5 Feb 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 11

பரலேவிகள் ஹகீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு:

"லாயிலாஹ இல்லல்லாஹ் அஸ்ரப் அலி ரஸூலுல்லாஹ்"
அவர்களின் முரீத் அன்னாரின் பெயரை சொல்லி கலிமாவும் தரூத் படித்தும் கூட தானவி (ரஹ்) அவர்கள் அவரை எச்சரிக்கவில்லை. கண்டிக்கவில்லை.மாறாக சுன்னத்தை பின்பற்றுபவர் என்பதாக சாட்சியளித்துள்ளார்கள்!

தானவி அவர்கள் தனது
 1)நுபுவ்வத்தை வாதிடுகிறார் (அல்லாஹ் பாதுகாப்பானாக)
2) கனவை கண்டவரை எச்சரிக்கவில்லை கண்டிக்கவில்லை மேலும் கனவு கண்டவர் தனது ஈமானையும் நிகாஹ்வையும் புதுப்பிக்க தகுதியானவர். இறைநிராகரிப்பை பொருந்திக்கொள்வதும் இறைநிராகரிப்பாகும். இதனால் தானவி காபிராகுவார் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
3)இப்படிப்பட்ட ஷைத்தானிய ஊசலாட்டங்களுக்கு புகழத்தக்க விளக்கத்தை ஏன் கூறினார்? கனவிற்கு விளக்கம் ஏன் கூறினார்? பரலேவிய அறிஞர் உமர்அலி வரம்பு மீறி கூறுகிறார்.

 தேவ்பந்திகளின் கலிமாவும் முஸ்லிம்களின் கலிமாவைவிட்டு தனித்து உள்ளது.

 பதில்: முதலில் இது சம்பந்தமான நிகழ்வை பார்ப்போம்!

தானவி (ரஹ்) அவர்களிடம் இதுவரை பைஅத் செய்து கொள்ளாத ஒருவர்.அவர் கனவு காண்கிறார்.அஷ்ரப் அலி தானவி பெயரைக் கலிமாவில் ஓதுவதாக. அவர் தனது கடிதத்தில் தானவி (ரஹ்) அவர்களுக்கு எழுதுகிறார்;

இப்படி ஓதுவது சரியல்ல என்பது எனக்குக் கனவிலும் புரிகிறது.ஆனால் நான் விரும்பாமலேயே எனது நாவு இதையே இரண்டு,மூன்று முறை கூறுகிறது.அப்போது தங்களை என் முன் காண்கிறேன்.இதன் பிறகு விழித்துக்கொண்டேன். கனவிலே நடந்த தவறு பற்றி நினைவு வந்தவுடன் நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.இந்த நினைவை மனதை விட்டு போக்க வேண்டுமென்று, பிறகு திருப்பிப்படுத்த நாயகத்தின் மீது 'ஸலவாத்' ஓதி, தவறுக்குப் பரிகாரம் காண முயற்சிக்கிறேன்.ஆனால் அப்பொழுதும் 'அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா வமவ்லானா அஷ்ரப் அலி' என்றே நாவில் வருகிறது.நான் தூங்கிவிடவில்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.ஆனால் நான் சுய விருப்பத்தோடு இல்லை; கட்டுண்டவனாக இருக்கிறேன்; நாவும் எனது இஷ்டத்தில் இல்லை! மறுநாள் அதனை எண்ணி மிகவும் அழுதேன்.)(அல்இம்தாத்

இதன் மூலம் நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.கலிமா அவர் கூறியதானது கனவில் நிகழ்ந்ததாகும்.கனவு கண்டவர் திடுக்கத்தில் உள்ளார்.கனவிலேயே தனது தவறை உணர்கிறார்.ஆனால் தன்னை அறியாமலேயே நாவானது மொழிகிறது.தூங்கி எழுந்தவுடன் தரூத் ஷரீப் தவறுதலாக ஓதுகிறார்.அதில் தனது சுயநினைவை இழந்தவராக கட்டுப்பாட்டை இழந்தவராக இது மட்டுமல்ல மாறாக தனது தவற்றை விளங்கி மிகவும் அழுகிறார்கள்

முதல் விஷயமானது: கனவைப் பொறுத்தவரை சில சமயங்களில் சில கனவுகள் வெளிப்படையில் திடுக்கம் நிறைந்ததாகவும், அபாயகரமானதாகவும் இருக்கும்.ஆனால் உண்மையில் அதனின் விளக்கம் நல்லதாக இருக்கும்.சில சமயங்களில் சில கனவுகள் வெளிப்படையில் நல்லதாக தெரியலாம்.ஆனால் அதன் விளக்கமானது கெட்டதாக அமைந்து விடலாம்.இதனால் கனவை அதனின் வெளிப்படையான நிலையுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது மிகப்பெரிய அறியாமையும், அறிவீனமாகும்.

