9 Sept 2016

அஹமது ரிழா பரேலவி நபி ﷺ அவர்களுக்கு இமாமாக தொழவைத்த நிகள்வு நவூதுபில்லாஹ்..

ரிளாகான் பரலேவி "இமாமாகவும்" அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள்"முக்ததியாக" தொழத நிகழ்வு (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரலேவிகள் அண்ணல்நபி (ஸல்) அவர்களின் நேசம்தான் எங்கள் சுவாசம் என்பதாக கூறித்திரிவார்கள்.இதுவெறும் வாய்ச்சொல் மட்டும்தான் தவிர செயல் வடிவில் நிரூபிப்பவர்கள் அல்ல.
இதுமட்டுமின்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவமதிப்பவர்கள் களங்கத்தைஏற்படுத்துபவர்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்வு சான்றாக உள்ளது. பரலேவிகளின்நிலைப்பாட்டை விளக்கி அந்நிகழ்வை கூறுவதானது பொருத்தமாக இருக்கும்.பரலேவிகளின் கொள்கையானது அண்ணலார் ஹாளிர் (எல்லா நேரமும் ஆஜராகி இருப்பவர்)நாளிர்  (அனைத்தையும் பார்ப்பவர்) நல்லோர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்வார்கள்.இதனை நன்றாக மனதில் பதிய வைத்து இனி ஆய்விற்குள் நுழைவோம்.


ரிளாகான் பரலேவி அவரது மல்பூஜாதில் எழுதியுள்ள நிகழ்வு:

  மெளலவி பரகாத் அஹ்மத் ஸாஹிப் மரணமான போது மெளலவி ஸய்யித் அமீர் அஹ்மத் (ரஹ்)அவர்களின் கனவிலே நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள்.நபி (ஸல்) அவர்கள்குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள்.எங்கு செல்கிறீர்கள்? 'எனஸய்யித் அஹ்மத் (ரஹ்) கேட்ட பொழுது அதற்கு அண்ணலார் அவர்கள் பரகாத் அஹ்மத்அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றார்கள் இதன் பிறகு ரிளாகான்பரலேவி கூறுகிறார் அல்ஹம்துலில்லாஹ்இந்த ஜனாஸாவிற்கு நான்தான் தொழவைத்தேன். (ஆதாரம் மல்பூஜாத் இரண்டாவது பாகம்)


ரிளாகான் பரலேவி எழுதிய நிகழ்வானது கனவுதான் எனினும் தொழவைத்த நிகழ்வுவிழிப்பு நிலையிலாகும்.இதில் பெருமையுடன் அல்ஹம்துலில்லாஹ் என கூறுகிறார்


பரலேவிகளின் மறுப்பும் நமது பதிலும்:

ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு பின்னால் நின்று நபி (ஸல்) அவர்கள்தொழுதுள்ளார்கள்.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரளி) அவர்களுக்கு பின்னால்நின்று தொழுதுள்ளார்கள்.அபூபகர் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்றுதொழுதுள்ளார்கள்  என்பதை முன்வைத்து ரிளாகானுக்கு பின்னால் நின்றும்தொழுதுள்ளார்கள் என பரலேவிகள் வாதிடுகின்றனர்.


நமது பதில் :

வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் நிகழ்வைரிளாகானின் பரலேவி நிகழ்வோடு ஒப்பிடுவது அவமரியாதை இல்லையா? ஜிப்ரயீல் (அலை)அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட வானவர் அல்லாஹ்வின்உத்தரவின் பேரில் தொழுகை முறையை கற்றுக்கொடுத்த செய்தியோடு ரிளாகான்பரலேவியின் நிகழ்வோடு முடிச்சுப் போடுவது அறிவீனம் இல்லையா? அபூபகர் (ரளி) அவர்களுக்கு பின்னால் அண்ணலார் தொழுததாக வந்துள்ள நிகழ்வானது பெருமானாரின்உடல்நிலை சரியில்லாத நிர்பந்த சூழ்நிலையில் நடந்த நிகழ்வாகும்.இதனுடன்ரிளாகான் பரலேவியின் நிகழ்வை முடிச்சுப் போடுவது முறையா?


அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரளி) அவர்கள் அண்ணலாருக்கு தொழ வைத்தநிகழ்வானது அண்ணலார் தொழுகையின் இடையில் வந்து இணைந்து கொண்ட  நிகழ்வாகும்.


இந்த சந்தர்ப்பத்தில்ரிளாகான் பரலேவி  நிகழ்வுடன் புகாரியில் வரும் நிகழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால்ரிளாகான் பரலேவியின் பெருமை நிறைந்த தீயகுணத்தையும் அபூபகர் (ரளி) அவர்களின்பணிவு நிறைந்த குணத்தையும் புரிந்து கொள்ளலாம்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூபக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்கு தொழுகை நடத்தவில்லை? என்று கேட்டார்கள்.அதற்குஅபூபக்ர் (ரளி),   நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்குஅபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள்.(நீண்ட ஹதீஸின்சுருக்கம்) 


அபூபக்ர் (ரளி) அவர்களின் பணிவான இந்த வார்த்தையை எண்ணிப்பார்க்கும் பொழுது உள்ளம் நெகிழ்கிறது.அதே சமயத்தில் பெருமானாருக்கு நான் தான்தொழ வைத்தேன் என சொல்லும் ரிளாகான் பரலேவியின் வார்த்தையை எண்ணிப் பார்க்கும்பொழுது உள்ளம் கொதிக்கிறது.


பரலேவிகளின் வாதமும் நமது மறுப்பும்: 

அல்ஹம்துலில்லாஹ் என ரிளாகான் பரலேவிகூறியதானது பெருமையினால் அல்ல  மாறாக அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்குஇமாமத் செய்கிற பாக்கியமானது அல்லாஹ் அருளிய அருட்கொடை என்பதை நினைத்துதான்கூறினார்கள்.


நமது மறுப்பு: 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு தொழவைப்பது அல்லாஹ்வின்அருட்கொடையெனில் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக ஜிப்ரயீல் அலைஅவர்களோ,அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளி அவர்களோ,அபூபக்ர் ரளி அவர்களோஅல்ஹம்துலில்லாஹ் என்று ஏன் சொல்லவில்லை? அவர்கள் இதனை  அருட்கொடை என்பதைஅறியவில்லையா?

 (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூபக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்கு தொழுகை நடத்தவில்லை? என்று கேட்டார்கள்.அதற்குஅபூபக்ர் (ரளி),   நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்குஅபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள்.  


ஆகஅல்லாஹ்வின் அருட்கொடையெனில் பிறகு   இவ்விதமாக அபூபக்ர் ரளி அவர்கள்  ஏன்இவ்வாறு கூறவேண்டும்?  நபி ஸல் அவர்களுக்கு தொழவைக்கலாம் என்றால் நபிஸல்அவர்களின் மரணித்த போது எந்த நபித்தோழரும் ஏன் தொழவைக்கவில்லை? என்பதற்கு

பரலேவிகளே பதில் தாருங்கள்! 

ஒரு வாதத்திற்கு அல்ஹம்துலில்லாஹ் என்று ரிளாகான்பரலேவி கூறியது, அல்லாஹ்வின் அருட்கொடை என்பதை எண்ணித்தான் எனஏற்றுக்கொண்டாலும் பரலேவிகள் மோசடியும் புரட்டுதலும் வெளிப்படுகிறது. ஏனெனில்மல்பூஜாதின் இரண்டாவது பாகத்தின் புதிய பதிப்பில் அல்ஹம்துலில்லாஹ் என்கிறவாசகத்தை அமைதியாக எடுத்துவிட்டனர்.ஆக இதன் மூலம் பரலேவிகள்,  அண்ணலாருக்குஎதிரானவர்கள் என்பதும் மார்க்க விவகாரங்களில் மோசடிக்கும்,புரட்டுதலுக்கும்சொந்தக்காரர்கள் என்பதும் தெளிந்த நீரோடையைப் போல் விளங்கமுடிகிறது.



ஆதாரம்:











0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live