3 Jan 2017

மீலாது -ஒரு வரலாற்று பார்வை பாகம்-2


ரமளான் 10 அன்று ஹிஜ்ரி 630 ல் அரசர் அர்பல் மரணித்தார்.அர்பலின்
அரண்மனையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.பிறகு ஹிஜ்ரி 631லே அவரின்
வஸிய்யத்திற்கு ஏற்ப அவரின் ஜனாஸா மக்காவிற்கு எடுத்து செல்லப்பட்டது.அவர்
வாழும்போதே அங்கு  தன்னை அடக்கம் செய்வதற்காக குப்பா கட்டி
வைத்திருந்தார்.

எனினும் ஏதோ காரணத்தால் ஜனாஸாவை மக்காவிற்கு எடுத்து செல்ல
முடியவில்லை.மக்கள் திரும்பி செல்லும் வழியில் கூஃபாவில் அடக்கம் செய்தார்கள்.
ஆக அரசர் அர்பலின் வரலாற்றின் மூலம் அவர் வீரர், நீதமானவர், கொடைவள்ளல்
எனினும் அவர் பலமானவரா? இல்லையா? என்பதை இதனை வைத்து அறியமுடியாது.
அதே நேரத்தில்  அறிஞர்களான தவ்ளீஹுல் மராமின் ஆசிரியர், குர்ரதுல் உயூனின்
ஆசிரியர் அர்பலை தெளிவாக பலமானவர் அல்ல என்கிறார்கள்.இது குறித்து முன்னால்
சென்று விட்டது.மீலாத் ஆதரவாளர்கள் அவரை பலமானவர் என்பதாக கூறுகின்றனர்.

இதனைக்
குறித்து பரலேவிய அறிஞர் மெளலவி அப்துஸ்ஸமீஃ "அன்வாரே ஸாதிஆவிலே" மீலாதை
எதிர்ப்பவர்களை விமர்சிக்கிறார்.






அதனின் சுருக்கமான கருத்தானது மீலாதை
நிராகரிப்பவர்கள் அரசர் முளப்பரை விமர்சிக்கின்றார்கள்.அவரின் காலாட்படையிலே
இசை இசைக்கப்பட்டது.இதன் மூலம் நிராகரிப்பாளர்கள், இதனை இன்னிசையாக
எடுத்துக்கொண்டு அவரின் மீது  களங்கம் சுமத்துகின்றனர்.உண்மையில் என்னவெனில்
மத்தளம் போன்று போர்களிலே ஆயுதங்களுடன் பயன்படுத்தப்படும் சாமான் இது போன்ற
கருவி வேறு. வீண் வேடிக்கைக்காக பயன்படுத்தப்படும் கருவிகள் வேறு. நபி (ஸல்)
அவர்களின் புகழ்மாலையை செவிமடுத்து மகிழ்ச்சி மிகுதியால் அது
உபயோகிக்கப்படுகிறது.இதனை நிராகரிப்பாளர்கள் மீலாத் விழாவிலே
நாட்டியமாடினார்கள் என்பதாக திணிக்கின்றனர்.

இவரைப் பற்றி இப்னு கஸீர் ரஹ்
அவர்கள்

كان شهما شجاعا بطلا عاقلا عادلا محمود السريرة 

என்று போற்றிப்
புகழ்ந்துள்ளார்.இதனை அல்லாமா ஜர்கானி (ரஹ்)மவாஹிபின் விரிவுரையாளர்
எடுத்தெழுதியுள்ளார்.

  அப்துஸ்ஸமீஃ இந்த வாதத்திற்கு மெளலவி அப்துல் காலிக் கான் ஸாஹிப் "பத்ஹுல்
மவ்ஜிதில்" மறுப்பு அளித்துள்ளார்கள் .
மீலாத் விழாவில் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தின் போது போர் மத்தளத்திற்கும்,
காலாட்படையின் இன்னிசைக்கும் என்ன வேலை? மீலாத் விழாவா? அல்லது காபிர்களுக்கு
எதிராக போரா? என்று எவராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்?

