27 Mar 2015

கபுரை உயர்த்தக் கூடாது! - மார்க அறிஞர்கள்.

இஸ்லாமிய மார்கத்தில் கபுரை கட்டுவது கூடாது .மாறாக கபுர் ஜனாஸாவை அடக்கம் செய்த பிறகு எப்படி தரையிலிருந்து 1 ஜான் உயரமாக இருக்குமோ அவ்வாறு இருப்பது தான் சுன்னத் ! என்று நம் மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் . ஆனால் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் உள்ள பரேல்வி ஜமாத் மனோ இச்சையை பின்பற்றி கபுரை பற்றி கூறும் ஹதீஸுக்கெல்லாம் தவறான விளக்கம் கூறிக்கொண்டிருக்கிறார்கள் . அவர்களை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன் .

 அறிஞர்களின் கருத்துக்கள் பின்வருவன :

 அஹமது ரிழா கான் (பரேல்வி) அவர்கள் கூறும் போது : இது சுன்னத்திற்க்கு எதிராக உள்ளது .என் தந்தையின் கபுரையும் ,என் தாயின் கபுரையும் ,என் சகோதரனின் கபுரையும் பார்த்திருக்கின்றோன் அவர்கள் அனைவரின் கபுரும் உயரமான இருந்தது இல்லை ஒரு ஜான் உயரத்தை தவிர.[மல்புஜாத் அஹமது ராஜ கான் 3 /57]

 அபூ மிச்லஜ்(ரஹ்) கூறுகிறார்கள் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாக:

 ‎ﺇﻥ ﺗﺴﻮﻳﺔ ﺍﻟﻘﺒﻮﺭ ﻣﻦ ﺍﻟﺴﻨﺔ ﻭﻗﺪ ﺭﻓﻌﺖ ﺍﻟﻴﻬﻮﺩ ﻭﺍﻟﻨﺼﺎﺭﻯ ﻓﻼ ﺗﺸﺒﻬﻮﺍ ﺑﻬﻢ 

 கபுர் (ஒரு ஜான்) அளவு உயர்ந்திருப்பது இருப்பது சுன்னத் .யூதர்களும் ,கிருஸ்துவர்களும் தான் கபுரை உயரமாக கட்டி எழுப்புவார்கள் . [முஸன்னிப் இப்னு அபி சைபா 3/342]

 காஸிம் பின் முஹம்மது பின் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறுகினார்கள் :

 ‎ ‎ﻗﺎﻝ ﻳﺎ ‎ ‎‏ ﺑﻨﻲ ﻻ ﺗﻜﺘﺐ ﻋﻠﻰ ﻗﺒﺮﻱ ﻭﻻ ﺗﺸﺮﻓﻨﻪ ﺇﻻ ﻗﺪﺭ ﻣﺎ ﻳﺮﺩ ﻋﻨﻲ ﺍﻟﻤﺎﺀ 


. ஓ ,மகனே! என் கபுரில் எழுதவேண்டாம் .என் கபுரை உயர்த்த வேண்டாம் .[முஸன்னிப் இப்னு அபீ ஸைபா 3/335]

 அல்லாமாஹ் இப்னு ஹம்மாம் ஹனபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
 ‎ﻓﻬﻮ ﻋﻠﻰ ﻣﺎﻛﺎﻧﻮﺍ ﻳﻔﻌﻠﻮﻧﻪ ﻣﻦ ﺗﻌﻠﻴﺔ ﺍﻟﻘﺒﻮﺭ ﺑﺎﻟﻨﺒﺎﺀ ﺍﻟﺤﺴﻦ ﺍﻟﻌﺎﻟﻰ ﻭﻟﻴﺲ ﻣﺮﺍﺩ ﺫﻟﻚ ﺍﻟﻘﺪﺭ ﺑﻞ ﻗﺪﺭ ﻣﺎ ﻳﺒﺪﻭ ﻣﻦ ﺍﻻﺭﺽ ﻭﻳﺘﻤﻴﺰ ﻋﻨﻬﺎ

 "ஸவ்வா " என்பது உயர்ந்த கபுர்களை அழகிய முறையில் சமன் செய்ய வேண்டும் என்பதை பற்றி கூறுகிறது. மாறாக மண்ணைக் கொண்டு கட்டி எழுப்புவதை கூறவில்லை. ஆகவே மண்ணைக் கொண்டு கட்டி எழுப்பாமல் சாதாரணமாக இருக்க வேண்டும் . [பத்ஹுல் கதீர் 2 / 101]

 அல்லாமா அலாவுத்தீன் அல்- மர்தீனீ அல்-ஹனபி:

 ‎ﺍﻻﺳﻮﻳﺘﻪ ﺑﺎﻟﻘﺒﻮﺭ ﺍﻟﻤﻌﺘﺎﺩﺓ
 “ஸவ்வா" விற்கு விளக்கம் கபுர்களை சமன் செய்தல் ! [அல்- ஜவ்ஹரூன் நபி அலல் பைஹகி4/3]

 இமாம் லைத்பின் சாத் (ரஹ்) கூறுகிறார்கள்:

 ‎ ‎ﺑﻨﻴﺎﻥ ﺍﻟﻘﺒﻮﺭ ﻟﻴﺲ ﻣﻦ ﺣﺎﻝ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ، ﻭﺇﻧﻤﺎ ﻫﻮ ﻣﻦ ﺣﺎﻝ ﺍﻟﻨﺼﺎﺭﻯ

 கபுரை உயரமாக கட்டுவது முஸ்லீம்களின் வழக்கம் அல்ல. மாறாக கிருஸ்துவர்களின் வழக்கம் . [முஹ்தஸர் இஃதிலப்F அல் புகஹா ,அபுபக்கர் ஜஸ்ஸாஸ்(370 h) 1/407

இமாம் பைஹகீ குறிப்பிடுகிறார்கள் :

 ‎ﻭﺭﻓﻊ ﻗﺒﺮﻩ ﻣﻦ ﺍﻷﺭﺽ ﻧﺤﻮﺍ ﻣﻦ ﺷﺒﺮ

، நபியவர்களின் கபுர் தரையிலிருந்து ஒரு ஜான் உயரம் தான் உயர்ந்திருந்தது. [சுனன் அல் குப்ரா 3/ 410]

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live