12 Feb 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் :14

மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு
பரேல்விகளின் குற்றச்சாட்டு :

"காதமுன் நபிய்யீன்" என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .
[ தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]


பதில்:

                                   

இந்த குற்றச்சாட்டை ரிளாகான் பரலேவி, அன்னார் மீது சுமத்துகிறார்.இந்த குற்றச்சாட்டானது அபாண்டமானது.இது போன்ற பொய்களை சுமத்துவது காதியானிகளின் செயலாகும்.இந்த மோசமான கொள்கையை விட்டு மெளலானா நானூதவி அவர்கள் தூய்மையானவர்கள் இதற்கான பதிலை சுருக்கமாக பார்ப்போம்!

முதல்விஷயம்:

காஸிம் நானூதவி ரஹ் அவர்கள் "காதமுன் நபிய்யீன்" விஷயத்தில் அன்னாரின் கொள்கை நிலைப்பாட்டை தெளிவாக தெரிந்துகொண்டால் ரிளாகானின் பொய்யான வாதம் புஸ்வானமாகிவிடும்.

இதற்கான  பதிலை காஸிம் நானூதவி அவர்களின் இரு நூல்களிலிருந்து பார்ப்போம்!

خاتمیت زمانی اپنا دین و ایمان ہے ناحق کی تہمت کا البتہ کچھ علاج نہیں (مناظرہ عجیبہ )


 (நபியவர்கள்) காலத்தில் இறுதியானவர்கள் என்பதுதான் நமது மார்க்கமும் ஈமானுமாகும்.நியாயமற்ற முறையில் இட்டுகட்டுவோருக்கு மருந்து ஏது?

Source:



                
                               


அதே நூலின் 69 பக்கத்தில்

خاتمیت زمانی اجماعی عقیدہ ہے

Source:





நபி ஸல் அவர்கள் இறுதி நபி என்பது இஜ்மாவான கொள்கையாகும்.அதே நூலின் மற்றோர் இடத்தில்

خاتمیت زمانی سے مجھ کو انکار نہیں

நபியவர்கள் காலத்தால் இறுதியானவர் என்பதில் எனக்கு எந்த ஒரு மறுப்புமில்லை.

بلکہ یوں کہیے کہ منکروں کے لئے گنجائش انکار نہ چھوڑی

மாறாக மறுப்பவர்களுக்கும் நான் எவ்வித இடமும் விட்டுவைக்கவில்லை.

Source :







மற்றோர் இடத்தில் கூறுகிறார்

اپنا دین و ایمان ہے بعد رسول اللہ صلی اللہ کسی اور نبی ہونے کا احتمال نہیں جو اس میں تامل کرے اس کو کافر سمجھتا ہوں

Source:
































நபி ஸல் அவர்களுக்குப் பிறகு எவரும் நபியாக வருவதற்கு வாய்ப்பில்லை.எவராவது நபி (ஸல் ) அவர்களுக்கு பிறகு நபி வருவார் என சிந்தித்தாலே அவர் காபிர் என்பதாக நான் விளங்கியுள்ளேன்.

ரிளாகான் பரலேவி அன்னாரின் மீது எந்த நூலை முன்வைத்து குற்றம் சுமத்துகிறாரோ அதே நூலில் காஸிம் நானூதவி அவர்கள், நபி (ஸல்)  அவர்களை காதமுன் நபிய்யீன் என்பதை மறுப்பதானது இறைநிராகரிப்பு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

جیسا ہیں تعداد رکعات کا منکر کافر ہے ایساہی اس ختم نبوت زمانی کا منکر بھی کافر ہوگا (تحذیر الناس





தொழுகையின் ரக்அத்துகளின் எண்ணிக்கையை மறுப்பது இறைநிராகரிப்போ அதைப் போல நபி ஸல் அவர்கள் இறுதிநபி என்பதை மறுப்பதும் இறைநிராகரிப்பாகும்.

எனவே காஸிம் நானூதவி (ரஹ்)அவர்கள் காதமுன் நபிய்யீன் என்பதை மறுக்கவில்லை என தெளிவாக உணரமுடிகிறது.அன்னார் மறுப்பதாக  ரிளாகான் பரலேவிதான் அபாண்டமாக பழிசுமத்தியுள்ளார் என்பதையும் விளங்கமுடிகிறது.ஆக இந்த குற்றச்சாட்டிற்கு இதுவே போதுமான பதிலாக இருந்தாலும் மேலதிகமான விளக்கத்தை பார்ப்போம்!

இரண்டாவதாக :

இது சம்பந்தமான விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்! துர்ருல் மன்தூரில் வரும் ஹதீஸ்  இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் அறிவிப்பை நிராகரித்தனர்.அந்த ஹதீஸின் கருத்து என்னவெனில்

 عن ابن عباس رضي الله عنهما أنه قال: الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن. قال: سبع أرضين في كل أرض نبي كنبيكم، وآدم كآدم، ونوح كنوح، وإبراهيم كإبراهيم، وعيسى كعيسى.