இதற்கு உதாரணத்தைப் பார்ப்போம்!

உம்முல் பள்ல் பின்த் ஹாரிஸ் (ரளி) அவர்கள் கனவு கண்டார்கள்.நபியின் சமூகத்திற்கு வந்து சொன்னார்கள் யா ரசூலுல்லாஹ்! இன்று இரவு நான் கெட்ட கனவொன்று கண்டேன் என்றார்கள் அதற்கு நாயகம் ஸல் அவர்கள் என்ன கனவு என்பதாக கேட்டார்கள்? அதற்கு அந்தப் பெண்மணி கூறினார்கள் மிகவும் திடுக்கம் நிறைந்த கனவு மீண்டும் அண்ணலார் என்ன கனவு என்பதாக கேட்டார்கள்? அதற்கு உம்முல் பள்ல் அவர்கள் கூறினார்கள் தங்களின் உடலின் ஒரு துண்டானது துண்டிக்கப்பட்டு என் மடியில் விழுவதைப் போன்று கண்டேன்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீர் மிகவும் நல்ல கனவு கண்டுள்ளீர்கள் அதற்கு விளக்கமாவது இன்ஷா அல்லாஹ் என் ஈரக்குலைக்கு (பாத்திமா ரளி) மகன் பிறப்பான்.உன்னுடைய மடியில் விளையாடுவான்.அதன் பிறகு அண்லார் கூறியதைப் போன்றே என் மடியின் மீது ஹுஸைன் ரளி அவர்கள் விளையாடினார்கள். (மிஷ்காத்)
Scan:MUSTADRK ALAS SAHIHEEN-JILD-68-68-A.jpg
 . ( Mustadrak Al  Haakim : Jild-Page-67/68  )
Scan:MUSTADRK ALAS SAHIHEEN-JILD-68-68-B.jpg
Sahi Ibn Hibban-Jild-1-Page-355
SAHI IBN HIBBAN-JILD-1-PAGE-355.png
Mu’ajjam Ausat Tabrani-Jild-3-Page-361
MU'AJJAM KABEER AUSIT TABRANI-JILD-3-PAGE-361.png
Musnad Abu Dawood Tyalsi-Jild-1-Page-89
MUSNAD ABU DAWOOD TYALSI-JILD-1-PAGE-89.png
Musnad-E-Abi Yala Mosuli-Jild-7-Page-366
MUSNAD-E-ABI YALA-JILD-7-PAGE-366.png
Jame Us Sahi Tirmidhi-Jild-4-Page-32
JAME US SAHI TIRMIDHI-JILD-4-32.png
Sunan Al Kubra Lil Bahqi-Jild-1-Page-118
SUNA-AL-KUBRA LIL BAHQI-JILD-1-PAGE-118.jpg
Sunan Daarimi-JIld-2-Page-225
SUNAN DARIMI-JILD-2-PAGE-225.png
Sunan Abu Dawood-JIld-4-Page-363
SUNAN ABI DAWOOD-JILD-4-PAGE-363.png
Sunan Ibn Maja-474
SUNAN IBN MAJA-PAGE-474.png
Sunan Al Kubra Nisai-Jild-6-Page-488
SUNAN-AL-KUBRA NISAI-JILD-6-PAGE-488.png
Jame Us Sahi Tirmidhi-Jild-1-Page-559/560
Scan:JAME US SAHI TIRMIDHI-JILD-1-559-560.jpg
Sunan Daarimi-Jild-2-Page-216
SUNAN DARIMI-JILD-2-PAGE-216.png
Sunan Abu Dawood-Jild-3-Page-402
SUNAN ABI DAWOOD-JILD-3-PAGE-402.png
Sunan Ibn Maja-Jild-3/227
SUNAN IBN MAJA-JILD-3-PAGE-227.pngநன்றாக கவனித்துப்பாருங்கள்! எந்தளவிற்கு வெளிப்படையில் கனவானது அபாயகரமானதாக இருந்தும் கூட கனவின் உண்மை நிலையை கவனிக்கும் போது மகிழ்ச்சி நிறைந்ததாக உள்ளது.

அடுத்த மற்றொரு கனவை பார்ப்போம்!


