4 Sept 2016

பரேலவிகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 19 (தேவ்பந்த் ஆலிம்கள் வஹாபிகளா? 2)

பரேலவிகளின் வாதம் :

தப்லீக் ஜமாதின் நிறுவனர் மௌலானான இல்யாஸ் (ரஹ்) அவர்களின் குருமார்கள் வஹாபிசத்தையும் ,அதன் தலைவர்களையும் தங்களின் புத்தகத்தில் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.ஆகவே தப்லீக் ஜமாதும் வஹாபிகள் தான் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மௌலான இல்யாஸ் (ரஹ்) அவரின் குருவான ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் தனது فتاوى رشيدية ல் வஹ்ஹாபிஸத்தையும் அதன் தலைவரான "முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபையும்" ஆதரித்து எழுதியுல்லார்கள் .

நமது பதில்:

ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் "அப்துல் வஹ்ஹாப்" அவர்களை பற்றி கேள்விப்பட்டதை வைத்து தான் பத்வா கொடுத்தார்கள்.

அந்த பத்வாவில் سناہے என்ற வார்த்தை உள்ளது. அவரை நன்கு ஆராயாமலும் ,அவர் ஹம்பலி மத்ஹப் என்று பரவலாக பேசப்பட்டதாலும், பித்அதை வண்மையாக சாடுபவராக இருந்ததாலும் இவ்வாறாக فتاوي கொடுத்துள்ளார்கள்.

ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்களின் மறைவிற்க்கு பிறகு முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியை பற்றி ஆதாரமுள்ள தகவல்கள் தேவ்பந்த் உலமாகளுக்கு தெறிய வந்த பிறகு அவரையும் ,அவரை சார்ந்தவர்களையும் வழிகேடர்கள் என பத்வா அளித்தார்கள்.

மேலும் மௌலானா கலீல் அஹமது அம்படேவி (ரஹ்) அவர்கள் المهند الي المفند என்ற தேவ்பந்த் உலமாகளின் 'அகீதா (عقيده) கிதாபில் இதை தெளிவாக சொல்லியுள்ளார்கள். மேலும் அவர்களை 'காரிஜியாக்களை' போன்று நாங்கள் கருதுகின்றோம் என்றும் சொல்லுயுள்ளார்கள்.

பரேலவிகளின் வாதம்:

 ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் அறிவித்த فتاوي வை ஏன் இன்னமும் நீக்க வில்லை? அப்படியென்றால் இன்னும் நீங்கள் அப்துல் வஹாப் நஜ்தியை ஆதரிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

நமது பதில் :

ஒரு கிதாபை எழுதியவர் ஒரு விசயத்தில் தவறான கருத்துடையவராக இருப்பதால் அந்த கிதாபை அகற்ற வேண்டும் என்பது பல பாதகங்களை ஏற்படுத்தும்.

அந்த வாசகங்களை நீக்க வேண்டும் என்ற விஷயம் அந்த நூலை தொகுத்தவருடைய உரிமையாகும்.

உதாரணமாக ஈசால் சவாபுடைய விசயத்தை امام شافعي (ரஹ்) அவர்கள் சேராது என்று தீர்க்கமாக கூறியுள்ளார்கள். மற்ற மூன்று இமாம்களும் சேரும் என்று கூறுகிறார்கள். شافعي மத்ஹபை சேர்ந்தவர்கள் امام شافعي (ரஹ்) அவர்களின் கருத்தின் படி அமல் செய்யாமல் மற்ற மூன்று இமாம்களின் கருத்தின் அடிப்படையில் தான் அமல் செய்கிறார்களே தவிர امام شافعي (ரஹ்) அவர்களின் கருத்தை கிதாபிலிருந்து நீங்க யாரும் முற்படவில்லை!!..





அப்துர் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்கள் غنية الطالبين ல் 72 வழிகெட்ட கூட்டத்தாரை பற்றி கூறும் போது  ஹனபி மத்ஹபின் தலைவர் "இமாம் அபூ ஹனீபா" (ரஹ்) அவர்களை சார்ந்த சிலரை வழிகெட்டகூட்டத்தில் சேர்த்துள்ளார். அதை நீக்க வில்லை!!..

حديث 
களில் مولوغ ஆன ஹதீஸ்கள் என சுட்டிக்காட்டப்பட்டும் உள்ளன அதையும் நீக்க வில்லை!!..

இதையெல்லாம் அதிலிருந்து எடுத்துவிடும் படி சொல்லப்படவில்லை. ஆனால் இந்த பத்வாவை நீக்க சொல்லது தான் பரேலவிகளின் காழ்புணச்சியை வெளிப்படுத்துகிறது.

பரேலவிகளின் வாதம்:

இன்னும் தேவ்பந்திகள் தங்கள் புத்தகங்களில் இப்னு தைமியாவை "ஷைகுல் இஸ்லாம்" என்றும் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

நமது பதில் :

 الحافظ ابن حجر العسقلاني
(ரஹ்)
அவர்களும் கூட ابن تيمية அவர்களை شيخ الاسلام என்றே புகழ்ந்துள்ளார்களே!!

مسألة الزيارة والطلاق
என்ற வாசகத்தை படித்து விட்டு علامة ابن حجز (ரஹ்) அவர்கள் ابن تيمية வை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பரேலவிகளே உங்களை பொருத்த மட்டில் இப்படி சொன்ன இப்னு ஹஜர் அல் அஸ்கலனி (ரஹ்) அவர்கள் வழிகேடரா??

இன்னும் ...

இமாம் அல்அலுஸீ (ரஹ்) அவர்கள் தனது روح المعاني  ல் இப்னு தய்மியாவை புகந்து எழுதியுள்ளார்கள்.








இமாம் ஸாமி (ரஹ்) அவர்கள் தனது "பதாவா ஸாமி" ல் இப்னு தய்மியாவை புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.



எங்கே பரேலவிகள் இமாம் அல்அலுஸீ (ரஹ்) ,இமாம் ஸாமி (ரஹ்), அவர்களுக்கு எதிராக கொடிப் புடிக்க தயாரா??

இதெல்லாம் பரேலவிகளின் காழ்புணர்ச்சியே தவிர வேறு இல்லை!

அல்லாஹூ அஃலம்.

இதனின் முதலாம் பகுதியை காண இங்கு கிளிக் :

தேவ்பந்த் ஆலிம்கள் வஹாபிகளா? 1

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live