رقص என்பதற்கு ناچ
(நடனமாடுதல்)என மொழிபெயர்த்தால் என்ன தவறு? ஏனெனில் இரண்டும் ஒன்றுதான் வெறும்
மொழி ரீதியான வித்தியாசம் மட்டும்தான் رقص என்பதற்கு ஹிந்தியில் ناچ
(நடனமாடுதல்)

முக்கிய குறிப்பு:

 பரலேவி மெளலவி அப்துஸ் ஸமீஃ என்பவர் "தப்ல்" என்ற மத்தளம்
இஸ்லாத்தில் பயன்படுத்துவது கூடும் என்பதைப் போன்று எழுதியுள்ளார்.ஆனால்
இஸ்லாத்தில் "தஃப்" என்ற கருஞ்சிரா மட்டும்தான் அனுமதி.இதை தவிர மற்ற எந்த இசை
கருவிக்கும் அனுமதியில்லை என்பதுதான் பெரும்பான்மையான உலமாக்களின்
தீர்ப்பாகும்.

பரலேவி அறிஞர் அப்துஸ்ஸமீஃ கூறுகிற கருத்தில் நமக்கு மாற்று கருத்து
இருந்தாலும் அர்பல் அரசரை குறித்து வரலாற்று நூல்களில் புகழப்பட்டுள்ளது
என்பதாக கூறுவது சரியானதுதான்.அதில் நமக்கு மாற்று கருத்து இல்லை.எனினும் இதன்
மூலம் அவர் பலமானவர் என்கிற வாதம் நிரூபணமாகாது.வீரம், நீதம்,துணிச்சல்,
கொடைத்தன்மை போன்ற பண்புகளின் மூலம் பலமானவர் என்பதானது
அவசியமாகாது.இதனால்தான் வரலாற்று ஆய்வாளர்கள் அவரை பலகீனமானவர் என்பதாக
தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.

முயுஜ்ஜுத்தீன் ஹஸன் (ரஹ்) அவர்கள் தனது
வரலாற்று நூலில் எழுதியிருப்பதை அல்லாமா அஹ்மத் இப்னு முஹம்மத் மாலிகி மிஸ்ரி
தனது நூலான "கவ்லு முஃதமதில்" எடுத்து சொல்கிறார்: அரசர் அர்பல் வீண் விரயம்
செய்பவர், மேலும் அவர் அக்கால உலமாக்களை தங்களின் சுய ஆய்வு இஜ்திஹாதின்
பேரில் அமல் செய்யும்படி வலியுறுத்தினார். மற்றவர்களை தக்லீத் செய்வதையும்,
வழிமுறையில் செல்வதையும் விட்டுவிடவும் என்றார்.

இதனால் உலமாக்களின் ஒரு ஜமாஅத்
தக்லீதை விடுவதன் பால் சாய்ந்தனர்.
இதன் மூலம் இரு விஷயங்களை விளங்க முடிகிறது. வீண்விரையம் செய்பவர், இமாம்களின்
தக்லீதிற்கு எதிரானவர், மற்றவர்களையும் தக்லீதை விடும்படி கட்டளையிடுபவர் இதனை
பரலேவிய அறிஞர் அப்துஸ்ஸமீஃ. அவர்கள் மெளனமாக ஏற்கிறார். அதற்கு மாற்று
விளக்கம் கொடுத்துள்ளார்.எனினும் மாற்று விளக்கமும் நிராகரிக்கப்பட வேண்டிய
கருத்துதான்.