ஒரு முறை அபூஹனீபா (ரஹ்) கனவு கண்டார்கள்.அதில் பெருமனாரின் கப்ரின் அருகில் சென்றார்கள்.பிறகு அதை தோண்டினார்கள். இதனால் திடுக்கிட்டு விழித்த இமாம் அவர்கள் தனது ஆசிரியரிடத்தில் சென்று கனவை கூறினார்கள்.அதற்கு ஆசிரியர் அவர்கள்  விளக்கமளித்தார்கள் நபியின் ஹதீஸ்களை பின்பற்றுவீர்கள் நபியின் மார்க்க கல்வியை நெஞ்சில் சுமப்பீர்கள் என்றார்கள். (ஆதாரம்:ஹைராதுல் ஹிஸான்)

Scan:TABEER-AL-RAUYYA-PAGE-13-14.jpg
Scan:ArbiAL KHERATUL HISAAN-159.png
Scan:UrduAL KHERATUL HISAAN-169.png

இந்த கனவை கண்டதால் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் மீது பரலேவிகள் என்ன பத்வா அளிப்பார்கள்? நான் சத்தியமிட்டு சொல்கிறேன் இங்கு நாம் இமாம் அஃளமிற்கு பதிலாக தேவ்பந்த் அறிஞர் பெயரை கூறியிருந்தால் தேவ்பந்திகள் நபியின் விரோதத்தின் காரணமாக நபி ஸல் அவர்களின் கப்ரை தோண்டினார்கள் என்பதாக பரலேவிகள் பத்வா அளித்திருப்பார்கள். ஆக இந்த இரு கனவையும் கூறுவதானது வெளிப்படையில் கனவானது பயங்கரமாக இருக்கலாம்.அதனால் அதனின் விளக்கமும் அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.எனவே எந்த கனவை முரீது கண்டாரோ வெளிப்படையில் அச்சுறுத்தலாக இருப்பதால் அதனின் விளக்கமும் அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.    அடுத்து இந்நிகழ்வானது கனவில் நிகழ்ந்தது.கனவானது தூக்கத்தில் பார்ப்பதாகும்.தூங்கும் போது வெளிப்படும் வார்த்தைகளை ஷரீஅத் கவனிக்காது.ஒரு வாதத்திற்கு கனவில் குப்ரான வார்த்தை வெளிப்பட்டாலும் குப்ராகாது.

ஆயிஷா (ரளி) அறிவிப்பு:
மூன்று பேரை விட்டும் எழுது கோல் உயர்த்தப்பட்டுவிட்டது (நன்மை தீமை எழுதப்படாது) தூங்குபவர் விழிக்கும் வரை, பைத்தியம் தெளியும் வரை, சிறுவர் பருவம் எய்தும் வரையும் (நூல்:அல்ஜாமிஉஸ்ஸஙீர்)

 மற்றொரு அறிவிப்பில் தூக்கத்தில் (நிகழும்) தவறுகளுக்கு குற்றமில்லை விழிப்பு நிலையிலே (நிகழும்) தவறுகள் குற்றமாகும்.இது போன்ற ஹதீஸ்களின் மூலம் மார்க்க மேதைகள், தூங்கும் போது ஏதாவது நிகழ்ந்தால் அது கவனிக்கப்படாது என சட்டம் எடுத்தனர்.

 முஹம்மது அமீன் இப்னு உமர் ஷாமி குறிப்பிட்டுள்ளார் இதனால்தான் தூங்குபவரின் பேச்சின் மூலம் உண்மை,பொய்,செய்தி, வாக்கியம் போன்றவை நிகழ்ந்தால் கவனிக்கப்படாது.தஹ்ரீருல் உசூலில்  வருகிறது.

தூங்குபவரின் பேச்சின் மூலம் உதாரணமாக முஸ்லிம் முர்த்தாக மாறினால்,மனைவியை தலாக் விட்டால் இவை வீணானது.இதற்கு செய்தி,உண்மை,பொய் எதுவும் ஆகாது.உதாரணமாக பறவைகளின் சப்தத்தைப் போன்று தல்வீஹ் என்ற நூலில் உள்ளது.


Scan:HASHIYA IBN ABIDEEN-JILD-4-PG-453-A.JPG
Scan:HASHIYA IBN ABIDEEN-JILD-4-PG-453-B.JPG

இந்த வாக்கியங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது அகராதி ரீதியாகவும் ஷரீஅத் ரீதியாகவும் பேச்சாகாது.இது மூடலான விஷயத்தை போன்றாகும்.எனவே ஹதீஸ்,பிக்ஹின் தெளிவான ஆதாரங்களின் மூலம் தூக்கம்,கனவின் காரணமாக மார்க்க தீர்ப்பளிக்கப்படாது.

