8 Feb 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 13

 குற்றச்சாட்டு:

அல்லாஹ் நாடினால் நபிகள் நாயகம்
ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்
அவர்களைப் போன்று கோடானு
கோடி பேர்களை உருவாக்குவான்"
[நூல் - தக்வியத்துல் ஈமான் ,பக்கம்
16]

பதில் :

அல்லாஹ்விற்கு (பொய்சொல்ல சாத்தியம் உண்டா)امكان الكذب என்ற கொள்கையை போன்றுதான் இந்த امتناع النظير (அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை போன்றவர்களை கொண்டு வர சக்தி உடையவனா) என்ற கொள்கையாகும்.

அல்லாஹ் பொய் சொல்ல மாட்டான். அல்லாஹ்விடத்தில் பொய் நிகழாது.அல்லாஹ் பொய் சொல்வான் என்று கூறினால் அவன் காபிராகுவான் அதே சமயத்தில் அல்லாஹ் பொய் சொல்ல சக்தி உடையவன்.அதைப் போன்றுதான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த நபியும் வரமாட்டார்கள்.நபித்துவம் என்பதானது முடிவடைந்துவிட்டது.இனி கியாமத் வரையில் அண்ணல் எம்பெருமானார் ஸல் அவர்கள்தான் நபியாவார்கள்.

எவராது நபி ஸல் அவர்களுக்கு பிறகு நபி வருவார்கள் என வாதிட்டால் அவர் காபிராகுவார்.ஆனால் அதே சமயத்தில் அல்லாஹ்தஆலா நபி ஸல் அவர்களைப் போன்று வேறு ஒருவரை கொண்டு வர சக்தி உடையவன்.(ஆனால் அவ்வாறு கொண்டு வரமாட்டான்)

பரலேவிகளால் அங்கீகரிக்கப்பட்ட நூலான பவாயிதில் புவாதில் உள்ளது அல்லாஹ் நாடினால் நபிக்கும் (நரகின்) வேதனை தரமுடியும் (அல்லாஹ் பாதுகாப்பானாக!) ஆனால் நபிக்கு வேதனை தரமாட்டான்.ஆகவே இங்கு தக்வியதுல் ஈமானில் சொல்ல வருவதானது அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றியதாகும்.இது சம்பந்தமாக இந்த Link ல் சென்று பார்வையிடவும்

https://m.facebook.com/story.php?story_fbid=932473756800662&id=352261448155232&refid=52&_ft_=top_level_post_id.1005660409481996%3Atl_objid.1005660409481996%3Athid.352261448155232&__tn__=%2As

பரலேவிகளால் ஏற்கப்படும் அறிஞர் ஷைக் யஹ்யா முனீரி (ரஹ்) அவர்கள் தனது மக்தூபாதில் நபி (ஸல்) அவர்களைப் போன்று நபி படைப்பதற்கு அல்லாஹ்விற்கு ஆற்றல் உண்டு. ஷைகு யஹ்யா முனீரி (ரஹ்) அவர்களுக்கு எதிராக பரலேவிகள் தீர்ப்பளிக்க தாயார்?

பரலேவிய அறிஞர்
سراج سالکین شمس العارفین حضرت سید نور الحسن شاہ صاحب
அவரது நூலான  இன்ஸான் பில் குர்ஆன் என்ற நூலில  கூறுகிறார்கள்:

 இந்த நபிமார்கள்,ரஸுல்மார்களின் சங்கிலித்தொடர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரையிலாகும். மேலும் உலகம் அதிலுள்ளவைகள் மட்டுமின்றி அனைத்து படைப்புகளை படைத்துள்ளான்.அதாவது அதைப் போன்ற கோடிக்கணக்கான லட்சக்கணக்கான எண்ணிக்கையிலே படைக்க முடியும் இவருக்கு எதிராக பரலேவிகள் தயாரா?


0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live