3 Mar 2015

கபுரை கட்டுதல் ,வணங்குதல் ,விழா எடுத்தல் கூடாது.

கபுரை கட்டுதல் கூடாது.

 நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610 

கபுரை இடிக்க வேண்டும் .

 அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்), நூல்: முஸ்லிம் 1764

 ¤இந்த ஹதீஸில் "ஸவ்வா" என்று தான் வருகிறது "ஸவ்வா" விற்க்கு "ஒழுங்குபடுத்தல் " என்று தான் வரும் இடித்தல் என்று வராது என்று சிலர் கூறுகிறார் .அப்படி வைத்துக்கொண்டாலும் "தரைக்கு மேல் உள்ள எந்த கபுரையும்" என்ற வாசகமும் இந்த ஹதீஸில் இடம்பெறுகிறது .எனவே கபுரை சமன் செய்து ஒழுங்கு படுத்துதல் வேண்டுமென்று தான் ஹதீஸ் கூறுகிறதே தவிர கபுரை கட்டி எழுப்பி அழகுபடுத்தவேண்டும் என்பதல்ல.

 கபுரை வணங்குமிடமாக ஆக்கக்கூடாது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! தம் இறைத்தூதர்கன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: புகாரி 436

 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺯَﻛَﺮِﻳَّﺎ ﺑْﻦُ ﻋَﺪِﻱٍّ، ﻋَﻦْ
‏ ‎ ﻋُﺒَﻴْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ
ﻋَﻤْﺮٍﻭ، ﻋَﻦْ ﺯَﻳْﺪِ ﺑْﻦِ ﺃَﺑِﻲ ﺃُﻧَﻴْﺴَﺔَ، ﻋَﻦْ ﻋَﻤْﺮِﻭ ﺑْﻦِ ﻣُﺮَّﺓَ، ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﺍﻟْﺤَﺎﺭِﺙِ ﺍﻟﻨَّﺠْﺮَﺍﻧِﻲِّ، ﻗَﺎﻝَ : ﺣَﺪَّﺛَﻨِﻲ ﺟُﻨْﺪُﺏٌ، ﻗَﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﻤُﻮﺕَ ﺑِﺨَﻤْﺲٍ ﻭَﻫُﻮَ ﻳَﻘُﻮﻝُ : ” ﺃَﻟَﺎ ﻭَﺇِﻥَّ ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻗَﺒْﻠَﻜُﻢْ ﻛَﺎﻧُﻮﺍ ﻳَﺘَّﺨِﺬُﻭﻥَ ﻗُﺒُﻮﺭَ ﺃَﻧْﺒِﻴَﺎﺋِﻬِﻢْ ﻭَﺻَﺎﻟِﺤِﻴﻬِﻢْ ﻣَﺴَﺎﺟِﺪَ ، ﺃَﻟَﺎ ﻓَﻠَﺎ ﺗَﺘَّﺨِﺬُﻭﺍ

 நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 925 


உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்து விடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: முஸ்லிம் 918 

  கபுரில் விழாக்கோலம் கூடாது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும் .
 அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ( ரலி), நூல்: அபூ தாவூத் (1746)

1 comments:

 

makkah live

Sample Text

madina live