பரலேவிகளின் அடுத்த வாதம்:
     சில சமயங்களில் கனவானது உண்மையில்  ஒன்றாக இருக்கலாம். வெளிப்படையில் ஒன்றாக இருக்கலாம்.தூக்கத்தில் நிகழ்ந்தவைகளுக்கு குற்றம் பிடிக்கப்படாது என்பதை ஏற்றுக்கொண்டாலும் விழிப்பு நிலையிலும் அதே கலிமாவை கூறுகிறார் எனும் போது இது குப்ர் இல்லையா?

நமது பதில்: அந்த முரீதின் நாவில் மொழிந்ததானது அவரின் சுயவிருப்பமின்றி,அவரின் கட்டுப்பாட்டையும் மீறி வெளிப்பட்டது என்பதை முன்பே தெளிவுப்படுத்தியுள்ளோம்.தனது தவறை எண்ணி வருந்தியுள்ளார். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

 ربنا لاتواخذنا ان نسينا او اخطانا எங்களுடைய ரப்பே! எங்களின் மறதியையும் தவற்றையும் பிடித்துவிடாதே! முஃமீன்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்தும் கொண்டான்.மிஷ்காதின் ஓர் அறிவிப்பில் வருகிறது

 ان الله تجاوز عن امتي الخطا و النسيان و ما استكرهوا عليه எனது உம்மத்தின் தவறையும்,மறதியையும்,எந்த காரியத்தின் மீது நிர்பந்த்திக்கப்பட்டார்களோ (குற்றத்தை) அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அடுத்து மற்றொரு அறிவிப்பு முஸ்லிமில் வருகிறது காட்டுப் பகுதியில் தன் வாகனத்துடன் ஒருவர் செல்கிறார்,அப்பொழுது உணவும்,நீரும்,வைக்கப்பட்டிருந்த அவரது வாகனம் கிடைக்காது என்று நம்பிக்கையிழந்து விட்ட நிலையில் திடீரென அவரது வாகனம் கண் முன் நிற்க கண்டு உடனே அதன் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சி மிகுதியால்,யா அல்லாஹ்,நீ என் அடியான்,நான் உன் இரட்சகன் எனத் தவறுதலாகக் கூறுகிறார்,அவர் மகிழ்ச்சியடைவதைவிட அதிகமாக அல்லாஹ் தன் அடியான் தவ்பாச் செய்யும் போது மகிழ்ச்சியடைகிறான்"என்று நபி ஸல் அவர்கள் கூறியதை ஹஜ்த் அனஸ் ரளி அறிவிக்கிறார்கள்.

அவரை அறியாமல் குப்ரான வார்த்தையை கூறியதால்தான் குற்றம் பிடிக்கப்படவில்லை. இது போன்ற ஹதீஸ்களை மார்க்க மேதைகள் சட்டம் எடுக்கின்றனர்.

காளிகான் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:
     தவறு செய்பவர் எவரெனில் அவருக்கு நாட்டமின்றி ஒரு கலிமாவின் இடத்தில் மற்றொரு கலிமா கூறிவிடுபவருக்கு சொல்லப்படும் (நூல் பதாவா காளிகான்)

அதாவது தவறு செய்பவரின் நாவில் குப்ரின் கலிமா வந்துவிட்டது.உதாரணமாக குப்ரில்லாத வார்த்தையை பேச நாடிய வேளையில் தவறுதலாக அவரது நாவில் குப்ரின் வார்த்தை வெளிப்பட்டுவிட்டது.அனைத்து அறிஞர்களிடம் இது குப்ர் இல்லை. (பதாவா காளிகான்)

Scan:FATAWA-E-QAAZI KHAN-JILD-1-PAGE-518-B.png

  ஏறத்தாழ இது போன்றே கஷ்புல் அஷ்ரார் ஷரஹ் உசூல் பஜ்தவி,பதாவா ஷாமி,ஷரஹ் பிக்ஹ் அக்பர் போன்ற நூல்களில் உள்ளது.

மெளலவி ரிளாகானின் நிலைப்பாடு:

ஷரீஅத்திலே நிர்பந்த நிலையின்  சட்டங்களும் சுயவிருப்ப நிலையில் சட்டங்களும் தனித்தனியானது.

 ஆக நடுநிலையோடு பாருங்கள்! அந்த முரீது "நான் சுயநினைவில்லாமல்,நிர்பந்தமாக, கட்டுப்படுத்தமுடியாமல் கூறிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.மேலும் அதன் பேரில் மிகவும் அழுதுள்ளார் பிறகு இந்த நபரை தானவி ரஹ் அவர்கள் காபிர் என ஏன் கூறவேண்டும்? அவரே காபிர் இல்லையெனும் போது பிறகு குப்ரை பொருந்திக் கொண்டதாக எப்படி அமையும்?

