21 Feb 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 15

 ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்கள்  என்ற பரலேவிகளின் ஷஃபாஅத்தை மறுக்கின்றார் குற்றச்சாட்டிற்கான பதில்!

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) மீது இஸ்லாத்தின் எதிரிகளும்,ஓரிறைக் கொள்கை,சுன்னத்திற்கு எதிரான விரோதிகள் சுமத்தும்  குற்றச்சாட்டு:

பரலேவிய மெளலவி நயீமுத்தீன் ஸாஹிப் அவரின் நூலில்  (اطیب البیان رد تقویة الايمان ) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தக்வியதுல் ஈமானின் ஆசிரியர் அனைத்து நபிமார்களின் சிபாரிசை மறுக்கிறார்.நபிமார்களின் சிபாரிசானது பிரயோஜனமற்றது என்கிறார்.

இதன் பிறகு பரலேவிய மெளலவி மேலும்  குறிப்பிடுகிறார் இதனை ஷாஹ் இஸ்மாயில் முஃதஜிலாக்களிடம் கற்றுக்கொண்டார். அதுமட்டுமின்றி அவர்களை விட வழிகேட்டில் முன்னேறி விட்டார்.முஃதஜிலாக்கள் கூட ,குற்றம் மன்னிக்கப்படுவதற்குரிய ஷஃபாஅத்தை மறுத்தனர். அதே சமயத்தில் ஒருவரின் அந்தஸ்துகளை உயர்த்துவதற்கு செய்யப்படும் ஷபாஅத்தை ஏற்கின்றார்கள்.இதனை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் முற்றிலும் நபிமார்களின் ஷஃபாஅத்தை மறுக்கின்றார் அதனை கூடும் என்பதற்கும் எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை.(اطیب البیان )

பிறகு அவரின் நூலின் 19 பக்கத்தில் ஷபாஅத்தின் மஸ்அலாவானது உறுதியான ஆயத்துகளின் மூலம் எண்ணற்ற ஹதீஸ்களிலும் வந்துள்ளது.அனைத்து ஹதீஸ்கலை அறிஞர்களும் இது சம்பந்தமான அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். முஃதஜிலா வழி கெட்ட கொள்கையினர் கூட ஷபாஅத்தை மறுக்கின்றனர்.அவர்களின் நம்பிக்கை கூட முஃமீன்களின் அந்தஸ்தை உயர்த்த ஷபாஅத் உண்டு என்கின்றனர். வஹ்ஹாபிகள் ஷபாஅத்தின் விஷயத்திலே (முஃதஜிலா) மாணவர்கள் ஆசிரியர்களை விட முன்னேறி ஷபாஅத்தை முற்றிலும் மறுத்துவிட்டனர்.(اطیب البیان)

இனி இதற்கு தெளிவான மறுப்பை பார்ப்போம்!

ஹள்ரத் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) தக்வியதுல் ஈமானின் மூன்றாம் பிரிவில் ஷபாஅத்தைப் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் பேசுகிறார்.நாம் தக்வியதுல் ஈமானில் உள்ள விளக்கத்தை முன்வைக்கிறோம்.அதன் மூலம் பரலேவிகள் எவ்வளவு பெரிய அபாண்டத்தை சுமத்துகிறார்கள் என்பதானது அப்பட்டமாக விளங்கி கொள்ளலாம்!

தக்வியதுல் ஈமானில்  சூரா ஸபாவின் ஒரு வசனம்
و لا تنفع الشفاعة عنده الا لمن اذن له

கருத்து:

எவருக்கு அனுமதி அளித்தானோ அவரை தவிர அவனிடத்தில் சிபாரிசு பலனளிக்காது. இதன் பிறகு ஷபாஅத்தின் வகைகளை விவரிக்கிறார்.