இப்னு ஜவ்லான் அவர்களின் வரலாற்று நூலான் "மிர்ஆதுஜ்ஜமானில்"
எழுதியுள்ளார்கள்: 

லுஹரிலிருந்து அஸர் வரை சூபியாக்களின் மஜ்லிஸில் இசையை
செவிமடுப்பார்.அவர்களுடன் சேர்ந்து அவரும் நடனமாடுவார்.
இப்னு கல்கானின் விளக்கத்தின் மூலமும் இதனை அறிய முடிகிறது.
இப்னு கல்கான் அர்பலி ஷாபியி அவர்கள் தனது நூலான "வஃபயாதுல் அஃயானில்" தனது
ஊரையும் சமகாலத்தையும் சேர்ந்த அரசர் அர்பலின் மீலாத் மஜ்லிஸைப் பற்றி விரிவாக
எழுதியுள்ளார்கள்:(அதனின் சுருக்கம்)













ஒவ்வொரு குழுவிலும்  இசைக்கலைஞர்கள், பாடகர்கள், வீணாக பொழுது போக்குவர்கள் என
தனித்தனியான  ஜமாஅத்தாக இருப்பார்கள்.மீலாத் மஜ்லிஸிற்கு இரண்டு நாட்கள்
இருக்கும் பொழுது மத்தள இசைக்கருவிகள்,
பாரம்பரிய இசைக்கருவிகள்,
பொழுது போக்கு சாமான்கள்  இன்னும் பலவகையான பொருட்களை வாங்குவார்.மீலாத்
இரவிலே மஃரிபிற்கு பிறகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.அவருக்கு இன்னிசையை தவிர
வேறு எதிலும் இன்பம் பெறமாட்டார். ஆக சுருக்கம் என்னவெனில் அர்பல் அரசர்
வீரர், நீதமானவர், கொடைவள்ளல்,துணிச்சல் மிக்கவர் என்பதை கவனித்து
புகழக்கத்தக்கவர் என்ற போதிலும் வீண்விரையம் செய்பவர்,புல்லாங்குழல் இசையை
ரசிப்பவர், இமாம்களை தக்லீத் செய்வதற்கு எதிரானவர், தவறிழைப்பவர், பலகீனமானவர்
என்பதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

     மெளலித் நூலின் முதல் ஆசிரியர்
மெளலித் நூலை முதன் முதலில் எழுதிய ஆசிரியர் உமர் இப்னு ஹஸன் இப்னு திஹ்யா
கல்பி உன்துலிஸி இவர் ஹிஜ்ரி 544 லே பிறந்தார். வாலிப வயதில் மார்க்க கல்வியை
தேடி பல நகரங்களுக்கு பிரயாணம் செய்தார்கள்.இப்னு கல்கான் கூறுகிறார்கள் இவர்
அக்காலத்தின் பிரபல்யமான பேரறிஞர் காஹிரேவில் 661 லே இருந்த தாருல்ஹதீஸில்
அந்நேரத்தில் பெரிய மார்க்க அறிஞராக இருந்தார்கள்.முஸ்தவ்ஃபா என்ற நூலின்
ஆசிரியர் அதில் அண்ணல் நபி ஸல் அவர்களின் திருப்பெயர்களைக் குறித்து விளக்கமாக
எழுதியுள்ளார்.

மேலும் மெளலூத் கிதாப் எழுதியுள்ளார் அதனின் பெயர் தன்வீரு ஃபீ
மவ்லிதிஸ்ஸிராஜில் முனீரி சிலர் அதனின் பெயர்  தன்வீரு ஃபி பஃளில் பஷீரி
வந்நதீரி என்கிறார்கள். ஹிஜ்ரி 604ல் இப்னு திஹ்யா அவர்கள் குராஸான்
நாட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள். அரசர் அர்பல் மீலாது சபைகளை விரும்புவர்
என்பதை கேள்விப்பட்டு அந்த நூலை அரசரின் சமூகத்தில் சமர்ப்பித்தார். அதனை
படித்தும் காட்டினார்.அரசர் மனமகிழ்ந்து ஓராயிரம் தீனார்களை அல்லது அஷ்ரபிய்யை
அன்பளித்தார்.

