25 Feb 2015

பரேல்வியா!!!

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தோற்றிவிக்கப்பட்டது தான் இந்த பரேல்வி கொள்கை!

 பரேல்விய்யாக் கொள்ளையைத் தோற்றுவித்தவர்: -

 இந்தக் கொள்கையைத் தோற்றுவித்தவரின் பெயர் ‘அஹமது ரிதா கான் இப்னு தகீ அலிகான்’ என்பதாகும். இவர் இந்தியாவிலுள்ள உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள பரேலி என்ற ஊரில் கி.பி. 1851 (ஹிஜ்ரி 1272) ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னைத் தானே ‘அப்துல் முஸ்தஃபா’ என்று அழைத்துக் கொண்டார். (பொருள் : முஸ்தஃபா (முஹம்மது) வின் அடிமை)

 அஹமது ரிதா கானின் ஆசிரியர்: - 

ஆங்கிலேய ஏகாதிபத்ய ஆட்சிக்கு எதிராக போராடிய முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சிதைத்து அவர்களின் வலிமையைக் குறைத்திட சதித்திட்டம் தீட்டி இஸ்லாத்தில் பிரிவுகளைத் தோற்றுவிக்கும் எண்ணத்தில் ஆங்கிலேயர்களின் ஆதரவில் காதியானிய்யா என்றொரு பிரிவைத் தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அல்- காதியானியின் உடன் பிறந்த மூத்த சகோதரர் அல்-மிர்ஸா குலாம் காதிர் பெக்(g) என்பவர் தான் பரேல்விய்யா பிரிவைத் தோற்றுவித்த அஹமது ரிதா கானின் ஆசிரியர் ஆவார்.

 அஹமது ரிதா கான் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவைகள் : -

 அன்பா அல் முஸ்தஃபா .

பரேவிய்யாவின் வழிதவறிய கொள்கைகளில் சில : -

 ¤முஹம்மது நபி (ஸல்) அவர்கள் படைப்பினங்களை அனைத்தையும் நிர்வகிக்கும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பிக்கை கொள்வது. இறை பாதைகளில் தங்களை அர்பனித்த துறவிகளும், இறைநேசர்களும் படைப்பினங்களில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்வது.

 ¤முஹம்மது நபி (ஸல்) அவர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அவர்களிடமே தேவையைக் கேட்கும் அளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

 ¤முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எல்லா நேரத்திலும் மறைவான ஞானம் இருக்கிறது என்று நம்பிக்கை கொள்வது. ¤முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் ஒளி என்று நம்பிக்கை கொள்வது. இறைத்தூதர்களிடத்திலேயும், மற்ற மஹான்களையும் அழைத்து உதவி தேடலாம் என்று நம்பிக்கை கொள்வது. இன்னும் பல கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவர்களின் சில கொள்கைகள் சூபிசத்தை போதிக்கிறது, பல கொள்கைகள் ஷியானிசத்தை போதிக்கிறது .அதனால் தான் இவர்களின் பல அறிஞர்கள் ஷியா மதத்திற்க்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (இன்னும் வரும்)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live