அதில் முதல் வகை: அதிகமான மக்கள் நபிமார்கள்,நல்லோரின் ஷபாஅத்தின் விஷயத்தில் மறதியில் உள்ளனர்.அதனின் நோக்கத்தை தவறாக விளங்கி அல்லாஹ்வை மறந்துவிட்டனர். ஷபாஅத்தின் உண்மை நிலையை விளங்கி கொள்ளவேண்டும். ஷபாஅத் என்றால் "சிபாரிசு" என்று சொல்லப்படும்.சிபாரிசு என்பது உலகில் பலவிதங்களில் உள்ளது.உதாரணமாக அரசரிடத்தில் ஏதேனும் ஒரு நபர் திருடர் என்பது நிரூபணமாகிவிட்டது. ஏதேனும் தலைவரோ அல்லது மந்திரியோ அவனை காப்பாற்றுவதற்கு சிபாரி செய்வார்.அதே சமயத்தில் அரசனின் மனதில் திருடனை பிடித்து தண்டனை தருவதையும் சட்டத்திற்கு ஏற்ப தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்பதையும் நாடுகிறது. ஆனால் மந்திரி அல்லது தலைவரின் அழுத்தத்தால் அவரின் சிபாரிசை ஏற்பார்.அந்த திருடனின் குற்றத்தை மன்னித்துவிடுவார். ஏனெனில் மந்திரி அல்லது தலைவர் ஆட்சியில் மிகப்பெரிய உறுப்பினர் மேலும் அரசரின் ஆட்சிக்கு பொலிவையும், புத்துணர்ச்சியை கொடுப்பவர்.இந்த சமயத்தில் தலைவர் அல்லது மந்திரியின் சிபாரிசை ஏற்காமல்  இருந்தால் அவர்களுக்கு அதிருப்தி ஏற்படும்.பெரும் பணிகளெல்லாம் வீணவாகிவிடும்.ஆட்சியின் பொலிவானது  குன்றிவிடும். இதனைவிட தனது (அரசர்) கோபத்தை விழுங்கி கொண்டு திருடனை மன்னிப்பது சிறந்தது என்பதாக கருதுகிறார்.இதற்கு شفاعة وجاهة (பயத்தின் காரணமாக சிபாரிசை ஏற்பது என்று சொல்லப்படும்) இது போன்ற சிபாரிசானது அல்லாஹ்விடத்தில் ஒரு போதும் நிகழாது.

எவரேனும் நபியை,நல்லோரை, தலைவரை,ஷஹீதை, வானவரை,பெரியோரை அல்லாஹ்விடத்தில் இவ்வாறு செய்பவர்கள் என்று எண்ணுபவர் அசலில் இணைவைப்பாளர் மேலும் மிகப்பெரிய அறிவிலி
அவர் அல்லாஹ்வின் அர்த்தத்தை விளங்கி கொள்ளவில்லை. அதிபதிக்கெல்லாம் அதிபதியான அதிபதியான  ஆற்றலை அறவே விளங்கவில்லை. (தக்வியதுல் ஈமான்)

நடுநிலையுடன் கவனியுங்கள்! அல்லாஹ்வை அல்லாஹ் என்பதாக, அவனின் கம்பீரம் அடக்கியாளுதல்,ஆற்றலின் மீது ஈமான் கொண்டு, அதிபதிகளெக்கெல்லாம் அதிபதி,தனித்தவன் இணையில்லாதவன் என்பதாக விளங்கிய எந்த ஒரு முஃமீனாவது ஷாஹ் இஸ்மாயில் (ரஹ்) அவர்களின் கருத்தில் முரண்பாடு கொள்வாரா? சிபாரிசை மறுப்பவர் என்பதாக வாதிடும் பரலேவிகளே இது போன்ற சிபாரிசை அங்கீகரிக்க தயாரா? ஏற்கத்தயாரா?

அடுத்த வகை: அரசனின் மகன்களோ அல்லது மனைவியோ,அரசருக்கு பிரியமானர்களோ திருடனுக்கு  சாதகமாக சிபாரிசுக்காக  எழுந்து நின்றால் அரசர் அவர்களின் மீது கொண்ட பிரியத்தினால் நிர்பந்தமாக திருடனின் குற்றத்தை மன்னிப்பார்.இதற்கு "ஷபாஅத் முஹப்பத்" என்று சொல்லப்படும். நேசத்திற்குரியவர்கள் தன் மீது அதிருப்தி கொள்வதை விட திருடனின் குற்றத்தை மன்னிப்பதானது சிறந்தது.இது போன்ற சிபாரிசும் அவனிடத்தில் சாத்தியமில்லை.