அடுத்த குற்றச்சாட்டு:

முரீதானவர் அஷ்ரப் அலி தானவியின் பேரில் கலிமா கூறியதானது அவரின் மீதுள்ள பிரியத்தினாலாகும்.ஒரு வாதத்திற்கு தவறுதலாக நிகழ்ந்ததென ஏற்றுக்கொண்டாலும் பிறகு ஏன் அதே கலிமாவை திரும்ப திரும்ப கூற வேண்டும்? அமைதியாக அந்த முரீது இருந்திருக்கலாமே எனவே தானவியின் மீதுள்ள பிரியத்தினால் தான் கூறியுள்ளார் என்பதானது இதன் மூலம் தெளிவாகிறது.

பதில்: பரலேவிகள் தெளிவாக விளக்கிய பிறகும் கூட கேள்விகளை அடுக்கிகொண்டு செல்கிறார்கள். அறிவூப்பூர்வமான வாதமோ அல்லது ஆதாரப்பூர்வமான வாதங்களை வைத்தால் கூட பரவாயில்லை வெறும் யூகங்களை வைத்து கேள்வி தொடுத்துள்ளார்கள் பரலேவிகளுக்கு தானவி (ரஹ்) போன்ற தேவ்பந்த் உலமாக்களை காபிர் என தீர்ப்பளிப்பதில் ஒவ்வொரு நாளும் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.ஆனால் இன்றும் கூட உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் நடுநிலையாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு பதில் அளிக்கிறோம் அந்த கலிமாவை ஏன் திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார்கள்?அமைதியை ஏன் கடைப்பிடிக்கவில்லை?

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1) திரும்ப திரும்ப சொன்னதின் காரணம் சரியான கலிமாவானது நாவில் வெளிப்பட்டு முந்தைய தவறான கலிமாவிற்கு பகரமாகிவிடவேண்டும் என்பதற்காக இருக்கலாம்.
2)இந்த நிலையிலே மரணம் ஏற்பட்டால் (அல்லாஹ் பாதுகாப்பானாக) தவறான வார்த்தையை கூறிய நிலையில் இறுதி முடிவு ஏற்பட்டுவிடும் என்பதால் மீண்டும் கலிமாவை மொழிந்திருக்கலாம்.

ஏனெனில் சரியான கலிமாவை உச்சரித்து கெட்ட முடிவு ஏற்படுவதை விட்டும் தன்னை காத்துக்கொள்ளவதற்காக இருந்திருக்கலாம்.தானவி (ரஹ்) அவர்கள் மீதுள்ள பிரியத்தினால் மீண்டும் மீண்டும் மொழிந்தார் என கூறினால் ஏன் தவறாக ஓதுகிறோம் என எண்ணவேண்டும்? பிறகு தவறை நினைத்து ஏன்  அழவேண்டும்? எனவே கலிமாவானது தானவி ரஹ் அவர்கள் மீதுள்ள அன்பினால் ஏற்பட்டதல்ல என்பதானது தெள்ளத்தெளிவாக விளங்க முடிகிறது.அதே சமயத்தில் பரலேவிகள் இது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை எழுப்புவதன் மூலம் அறவே அறிவில்லை என்பதையும் புரியமுடிகிறது.


பரலேவிகளே உங்களின் அங்கீகாரம் பெற்ற அறிஞர் கூறுவதைப் பாருங்கள்!

பரலேவிகளின் நம்பிக்கைக்குரிய சூபியும் பெரியோரும் வலி குலாம் பரீத் அவர்கள் தனது மல்பூஜாதிலே கூறியுள்ளார்கள்

حضرت مولانا فرمایا کرتے تھے کہ ہمارے حضرت شیخ کے تمام مریدین برگزیدہ تھے اور محبت شیخ میں اس قدر محو تھے کہ کلمہ طیبہ میں محمد رسول اللہ حضرت شیخ کے ڈر سے کہتے تھے ور نہ ان کا جی چاہتا تھا کہ شیخ کے نام کا کلمہ پڑھیں (حوالہ مقابیس المجالس )

ஹள்ரத் மெளலானா கூறினார்கள் எங்களின் ஹள்ரத் அனைத்து முரீதின்களை விட ஷைகிடத்தில் தனித்துவம் பெற்றவர்கள்.மேலும் ஷைகின் மீதுள்ள அன்பனாது இந்தளவிற்கு அவரை ஆட்கொண்டிருந்தது.கலிமா தய்யிபாவிலே முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று ஷைகின் மீதுள்ள பயத்தினால்  சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு இல்லையெனில் அவரின் உள்ளமானது ஷைகின் பெயரில் கலிமா படிப்பதை விரும்பியது. பரலேவிகளே இதற்கு பதில் கூறுங்கள்! "ஷைக்" மற்றும் "பீரின்" மீது பிரியத்தினால் கலிமாவை யார் படித்தார்? ஷைகின் மீதுள்ள பிரியத்தினால் இஸ்லாமிய கலிமாவின் இடத்தில் ஷைகின் கலிமாவை விரும்பியது பரலேவிகளா? தேவ்பந்த் உலமாக்களா? சுய விருப்பமின்றி கலிமாவை படித்தவரை காபிர் என்பதாக விமர்சித்தால் உங்களின் பெரியோரை காபிர் என விமர்சிக்க தயாரா?