அல்லாஹ் ஏழு பூமிகளைப் படைத்துள்ளான்.ஒவ்வொரு பூமியிலும் ஒரு ஆதம் நபி இருக்கிறார்கள்.உங்கள் ஆதம் நபியைப் போல; ஒவ்வொன்றிலும் ஒரு நூஹ் நபி உங்களது நூஹ் நபியைப் போல; ஒவ்வொன்றிலும் ஒரு இப்ராஹிம் நபி உங்களது இப்ராஹிமை நபியை போல; இந்த நபிமார்களின் வருகை நமது நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு பிந்தி உள்ளதா ? முந்தி உள்ளதா? முந்தி உள்ளது என்றால் இந்த கேள்விக்கு இடமில்லை நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வருகைக்கு பிந்தி உள்ளதென்றால் "காத்தமுன் நபிய்யீன்" க்கு மாசு ஏற்படுமா??

இது தான் கேள்வி...

இந்த அறிவிப்பை பல்வேறு உலமாக்கள் ஆதாரப்பூர்வமானது என கூறியுள்ளனர்.


இதனால் காஸிம் நானூதவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை மறுத்துவிடாமல் அழகான மாற்றும் விளக்கம் கொடுக்கிறார்கள்.அந்த ஹதீஸிற்கு பதிலளிப்பதற்கு ஒரு நூலை எழுதினார்கள் அதனின் பெயர்

تحذیر الناس من انکر اثر ابن عباس

இதில் அந்த ஹதீஸிற்கு அறிவிப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.இந்தப் பதிலின் மூலம் "காதமுன் நபிய்யீனை" மறுப்பவர்களும் வாயடைத்துப்போயினர். ஆனால் மெளலானாவின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் காதமுன் நபிய்யீனை மறுப்பதாக பழிசுமத்தினர்.எந்த குற்றச்சாட்டை நல்லடியாரின் மீது சுமத்துகிறார்களோ அதற்கு தக்க பதிலடி கொடுத்தவுடன் இவர்களின் உண்மை முகம் தோலுரிக்கப்படும். பரலேவிகளின் குஃப்ரு பத்வாவிலிருந்து நம் சமூகத்தில் உள்ள முன்சென்ற நல்லோர்களும் தப்பிக்கமுடியாது.


இன்னும் "அல் முஹன்னதில்" தேவ்பந்துடைய அகீதா கிதாபில் உள்ளதாவது :

நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி.

முஹம்மது இல்யாஸ் கும்மான் தாமத் பரகாதுஹும் அவர்களின் "அகீதா அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாத்":

நபி (ஸல்) அவர்கள் தான் கடைசி நபி.

பரேலவிகளுடைய اتحادین المسلمين என்ற கிதாபில் கூறியுள்ளதாவது : 

என்றைக்கு தேவ்பந்த் உலமாகளின் "அல் முஹன்னத்" வந்ததோ அன்றையிலிருந்து அவர்கள் மீது கூறப்படும் குற்றசாட்டுகள் நீங்கிவிட்டது.

தஹ்தீருன்னாஸ் மேரி நள்ர் மே என்ற நூல் பரலேவிய அறிஞர் பீர் முஹம்மது கரம் ஷாஹ் அஜ்ஹரி அவர்கள் கூறுகிறார்கள் :

காஸிம் நானூதவி அவர்கள் கதம் நுபுவ்வத்தை மறுக்கவில்லை என்கிறார்கள்.





பரலேவிய அறிஞர்களின்  குற்றச்சாட்டு:

 سید تبسم بخاری
கூறுகிறார்:

 இந்த இப்னு அப்பாஸ் ரளி அறிவிப்பை ஆதாரப்பூர்வமானது என வாதிட்டால் நபியைப் போன்று ஒரு நபி என ஒப்புமை ஏற்படும்.இதன் மூலம் "கதமுன் நுபுவ்வதில்" பாதிப்பை ஏற்படும் .
(ختم نبوت اور تحذیر الناس )

மெளலவி ஹஸன் அலி ரிளவி கூறுகிறார்:

மெளலவி நகி அலி அவர்களின் கண்ணோட்டத்தில் இந்த இப்னு அப்பாஸ் (ரளி) ஹதீஸை சரியென்று வாதிடுபவர் கதம் நுபுவ்வதை மறுப்பவரின் அணியில் நிற்பார்.(محاسبة ﺩﻳﻮﺑﻨﺪﻳﺖ)

 மற்றொரு பரலேவி அறிஞர் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரளி) ஹதீஸை ஆதாரம் எடுத்தால் மெளலானா நானூதவி கதம் நுபுவ்வதை மறுப்பாளர்களில் உள்ளடங்குவார்.
(جسٹس محمد کرم شاہ کا تنقیدی جائزہ)

 மெளலானா
غلام نصیر الدین سیالوی கூறுகிறார்:

மெளலானா காஸிம் நானூதவி கதம் நுபுவ்வத்தை ஏற்பவராக இருந்தால் பிறகு ஏன் இப்னு அப்பாஸ் ரளி ஹதீஸை ஏற்கவேண்டும்? இந்த குற்றச்சாட்டின் சாராம்சம் இப்னு அப்பாஸ் ரளி அவர்களின் ஹதீஸை சரியானது என்றால் அவர் கதம் நுபுவ்வத்தை மறுப்பவராகிவிடுவார். இப்பொழுது பரலேவியர்களின் கூற்றின்படி உம்மத்திலுள்ள பெரும் மார்க்க அறிஞர்களும் "கதம் நுபுவ்வத்தை" மறுப்பவர்களின் அணியில் வந்துவிடுவார்கள்.