எவரேனும்ஒருவரை அல்லாஹ்விடத்தில் இவ்வாறு சிபாரிசு செய்பவர் என்று கருதினால் அவர் இணைவைத்துவிட்டார். அறிவிலியாவார்.முதல் வகையைப் போன்றாகும். ஒருவருக்கு ஹபீபுல்லாஹ் என்பதாகவும்,ஒருவருக்கு கலீலுல்லாஹ் என்பதாகவும்,ஒருவருக்கு கலீமுல்லாஹ் என்பதாகவும் ஒருவருக்கு ரூஹுல்லாஹ் என்பதாகவும்,ஒருவரை ரஸுலுன் கரீம் என்பதாகவும்,ஒருவரை ரூஹுல் குதுஸ்,ரூஹுல் அமீன் என்பதாக அதிபதிகளின் அதிபதி தன்னுடைய அடியார்களுக்கு இது போன்ற மிகவும்  சிறந்த சிறப்பு பெயரை அளித்துள்ளான்.ஆனால் அதே சமயத்தில் அரசன் அரசன்தான்.அடிமை அடிமைதான். ஒவ்வொருக்கும் ஓர் அந்தஸ்து உள்ளது அதனை தாண்டி செல்ல முடியாது. அவனின் ரஹ்மத்தின் மூலம் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சியுடன் தலைவணங்குகிறது. அவ்வாறே அவனின் காரணமாக இலையும் தண்ணீராகி விடுகிறது.(தக்வியதுல் ஈமானில்)

நடுநிலைமையாக கவனித்து பாருங்கள்! இந்த கருத்தை எந்த ஒரு முஸ்லிமாவது மறுக்க முடியுமா? உலகில் வாழும் அரசர்களுக்கு  அதிகாரிகள்,தலைவர்கள், அரசனின் மகன்கள்,அரசனின் மனைவிமார்கள் அனைவரின் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்களின் பேச்சை ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தம் உள்ளது.தனது விருப்பம் கருத்திற்கு எதிராக நிர்பந்தித்தினால் மாற்றமாக செயல்படுகின்றனர். அல்லாஹ் இது போன்ற இயலாமையை விட்டும் பரிசுத்தமானவன்.

மூன்றாவது வகை: திருடனின் திருட்டானது நிரூபணமாகிவிட்டது. ஆனால் எப்பொழுதும் திருடுபவன் அல்ல.தீயகுணத்தால் தவறு நிகழ்ந்துவிட்டது.அந்த செயலின் மீது வெட்கப்படுகிறான்.இரவு, பகல் பயப்படுகிறான்.அரசனின் சட்டத்திற்கு ஏற்ப தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். அதற்கு கொடுக்கப்படும் தண்டனையையும் அறிந்துள்ளான். அரசனிடமிருந்து விரண்டோடி தலைவரிடம்,மந்திரிகளிடம் பாதுகாவல் தேடவில்லை. அல்லாஹ்விற்கு எதிரில் எந்த பாதுகாவலரையும் நாடவில்லை.இரவு,பகலாக அரசனை முன்னோக்கியுள்ளான்.  எனக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதனை செயல்படுத்துங்கள் என்கிறான். இந்த நிலையை பார்த்த அரசரின் உள்ளத்தில் இரக்கம் பிறக்கிறது.அதே சமயத்தில் (கொடுக்கப்பட வேண்டிய) தண்டனையை சிந்தித்தவாறு காரணமின்றி அவனை மன்னிப்தை விரும்பவில்லை.ஏனெனில் எங்காவது மக்களின் உள்ளங்களில் அரசாணையின் மதிப்பு குறைந்துவிடலாம்.எனவே அரசரின் விருப்பத்தின் பேரில் தலைவரோ அல்லது மந்திரியோ சிபாரிசு செய்வார்.அரசர், தலைவரின் கண்ணியத்தை அதிகரிக்க வெளிரங்கத்தில் சிபாரிசு என்ற பெயரில் திருடனை மன்னிக்கிறான்.அந்த திருடன் மந்திரிக்கு நெருக்கமானவர், அறிமுகமானவர் என்பதனால் சிபாரிசு செய்யவில்லை.மாறாக அரசனின் விருப்பத்தின் பேரில்தான் சிபாரிசு செய்கிறார்.ஏனெனில் மந்திரியானவர் அரசருக்குதான் மந்திரியே தவிர திருடனுக்கு அல்ல.இதற்கு شفاعة بالاذن (அனுமதி பெற்று சிபாரிசு செய்வதாகும்) இந்த வகையான சிபாரிசானது அல்லாஹ்விடத்தில் உண்டு.குர்ஆனிலும் ஹதீஸிலும்  நல்லோருக்கும் நபிமார்களுக்கும் சிபாரிசு உண்டு என்பது இந்த வகையான சிபாரிசாகும் (தக்வியதுல் ஈமான்)

