மார்க்க அறிஞர்
யார் என்பதையும் இதன் மூலம் அறியமுடியவில்லை.?

முதன் முதலில் மீலாதை உருவாக்கியவர் உமருப்னு முல்லா முஹம்மது மவ்ஸில் என்பதை
அனைவரும் ஏற்கின்றனர்.இவர்தான் முதன்முதலில் மவ்ஸிலில்  நடைமுறையுள்ள மீலாதை
உருவாக்கினார். "ஸுபுலுல் ஹுதா வ ரஷாத் ஃபி ஸீரதி ஹைருல் இபாத்" என்ற நூலிலே
அல்லாமா முஹம்மது இப்னு அலி யூசுப் திமிஷ்கி ஷாமி அவர்கள்  முதன் முதலில் மீலாது சபையை உண்டாக்கியவர் உமர் இப்னு முஹம்மத் இவர் நல்ல மனிதர்
பிரபல்யமானவர் இவரைதான்  மன்னர் அர்பல் மீலாது சபையை நடைமுறைப்படுத்துவதிலே
பின்பற்றினார்.

 மெளலவி அப்துல்ஹக் ஸாஹிபின் கட்டுரையான "அத்துர்ருல் முனள்ளம்
ஃபி ஹுக்மி அமலி மெளலிதின் நபிய்யில் அஃளம்" 160 இதில் பின்வருமாறு
எழுதியுள்ளார் ஆரம்பமாக இந்த அமலானது ரபீயுல் அவ்வலில் செய்வது குறிப்பான
முறையில் செய்வது மவ்ஸில் என்ற ஊரில் ஆரம்பமானது.ஈராக் நாட்டிலே உள்ளது.அங்கு
பயபக்தியாளர் மார்க்கபற்றுள்ளவர் பெரியோர் உமர் நல்லோர்களில்
உள்ளவர்.அன்னார்தான்
முதன் முதலில் மீலாத் சபைகளை நடைமுறைப்படுத்தினார்.
மெளலவி முஹம்மது அஃளம் அவர்களின் ஃபத்ஹுல்வதூத் என்ற நூலில் 8ம் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்கள் அறிந்து கொள்ளுங்கள் நபியின் மீலாத் சபையை
உண்டாக்கியவர் அக்கால அறிஞர் பெரியோருமான ஹள்ரத் உமருப்னு முல்லா முஹம்மத்
மூஸிலி.

உமர் இப்னு முஹம்மத் அவர்கள் முஜ்தஹித் ஆய்வாளர் அல்ல. முஹத்திஸும்
அல்ல.பகீஹும் அல்ல மாறாக உண்மையான ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது
அறியப்படாத நபர்.உண்மையில் அரசர் அர்பலின் சமூகத்தில் மீலாத்
நடைபெற்றுள்ளது.இதில் அரசர் அன்னாரை பின்பற்றி நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இல்லையெனில் அன்னாரைப் பற்றி முற்றிலும் அறிமுகம் இருந்திருக்காது.அல்லாமா
அபூஷாமா வரலாற்று ஆசிரியர் ஷாமி அவர்கள் அன்னாரைப்பற்றி நல்லோர் பிரபல்யமானவர்
என்பதாக எழுதியிருந்தாலும் அன்னார் மார்க்க சட்டங்களிலும் ஆய்வுகளிலும் உள்ள
திறனை  இதன் மூலம் அறியமுடியாது என்பதானது மார்க்க அறிஞர்கள் அறிந்த
ஒன்றாகும்.வரலாற்றாசிரியர் ஷாமி அபூஷாமா இருவரும் அன்னாரைப்பற்றி தனித்த
ஆய்வின் மூலம் கூறினார்களா? அல்லது வெறும் பிரபல்யத்தை மட்டும் முன்வைத்து
கூறினார்களா? என்பதையும் அறியமுடியவில்லை.

இது மட்டுமின்றி எத்தனையோ நல்லோர்கள்
பிரபல்யமாக இருப்பார்கள் எனினும் ஷரீஅத்தின் சட்டங்களிலும் ஹதீஸ்களை
அறிவிக்கும் விஷயத்திலும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பார்கள்.அறிவிப்பாளர்கள்
சம்பந்தமான நூல்களில் ஏராளமான உதாரணங்கள் இது குறித்து உள்ளன.

