25 Feb 2015

பரேல்விகளின் கொள்கைகள் !

*பரேல்விகளின் கொள்கைகள் :

 01. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வரம்பு மீறிய நேசம். இதன் விளைவாக :

 • " நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு பதிலாக வந்துள்ளார்கள், அவர்களுக்கு இவ்வுலகை இயக்கும் சக்தி இருக்கின்றது, அவர்கள் விரும்பியதை செய்வார்கள்,தான் நாடியவர்களுக்குக் கொடுப்பார்கள், நாடியவர்களுக்கு கொடுக்காமல் தடுத்துக்கொள்வார்க ள் " என்றெல்லாம் நம்புகின்றனர்.

 • அத்துடன் நின்றுவிடாது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் படித்தரத்துக்கருகில் கொண்டு போய் வைக்கின்றனர். இதற்காதாரமாக அஹ்மத் ரிழா கான் அவர்களது கூற்றை சொல்லலாம். அதாவது " முஹம்மதே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களை அல்லாஹ் என்று என்னால் கூறிட முடியாது அதே வேளை அல்லாஹ்வை விட்டும் பிரித்திடவும் முடியாதுஉங்களது விடயத்தை அல்லாஹ்விடமே சாட்டி விடுகின்றேன் உங்களது யதார்த்த நிலையை அவனே நனகறிந்தவன் " என அவர் குறிப்பிடுகின்றார் .

• மறைவான அறிவு முழுமையாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங் கப்பட்டுருப்பதாகவும் நம்புகின்றனர்.

 • நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் மனிதர் என்பதை மறுத்து அவர்கள் அல்லாஹ்வினுடை ய பிரகாசத்தின் ஒரு பகுதி என்று நம்புகின்றனர்.

 • படைப்பினங்களது ஒவ்வொரு செயற்பாட்டையும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து இடங்களுக்கும் அனைத்து காலங்களிலும் சமுகமளித்து அவதானிக்கின்றார்கள் என்றும் நம்புகின்றனர். இக்கோட்பாட்டுக்கு அறபியில் " அகீததுஷ் ஷுஹூத் " எனப்படும். அதாவது " நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே தன் கரத்தை பார்ப்பது போல முழு உலகையும் அவதானிக்கின்றார் கள், தூரத்தேயிருந்தும் அருகிலிருந்தும் அனைத்து விதமான சத்தங்களையும் செவிமடுக்கின்றார் கள், முழுஉலகத்தையும் கண் சிமிட்டும் நேரத்தில் சுற்றி வருகின்றார்கள், அவதிப்படுவோருக்கு உதவுகின்றார்கள் , அழைப்போருக்கு விடையளிக்கின்றா ர்கள் " என்பதுதான் அதன் மார்க்க ரீதியான பொருள் என அஹ்மத் ரிழா கான் என்பவர் கூறுகின்றார்.

 02. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கடுத்த படியாக இறை நேசர்களுக்கு உலகை இயக்கும் சக்தி இருப்பதாக நம்புகின்றனர். இதன் விளைவாக :

 • அப்துல் காதிர் ஜைலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களை வரம்புமீறி சங்கைப் படுத்துகின்றனர். அஹ்மத் ரிழா கான் என்பவர் பின்வருமாறு சொல்கின்றார் : அப்துல் காதிர் ஜைலானி அவர்களே நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உலகை இயக்கும் ஆற்றல் அல்லாஹ்விடமிருந் து கிடைக்கப்பெற்றது. உங்களுக்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள் ளது. நீங்கள்தான் திறைக்குப் பின்னிருந்து உலகை இயக்கக்கூடியவர்.

 • நபிமார்கள் மற்றும் இறைநேசர்களிடமி ருந்து உதவி கோருமாறு இக்கொள் கையுடையோரை தூண்டுகின்றனர். நபிமார்கள் மற்றும் இறைநேசர்களிடமி ருந்து உதவி கோருவதைமறுப்போர் நாத்திகவாதிகளாவ ர் என அம்ஜத் அலி என்பவர் கூறுகின்றார்.

 • சமாதிகளை கட்டியெளுப்பி அதற்கு பூச்சுக்கள் பூசி அழகுபடுத்தி அதன் மேல் விளக்குகள் ஏற்றுவதுடன் அதைச் சுற்றி வலம் வருவார்கள்.

 • நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறந்த தினத்துக்காக ஏகப்பட்ட பணத்தை செலவு செய்து கொண்டாடுகின்றனர் . அந்நாளில் விசேடமாக அஹ்மத் ரிழா கான் அவர்களால் இயற்றப்பட் " ஸுரூருல் குலூப் பீ திக்ரல் மவ்லிதில் மஹ்பூப் " என்ற கட்டுக்கதைகள் நிறைந்த நூலை வாசிக்கின்றனர்.

 03. பரேல்விகள் தவிர்ந்தவர்களை இலேசாக காபிர்கள் என தீர்ப்பு வழங்கி விடுவார்கள். இதன் விளைவாக :

 • காபிர் என தீர்ப்பு வழங்கப்பட்டவ ர்களை காபிர்கள் என நம்பாதவர்களும் காபிர்கள் என்பதே இவர்களது தீர்ப்பு.

 • தேவ்பந்துடைய ஆலிம்களைக்கூட விட்டு வைக்காமல் அவர்களும் காபிர்கள் எனத்தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதற்காக ஹரமைனுடைய ஆலிம்கள் தேவ்பந்துடைய ஆலிம்களது உண்மை நிலையைப் புரியாமல் வழங்கிய தீர்புகள் சிலவற்றையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர் என பின்வரும் இனையம் சொல்கின்றது "http://www.dorar.net/enc/firq/2832"

 • இமாம் இப்னு தைமிய்யஹ் , இமாம் இப்னுல் கையிம் அல்- ஜௌஸிய்யஹ் இருவரும் காபிரகள் என்று சொல்வதுடன் இமாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் அவர்களை வெறுத்து வசைபாடுகின்றனர். 04. தொழுகை, நோன்பு போன்ற அமல்களை உரிய விதத்தில் நிலைநாட்டாமல் மரணித்திருந்தாலு ம் அதற்கென குறிப்பிட்ட தொகையை தர்மம் புரிந்தால் அது நிறைவேறி விடும் என்றும் நம்புகின்றனர்.

 * குறிப்பு : இவர்கள் அதிகமாக இந்தியா போன்ற நாடுகளில் வசிப்பதன் முடிவாக பல மதக்கோட்பாடுகளை உள்வாங்கியிருக்கி ன்றனர். அதிலும் குறிப்பாக ஹிந்து மதக்கோட்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ள ன. . ஸஜாகல்லாஹ் :ரஹ்மதுல்லாஹ் .

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live