3 Feb 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் :10

பரேல்விகளின் குற்றச்சாட்டு :

காகம் உண்பது ஆன்மீகரீதியாக நன்மைபயக்கும் செயலாகும்.
[பதாவா ரஷீதியா பாகம் 2, பக்கம் 1301 ]

இந்த குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் பரலேவிகள் தங்களின் அறியாமையை பகிரங்கப்படுத்துகின்றனர்.தேவ்பந்திகள் காக்கை பிரியாணி ஹலால் என்பதாக கேலியும் விமர்சனமும் செய்கின்றனர்.

இதற்கு தெளிவான பதிலை இனி பார்ப்போம்!

காகம் பலவகைகளில் உள்ளது.

1) ஒரு வகை செத்தவைகள் அசுத்தங்களை மட்டும் சாப்பிடும் இது ஹராமாகும்.

2) இரண்டாவது வகை தானியங்களை மட்டும் சாப்பிடும் இது ஹலாலாகும்.

3) மூன்றாவது வகை தானியம்,அசுத்தங்கள் இரண்டையும் சேர்த்து உண்பவை .
இதற்கு عقعق என்று அரபியிலும் உர்துவில் کوا என்றும் பார்ஸியில் زاغ என்றும் சொல்லப்படும்.

மாலிக் மத்ஹபில் எல்லா வகையான காகமும் ஹலால்.


 المالکیة قالوا يحل اكل الغراب بجميع انواعه (القفه على المذاهب الاربعة)

மாலிக் மத்ஹப் அறிஞர்கள் கூறுகிறார்கள்:
காகத்தின் அனைத்து வகைகளும் ஹலாலாகும்.

இதற்கு எதிராக பரலேவிகள் வாயை திறக்கவில்லை.தேவ்பந்த் உலமாக்களை மட்டும் விமர்சிப்பதன் காரணம் காழ்ப்புணர்ச்சிதான். தேவ்பந்த் உலமாக்கள் காகம் சாப்பிடுவது ஹலால் என்பதனை ஹனபி பிக்ஹின் ஒளியில்    தீர்ப்பளித்தால் பரலேவிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். பரலேவிகளுக்கு பதாவா ரஷீதிய்யாவில் இந்த தீர்ப்பானது கண்ணிற்கு தென்படுகிறது.ஆனால் அவர்களைச் சார்ந்த ரிளாகானின் தீர்ப்பானது கண்ணிற்கு தென்படவில்லையா?

ரிளாகானிடத்தில் வெளவால் ஹலாலாகும்.வெளவால் சிறியதோ,பெரியதோ அதற்கு  (باگل) என்று சொல்லப்படுகிறது.இது ஹலாலா? அல்லது ஹராமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.சில அறிஞர்கள் இதனை சாப்பிடுவது ஹராம் என்கின்றனர்.இதன் காரணம் கோரைப்பற்கள் கொண்டது.ஆனால் ஹனபி மத்ஹபிற்கு ஏற்ற கருத்து ஹலாலாகும்.பொதுவாக கோரைப் பற்கள் இருப்பதால் ஹராமல்ல.மாறாக அந்தப் பற்களின் மூலம் வேட்டையாடியானல்தான் ஹராமாகும். வெளிப்படையில் பார்க்கும் போது வெளவால் கீறிகிழித்து வேட்டையாடுவதில்லை. இதனால் துர்முஹ்தாரின் ஹராம் என்று சொல்லானது பலகீனமானது.(பதாவா ரிஜ்விய்யா)

காக்கை பிரியாணி என்பதாக கேலி செய்யும் பரலேவிகள் வெளவால் பிரியாணி சாப்பிட ஆசையா? காகம் ஹலால் என்பதாக சாப்பிட்டு காட்டுங்கள் என்பதாக சவாடல் விடுகிறீர்களே! வெளவால்  ஹலால் என்பதால் மூன்றாம் நாள்,ஏழாம் நாள்,பத்தாம் நாள்,நாற்பதாம் நாள் பாத்திஹாவிற்கு வெளவால் பிரியாணி தயார் செய்வீர்களா?