அதனைப் பற்றிய விரிவான ஆய்வை பார்ப்போம்!

பரலேவி அறிஞர் குலாம் ஸயீதி கூறுகிறார்கள்:

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின்  ஹதீஸை ஹாகிம் (ரஹ்) அவர்கள் சரியான அறிவிப்பாளர் தொடரில் உள்ளதாகவும், இமாம் புகாரி,முஸ்லிம் இருவரின் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனை ஹாபிள் தஹபி அவர்களும் அங்கீகரிக்கிறார்கள்.இமாம் அபூபக்கர் அஹ்மது இப்னு ஹீஸைன் பைஹகி அவர்கள் இதனை இரு அறிவிப்பாளர்களின் தொடர் வழியாக அறிவித்துள்ளார்கள்.இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரானது ஆதாரப்பூர்வமானது என்றாலும் முர்ரா இருப்பதால் ஷாத்தாகும். (அரிதானதாகும்) மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் உள்ள அறிவிப்பாளர் "அபுள்ளஹிக்கு" துணைச்சான்று உள்ளதாக நான் அறியவில்லை (کتاب الاسماء و الصفات \تبیان القرآن )

மேலும் ஸயீதி கூறுகிறார்:
 حافظ عماد الدین بن عمر بن کثیر شافعی அவர்கள்,அவரின் தப்ஸீரில்  இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களின் ஹதீஸை இமாம் பைஹகியின் நூலான کتاب الاسماء و الصفات லிருந்து எடுத்தெழுதி மேற்கோள்காட்டியுள்ளார். அதனின் அறிவிப்பாளர் சம்பந்தமாக எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை.(تبیان القرآن)

 அல்லாமா அய்னி அவர்களும் இந்த அறிவிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்துள்ளார்.(تبیان القرآن)

அல்லாமா ஆலுஸி அவர்கள் இந்த அறிவிப்பானது ஆதாரப்பூர்வமானது என்பதில் ஷரீஅத்து ரீதியாகவோ, அறிவுரீதியாகவோ எந்த தடையுமில்லை.(تبیان القرآن)

அல்லாமா ஹாபிள் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள், 'இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸை முர்ராவுடன் ஷாத்தாக இருப்பதுடன் ஸஹீஹ் என்பதாக கூறியதை' மேற்கோள்காட்டியுள்ளார்.மெளலவி அப்துல்ஹை லக்னவி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பானது சரியானது.இதன் மீது விமர்சனம் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அங்கீகரிக்கப்பட்டது என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.(زجر الناس)

Source: 





இதில் அப்துல்ஹை லக்னவி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பு புஹாரி,முஸ்லீம் شرط களை போல உள்ளது என்று கூறுகிறார்கள்.


ஆக எந்த காரணத்தை முன்வைத்து மெளலானா காஸிம் நானூதவி அவர்களை "காபிர்" என்பதாக  தீர்ப்பளித்தார்களோ அதே காரணம் பெரும் மார்க்க அறிஞர்களான பைஹகி,ஹாகிம்,தஹபி, அய்னி,ஆலூஸி அவர்களிடமும் பெறப்படுகிறது.

பரலேவிகள் மார்க்கத்தின் மீது பற்றுள்ளவர்களாக இருந்தால் இவர்கள் மீது காபிர் என தீர்ப்பளிக்க தயாரா?

கியாமத் வரை அவகாசம் தருகிறோம்! (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

மூன்றாவது விஷயம் :

காஸிம் நானூதவி (ரஹ்) அவர்கள் تحذیر الناس ல் கூறியுள்ளார்கள் .

بلکہ اگر بالفرض بعد زمانہ نبوی بھی کوئی نبی پیدا ہو تو بھی خاتمیت محمدی میں کچھ قرق نہ آئے گا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப்பின் வேறொரு நபி உண்டாவார்கள் என கற்பனையாக வைத்துக்கொண்டாலும் நாயகம் (ஸல்) அவர்கள் "காதமுன் நபிய்யீன்" என்பதில் யாதொரு வித்தியாசமும் உண்டாகாது!"