இந்நிகழ்வை அதிகமான வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள்.இதனை குறித்து
மீலாத் ஆதரவாளர்களும் எடுத்தெழுதியுள்ளனர்.

முன்னோர்களில் அல்லாமா ஸுயூத்தி (ரஹ்) அவர்களிடமிருந்தும் எடுத்துச்
சொல்லப்படுகிறது.
ஷைகு அபுல் ஹிதாப் இப்னு தஹ்யா மீலாத் ரஸுல் குறித்து நூல் எழுதினார்.அதன்
பெயர் தன்வீர் அதற்கு பகரமாக அரசர் அர்பல் ஆயிரம் தீனார்கள்
கொடுத்தார்.நீண்டகாலம் அர்பலில் இருந்தார்.ஹிஜ்ரி 630லே அங்கு மரணித்தார்.இதனை
குறித்து அன்வாரே ஸாதிஆவிலே அப்துஸ்ஸமீஃ 161 பக்கம் குறிப்பிட்டுள்ளார்.
இப்னு தஹ்யாவைப் பற்றிய நிலைப்பாடு: இப்னு தஹ்யா ஆலிம், இலக்கியவாதி,வரலாற்று
ஆய்வாளர், எனினும் இதன் மூலம் அவர் பலமானவரா? பலகீனமானவரா? என்பதை
அறியமுடியாது.

அன்வாரே ஸாதிஆவில் பரலேவி அறிஞர் கூறுகிறார் மீலாத்
மறுப்பாளர்கள் (இப்னு தஹ்யா) அவர் ஆலிம் முஹத்திஸ் எனினும் மெளலித் நூலை
எழுதியதன் காரணமாக படித்ததன் காரணமாக விமர்சிக்கிறார்கள்.அன்னாரை தீயோர்
என்பதாக எழுதியுள்ளனர்.ஆனால் இதற்கு மாற்றமாக அங்கீகாரம் பெற்ற நூல்களில் அவரை
புகழ்ந்துள்ளனர்.





நமது மறுப்பு: 

உண்மையில் இப்னு தஹ்யாவை விமர்சிப்பவர்கள் அவர் மெளலித் நூலை
எழுதியதால் படித்ததால் விமர்சிக்கவில்லை.இதற்கான சான்றுகளை இனி
காண்போம்!

(1)அல்லாமா ஷம்சுத்தீன் தஹபி (ரஹ்) அவர்கள் "மீஜானுல் இஃதிலாலில்"
இவர் முஹத்திஸ், எனினும் ஹதீஸை எடுத்து சொல்வதிலே தவறு செய்பவர் என்று
சொல்கிறார்.
மேலும் கூறுகிறார்: இப்னு திஹ்யாவின் நூலில் அவரைப்பற்றி குறைகூறுவதானது அது
தஸ்ஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) மற்றும் தள்யீஃப் (பலகீனமானது)
சம்பந்தப்பட்டதாகும்.

(2)ஹாபிள் அபூபக்கர் இப்னு அப்துல் ஙனி (ரஹ்) அவர்களிடமிருந்து (இப்னு நுக்தா
ஹனஃபி பக்தாதி என்ற பெயரில் பிரபல்யமானவர்)   எடுத்து கூறுகிறார்கள்: இப்னு
தஹ்யா கண்ணியம், பிரபல்யம் பெற்றவர் எனினும் உண்மையில்லாததை வாதிடுபவர்.

(3)ஹாபிள் ளியா முகத்திஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவர்  எனக்கு
பிடித்தமானவர் எனினும் இமாம்களை மிகவும் விமர்சிப்பவர்

(4)ஹாபிள் ளியா அவர்களுக்கு அல்லாமா இப்ராஹிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்:
சந்தேகமின்றி மேற்குலக அறிஞர்கள் அவரை விமர்சிக்கின்றனர்.இதன் பிறகு ஹாபிள்
ளியா அவர்கள் அதனை நேரில் பார்த்ததாக எழுதியுள்ளார்கள் அவரிடத்திலிருந்த
அதிகமான விஷயங்கள் விமர்சனத்திற்கும் பலகீனத்திற்கும் உரியது.