உதாரணத்திற்கு
ஒன்றை பார்ப்போம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுகிறார்கள் அப்துல்லாஹ் இப்னு
முஹர்ரர் அல்லாஹ்வின் அடியார்களில் நல்லோர்களில் கட்டுப்பட்டவர் எனினும் அவர்
தவறிழைப்பவர் சரியாக அறியாதவர் ஹதீஸ்களை புரட்டி கூறுபவர் சரியான முறையில்
விளக்கம் இல்லாதவர்

ஆக இரு வரலாற்று ஆசிரியர்களும் உமர் இப்னு முஹம்மத் அவர்களைப் பற்றி
நல்லவிதமாக கூறியுள்ளனர் எனினும் மார்க்க சட்டங்களில் பிக்ஹ் துறையில் இவரின்
திறனை இதன் மூலம் அறியமுடியவில்லை. அதே சமயத்தில் அன்னாரை பெரும் உலமாக்கள்
கடுமையாக விமர்சித்துள்ளனர் குறைகூறியுள்ளனர்.

முன்னோர்களில் மார்க்க அறிஞரான
அல்லாமா தாஜுத்தீன் பாகிஹானி (ரஹ்) அவர்கள் அவரது நூலான
"அல்மவ்ரித் ஃபில் கலாமி மஅ அமலில் மவ்லிதில்"  குறிப்பிட்டுள்ளார் மெளலிதை
உருவாக்கியவர்கள் பத்தாலூன்கள் தவறுசெய்பவர்கள் மனோ இச்சைக்கு முக்கியத்துவம்
கொடுப்பவர்கள் அதன் மூலம் வயிறு நிரம்ப உண்டு கழிப்பதுதான் (அவர்களின்
நோக்கமாகும்)

Source:






இன்னும்..

பாதிமியீன்களின் ஆட்சியாளர் தான் முதன் முதலில் மக்களை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய பெயரால் மொலூது ஓதுவதற்கும் அன்றைய தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவதற்கும் கட்டளைப் பிறப்பித்தார். இது மக்களால் நடைமுறை படுத்தப் பட்டதை அறிந்தவர் அதற்கடுத்த வருடம் ஹஸன்(ரலி)ஹூசைன்(ரலி),பாத்திமா(ரலி) அவர்களுடைய பிறந்த தினத்திலும் மொலூது ஓதிக் கொண்டாடுவதற்கு ஏவினார் இவர் ஷியா காரர் என்பது குறிப்பிட தக்கது.


Source:




"தவ்ளீஹுல் மராம் ஃபி பயானில் மவ்லித் வல் கியாம்" மீலாத் சபையை அரசர் அர்பல்
மற்றும் உமர் இப்னு முல்லா முஹம்மது உண்டாக்கினார்கள்.இருவரும் மார்க்க
அறிஞர்களிடம் நம்பகமானவர்களாக இல்லை.ஏனெனில் இருவரும் இசையை ரசிப்பவர்கள்
வீண்விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள் அதிலும் குறிப்பாக அரசர் அர்பல்
நடனமாடுபவராக இருந்தார்.

"குர்ரதுல் உயூனின்"  ஆசிரியர் 1பாகம் 48ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்:

இந்த மீலாத் சபைகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு பித்வாதிகளால் உண்டானது
என்பதானது தெளிவாக வெளிப்படுகிறது. மேலும் கூறுகிறார் இன்று நடைமுறையில் உள்ள
மீலாத் வழக்கமானது ஷைக் உமர் மற்றும் அரசர் முளஃப்பரின் வழிமுறையாகும்.

இந்த கருத்தை குர்ரதுல் உயூனின் ஆசிரியர் அப்துல்லாஹ் இப்னு அஸ்அத் யாபியிஷ்
ஷாஃபியின் நூலான மிர்ஆதுல் ஜினானிலிருந்து எடுத்து சொல்கிறார்.
ஆக இதன் மூலமும் உமர் இப்னு முஹம்மத் அவர்கள் மார்க்க அறிஞர்களின்
கண்ணோட்டத்தில் தவறு செய்பவர் விமர்சிக்கப்பட்டவர் என்பதை அறிய முடிகிறது.