பரலேவிகளின் குற்றச்சாட்டு:

سید تبسم بخاری
பரலேவி அறிஞர் கூறுகிறார்:

நபி (ஸல்)  அவர்களைப் போன்று நபி வருவதற்கு சாத்தியமுள்ளதாக கற்பனையாக கூறுவதும் கதம் நுபுவ்வதில் பாதிப்பை ஏற்படுத்தும்.(ختم نبوت اور تحذیر الناس)

மற்றோர் அறிஞர் கூறுகிறார்:

வேறு நபி  வருவதற்கு சாத்தியமுள்ளதாக கற்பனையாக கூறுவதும்  'கதம் நுபுவ்வதை' மறுப்பதாக அமைகிறது.(دیوبندیوں سے لا جواب سوالات)

நபி ஸல் அவர்கள் இறுதி நபி என்பதை ஏற்றுக்கொண்டு வேறு நபி வருவதாக கற்பனை செய்வதும் குஃப்ராகும் என பரலேவி மெளலவி உமர் குறிப்பிட்டுள்ளார். (مقیاس حقیقت)

எவரேனும் ஒருவர் நபிக்கு பிறகு நபி வருவார் என்று கற்பனையாக கூறினாலும் அவர் காஃபிராவார்.(علم القرآن)

நபிக்கு பிறகு நபி வருவது சாத்தியமுள்ளது அல்லது ஆகுமானது என யாராவது கூறினால் அவர் மதம்மாறியவராவார்.(شان حبیب الرحمان)

தமிழகத்தில் உள்ள பரலேவிகள் கூட இதே வாதத்தை எழுப்புகிறார்கள் நபியவர்களுக்குப் பிறகு இனி ஒரு நபியில்லை என்று இறைவன் முடிவு செய்த விஷயத்தில் உங்களுக்கு கற்பனை எப்படி வந்தது?அப்படி ஒரு கற்பனை உதித்ததே ஈமானை பலவீனப்படுத்தியதாகாதா?

(புதிய பயணம் செப்  2007) தக்க மறுப்பு:

கற்பனை செய்வது கூடாது எனில் நபி ஸல் அவர்களின் பொன்மொழிக்கு என்ன பதில்?

لو كان بعدي نبي لكان عمر

எனக்கு பிறகு நபி வருவதாக இருந்தால் உமராக இருப்பார் என நபி ஸல் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

பரலேவிய அறிஞர் பீர் முஹர் அலி ஷாஹ் ஸாஹிப் கூறுகிறார்கள்:

நபி (ஸல்)அவர்களுக்குப் பிறகு நபி வருவதற்கு சாத்தியமுள்ளது என்று சொல்பவர் கூலிகொடுக்கப்பட்டவராக, நன்மை அளிக்கப்பட்டவராக உள்ளார்.(فتاوی مہریہ)

பரலேவி அறிஞரும் முஃப்தியுமான மெளலானா ஸத்ருத்தீன் அவர்களும் சாத்தியமுள்ளது என்பதை ஏற்கிறார்கள்.(خیر آبادیت)

பரலேவி பகீஹ் மில்லத் அவர்களின் பதவாவிலே குறிப்பிட்டுள்ளார்கள் சந்தேகமின்றி ஈருலக தலைவர் நபி ஸல் அவர்களுக்குப் பிறகு நபி வருவதற்கு ஷரீஅத் ரீதியாக சாத்தியமும் அறிவுரீதியாக வாய்ப்புள்ளது.(فتاوی فیض الرسول )

பரலேவி அறிஞர் ஃபாளில் கூறுகிறார்:


'கதம் நுபுவ்வத்' இல்லாமல் இருந்திருந்தால் ஹள்ரத் غوث அவர்கள் நபியாக வரமுடியும்.(عرفان شریعت)



முஃப்தி அல்லாமா குலாம் ரஷூல் கூறுகிறார்:

காதியானி நபியாக இருந்திருந்தால் இன்றைய அறிவியல் உலகில் அவனிடத்திலிருந்து அனைத்து கண்டுபிடிப்புகளை விட புதிய கண்டுபிடிப்பானது வெளிப்பட்டிருக்கும்.(تبیان القرآن)




காதியானி நபியாக இருந்திருந்தால் இப்ராஹிம் அலை அவர்களின் சந்ததியிலிருந்து வந்திருக்க வேண்டும்.(تبیان القرآن)



காதியானி நபியாக இருந்திருந்தால் எவரிடத்திலும் மாணவராக இருந்திருக்க கூடாது.(تبیان القرآن)




ஆக கற்பனையாக கூட நபிக்கு பிறகு நபி வருவார் என கூறுவது குஃப்ர் என்றால் அத்துணை பரலேவி அறிஞர்களையும் காபிர்' என ஏன் தீர்ப்பளிக்கவில்லை?

காஸிம் நானூதவி அவர்களை மட்டும் காபிர் என தீர்ப்பளித்தது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை.

மெளலானா அவர்கள் தஹ்தீருன்னாஸில் கதம் நுபுவ்வத்தைப் பற்றிய ஞானமும்,அறிவும் நிறைந்த ஆய்வு செய்துள்ளார்கள்.ஏறத்தாழ நாற்பது பக்கம் கொண்டது.குர்ஆனில் உள்ள காதமுன் நபிய்யீன் என்ற பதத்தை விவரித்துவாறு மூன்று வகையாக விளக்கியுள்ளார்கள்.