அடுத்த குற்றச்சாட்டு:

ஒரு நபர் ஒவ்வொரு நாளும் இறைநிராகரிப்பு  வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் சுயவிருப்பமின்றி என்னை அறியாமல்,என் கட்டுப்பாட்டையும் மீறி இது போன்று நிகழ்ந்தது என்றால் அவரின் பேச்சானது ஏற்கப்படுமா? அதே போல் ஒருவர் ஒவ்வொரு நாளும் தானவியை திட்டிக் கொண்டு இருக்கிறார் பிறகு ஒரு நாள் சுயவிருப்பமின்றி திட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: தானவி (ரஹ்) சம்பந்தப்பட்ட நிகழ்விற்கும் இந்த குற்றச்சாட்டிற்கும் அறவே தொடர்பில்லை.ஏனெனில் அந்த முரீதிடமிருந்து ஒவ்வொரு நாளும் இந்த தவறு நடந்தது.பலதடவை  நடந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமுமில்லை.அதற்கு மாறாக கனவில் கலிமாவை ஓதினார்.அதே போல் விழிப்பு நிலையிலே தவறுதலாக ஒரு தடவை மட்டும் நிகழ்ந்துள்ளது.ஒரு தடவை இரு தடவை நாவில் தவறுதல்,சறுக்குதல் ஏற்படுவதானது நடைமுறைக்கும், பழக்கத்திற்கும் எதிரானதோ பாரதூரமானதோ அல்ல.மேலும் பயங்கரமான,அச்சுறுத்தும் கனவை கண்டு கண்விழித்த பிறகு சுயவிருப்பமில்லாமல் அவர் கட்டுப்பாட்டையும் மீறி நாவானது மொழிந்தது.தானவி ரஹ் அவர்களை  இது போன்று விமர்சித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு பதிலானது அவரும் சுயவிருப்பமின்றி, நாட்டமின்றி விமர்சித்தால் பிறகு அவர் காரணத்தை எடுத்துக் கூறினால் மன்னிப்போம் குற்றச்சாட்டு கனவிற்கு விளக்கமானது பொருத்தமாகவும் சரியாகவும் அமையவில்லை பதில் நாம் முன்பே தெளிவுப்படுத்தி கூறிவிட்டோம்.

கனவானது வெளிப்படையில் கெட்டதாக இருந்தால் அதனின் பலனானது கெட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குற்றச்சாட்டை சுமத்துவதற்கு முன்பாக குறைந்த பட்சம் அந்நூலில் உள்ள நிகழ்வை முழுமையாக ஒரு முறையாவது படித்திருக்க வேண்டும்.அல்லது படித்தும் கூட சத்தியத்தை மறைத்து தேவ்பந்த் உலமாக்கள் மீது அவதூறை அள்ளிவீசவேண்டும் என்பதற்காக இருக்கலாம்.இந்த குற்றச்சாட்டிற்கு அந்த நூலிலே பதில் உள்ளது.

அதனை இனி பார்ப்போம்!

ஹள்ரத் ஹகீமுல் உம்மத் தானவி ரஹ் அவர்கள
குறிப்பிடுகிறார்கள்:

சில சமயங்களில் கனவிலே அறியமுடியும்.நபி (ஸல்) அவர்கள் வருகை தருகிறார்கள்.மனதும் அதனை சாட்சி பகரும் நபி (ஸல்)அவர்கள்தான் என்பதை  ஆனால் காணும் நேரத்தில் தெரிய வருகிறது.தோற்றமானது வேறு ஒருவராக இருந்தால் அதற்கு கனவிற்கு விளக்கமளிக்கும் அறிஞர்கள் கூறுகிறார்கள் இதன் மூலம் சுட்டிகாட்டப்படுவதானது என்னவெனில் அந்த நபர் சுன்னத்தை பின்பற்றியவராவார். இவ்விதமாக கனவில் வேறு நபரின் தோற்றமானது எடுத்துக்காட்டப்பட்டால் அதனின் விளக்கமானது நபியின் சுன்னத்தை பின்பற்றுபவர் என கொடுக்கப்பட்டுள்ளது.இதே போன்று நபியின் பெயர் அல்லாமல் வேறு நபரின் பெயரை மொழிந்தால் அதனின் விளக்கமானது சுன்னத்தை பின்பற்றுதல் என்று சொல்வதினால் ஷரீஅத் ரீதியாக என்ன குறை ஏற்பட்டுவிடும்.