(5)ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அபுல் ஹஸன் இப்னு முஃபஸ்ஸல் அவர்களின்
கருத்தை எடுத்து சொல்கிறார்: 

இப்னு தஹ்யா ளாஹிரி மத்ஹப், முன்னோர்களான
இமாம்களை விமர்சிப்பவர், அவரின் நாவானது அலங்கோலமானது,அவர் அறிவிலி,பெருமை
பிடித்தவர்,மார்க்க காரியங்களில் பொடுபோக்கும் அலட்சியமும் அற்பமாக கருதுபவராக
இருந்தார்.

Source:




(6)அல்லாமா இப்னு அஸாகிர் அவர்கள் தனது வரலாற்று நூலில் எழுதியுள்ளார்: இப்னு
தஹ்யா நல்ல கவிஞர், எனினும் ஹதீஸ்களை அறிவிப்பதிலே புனைந்து கூறுபவர் ஏனெனில்
அவர் அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பார்.

(7)இப்னு புகார் அவர்கள் தனது வரலாற்று நூலில் எழுதியுள்ளார் இப்னு தஹ்யா
பொய்யர் பலகீனமானவர் என்பதில் அறிஞர்கள் ஒன்றுப்பட்டு இருந்ததைப்
பார்த்தேன்.கேட்காததை கேட்டதாக வாதிப்பார்.சந்திக்காதவர்களை சந்தித்தாக
கூறுவார்.எனினும் அதற்கு எதிரான ஆதாரங்கள் உள்ளது. இதன் பிறகு இப்னு புகார்
நீண்ட விஷயத்தை கூறுகிறார் (அதனின் சுருக்கம்) பெரும் பொய்யர், மார்க்க
காரியங்களை அற்பமாக கருதுவார்.

(8)ஜலாலுத்தீன் ஸுயூத்தி (ரஹ்) அவர்களின் "தத்ரீபுர் ராவி ஷர்ஹு தக்ரீபுன்
நவவியில்" குறிப்பிடுகிறார்கள்:

பொய்களை புனைபவர்.
தனது அறிவிற்கு ஏற்ப பத்வா அளிப்பார்.
ஆதாரம் கிடைக்கும் பொழுது சுயமாக ஹதீஸ்களை உருவாக்குவார்.
மஃரிப் தொழுகையை கஸ்ராக தொழலாம் என்பதற்கு ஆதாரமாக ஹதீஸை உருவாக்கியவர்
என்பதாக இவரைப் பற்றி கூறப்படுகிறது.