அவை

زمانی خاتم النبیین (நபி ஸல் அவர்கள் காலத்தால் இறுதி நபியாவார்கள்)

مکانی خاتم النبیین  (நபி ஸல் அவர்கள் பூமியெனும் இடத்தால் இறுதியானவர்கள்)

مرتبی خاتم النبیین (நபி ஸல் அவர்கள் அந்தஸ்திலும் இறுதியானவர்கள்)

இதில் முதல் வகையை சாமானிய மக்களும் அறிந்துள்ளனர்.ஆக மெளலானா அவர்கள் இந்த மூன்றையும் முன்வைத்து நபி ஸல் அவர்கள் خاتم என்பதை நிரூபித்துள்ளார்கள்.

மேலும் நபி ஸல் அவர்களின் நுபுவ்வத்தானது அசலானது.மற்ற நபிமார்கள் நபி ஸல் அவர்களுக்கு பிரதிநிதிகளாக, பின்பற்றகூடியவர்களாக அமைந்துள்ளனர்.நபியின் நுபுவ்வத் நேரடியாக அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது.மற்ற நபிமார்களின் நுபுவத்தானது நபி ஸல் அவர்களின் பொருட்டால் கிடைத்தது. நபிக்கு பிறகும் எந்த ஒரு நபியும் வரமுடியாது.இதற்கு அறிவு ரீதியாகவும்,மார்க்க ரீதியாகவும் ஆதாரங்களை கொடுத்து நிரூபித்துள்ளார்கள்.

எவராவது நபிக்குப் பிறகு நபி வருவார் என்று சொன்னால் அவர் உறுதியான சொல்லின்படி காபிராவார்.இஸ்லாமை விட்டு வெளியேறியவர்.

குர்ஆனில் உள்ள காதமுன் நபிய்யீன் மற்றும் ஹதீஸில் لا نبي بعدي மற்றும் இஜ்மாவை முன்வைத்து நபி ஸல் அவர்கள் இறுதியானவர்கள் என்பதை நிலைநாட்டியுள்ளார்.இதில் கூறப்பட்டுள்ள வாசகங்களை திரித்தும்,புரட்டியும் காஸிம் நானூதவி அவர்களை விமர்சிக்கின்றனர். அவைகளைப் பற்றிய விளக்கங்களை இனி பார்ப்போம்!

குற்றச்சாட்டு:

நபி (ஸல்) அவர்களின்     தாத்தை நபியாக ஏற்று மற்ற நபிமார்களின் தாத்தை நபியின் நுபுவத்திற்கு பிரதிநிதியாக கருதுவது மற்ற நபிமார்களின் நுபுவ்வத்,ரிஸாலத்தை மறுப்பதாகும்.(عبارات اکابر کا تحقیقی و تنقیذی جائزہ)

அல்லாமா ஹ்மது ஸயீத் காளிமி கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களுக்கும் மற்ற நபிமார்களுக்கும் மத்தியில் அசல் என்றும்,கிளை என்றும் பிரிப்பது குர்ஆனின் பல ஆயத்துகளுக்கு எதிரானது.(مقالات کاظمی)

மெளலானா تبسم بخاری கூறுகிறார்கள்:

 நபி ஸல் அவர்களின் நுபுவ்வத்தானது حقیقی (அந்தரங்கமானது) என்பதாகவும் மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தானது مجازی (வெளிப்படையானது) என்பதாக கூறுவதானது குர்ஆனின் வசனத்தில் கருத்துரீதியாக மாற்றம் ஏற்படும்.மேலும் இவ்வாறு சொல்வதானது மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தை அப்பட்டமாக மறுப்பதாகும்.(ختم نبوت اور تحذیر الناس)

இதன் மூலம் அவர்கள் கூறுவது:

காஸிம் நானூதவி அவர்கள் நபியின் நுபுவ்வத்தை அசல் என்றும் அதற்கு தாபிய்தான் மற்ற நபிமார்களின் நுபுவ்வத் என  பிரித்ததால் மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தை மறுப்பவராகிவிடுகிறார்.

 தக்க மறுப்பு:

பரலேவி அறிஞர் அல்லாமா அதா முஹம்மது நக்ஷபந்தி ஷைகுல் ஹதீஸ் கூறுகிறார்கள்:

அல்லாமா சுலைமான் ஜமல் அவர்களின் கண்ணோட்டத்தின் படி நபி (ஸல்) அவர்கள் அசலான நபியாக,ரஸுலாக அழைப்பாளராக இருக்கிறார்கள்.மற்ற நபிமார்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பிரதிநிதியாக இருப்பதுடன் அழைப்பு கொடுக்கிறார்கள்.(خلاصة ﺍﻟﻜﻼﻡ)

மேலும அதே நூலில்  கூறுகிறார்கள்:

அறிஞர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர். நபி ஸல் அவர்கள் مطلق(பொதுவாக) கவும்,حقیقی(அந்தரங்கமாக) கவும் நபியாக இருக்கிறார்கள்.முன்னால் சென்றுவிட்ட நபிமார்கள் தங்களின் காலத்திலேயே நபி ஸல் அவர்களுக்கு தாபியாகவும்,நபியின் நுபுவத்திலே பிரதிநிதியாக இருந்து கடமையாற்றினார்கள்.