தக்வியதுல் ஈமானின்  மேற்சொன்ன அனைத்து கருத்துக்களின் மூலம் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஒட்டுமொத்த ஷபாஅத்தையும் மறுக்கவில்லை.மாறாக முதல் இரண்டு வகையான ஷபாஅத்தைதான் மறுக்கின்றனர்.

மூன்றாவது வகையான شفاعة بالاذن கூடும்  என்பதாகதான் கூறுகிறார்கள்.

அடுத்து இந்த வகை ஷபாஅத் மட்டும் அனுமதிக்கப்பட்டது என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்!

அல்லாமா அபுல் பரகாத் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் நஸஃபி ரஹ் அவரின் தஃப்ஸீரில் கூறியுள்ளார்

اي ليس لاحد يشفع عنده الا باذنه
ஒருவருக்கும் அவனிடத்தில் சிபாரி செய்ய வழியில்லை அவனுடைய அனுமதியை கொண்டே தவிர (مدارک التعویل )

இமாம் பஙவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

نما من شفيع الا م بعد اذنه
அவனுடைய அனுமதிக்கு பிறகே தவிர சிபாரிசு செய்பவர் எவருமில்லை.

இமாம் பஙவி ரஹ் அவர்கள் மற்றோர் இடத்தில் எழுதுகிறார்

معناه ان الشفعاء لا يقفون الا باذنه
சிபாரிசு செய்பவர்கள் அவனுடைய அனுமதியை கொண்டே தவிர சிபாரிசு செய்ய முடியாது (معالم التنزیل)

 அல்லாமா காஜின் ரஹ்

 يعنى لا يشفع عنده شافع يوم القيامة الا بعد ان ياذن له فى الشفاعة
ஷபாஅத்திற்கு அனுமதி கொடுத்த பிறகுதான் நாளை மறுமை நாளில் ஷபாஅத் செய்பவர் ஷபாஅத் செய்ய முடியும்.(خازن)

அல்லாமா ஆலூஸி ரஹ்

 اي ما من شفيع لاحد فى وقت من الاوقات الا بعد اذنه تعالى المبنى على الحكمة الباهرة و ذلك عند كون الشفيع عن المصطفين الاخيار و المشفوع له ممن يليق بالشفاعة 
 ஷபாஅத் செய்பவரும் எந்த நேரத்திலும் யாருக்கும் ஷாபாஅத் செய்ய முடியாது.ஆனால் அல்லாஹ்வின் தெளிவான ஞானத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள அனுமதிக்கு பிறகே தவிர சிபாரிசு செய்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லோர்களிலிருந்து இருப்பார்.ஷபாஅத்தின் மூலமாக எவருக்கு சிபாரிசு செய்யப்படுமோ அவரும் ஷபாஅத்திற்கு தகுதியானவராக இருக்க வேண்டும்.

அல்லாமா அபுல் பரகாத் நஸஃபி

اي لا تنفع الشفاعة الا شفاعة من اذن له الرحمان اي اذن للشافع فى الشفاعة
அல்லாஹ் யாருக்கு சிபாரிசு செய்யும் அனுமதிகொடுத்தானோ அவரை  தவிர சிபாரிசு செய்வது பயனளிக்காது.

சூரா ஜுமரில் قل لله الشفاعة جميعا கருத்து நபியே கூறுவீராக ஷபாஅத் அனைத்தும் அல்லாஹ்விற்கு சொந்தமானது.இதனின் விரிவுரையில் ஹள்ரத் முஜாஹித் ரஹ் குறிப்பிட்டுள்ளார்கள்

لا يشفع احدا الا باذنه
 அவனின் அனுமதியை கொண்டே தவிர ஒருவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது.