முதல் நடைமுறை: 

இஸ்லாமியர்களிடம் 600 வருடம் வரையில் மஜ்லிஸ் மீலாத்
வழக்கத்தில் இல்லை என்பதை முன்னால் நிரூபித்துள்ளோம்.
இதனை உருவாக்கியவர் உமர் இப்னு முஹம்மத் மற்றும் அரசர் அர்பல் என்பதனை
குர்ரதுல் உயூனின் ஆசிரியரிடமிருந்து விளங்கமுடிகிறது.சில வரலாற்று
ஆசிரியர்களிடமிருந்து ஆரம்பமாக அர்பல் உருவாக்கினார் என்பதை
அறியமுடிகிறது.அல்லாமா ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் "ஹஸனுல் மக்ஸத் ஃபி அமலில்
மவ்லித்" என்ற நூலில் எழுதியுள்ளார்கள்: முதன் முதலில் மீலாதை உண்டாக்கியவர்
இப்னு முளப்பர் அபூஸயீத் இப்னு ஜைனுத்தீன் இப்னு அலி என்ற பெரும் அரசர்

ஆக அசலில் மீலாதை உருவாக்கியது உமர் இப்னு முஹம்மத் அவரை பின்பற்றி
நடைமுறைப்படுத்தியது அர்பல் அரசர் அதன் பிறகுதான் மீலாத் வழமையாக இன்று வரையில் செயல்பட்டு வருகிறது.இதனை முயிஜ்ஜுத்தீன் ஹஸன் அவர்கள் தனது வரலாற்று
நூலில் எழுதியுள்ளார்: இந்த அமலை நடைமுறைப்படுத்திய அரசர்களில் முதலாமவர்
அர்பல் உள்ளார்.

இதனை மீலாத் ஆதரவாளரும், பரலேவிய அறிஞருமான அப்துஸ்ஸமீஃ அவர்கள் தனது நூலான
"அன்வாருஸ்ஸாதிஆவில்"
பக்கம் 160 ல் இதே கருத்தையே உறுதிப்படுகிறார்.

இன்றைய மீலாதின் நடைமுறை:

இப்னு கல்கானின் "வஃபயாதுல் அஃயான்" மற்றும் "காமில் இப்னு அஸீர்" மற்றும்
வேறு வரலாற்று நூல்களில் இதனைக் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது அதனின்
சுருக்கம் என்னவெனில்
அந்த மன்னரின் பெயர் کوکبوری or کوکیری or کوکری பட்டப் பெயர் முளப்பர்தீன்
அவரின் குன்னியத் அபூஸயீத்
இவர் ஹிஜ்ரி 548 ல் முஹர்ரம் மாதத்தில் பிறந்தார். அவரின் பதினான்கு வயதில்
அவரது  தந்தை அபுல் ஹஸன் ஜைனுத்தீன் அலி துர்குமானி மரணித்தார்.அதன் பிறகு
இவர் கலீபாவானார்.இவர் சிறுவராக இருந்த காரணத்தால் இவரின் தந்தை ஜைனுத்தீன்
அவர்கள், தனது உரிமைவிடப்பட்ட அடிமை காயிமாஜ் தகுதியானவர் நம்பிக்கைகுரியவர்
என்பதை அறிந்ததனால் ஹிஜ்ரி 559ல் அர்பலின் நிர்வாகத்தை அவரிடம்
ஒப்படைத்தார்.மேலும் அரசரே தனது மகனை (کوکبوری) வழிகாட்டியாக
நியமித்தார்.

ஆனால் சில நாட்களில் இளவரசருக்கும் காயிமாஜ் இருவருக்கும்
மத்தியில் ஏதோ ஒரு காரணத்தால் பிளவு ஏற்பட்டது.ஏற்பட்டது.  کوکبوریக்கு
மாற்றம் செய்தார்.  کوکبوری அரசாட்சிக்கு தகுதியானவர் அல்ல என அரசாணையை
பிறப்பித்தார்.ஆரம்பமாக கோட்டையை மூடினார்.நாட்டை விட்டு
வெளியேற்றினார்.کوکبوری அர்பலிலிருந்து பக்தாத் சென்றடைந்தார்.