 இந்தக் கனவின் மூலம் அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் நுபுவ்வத்தை வாதிடுகிறார் என கூறுவதானது அப்பட்டமான அவதூறாகும்.அல்லாஹ் பாதுகாப்பானாக கொஞ்சம் திறந்த மனதுடன் சிந்தியுங்கள் அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் நுபுவ்வத்தை வாதிடுபவராக இருந்திருந்தால் நபியின் சுன்னத்தை பின்பற்றுபவர் என்பதாக எப்படி கூறியிருப்பார் இது போன்ற நிகழ்வானது மிர்ஸா குலாம் காதியானி அல்லது வேறு எவரேனும்  நுபுவத்தை வாதிடுபவராக இருந்திருந்தால் இப்படித்தான் நபியின் சுன்னத்தை பின்பற்றுபவன் என்பதாக கூறியிருப்பார்களா?

 ((முக்கிய குறிப்பு பரலேவிகள் நுபுவ்வத் எனும் ஆசனத்தில் ரிளாகான் பரலேவியை அமர்த்தியுள்ளார்கள் இது சம்பந்தமாக அறிய விரும்பினால் மெளலானா ஹள்ரத் ஸாஜித் கான் நக்ஷபந்தி அவர்களின்  தாமத்பரகாதுஹு கட்டுரை برلویوں کا نبی کون ہے என்பதை படிக்கவும்.ரிளாகான் பரலேவி நுபுவ்வத்தை வாதிடுகிறார் என்பதாக மற்றொரு கட்டுரை எழுதியுள்ளார் گستاخی رسول کون فیصلہ آپ کریں என்ற கட்டுரையை பார்வையிடவும்.))

அதே சமயத்தில் ஹள்ரத் தானவி (ரஹ்) அவர்கள் தனது கனவின் விளக்கத்தை ஏற்றாகவேண்டும் என்பதாக வற்புறுத்தவுமில்லை. அன்னார் குறிப்பிடுகிறார்கள் இந்த கனவானது ஷைத்தானின் ஊசலாட்டத்தினால் அல்லது சிந்தனை ரீதியான நோயினால் கனவு வந்திருக்கலாம்.இந்த கனவிற்கு இது (நாம் கூறிய) விளக்கமாக கூட இல்லாமல் இருக்கலாம்.ஆனால் கனவிற்கு தவறான விளக்கம் தருவதானது எண்ண ஓட்டத்தினால் ஏற்படும்.இதன் பேரில் குற்றம் சுமத்தமுடியாது (நூல் அல்இம்தாத் )

காஜா பக்தியாரி ரஹ் கூறுகிறார்கள் :

ஒரு நாள் நானும் முரீதுகள் பலரும்,ஷைகு முஈனுத்தீன் சிஷ்தி ரஹ் அவர்களது சமூகத்தில் கூடி இருந்தோம்.அப்போது வெளியே இருந்து ஒருவர் வந்தார்.வந்தவுடன் அவர் தமது சிரசை ஷைக் அவர்களின் பாதத்தில் வைத்துக் கூறினார் தங்களிடம் 'பைஅத்' பெற நான் வந்தேன் என்று. அப்போது ஷைக் கேட்டார்கள்.நீ கலிமா எப்படி ஓதுகிறாய்? லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று ஓதுகிறேன்!' லா இலாஹ இல்லல்லாஹு ஷிஷ்தீ ரஸுலுல்லாஹ் என்று ஓது.இதைக் கேட்ட அவர் அப்படியே ஓதினார்.ஷைகு அவர்கள் இதன்பின் பைஅத்தும் கொடுத்து,ஆடையும் சன்மானம் வழங்கினார்கள்.(பவாயிதுஸ்ஸாலிஹீன்)

