10 Sept 2016

அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் தப்லீக் ஜமாத் பத்வா.

வேலூர் மத்ரஸா அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பத்வா: 

 அஸ்ஸலாமு அலைகும் வரஹ்..!!

 தப்லீக் ஜமாஅத் எப்படிப்பட்டது இந்த ஜமாஅத்தில் பங்கு கொள்வது எப்படி தீனுடைய ஆலிம்கள் இது சம்பந்தமாக என்ன கூறுகிறார்கள் தயை கூர்ந்து விடை அளிப்பீராக!

பதில் :

நேர்மைக்கு தவ்பீக் அளிப்பவன் அவனே! தப்லீக் வேளையில் பங்கு பெறக்கூடியவர்களுக்கு வழிகாட்டும் நூலும்,கலிமா,தொழுகை, இல்ம்,திக்ர்,இக்ராம் முஸ்லிம் இவைகளை கற்பதற்கென நேரத்தை ஒதுக்குதல் இவைகளைப் பற்றி இவற்றை விவரிக்கும் நூலாகிய ச்சே பாத்தே தப்லீகின் ஆறுதிட்டங்கள் என்ற நூலை படித்துப் பார்த்த பொழுது குறிப்பாக நேரத்தை ஒதுக்கல் என்பதை படித்தறிந்த போது குழப்பமும் மறதியும் நிறைந்த இக்கால சூழ்நிலையில் குப்ரு ஷிர்க் மதம் துறத்தல் மலிந்த வேளையில் மேற்கூறப்பட்ட ஜமாஅத்தின் வேலைத்திட்டம் காலத்திற்கு மிகப்பொருத்தமானது இருக்கிறது.இந்த ஜமாஅத்தில் பிரயாணம் செய்யக் கூடியவர்கள் குடும்பம் உடையவர்களாக இருந்தால் பிரயாணத்திலிருந்து திரும்பி வரும் வரை குடும்பத்தினருக்குரிய செலவு கொடுத்து செல்வதும் மக்களிடம் கடினம் காட்டல் நிர்பந்தித்தல் கேவப்படுத்தும் முறையில் நடந்து கொள்ளுதல் இவைகள் ஏற்படாமல் பாதுகாப்பதும் பொதுவாக முஸ்லிம்களுடன் கண்ணியத்தோடு நடந்து கொள்வது குறிப்பாக ஆலிம்களோடு சங்கையோடு நடந்து கொள்வது நிபந்தனைகளாகும்.இப்படித்தான் தப்லீகின் பொறுப்பாளரான அறிஞர்கள் இவ்வேலையின் அடிப்படை உசூலில் கூறியுள்ளார்கள்.இதன்படி தப்லீக் வேலையில் ஈடுபட்டால் அது மறுக்கப்பட்டதாக ஆகாது.



இந்த தப்லீக் சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்த ஜமாஅத்தேயாகும்.இவர்களது நோக்கம் தமது ஊரில் இருந்து கொண்டு செம்மை பெறமுடியாத அமல் செய்ய இயலாதவர்கள் தமது அச்சூழ்நிலைகளை விட்டு சில நாட்களுக்கு அமீருக்கு கட்டுப்பட்டு பிரயாணம் செய்து தப்லீக் திட்ட கிதாபுகளை தங்களுக்கிடையே படித்து கேட்டு வந்தால் சீர்பட ஆரம்பிப்பார்கள்.

