31 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 9

செம்மான் சம்பந்தமான மறுப்பு;

 முதலில் தக்வியதுல் ஈமானில் உள்ள வாசகம்

 یقین جان لینا چاہے کے ہر مخلوق بڑا ہو چھوٹا اللہ کی شان کے اگر چمار سے بھی ذلیل )تقوية الايمان )

எல்லாப் படைப்புகளும்,பெரியதோ, சிறியதோ,அல்லாஹ்வின் முன்னால் செம்மானை விட அற்பமாகும்.

பரலேவிகளின் வாதம்:

படைப்பு என்பதில் நபிமார்களும் இறைநேசர்களும் அடங்குவார்கள் இதே போன்று குலாம் நஸுருத்தீன் ஸய்யாலவி பரலேவி கூறுகிறார் :

இந்த பொதுவான வார்த்தையின் மூலம் அனைத்து வானவர்களும் அடங்குவார்கள் ஏனெனில் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புகளே;அதைப்பற்றிய தக்க பதிலைப் பார்ப்போம்!

ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி ( ரஹ் )அவர்கள் படைப்புகள் என்று பொதுவாக சொன்னதை திரித்து அபாண்டமாக பழிசுமத்துகிறார்கள் பொதுவான அர்த்தத்தில் உள்ளதை வெளிப்படையான ஆதாரமின்றி குறிப்பாக்குவது அறியாமையாகும்.

இதற்கு பரேலவியர்களின் வாதத்தின் மூலமே மறுப்பு:

பரேலவியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபல்யமான அறிஞர் அஷ்ரப் ஸய்யாலு கூறுகிறார்:

 ایک ہے عمومی طور پر مخلوق کو ذلیل کہنا اور ایک خاص طور کسی شخصیت کا نام لے کر اسے ذلیل کہنا تو عموم اور تخصیص کی اندر فرق واضح ہے

கருத்து: பொதுவாக சொல்வதற்கும், குறிப்பிட்டு சொல்வதற்கும் மத்தியில் மிகப்பெரிய வேறுபாடு வித்தியாசம் உள்ளது. ஆக அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையின் மூலம் இஸ்மாயில் ஷஹீத்( ரஹ்) அவர்கள் பொதுவாக சொன்னதை குறிப்பாக்குவது என்ன நியாயம்?

மறுப்பு :ரிளாகான் பரேலவி ஒரு வசனத்திற்கு தர்ஜுமா செய்கிறார்

بیشک تو اور جو کچھ اللہ کے سوا تم پوجتے ہو سب جہنم کے ایندھن ہو )کنز الایمان)



கருத்து :நிச்சயமாக அல்லாஹ்வை தவிர நீங்கள் வணங்குபவை அனைத்தும் நரகத்தின் எரிபொருள் அவர்கள் வணங்கிய அனைத்தும் என்கிற பொதுவான கருத்தை எடுத்தால் ஈஸா அலை மர்யம் அலை அடங்குவார்கள் ஆக இஸ்மாயில் தெஹ்லவி (ரஹ் ) அவர்கள் மீது குற்றஞ்சுமத்தியவர்கள் ரிளா கான் மீது குற்றஞ்சுமத்த தயாரா?

ரிளாகான் பரேலவி மற்றோர் இடத்தில் கூறுகிறார்:
 لوک اللہ کے سوا جن جن کو پوجتے ہو وہ سب جھوٹے ہیں )ملفوظات حصہ اول ص 28)

கருத்து: அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்குபவை அனைத்தும் பொய்யானவைகளாகும். அவர்கள் வணங்கும் அனைத்தும் பொய்யானவை என்பதில் மர்யம் (அலை )ஈஸா (அலை) அவர்கள் இருவரும் அடங்குவார்களா? அல்லாஹ் பாதுகாப்பானாக! இதனை முன்வைத்து ரிளாகானிற்கு எதிராக களம் இறங்க தயாரா?

ரிளாகான் வேறு இடத்தில் இவ்வாறு கூறுகிறார்

واہ کیا مرتبہ غوث بالا ہے تیرا اونچے اونچوں کےسروں سے قدم اعلی تیرا

கருத்து: கவுஸ் அவர்களே! உங்களின் அந்தஸ்து மிகவும் ஆச்சரியமானது! உயர்ந்த தலைகளை விட உங்களின் பாதம் உயர்வானது! உயர்ந்த என்ற பொதுவான வார்த்தையில் நபிமார்களும் அடங்குவார்கள் என கூறி ரிளாகான் பரேலவி காபிர் என கூறி பத்வா கொடுப்பதற்கு அவரின் ஆதரவாளர்கள் தயாரா?

ரிளாகான் பரேலவி கூறுகிறார் :

قدمي هذا علي رقبة كل ولي الله

கருத்து: என்னுடைய இந்த பாதம் ஒவ்வொரு வலியின் கழுத்தின் மீது உள்ளது வலி என்ற பொதுவான வார்த்தையில் அனைத்து நபிமார்களும் ஸஹாபாக்களும் இறைநேசர்களும் அடங்குவார்கள் என்பதை ரிளாகான் பரேலவி ஓர் இடத்தில் கூறுகிறார்

 اولیاء کا اطلاق ہر محبوب خدا تو انبیاء بلکہ ملائکہ کو بھی شامل )فتاوی رضویہ 1/18)

கருத்து :வலிமார்கள் என்பதில் அல்லாஹ்வின் பிரியமானவர்கள் அதில் நபிமார்கள் மலக்குமார்கள் உள்ளடங்குவார்கள் இதனை வைத்து வாதிட்டால் ரிளா கானின் பாதம்.....

ஷாஹ் நிஜாமுத்தீன் ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள் மனிதர்கள் அனைவரும் ஒட்டகப் புழுக்கை போன்று ஒரு மனிதனிடம் அந்தஸ்தில் ஆகாதவரை,அவனது ஈமான் பூரணமடையாது! என்பதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு பரலேவிகள் பதிலளிக்க தாயார்? அல்லாஹ் பாதுகாப்பானாக!





0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live