ஹஜ்ரத் ஷிப்லீ ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்தார்.நான் தங்களிடம் 'பைஅத்' செய்து கொள்ளும் 'நிய்யத்தில் வந்தேன்' என்று கூறினார் அதைக்கேட்ட ஷைக் அவர்கள் 'பைஅத் கொடுக்க சம்மதம்; ஆனால், நான் கூறுவது போல் நீ செய்ய  வேண் வேண்டும்' என்று கூறினார்கள்.அவரும் முழு சம்மதம் தெரிவித்தார்.அப்போது ஷைக் அவர்கள் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கண்டது போலவே கலிமாவைப் பற்றிக் கேட்டுவிட்டு லா இலாஹ  இல்லல்லாஹு  ஷிப்லீ ரஸுலுல்லாஹ் என்று ஓதும்படி கூறினார்கள்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கண்டதுபோல்,அல்லாமா தானவி ரஹ் அவர்கள் யாரிடமும் அஷ்ரப் அலி ரஸுலுல்லாஹ் என்று கலிமா ஓதச்சொல்லவில்லை. ஆனாலும் அவர்களை 'காபிர்' என்று (நவூதபில்லாஹ்) பத்வா கொடுத்த பரலேவிகள் ஷைக் முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) பற்றியும் அல்லாமா ஷிப்லீ ரஹ் பற்றியும் என்ன பத்வா கொடுக்கிறார்கள்?

அடுத்து பரலேவிகளே  உங்களைச் சார்ந்தவர்களின் நிலையை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் பரலேவிய அறிஞர் பீர் கவாஜா ஃபரீத் பீர் பரீத் அவர்கள் பரலேவியர்களின் பெரியோர்களிலும் இறைநேசர்களிலும் நம்பத்தகுந்தவருமாக உள்ளார்கள்.

இவரைப் பற்றி அறிமுகம் மல்பூஜாத் மகாபீஸுல் மஜாலிஸில் உள்ளது.அந்த நூலின் உர்துமொழிபெயர்ப்பானது பரீதின் வழிகாட்டுதல்கள் (ارشادات فرید) என்ற பெயரில் வெளியானது.மகாபீஸுல் மஜாலிஸில் அவரின் குறிப்பிடத்தக்க கலீபாவான மெளலானா ருக்னுத்தீன் அவருக்கு முன்பாக அதனை படித்துக் காட்டியுள்ளார்.அதனை சரிபார்த்தல், நம்பகத்தன்மையானது என்பதை ஏற்படுத்திக் காட்டியுள்ளார்.

حضرت خواجہ غلام فرید رحمہ اللہ سجادہ نشین چا چڑا شریف (تذکرہ علمائے اہل السنہ و الجماعة )

மற்றொரு பரலேவிகளின் பீர் பீர் நஸ்ருத்தீன் ஹள்ரத் கவாஜா குலாம் ஃபரீத் நாவானது உண்மைக்கு  விளக்கமாக உள்ளது.

(لطمة الغيب)  شیخ الشیوخ خواجہ غلام فرید رحمہ اللہ وابستگان سلسلہ چستیہ کے نزدیک با لعموم اور بصیر پوری و سیالوی صاحب نزدیک بالخصوص مستند و حجت کتاب مقابیس المجالس
(لطمة الغيب

முக்கிய குறிப்பு:

பவாயித் பரீதிய்யானது கவாஜா குலாம் பரீதின் தொகுப்பாகும்.கவாஜா குலாம் பரீதின் மல்பூஜாதானது ஏற்கத்தகுந்த தொகுப்பாக உள்ள மகாபீஸுல் மஸாலிஸ் அந்த நூலிலே குலாம் பரீதின் தஸ்னீஃப் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இதைப் போன்று ரிளாகான் ஆதரவாளர் முனாளிர் முஹம்மத் ஹஸன் அலி ரிஜவி அவரின் நூலான برق آسمانی லே அந்த நூல் கவாஜா பரீதின் தஸ்னீப் என்பதாக ஏற்றுள்ளார்.

(இவ்வளவு விரிவாக இதனை கூறுவதன் நோக்கம் தேவ்பந்த் உலமாக்களின் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் அந்த நூலிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பிதற்ற ஆரம்பித்தனர்.)
سجادہ نشین پیر بل شریف அவரின் மகனார் முஹம்மத் உமர் அவரின் கலிமா انگریز اللہ کے رسول ہیں ஆங்கிலம்  அல்லாஹ்வின் ரஸுல் لندن کعبة الله லண்டன் அல்லாஹ்வின் கஃபா .

அடுத்து ரிளாகானின் தரூத்:

ஹள்ரத் தானவி ரஹ் அவர்களின் முரீத் நாட்டமின்றி,விருப்பமின்றி அவரின் கட்டுப்பாட்டையும் மீறி தரூத் ஓதியதால் பொங்கி எழுந்த பரலேவிகள் ரிளாகானின் பெயரால் உள்ள தரூத்திற்கு பொங்கி எழதயாரா?
 (இந்த அனைத்து ஆதாரங்களுக்கும் அந்த நூலின் போட்டோ காபி இத்துடன் தரப்படுகிறது.)
0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live