ஆந்தை ஹலாலா சிலர் கூறுகிறார்கள்:

பனங்காடை சாப்பிடக்கூடாது.ஆந்தை சாப்பிடலாம். ஷாபியி மத்ஹபின் ஒரு சொல்லின் படி ஹலாலாகும்.(பதாவா ரிஜ்விய்யா)

ரிளாகான் பரலேவி ஆந்தை சாப்பிடுவது ஹலால் என்ற கருத்தை பலகீனமானது என்பதாக கூறியிருந்தாலும் இந்த கருத்திற்கு எதிராக பரலேவிகள் கொடிபிடிக்க தயாரா?

இனி ஹனபி மத்ஹபின் ஒளியில் இந்த தீர்ப்பை அலசுவோம்!

ஹள்ரத் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) கொடுத்த தீர்ப்பானது ஹனபி மத்ஹபிற்கு முழுக்க ஏற்புடையது.

இமாம் முஹம்மது இப்னு முஹம்மது (ரஹ்)அவர்களின் பிரபல்யமான  "மப்ஸுத்" நூலில் காகத்தின் வகைகளை அதனின் சட்டங்களை ஆய்வு செய்தவாறு கூறியுள்ளார்

فان كان الغراب بحيث يخلط فياكل الجيف تارة و الحب تارة فقد روي عن ابى يوسف انه يكره لانه اجتمع فيه الموجب للحل و الموجب للحرمة و عن ابي حنيفة انه لا باس باكله و هو الصحيح على قياس الدجاجة فانه لا باس باكلها
காகம் சில தடவை அசுத்தத்தை சாப்பிடுகிறது.சில தடவை தானியத்தை சாப்பிடுகிறது.இமாம் அபியூசுப் (ரஹ்) அறிவிப்பின் படி மக்ரூஹாகும்.ஏனெனில் ஹலால்,ஹராம் இரண்டும் இணைந்துள்ளது. அபூஹனீபா (ரஹ்) அவர்களிடத்தில் இதனை உண்பது  ஹலாலாகும்.இதுதான் சரியான கருத்தாகும்.கோழியை முன்வைத்து கியாஸ் எடுத்து ஹலால் என்பதாக தீர்ப்பளித்துள்ளார்கள். ஏனெனில் கோழியை உண்பதும் பிரச்சனையில்லை.

பரலேவிகளே பதிலளியுங்கள்! இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்  உங்களுக்கு முன்னோடி என்பதாக ஏற்றுள்ளீர்கள். வாக்கியங்களை மீண்டும் மீண்டும் படியுங்கள்!

இமாம் சர்கஸி அவர்கள்,இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடமிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள். அதனை சரியானது என உறுதிப்படுத்தியுள்ளார்.

இமாம் அபூபக்கர் காஸானி ஹனபி (ரஹ்) காகம் ஹலால் ஹராம் சம்பந்தமான ஆய்வு:

 فحصل من قول ابي حنيفة ان ما يخلط من الطيور لا يكره اكله كالدجاج و قال ابويوسف يكره لان غالب اكله الجيف

இமாம் அபூஹனீபா (ரஹ்) சொல்லின் மூலம் அறிய முடிகிறது.ஹலால்,ஹராம் இரண்டையும் உண்ணுகிற பறவைகளானது மக்ரூஹ் இல்லை உதாரணமாக கோழி இமாம் அபூயூசுப் ரஹ் மக்ரூஹ் ஏனெனில் அதிகமான உணவானது செத்தவைதான்.