(معالم)

 அல்லாமா ஆலூஸி ரஹ்

 المعنى انه تعالى ملك الشفاعة كلها لا يستطيع احد شفاعة الا ان يكون المشفوع مرتضى و الشفيع مأذونا له அல்லாஹுதஆலா சிபாரிசின் அரசன்.ஷபாஅத் செய்ய ஒருவரும் சக்தி பெறமாட்டார்.ஆனால் சிபாரிசு செய்பவர் அதற்கு அனுமதிக்கப்பட்டவராகவும் எவருக்கு சிபாரிசு செய்யப்படுகிறதோ பொருந்திக் கொள்ளப்பட்டவராக இருக்க வேண்டும்.(روح المعانی)

அல்லாமா காஸின் ரஹ்

  احد لا يشفع احد الا باذنه فكان الاشتغال بعبادته اولى لانه هو الشفيع فى الحقيقة و هو ياذن فى الشفاعة لمن يشاء من عباده

அல்லாஹ்வின் அனுமதியின்றி எவரும் சிபாரிசு செய்ய முடியாது.அவனுடைய வணத்தில் திளைத்திருப்பது சிறந்ததாகும்.ஏனெனில் எதார்தத்தில் ஷபாஅத் செய்பவன் அவன்தான்.அவனுடைய அடியார்களிலிருந்து யாருக்கு நாடுகிறானோ சிபாரிசு செய்வதற்கு அனுமதி அளிக்கிறான்
ஷபாஅத்தில் பரலேவிகளின் நிலைப்பாடு ரிளாகான் பரலேவி "பரகாதுல் இம்தாதிய்யா" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் நபி (ஸல்) அவர்கள் அனைத்து தேவைகளை நிறைவேற்றக்கூடியவர்கள் உலகம்,மறுமையின் அனைத்து விதமான நாட்டங்களும் அவர்களின் விருப்பத்தின் பேரில் உள்ளது.)

அதே பக்கத்தில் மற்றோர் இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் அல்லாஹுதஆலா சுவனத்தை நபி (ஸல்) அவர்களுக்கு சொந்தமாக்கி கொடுத்துவிட்டான்.அதில் எதனை விரும்புகிறார்களோ,எவரை விரும்புகிறார்களோ மன்னித்துவிடுவார்கள்.

பரலேவிய அறிஞர் மெளலவி முஹம்மத் அம்ஜத் அலி அவரின் நூலான بہار شریعت ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு துணை ஆட்சியாளராக உள்ளார்கள். உள்ளார்கள்.முழு உலகமும் நபி ஸல் அவர்களின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. எதனை விரும்புவார்களோ செயல்புரிவார்கள்.எவரை விரும்புவார்களோ அவர்களுக்கு கொடுப்பார்கள்.எவரை திருப்பி அனுப்ப விரும்புவாரோ அதன்படி செயல்படுவார்கள்.முழு உலகத்தின் அதிபதி முழு பூமியும் அவரின் ஆளுமைக்கு உட்பட்டது.முழு சுவனமும் அவர்களுக்கு உரிமையாக்கி கொடுக்கப்பட்டுவிட்டது. நரகம்,சுவன சாவியானது நபி ஸல் அவர்களின் கரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

(கருத்து) ஆக பரலேவி கொள்கையானது இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தை எப்படி ஈமான் கொள்வார்கள்? இதனை வைத்துப் பார்க்கும் போது ஷபாஅத் பரலேவிகளிடத்தில் அர்த்தமற்றது.இது நமது ஆய்வோ,சுயசிந்தனையோ அல்ல மாறாக ரிளாகான் பரலேவி குறிப்பிடுகிறார் தேவையுடையவர்தான் ஷபாஅத்தை விரும்புவார்.எங்கு தேவையுடையவர் இல்லையோ தனது கட்டளையால் விரும்பியதையெல்லாம் செய்யலாம் எனும் போது ஷபாஅத்தின் தேவை என்ன உள்ளது? (السنیہ الانیقہ فی فتاوی افریقی












0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live