இப்னு தஹ்யாவைப் பற்றி கடுமையாக விமர்சிப்பவர்கள் அல்லாமா தஹபி (ரஹ்), ஹாபிள்
இப்னு நுக்தா (ரஹ்), ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்), ஹாபிள் ளியா (ரஹ்) ஹாபிள்
அபுல்ஹஸன் (ரஹ்),
இப்னு அஸாகிர் (ரஹ்),
இப்னு புகார் (ரஹ்),
அல்லாமா சூயூத்தி (ரஹ்)
இவர்கள் அனைவரும் பேரறிஞர்கள், பல்வேறு துறைகளில் பாண்டியத்துவம் பெற்றவர்கள்,
பிரபல்யமான ஹனபி அறிஞர் இப்னு நுக்தா ரஹ் அவர்களும் உள்ளார்கள். அதில் மீலாதை
ஆதரிக்கும் ஆதரவாளர் ஸுயூத்தி ரஹ் அவர்களும் உண்டு.இவர்களில் எவரும் இப்னு
தஹ்யாவை மெளலித் குறித்த நூல் எழுதியதற்காக, படித்ததற்காக விமர்சிக்கவில்லை
என்பதும் அன்வாரே ஸாதிஆவின் பரலேவிய அறிஞர் அப்துஸ்ஸமீஃ கூறியது தவறான வாதம்
என்பதை அறிய முடிகிறது.
இப்னு தஹ்யாவைப் பற்றிய அனைத்து விமர்சனமும் உண்மையில் இருந்துள்ளது. ஆக இப்னு
தஹ்யா அவர்கள் முஹத்திஸ், இலக்கிய வல்லுநர்,வரலாற்று ஆய்வாளர், கவிஞர்,
மார்க்க அறிஞர், பேரறிஞர் இது போன்ற பண்புகள் இருந்த போதிலும் ளாஹிரி
மத்ஹப்,கைரு முகல்லித்,எடுத்து சொல்வதில் புனைபவர், அறிஞர்களை பழிப்பவர்,
மார்க்க காரியங்களை அலட்சியமாக கருதுபவர், பொய்யான ஹதீஸை புனைபவர், அறிவின்படி
தீர்ப்பளிப்பவர், அடிப்படையற்ற விஷயங்களை கூறுபவர், நாவில் தீயவர்,அசிங்கமாக
பேசுபவர், அறிவிலி,பெருமைபிடித்தவர், ஆராயும் திறன் குறைந்தவர்,
விமர்சிப்பதற்கு தகுதியானவர். இதனால் அவர் நம்பகமானவர் அல்ல மிக பலகீனமானவர்
என்பதை உறுதியான சான்றுகள் மூலம் நிரூபணமாகிறது.

மீலாத் உருவாக்கியவர், நடைமுறைப்படுத்தியவர், அது குறித்து நூல்
எழுதியவர்,மூன்று பேரும் ஙைர முகல்லிதீன்கள்  (மத்ஹப் மறுப்பாளர்கள்):

முதன் முதலில் உலகில் மீலாதை உண்டாக்கியவர், உமர் இப்னு முஹம்மது மவ்ஸிலி அதனை நடைமுறைப்படுத்தி பிரல்படுத்தியவர், அரசர் முளஃப்பர் தீன் அபூஸயீத் அர்பலி
மெளலித் குறித்து முதன் முதலில் நூல் எழுதியவர், உமர் இப்னு திஹ்யா கல்பி
உன்துலுஸி இவர்களில் அரசர் அர்பல் மத்ஹப் மறுப்பாளர் இதனை முயீஜ்ஜுத்தீன் ஹஸன்
அவர்கள் தனது வரலாற்று நூலில் பதிவு செய்திருந்ததை முன்னால் பார்த்தோம். அரசர்
அர்பல்,
சுய ஆய்வின் பேரில் நடக்காதீர்! மற்றவர்களின் வழிமுறையின்படி செயல்படாதீர்!
'என வலியுறுத்தினார்.இதனால் மார்க்க அறிஞர்கள், மார்க்கமேதைகளின் ஒருசாரார்
தக்லீத் செய்வதை விட்டு விட ஆரம்பித்தார்கள்.இதனை அப்துஸ்ஸமீஃ மறுப்பதற்கு
வழியின்றி ஏற்றுக்கொண்டார்.இப்னு திஹ்யாவும் கைரு முகல்லித் (மத்ஹப்
மறுப்பாளர்) என்பதில் எந்தவித சந்தேகமில்லை.ஏனெனில் ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்)
அவர்கள்,
அவரை ளாஹிரி மத்ஹப்ளைச் சேர்ந்தவர்,இமாம்களை விமர்சிப்பவர் என்றும், இமாம்
ஸுயூத்தி (ரஹ்) அவர்கள், இப்னு தஹ்யா தனது சுய ஆய்வின்படி
தீர்ப்பளிப்பவர்.