மற்றோர் இடத்தில் அல்லாமா ஆலூஸி அவர்களின் கருத்தை மேற்கோள்காட்டுகிறார்கள்.ஞானவான்களின் கருத்துப்படி நபி (ஸல்) அவர்கள் பொதுவாகவும், அந்தரங்கமாகவும் ஷரீஅத்தை கொண்டுவந்தவர்கள். மற்றவர்கள் நபி ஸல் அவர்களுக்கு தாபியாக உள்ளார்கள்.

குர்ஆனின் பின்வரும் வசனத்தின் மூலமும் நிரூபணமாகிறது.

ﻭﺇﺫ ﺃﺧﺬ ﺍﻟﻠﻪ ﻣﻴﺜﺎﻕ ﺍﻟﻨﺒﻴﻴﻦ ﻟﻤﺎ ﺁﺗﻴﺘﻜﻢ ﻣﻦ ﻛﺘﺎﺏ ﻭﺣﻜﻤﺔ
ﺛﻢ ﺟﺎﺀﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﺼﺪﻕ ﻟﻤﺎ ﻣﻌﻜﻢ ﻟﺘﺆﻣﻨﻦ ﺑﻪ ﻭﻟﺘﻨﺼﺮﻧﻪ
ﻗﺎﻝ ﺃﺃﻗﺮﺭﺗﻢ ﻭﺃﺧﺬﺗﻢ ﻋﻠﻰ ﺫﻟﻜﻢ ﺇﺻﺮﻱ ﻗﺎﻟﻮﺍ ﺃﻗﺮﺭﻧﺎ ﻗﺎﻝ
ﻓﺎﺷﻬﺪﻭﺍ ﻭﺃﻧﺎ ﻣﻌﻜﻢ ﻣﻦ ﺍﻟﺸﺎﻫﺪﻳﻦ

கருத்தாவது:

அல்லாஹ் நபிமார்களிடம் “திண்ணமாக, நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியுள்ளேன்; இதன் பின்னர் உங்களுடன் இருக்கின்ற (வேதத்)தை மெய்ப்படுத்தக் கூடிய தூதர் எவரேனும் உங்களிடம் வந்தால்,நிச்சயமாக அவரை நீங்கள் நம்பவேண்டும்; இன்னும் அவருக்கு உதவி புரியவேண்டும்” என்று உறுதிமொழி வாங்கின(ான் அப்) போது நீங்கள் இதன்படி என்னுடைய ஒப்பந்தத்தை ஏற்று உறுதிமொழி கூறுகிறீர்களா? என்று கேட்டான்.அதற்கு அவர்கள் உறுதிமொழி கூறுகிறோம்” என்றனர்.அப்போது “நீங்கள் சாட்சியாக இருங்கள்.நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்” என்று  கூறினான்.

இந்த ஆயத்தின்  تجلی الیقین விரிவுரையில் ரிளாகான்   குறிப்பிட்டுள்ளார்.

அதனின் சுருக்கமாவாது அல்லாமா ஸுப்கி ரஹ் அவர்கள் இந்த ஆயத்திற்கு விரிவுரையாக தனி நூலை எழுதியுள்ளார்கள்.அதனின் பெயரானதுالتعظيم و المنة இந்த ஆயத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது நம்முடைய நபி ஸல் அவர்கள் நபிமார்களுக்கு நபியாக இருக்கிறார்கள்.அனைத்து நபிமார்கள்,ரசூல்மார்கள் அவர்களின் சமுதாயத்தினர்கள் நபி ஸல் அவர்களின் உம்மத்தினராக இருக்கிறார்கள்.நபி ஸல் அவர்களின் நுபுவ்வத்,மற்றும் ரிஸாலதானது ஆதம் அலை காலம் முதற்கொண்டு கியாமத் வரை படைப்புகளுக்கு பொதுவானது.இவ்வாறு கூறியவாறு இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். நோக்கமாக அசலாக இருப்பது நபி ஸல் அவர்கள்தான் மற்றுமுள்ள நபிமார்கள் அனைவரும் தாபியாக  இருக்கிறார்கள்.
நபிமார்களின் நுபுவ்வத்தை مجازی( வெளிப்படையானது) என்று காஸிம் நானூதவி அவர்கள் கூறியதானது நுபுவ்வத்தை மறுப்பதாகும் என வாதிட்ட பரலேவி அறிஞர்கள் இதே கருத்தை கூறிய அல்லாமா அதா முஹம்மது மற்றும் அல்லாமா ஸூப்கி (ரஹ்) அவர்கள் மற்றும் ஆலூஸி மற்றும் ஞானவான்களையும் நுபுவ்வத்தை மறுத்தவர்களின் பட்டியலில் இணைக்கதயாரா?