அங்கும்
தோல்வியுற்று மவ்ஸில் சென்றார்.அங்கு ஸைஃபுத்தீன் என்ற அரசர் அடைக்கலம்
தந்தார்.எனினும் அவர் அங்கு தங்கவில்லை.பிறகு அரசர் ஸலாஹுத்தீனிடம்
சென்றார்.இறுதியில் அரசர் தனது சகோதரி ரபிஆவை அவருக்கு நிகாஹ் செய்து
வைத்தார்.அவரின் வாழ்வில்  கண்ணியமும் முன்னேற்றம் உருவானது.எப்பொழுது அரசரின்
சகோதரர் யூசுப் மரணித்தாரோ کوکبوریன் வேண்டுகோளின்படி ஸலாஹுத்தீன் அர்பலை
அன்பளிப்பாக  கொடுத்தார்.ஹிஜ்ரி 586 லே திரும்பிவந்தார்.

பிறகு کوکبوری தனது
தந்தையின் அரியணையில் ஏறி அர்பலின் அரசரானார்.தனது தந்தைக்கு ஈடாக இவரும்
மிகப்பெரிய வீரர், துணிச்சல்மிக்கவர். ஸலாஹுத்தீன் அரசரிடம் இணைந்து பல்வேறு
போர்களில் கலந்து கொண்டவர்.அனைத்திலும் தனது வீரத்தை வெளிப்படுத்தினார்.அவரை
தவிர எவராலும் எதிர்த்து நிற்க முடியாது என்று சொல்லப்படும் அளவிற்கு நிலைத்து
நின்று போரிட்டார்.மக்கள் அவரை வீண்விரயம் செய்பவர் என்று சொல்லும் அளவிற்கு
கொடையளியப்பவராக  இருந்தார்.நற்செயல், நற்காரியங்களில் ஆர்வம்
உள்ளவர்.

நாணயங்களை பகரமின்றி  நாள்தோறும் ஏழைகளுக்கு வாரிவழங்குவார்.நிரந்தர
நோயாளிகள் பார்வையற்றோருக்கு நான்கு இடங்களை கட்டிக்கொடுத்தார்.ஆதரவற்ற
குழந்தைகளுக்கு தனித்தனியான கட்டிடங்களை கட்டினார்.அதுமட்டுமின்றி அநாதை
விடுதி, விதவை வாழ்வு மையம், விருந்தாளிகள் தங்கும் விடுதி, மதரஸாக்கள்,
கான்காஹ்கள் கட்டும்படி வலியுறுத்தினார்.
எல்லா இடத்திலும் வாழ்வதற்கு அடிப்படையான வசதிகளை செய்து கொடுத்தார்.

தானே
சென்று கண்காணிப்பார்.அனைத்து பகுதிகளும் செழிப்பாக
இருந்தது.நஸரானிகளிடமிருந்து இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்கு மதாயினிற்கு
ஒரு ஜமாஅத்தை அதிகமான செல்வத்தை பிணையாக கொடுத்து வரும்படி
அனுப்புவார்.ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளின் காபிலாவை மக்காவிற்கு
அனுப்புவார்.மக்காவில் இது குறித்த நினைவுச்சின்னங்கள் உள்ளது.   பெரும்
பொருட் செலவில் அரபாதில் ஹாஜிகளுக்கு தண்ணீரை ஏற்படுத்திய முதல் அரசர்
இவர்தான் காஸிய்யூனில் மஸ்ஜித் ஜாமிஆ முளப்பரை உருவாக்கினார்.

சுருக்கமாக சொல்ல
வேண்மெனில் வீரமிக்கவர், மிக நீதமானவர், கொடை வள்ளல் இவரின் செயல்களில் உமர்
இப்னு முஹம்மது செயல்படுத்திய மீலாத் மஜ்லிஸை பின்பற்றி வருடந்தோறும்
பிரம்மாண்டமான மீலாத் மஜ்லிஸை நடைமுறைப்படுத்தினார்.

இதனைப் பற்றி இன்ஷா
அல்லாஹ் பிறகு பார்ப்போம்!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live