இதனை உறுதிப்படுத்த கற்பனையாக ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடர்களை
உருவாக்குபவர்.எனவே அரசர் அர்பல் இப்னு தஹ்யா இருவரும் மத்ஹப் மறுப்பாளர்கள்
என்பதானது விடியலைப் போன்று தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது.அடுத்து உமர் இப்னு
முஹம்மது அவர்களின் இயற்கையான சுபாவத்தின் மூலம் விளங்கமுடிகிறது. மீலாதை
முதன்முதலில் உண்டாக்கியவர் .இதனை நடைமுறைப்படுத்தி பின்பற்றியவர் அரசர்
அர்பல். அதுமட்டுமின்றி அரசர் தக்லீதை விடும்படி வலியுறுத்தினார்.அதன்படி
உலமாக்களின் ஒரு சாரார் அதனை செயல்படுத்தினர்.இதன்படி பார்க்கும்போது உமர்
இப்னு முஹம்மதும் மத்ஹப் மறுப்பாளராக இருந்திருப்பார் என மிகைப்பான எண்ணம்
ஏற்படுகிறது.இதுதான் முற்றிலும் கியாஸ் எனும் ஆய்விற்கு நெருக்கமானது.

சுருக்கம் என்னவெனில் மூன்று நபர்களும் மத்ஹப் மறுப்பாளர்கள் இப்பொழுது மீலாத்
ஆதரவாளர்கள் மத்ஹப் மறுப்பாளர்களை குறித்து தீர்ப்பு என்ன?  என்பதை
அறியவிரும்பினால் அவர்களின் தலைவரான மெளலவி அஹ்மத் ரிளாகான் பரலேவி கூறுவதை
பாருங்கள்! (சுருக்கமான கருத்து) 

இஜ்திஹாதின் ஆய்வும் செய்யும் ஆற்றல் இன்றி
தகுதியின்றி தக்லீதை (இமாம்களை பின்பற்றுவதை)  விடுபவர்
இவர் தக்லீதை விடுவதில் மிக கீழான நிலையில் உள்ளவர்.
இதனை (தக்லீதை விடுவதை)  தவிர வேறு
கொள்கை ரீதியான,செயல் ரீதியான குழப்பங்கள் அவரிடம் இல்லையென்றாலும்
இவர் குர்ஆன் இமாம்களுக்கு எதிரானவர், இஜ்மாவை பிளவுப்படுத்துபவர்,முஃமீன்கள்
அல்லாத பாதையை பின்பற்றுவர், வழிகெட்டவர், மார்க்கமில்லாதவர் மேலும் ஒரு
கட்டுரையில் ரிளாகான் பரலேவி மத்ஹப் மறுப்பாளர்களுக்கு பின்னால் தொழுவது
கூடாது என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

                   


ஆக மீலாத் மஜ்லிஸ் உருவாக்கியவர், நடைமுறைப்படுத்தியவர், முதல் நூல் ஆசியர்
இம்மூன்று பேர்களும் குர்ஆன், இஜ்மா,முஃமீன்களுக்கு எதிரானவர்கள்,வழிகேடர்கள்,
மார்க்க அறிவற்றவர்கள்
என்பதானது பரலேவிகளின் தலைவர் அஹ்மத் ரிளாகானின் தீர்ப்பானது இதனை
உறுதிப்படுத்துகிறது.
மத்ஹப் மறுப்பாளர்கள்  பின்னால் தொழுகையே கூடாது எனும் போது ஷரீஅத்தின்
சட்டங்களிலே அவர்களை  பின்ற்றுவது, அவர்களால் உருவாக்கப்பட்ட செயலை தீனின்
அடையாள சின்னமாக பிரபல்யப்படுத்துவது, நடைமுறைப்படுத்துவது மிகப்பெரிய வழிகேடே
தவிர வேறில்லை.

குறிப்பு:

மீலாத் வரலாறு குறித்த ஆய்வுத் தொடரை இத்துடன்
முடித்துக்கொள்கிறோம்.இது குறித்து இனி பேசுவது பொருத்தமில்லை. அடுத்தடுத்த
தொடர்களை  அடுத்த ரபீயுல் அவ்வலில் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்...







0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live