  கதம் நுபுவ்வத் குற்றச்சாட்டு தொடர்பில் ஷைகுல் ஹதீஸ் அதா முஹம்மது அவர்கள் அல்லாமா ஆலூஸியின் மற்றொரு சொல்லையும் மேற்கோள்காட்டுகிறார். நபிமார்களில் சிலருக்கு நுபுவ்வத்தானது சிறுபிராயத்தில் வழங்கப்பட்டது.அதற்கான தகுதியும் அவர்களிடம் இருந்தது.அப்படியிருக்கும் போது நபி ஸல் அவர்களும் சிறுவயதிலேயே நுபுவத்திற்கு பொருத்தமானவர்கள். ஏனெனில் நபி ஸல் அவர்கள் அசலானவர்கள்.கிளையை விட அசலிற்குதான் தகுதி மிகுதியாக அமைந்திருக்கும்.

مطالع المسرات என்ற தலாயிலுல் கைராதின் விளக்கவுரையில் ஷைக் உஸ்மான் கூறுகிறார்கள் ஆரம்பம் முதற்கொண்டு இறுதிவரை அந்தரங்க நபி எவருமில்லை.நபி ஸல் அவர்களை தவிர.

பரலேவிகளின் தலைவராகவும்,இமாமாக உள்ள மெளலவி நகி அலி கான் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வதெனும் பதவியில் அசலாக இருக்கிறார்கள்.(الکلام الاوضح سرور القلوب)

தாகிர் ஹீஸைன் ஷாஹ் ஸய்யாலவி கூறுகிறார்:

 நுபுவ்வத்தின் அசலானது நபி (ஸல்) அவர்களின் பரிசுத்தமான தாத்தாகும்.(نبی الانبیاء و المرسلین)

மெளலவி அஷ்ரப் அலி ஸய்யாலவி கூறுகிறார்:

நுபுவ்வத்தின் அடிப்படையும்,அசலும் நபி (ஸல்) அவர்கள்தான் (کوثر الخیرات)

மெளலவி அப்துல் மஜீத்கான் ஸயீதி கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தானது அசலாகவும் மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தானது இணைப்பாகவும் உள்ளது.(نبوت عند الشیخین)

 பரலேவி அல்லாமா காளிமி அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள்தான் முழு உலகம் உண்டாகுதலின் காரணியும் பரிபூரணத்தகுதியின் அசலும் அவர்கள்தான் (نبوت عند الشیخین)

பரலேவிகளால் போற்றப்படும் அறிஞர் பீர் கரம் ஷாஹ் அவர்கள் மெளலவி காஸிம் நானூதவியின் கருத்தை எடுத்தெழுதிய பிறகு محشی அவர்களின் வாக்கியத்தையும் எடுத்தெழுதியவாறு  இதுதான் உலமாயே அஹ்லே ஸீன்னத்தின் அகீதா என்று கூறியுள்ளார்.அந்த வாக்கியமானது இதுவாகும்.

நபி ஸல் அவர்கள் நுபுவ்வத் தாத்தாகும்.மற்ற நபிமார்களின் நுபுவ்வத்தானது அதற்கு பிரதிநிதியாகும்.இதனை பீர்கரம் ஷாஹ் அஹ்லே சுன்னாவின் கொள்கை என நிலைநாட்டியுள்ளார்.(تحذیر الناس میری نظر میں)

இதன் மூலம் மெளலானா காஸிம் நானூதவி அவர்கள்,நபிமார்களின் நுபுவ்வத்தை மறுப்பவராக சித்தரித்த பரலேவிகளின் நயவஞ்சகமும், கயமைத்தனமும் பகிரங்கமாக வெளிப்படுகிறது.

 காதம் நுபுவ்வத் தொடர்பில் அடுத்த குற்றச்சாட்டும் அதற்கான மறுப்பை எளிதாக புரிந்து கொள்ள முதலில் காஸிம் நானூதவி (ரஹ்) அவர்களின் உர்து வாசகத்தின் மொழிபெயர்ப்பும், இரண்டாவதாக அதில் ரிளாகானின் திரிபுவாதம் மூன்றாவதாக அதற்கு தெளிவான மறுப்பு என வரிசையாக பார்ப்போம்!

காஸிம் மெளலானா நானூதவி (ரஹ்) அவர்களின் تحذیر الناس ன் வாசகம்

عوام کے خیال میں تو رسول اللہ صلی اللہ علیہ و سلم کا خاتم ہونا بایں معنی ہے کہ آپ کا زمانہ انبیاء سابق کے زمانہ کے بعد اور آپ سب میں آخر نبی ہیں

சாமானிய ஜனங்களின் கருத்தின்படி நபி ஸல் அவர்கள் அனைத்து நபிக்கு பிறகு வந்த இறுதியான நபியாவார். அவருக்குப் பிறகு வேறு நபி இல்லை என்பதாகும்.