அடுத்து
عناية على هامش فتح القدير اما الغراب الابقع و الاسود فهو انواع ثلاثة نوع يلتقط الحب ولا ياكل الجيف و ليس بمكروه و نوع منه لا ياكل الا الجيف الذي سماه المصنف الابقع الذي ياكل الجيف و انه مكروه و نوع يخلط ياكل الحب مرة و الجيف اخرى ولم يذكره فى الكتاب و هو غير مكروه عند ابي حنيفة مكروه عند ابي يوسف
அப்கஃ என்று சொல்லப்படும் கருப்பு நிற காகம் மூன்று விதமாக உள்ளது.

1)தானியத்தை மட்டும் உண்பது செத்தவைகளை உண்பதில்லை இது மக்ரூஹ் அல்ல

2)செத்தவைகளை மட்டும் உண்பவை இதனை முஸன்னிஃப் அவர்கள் அப்கஃ என்பதாக கூறுகிறார்.இது மக்ரூஹாகும்.

3) இரண்டை வகையான உணவையும் சாப்பிடும் இதனைப் பற்றி நூலில் குறிப்பிடவில்லை.

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடம் மக்ரூஹ் இல்லை.இமாம் அபூயூசுப் (ரஹ்) மக்ரூஹ் என்கின்றார்கள்.பிறகு கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை தெளிவுப்படுத்துகிறார்கள்.
  اصل ذلك ان ما يؤكل الجيف فلحمه  
இதற்கான அடிப்படை என்னவெனில் செத்தவைகளை சாப்பிடுவதால் அதனின் இறைச்சியும் சதையும் ஹராமிலிருந்து வளரக்கூடியது.இதனால் தானியத்தை மட்டும் சாப்பிடுபவையில் அசுத்தம் பெறப்படவில்லை என்பதால் ஹலாலாகும்.இரண்டையும் சாப்பிடுபவை இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களிடம் ஹலால் இதுதான் சரியான சொல்லாகும்.ஏனெனில் கோழியானது இரண்டையும் சாப்பிடுகிற போதும் நபி (ஸல்) அவர்கள் அதனை உண்கொண்டார்கள்.

துர்முஹ்தார் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்கள்:

حل غراب الزرع الذي ياكل الحب والارنب والعقعق هو غراب بجمع بين اكل جيف و حب و الاصح حله در مختار مع فتاوي شامي)
தானியத்தை சாப்பிடும் காகமானது ஹலாலாகும். "அக்அக்" என்ற காகம் செத்தவைகளையும் தானியத்தையும் சாப்பிடும் சரியான சொல்லின் படி ஹலாலாகும்.

பிக்ஹ் ஹனஃபி பிரபல்யமான நூலான பதாவா ஆலம்கிரி .

الغراب الابقع مستخبث طبعا
"அப்கஃ" என்ற காகம் இயற்கையிலே அசுத்தமானது.அது செத்தவைகளை மட்டும் சாப்பிடும்.
 فاما الغراب الزرعى الذي يلتقط الحب مباح طيب
தானியத்தை மட்டும் உண்ணும் காகமானது அனுமதிக்கப்பட்டுள்ளது. தூய்மையானது.

وان كان الغراب بحيث يخلط فياكل الجيف تارة و الحب اخري فقد روي عن ابي يوسف رحمه الله انه عليه السلام انه يكره و عن ابي حنيفة انه لا باس باكله و هو الصحيح على قياس الدجاجة
காகம் தானியம்,செத்தவைகளை சாப்பிடுபவையாக இருந்தால் அபூயூசுப் (ரஹ்) அவர்களிடத்தில் மக்ரூஹ் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபூஹனீபா (ரஹ்) அவர்கள் அதனை உண்பது தவறில்லை.இதுதான் சரியான கருத்தாகும்.கோழியை முன்வைத்து கியாஸ் எடுத்துள்ளார்கள். இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மத்ஹபில் இந்த விஷயத்தில் இரவு,பகலைப் போன்று தெளிவாக நிரூபணமாகிவிட்டது.

மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்களின் தீர்ப்பானது முற்றிலும் இமாமின் தீர்ப்பிற்கு ஏற்ப உள்ளது.மஸாயில்களில் இமாமின் தீர்ப்பிற்குதான் முதலில் முக்கியத்துவம் தரவேண்டும்.இதனை ரிளாகான் பரலேவியும் ஏற்கிறார்  பிக்ஹ் ஹனபியிலே சிலர் ஸாஹிபைன் இமாம் அபியூசுப் (ரஹ்) இமாம் முஹம்மது (ரஹ்) சொல்லின் மீதுதான் தீர்ப்பு கொடுப்பார்கள்.ஆனால் சரியானது பேணுதலானது முந்தியது இமாம் அபூஹனீபா (ரஹ்) சொல்தான்.அடியேனின் நிலைப்பாடு எந்த ஒரு மஸ்அலாவிலும் குறிப்பிடத்தக்க வகையில் நிர்பந்தம் இல்லையெனில் இமாமின் சொல்லை விட்டு மாறக்கூடாது.இதனை பற்றிய தெளிவான விளக்கம் என்னுடைய ரிஸாலாவான

اجلى الاعلام بان فتوى على القول الامام اذا قال الامام فصدقوه فان القول ما قال الامام

 இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கூறியதை உண்மைப்படுத்துங்கள். சொல் என்றால் இமாமின் சொல்லாகும்.
 ہم حنفی ہیں نہ کہ یوسفی  یا شیبانی
நாம் ஹனபிகள் யூசுபிகளோ அல்லது ஷைபானிகளோ அல்ல...

அடுத்து மேற்சொன்ன ஆதாரங்களின் மூலம் காகம் சாப்பிடுவது கூடும் என்பதை விளங்க முடிகிறது.ஆனால் நன்மை கிடைக்கும் என்பதற்கு என்ன ஆதாரம்?

பரலேவிகள் ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்களிடத்தில் கேட்கப்பட்ட கேள்வியை முழுமையாக சொல்லாமல் இருட்டடிப்பை செய்து விடுகின்றனர்.

எனவே  கேட்கப்பட்ட கேள்வியை முழுமையாக கூறினால் இந்த குற்றச்சாட்டிற்குரிய பதிலை நாம் அறிந்து கொள்ளலாம்!

سوال: جس جگہ زاغ معروفہ کواکثر حرام جانتےہوں اور کھانے والے کو برا کہتے ہوں تو ایسی جگہ اس کو کوا کھانے والے کو کچھ ثواب ہوگا یا نہ ثواب ہوگا نہ عذاب

கேள்வி:
எந்த இடத்தில் அறியப்பட்டுள்ள காகம் (زاغ معروفہ) அதிகமானவர்கள் அதனை ஹராம் என்பதாக எண்ணியுள்ளனர்.அதனை உண்பவர்களை விமர்சிக்கின்றனர் எனில் அங்கு அந்த காகத்தை உண்பவர்களுக்கு நன்மை கிடைக்குமா? கிடைக்காதா? தண்டனையுமில்லையா?

 جواب: ثواب ہوگا

பதில்: நன்மை கிடைக்கும். அசலில் காகம் சாப்பிடுவது அனுமதிக்கப்பட்ட காரியாகும்.ஆனால் இங்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தை மார்க்கத்தை மக்கள்  ஹராம் என்பதாக எண்ணுகின்றனர்.அந்த இடத்தில் ஹலால் என்பதை நிரூபிக்க செயல்படுத்தி காட்டுகிறார்.எனவே மார்க்கத்தின் நிலையை நடைமுறையை அமல்செய்ததால் அதற்கு நன்மை கிடைக்கிறதே தவிர மாறாக காகம் சாப்பிடுவதற்கு அல்ல. எனவே கேட்கப்பட்ட கேள்விக்கு ஹள்ரத் ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்கள் சரியான பதிலைதான் அளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live