இன்னும் சிறிய சூரத்துக்கள் அத்தஹிய்யாத் ஸலவாத்து ருகூஃ ஸுஜுது தஸ்பீஹிகள் குனூத் முதலியவைகளை ஞாபகம் செய்து தொழுகையாளிகளாக ஆகி ஐந்து நேரத்தொழுகைகளை விடாமல் பேணித்தொழுபவர்களாகவும் ரமலான் நோன்பு நோற்பவர்களாகவும் பணவசதியுடையர்களாக இருந்தால் ஹஜ்ஜும் ஜகாத்தும் நிறைவேற்றுபவர்களாகவும் ஆகிவிடுவதுடன் இஸ்லாமிய சின்னமான தாடி வைத்தலையும் ஏற்றுச்செயல்படுபவர்களாக தாங்கள் முஸ்லிம்கள் என்று எடுத்துக்காண்பிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.இதை நாம் கண்கூடாக தப்லீக் இஜ்திமாக்களிலும் ஆண்டு கூட்டங்களிலும் கண்டுள்ளோம். தப்லீக் உசூலின் பொறுப்பாளிகளான பெரியார்கள் அவரவர்களுடைய அந்தஸ்த்தை முன்வைத்துக் கூறுகிறார்கள்.அதாவது குறைந்த வசதியும் சக்தியும் உள்ளவர்கள் தமது ஜில்லாவில் உள்ள சுற்றுப்புற கிராமங்களிலும் நடுத்தர வசதியும் சக்தியுமுடையவர்கள் மாகாணத்தில் உள்ள சுற்றுப்புறங்களிலும் நிறைந்த வசதியுடையவர்கள் வெளிநாடுகளிலும் பிரயாணம் செய்யுள் வேண்டும்.குஃப்ரு ஷிர்க்கு நாத்திகம் கிருத்துவம் மிகைத்தால் அகத்தாலும் புறத்தாலும் உண்மையான முஸ்லிம்களாக இல்லாமல் வாழும் முஸ்லிம்களை செயல்வடிவில் முன்மாதிரியாக ஆக்கி நற்செயல்களில் பால் இழுத்துகொண்டு வருவதற்காக ஆக தற்காலத்தில் நிகழும் குழப்பமான சூழ்நிலையில் இந்த வேலையும் அமலை சீர்படுத்த செயல் நுட்பாகும்.வல்லாஹு யஹ்தீ இலல் பாக்கியாத் ஸாலிஹாத். தப்லீக் ஜமாஅத்தின் பொறுப்பாளரான மெளலானா முஹம்மது இல்யாஸ் சாஹிப் மெளலானா ஷைகுல் ஹதீஸ் ஜக்கரிய்யா சாஹிப் மெளலானா முஹம்மது இல்யாஸ் சாஹிபின் புதல்வரும் மெளலானா ஷைகுல் ஹதீஸ் முஹம்மது ஜக்கரிய்யா சாஹிபின் மருமகனுமான மெளலானா முஹம்மது யூசுப் சாஹிப் ஆகிய இவர்களனைவரும் அஹ்லே சுன்னத்து வல்ஜமாஅத் அமைப்பைச் சார்ந்தவர்கள்.ஒப்புக்கொள்ளப்பட்ட நான்கு மத்ஹபுகளில் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்கள்.மெளலானா ஜக்கரிய்யா சாஹிப் அவர்கள் முஅத்தா இமாம் மாலிக் ரஹ் வின் விரிவுரையாக அவ்ஜஸுல் மஸாலிக் என்ற நூலை எழுதியுள்ளார்கள்.அதில் ஹனபி ஷாபியீ மத்ஹபுகளின் தலீல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.மேலும் அந்நூல் ஹனபி மத்ஹபின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

மெளலானா முஹம்மது யூசுப் ஸாஹிப் அவர்கள் மஆனியுல் ஆதார் என்ற நூலுக்கு அமானியுல் அஹ்பார் என்ற விரிவுரை நூலை எழுதியுள்ளார்கள் இதுவும் மத்ஹபின் அடிப்படையிலேயே உள்ளது அஹ்லே சுன்னத்தை சாராத சிலர் இந்த ஜமாஅத்தில் சேர்ந்து குழப்பம் உண்டாக்கினால் அதன் காரணமாக அஹ்லே அஹ்லே சுன்னத்து சேர்ந்த அனைவரும் அதில் சேராதவர்களாக ஆகிவிடமாட்டார்கள்.அஹ்லே சுன்னத் வல்ஜமாஅத் என்போர் நான்கு மத்ஹபுகளான ஹனஃபி ஷாபியீ மாலிகி ஹம்பலியை சார்ந்தவராவார்.இந்த ஜமாஅத்தைச் சார்ந்த ஆலிம்கள் குழப்பங்களை நீக்கி சீர்திருத்த விரைந்து செல்வதும் அமலே ஸாலிஹை செம்மைப்படுத்த பொதுவாக முஸ்லிம்களின் கவனத்தை திருப்புவது அவசியமாகும்.அமலை செம்மைப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த ஜமாஅத்திற்கு வழிகாட்டுவதும் நடத்திச் செல்வதும் ஆலிம்களுக்கு அவசியமாகும்.பிக்ஹ், ஹதீஸ் கிதாபுகளிலிருந்து இதுவே விளங்குகிறது.

நேர்மையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.26-09-1971 ஒப்பம் அப்துல் வஹ்ஹாப் அபா அன்ஹு முஃப்தியே மதரஸா பதில் சரியானதே ஒப்பம் ஷைகுல் ஹதீஸ் ஷைகு ஹஸன் அஃபல்லாஹு அன்ஹு முத்திரை மத்ரஸதுல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் வேலூர் இந்த பத்வா ஹிஜ்ரி 1392 ரபீஉல் அவ்வல் கிபி 1972 ல் நெல்லையிலிருந்து வெளிவரும் ஜமாஅத்துல் உலமா மாத இதழிலும் 1972 ஏப்ரல் ரஹ்மத் மாத இதழிலும் வெளிவந்துள்ளது.

இதே பத்வாவை நீடுர் மிஸ்பாஹீல் ஹுதா மதரஸாவிற்கும் சங்கரன் பந்தல் பைஜுல் உலூம் மத்ரஸாவிற்கும் அனுப்பப்பட்டது.அச்சமயம் மிஸ்பாஹுல் ஹுதாவின் நாஜிராக இருந்த மெளலானா எம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹள்ரத் அவர்களும் பைஜுல் உலூம் மதரஸாவின் தலைமை ஆசிரியர் மெளலானா காஜா முயீனுத்தீன் ஹள்ரத் அவர்களும் சரிகண்டு ஒப்பம் வைத்துள்ளார்கள்.என்பது குறிப்பிடதக்கது.

(பார்க்க: ரஹ்மத் மாத இதழ் 1972,ஏப்ரல் பக்கம் 2 &4)(நன்றி மனாருல் ஹுதா)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live