ரிளாகானின் திரிபு:

 இதில் காஸிம் நானூதவி அவர்களிடத்தில்  ‘காதமுன் நபிய்யீன்’ என்பதன் கருத்து நபி (ஸல்) அவர்கள் காலத்தால் இறுதியானவர்கள் என்பது சாமானிய ஜனங்களின் கருத்தாகும் என கூறுகிறார்கள்.ஆனால் இந்த கருத்தானது நபி ஸல் அவர்களிடமிருந்தும் ஸஹாபாக்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஸிம் நானூதவி அவர்கள், நபி ஸல் அவர்களையும், ஸஹாபாக்களையும் சாமானிய மக்களாக சித்தரிக்கிறார்.

மறுப்பு:

ரிளாகான் பரலேவி இந்த இடத்தில் மிகப்பெரிய மோசடி செய்துள்ளார்.ஏனெனில் மெளலானா காஸிம் ரஹ் அவர்கள்,சாமானிய ஜனங்கள் (عوام) எவர் என்பதை அவரே விளக்கிகூறியுள்ளார்.

باب تفسیر سوائے حضرت انبیاء کرام علیہم السلام یا علماء راسخین فی العلم کے سب عوام ہیں (قاسم العلوم نمبر اول مکتوب )

ஹள்ரத் காஸிம் நானூதவி (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மேலும் மார்க்க அறிவில் பாண்டித்துவம் பெற்று விளங்கும் அறிஞர்களை தவிர குர்ஆனின் விரிவுரை துறையில்  மற்றவர்கள் அனைவரும் சாமானிய ஜனங்கள்தான்.(இதற்கு முதலில் தகுதியானவர்கள் மார்க்கத்தின் முன்னோடியான ஸஹாபாக்கள் தான்)
இவ்வளவு தெளிவாக கூறியிருக்கும் போது ரிளாகான்  பரேலவி தவறான வாதத்தை வைப்பதானது மிகப்பெரிய மோசடியும், நேர்மையற்ற நடைமுறையுமாகும்.

ரிளாகான் பரலேவி அவரின் நூலான الدولة الملكية ல் அபுத்தர்தா ரளி அவர்கள் நபி ஸல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸை கொண்டுவந்துள்ளார்.அந்த ஹதீஸின் விரிவுரையில் கூறுகிறார் குர்ஆனின் விரிவுரையில் பலதரப்பட்ட நுணுக்கங்களை கையாளும் ஆற்றல் பெறும் வரை பரிபூரணத்துவ மார்க்க விற்பன்னராக முடியாது.ஆக காஸிம் நானூதவி ரஹ் அவர்கள் சாமானிய ஜனங்கள் என்று எவரைக் குறித்து கூறினாரோ,ரிளாகானின் கூற்றும் அதுதான்.

வினாவும் விளக்கமும்:

சாமானிய ஜனங்களின் கருத்தின்படி நபி (ஸல்) அவர்கள் ‘காதமுன் நபிய்யீன்’ என்பதற்குப் பொருள் அவர்கள் இறுதி நபியாகவும், அவர்களுக்குப் பிறகு வேறு நபி இல்லை என்பதாகும். இதுதான் காஸிம் நானூதவி ரஹ் அவர்கள் கூறியது இதில் நமக்கு கேள்வி எழலாம். இதுதான் நமது அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாடும் பிறகு எப்படி இது சாமானிய ஜனங்களின் கருத்தாகும்?

விளக்கம்:

மெளலானா காஸிம் நானூதவி
ரஹ் அவர்கள் காலத்தால் நபியவர்கள் இறுதியானவர்கள் அவர்களுக்குப் பின்பு வேறு நபி இல்லை என்பதை சாமானிய ஜனங்களின் சிந்தனை என்று சொல்லவில்லை.ஏனெனில் காஸிம் நானூதவி ரஹ் அவர்களின் கொள்கையும் அதுதான்.இதை நாம் மறுப்பின் ஆரம்பத்திலேயே கூறியுள்ளோம்.இங்கு மெளலானா கூறவருவாதானது காதமுன் நபிய்யீன் என்பதானது خاتم زمانی (காலத்தால் இறுதியானவர்) என்று மட்டும் பொருள் கொள்வதைதான் சாமானிய ஜனங்களின் கருத்து என்று கூறியுள்ளார்.

ஆனால் காதமுன் நபிய்யீன் என்பதில் خاتم مکانی خاتم مرتبی என்ற இருவிதமான அர்த்தமும் உள்ளது.மேலும் எந்த ஒரு ஸஹாபியும்,முபஸ்ஸிரும் அதைக்கொண்டு خاتم زمانی என்று மட்டும் பொருள் கொண்டதாக நிரூபணமாகவில்லை. எனவே காதமுன் நபிய்யீன் என்பதற்கு குறிப்பான பொருளை தருவதைதான் சாமானிய ஜனங்களின் கருத்து என காஸிம் நானூதவி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை தெளிவாக விளங்கமுடிகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live