8 Feb 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் :12

குற்றச்சாட்டு :

அனைத்து நபிமார்களும், இறைத்தூதர்களும் பயனற்றவர்கள் (தக்வியதுல் ஈமான்)  

 பதில்:

 இந்த குற்றச்சாட்டானது ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது பொய்யாக சுமத்தப்படுகிறது.ஷஹீத் (ரஹ்) அவர்களின் வாசகத்தை திரித்து,புரட்டி சுயவிளக்கத்தை புகுத்தி விமர்சிக்கின்றனர்.

முதலில் பரலேவிகள் காட்டும் வாசகத்தையும் அதன் பிறகு தக்வியதுல் ஈமானில் உள்ள அசலான வாசக அமைப்பையும் பார்ப்போம்!

பரலேவிகள் காட்டும் வாசகம்:

 نبی اور رسول سب ناکارہ ہیں

தக்வியதுல் ஈமானில் இருப்பதாக மேற்கோள்  காட்டும் வாசகம் இதனின் அசலான வாசகம் .

یعنی عزة و جلال والے خدا کے ہوتے ہوئے ایسے ناکارہ لوگوں کو پکارنا جو نہ نفع کے مالک ہیں اور اور نہ نقصان کے سراسر ظلم ہے بڑی سے بڑا ہستی کا مقام محض ناکارہ لوگوں کو دیا جارہا ہے

இந்த வாசகத்தில் அறவே நபிமார்கள் என்பதாகவோ தூதர்கள் என்பதாகவோ இல்லை இதனின் மொழிபெயர்ப்பை பார்ப்போம்!

அதாவது கண்ணியம், கம்பீரம் மிக்க அல்லாஹ் இருப்பதுடன் தீங்கும் விளைவிக்க முடியாத, பயனளிக்க முடியாத பயனற்ற மக்களை அழைப்பதானது முற்றிலும் அநியாயமாகும்.மிகவும் மேன்மைமிக்க மிகப்பெரிய நபருக்கு உள்ள அந்தஸ்து,தகுதியை பயனற்ற மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள்

 الاشراک فی التصرف

அல்லாஹ்வின் ஆற்றலில் இணைவைத்தல் என்ற தலைப்பில் குர்ஆனின் திருவசனங்கள் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி அதனின் தீமையிலிருந்து தவிர்ந்து கொள்ளும் படி அறிவுறுத்துகிறார்கள்.

"எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக- ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் என்று கேட்பீராக.  சூரா முஃமினூனில் 88  வசனம்)

"எவனிடத்தில் சக்தி,விருப்பம்,நாடியதை செய்தல்,அவனின் கையை பிடிக்க முடியாமல் இருப்பது,அவனின் பேச்சை தள்ளிப் போட முடியாமல் இருப்பது இந்த தகுதி யாருக்கு உள்ளது? என   இணைவைப்பாளரிடத்தில் வினவப்பட்டால்,அவர்கள் கூறுவார்கள் அல்லாஹ் என்பதாக.அதே சமயத்தில் மற்றவர்களிடத்தில் அவர்களின் விருப்பங்களை, தேவைகளை வேண்டி (பிரார்த்தி) மடையனாகி விடுகிறான்.நாம் அறிய முடிகிறது.நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கூட (இணைவைப்பாளர்கள்) மக்கள் இவ்வாறு சொல்வார்கள் அல்லாஹ்விற்கு சமமாக,எதிரில் எவருமில்லைஎன்று  ஆனால் சிலைகளை அவர்களின் வக்கீலாக கருதி அவைகளிடத்தில் வேண்டிக் கொண்டிருந்தார்கள். இதனால் தான் இணைவைப்பாளர்களாக ஆகிவிட்டனர்.இன்றும் கூட அல்லாஹ்விற்கு எதிரில் ஆற்றல் இல்லையென்றும் சரிசமமாக இல்லையென்றும் விளங்கியிருந்த போதிலும் எவரேனும், படைப்புகளுக்கு ஆற்றல் உண்டு வக்கீல் என்பதாக எண்ணி வணங்கினால்  அவர் முஷ்ரிக்தான்.

அடுத்து ஒரு வசனத்திற்குப் பிறகு சூரா நஹ்ல் 63வது வசனத்தை ஷஹீத் ரஹ் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள் வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் அதற்கு சக்தி பெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்.      

இந்த வசனத்திற்கு விளக்கம் ஷஹீத் (ரஹ்) கொடுக்கிறார்கள்

یعنی ایسے لوگوں کی اللہ کی سی تعظیم کرتے ہیں جو قطعی بے بس ہیں

உண்மையிலேயே  ஒன்றுமில்லாத மக்களுக்கு அல்லாஹ்விற்கு செய்கிற கண்ணியம் செய்கின்றார்கள். ஆக இங்கும் கூட நபிமார்களைப் பற்றி அறவே பேசவில்லை எனவே தக்வியதுல் ஈமானில் உள்ள குற்றச்சாட்டானது முற்றிலும் புனையப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அடுத்து

(ناکارہ )பயனற்ற (بے بس )மதிப்பில்லாத என்ற வார்த்தையானது பொதுவாக வந்திருப்பதன் மூலம் நபிமார்கள் உள்ளடங்குவார்களா?

பதில்:
   பொதுவாக வந்திருப்பதை குறிப்பாக்குவதற்கு ஆதாரம் தேவை இந்த அடிப்படையை பரலேவிகளும் ஏற்கிறார்கள்.

பிரபல்யமான அறிஞர் அஷ்ரப் ஸய்யாலு கூறுகிறார்:

 ایک ہے عمومی طور پر مخلوق کو ذلیل کہنا اور ایک خاص طور کسی شخصیت کا نام لے کر اسے ذلیل کہنا تو عموم اور تخصیص کی اندر فرق واضح ہے

கருத்து:

பொதுவாக சொல்வதற்கும், குறிப்பிட்டு சொல்வதற்கும் மத்தியில் மிகப்பெரிய வேறுபாடு வித்தியாசம் உள்ளது.
0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live