11 Feb 2015

ஹிஜாபின் போது பெண்கள் முகத்தை மறைத்தல் .

அல்லாஹ் கூறுகிறான்:

 தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும். 

அல்லாஹ் கூறுகிறான்:

 ”( இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” ( அல்குர்ஆன்: 24:31)

 ”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” ( அல்குர்ஆன்: 33:53)

 இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்குவதை குறிக்கும் மேலும் திரைக்கு பின்னால் என்றால் முகமும் மறைபடும் என்பதை தெளிவுபடுத்துகிறது. மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும். ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்கு ண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது

, ”அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகு ம்.” (அல்குர்ஆன்:33: 53) என்று குறிப்பிடுகிறான்.

 இன்னும், அல்லாஹ் கூறுகிறான்:

 ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கு ம் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” ( அல்குர்ஆன்: 33:59)

 இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22ழூ ழூ110 ல் சொல்கிறார்கள். மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்வுத் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள். அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அபுஉபைதா போன்றோர் கூறுகின்றனர்.

 பெண்கள் தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்கள்.

அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "நாம் எமது முகத்தை ஆண்களை விட்டும் மூடக்கூடியவர்களாக இருந்தோம். அதற்கு
முன்பதாக இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது தலையை சீவக்கூடியவர்கலாக இருந்தோம்.
(ஆதாரம் : ஹாகிம் - 1:454, இப்னு குஸைமா)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹு தஆலா முஹர்ஜிரான பெண்களுக்கு ரஹ்மத் செய்வானாக. (அவர்கள் அவர்களுடைய ஹிமார்களை கொண்டு அவர்களுடைய கழுத்திலிருந்து நெஞ்சுவரை நீளமான பகுதியின் மீது போட்டு கொள்ளட்டும்) என்ற ஆயத்தை அல்லாஹ் இறக்கியவுடன், அவர்களுடைய (மேலதிகமான) ஆடையைக் கிழித்து அதை கொண்டு முகத்தை மூடிக்கொண்டார்கள். (ஆதாரம் : புஹாரி -4758)

இப்னு மஸ்வூத்  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள்
சொன்னார்கள். "பெண் என்றாலே அவரத்து தான் (அதாவது முழுமையாக மறைக்க பட வேண்டியவள் தான்). அவள் (வீட்டை விட்டு) வெளியானால் ஷைத்தான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து விடுகிறான். அந்த பெண் தனது ரப்புடைய ரஹ்மத்திற்கு மிக நேருக்க மாக இருப்பதெல்லாம், அவளோ வீட்டின் மறைவான உட்பகுதியில் இருக்கும் போதுதான்.
(ஆதாரம் : திர்மிதி 1173, இப்னு ஹிப்பான் 7:446 - 5570, இப்னு குஸைமா -
1686, 1687, தபரானி - 10:122 - 10115)


உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பெருநாள் தொழுகை
தொளுமிடத்துக்கு பெண்களையும் அனுப்பும்படி நபியவர்கள் கூறிய பொழுது,
பெண்கள் கேட்டார்கள் "யா ரசூலல்லாஹ்! எங்களின் ஜில்பாப் இல்லாதவள்..?"
(என்ன செய்வது?). அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், "தன் சகோதரி அவளின் ஜில்பாபை அவர்களுக்கு உடுப்பட்டட்டும்". (அதில் ஜில்பாப் என்று
வருகின்றது (ஆதாரம் : புகாரி - 351. முஸ்லிம் - 2056)


முகமூடியைத்தான் நபி
அவர்களின் காலத்தில் ஜில்பாப் என்று சொல்லி இருக்கின்றார்கள்
என்பதற்குதான் ஆயிஷா நாயகி அவர்களின் கூற்றை ஆதாரமாக முன்வைத்தேன் .ஜில்பாப் என்றால் முகமூடி என்பது என்னுடைய சொந்த கருத்து இல்லை.மாறாக ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்து

புகாரியில் வரக்கூடிய ஆயிஷா (ரழி) அவர்களின் விடயத்தில்
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.

அதில் அவர்களே சொல்கின்றார்கள்.


فبينا أنا جالسة في منزلي غلبتني عيني فنمت، وكان صفوان بن المعطل السلمي
ثم الذكواني من وراء الجيش فأدلج فأصبح عند منزلي، فرأى سواد إنسان نائم،
فأتاني فعرفني حين رآني، وكان يراني قبل الحجاب، فاستيقظت باسترجاعه حين
عرفني، فخمرت وجهي بجلبابي،


 இதன் தமிழ் மொழி பெயர்ப்பு :-

ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார்.
பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப்
பார்த்திருந்தார். எனவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து
கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, 'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண்
விழித்தேன். உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக்
கொண்டேன்.இதில் இந்த வார்த்தையை கவனியுங்கள் . 


ஜில்பாப் என்றால் முகமூடி என்று அவர்களே சொல்கின்றார்கள் فخمرت وجهي بجلبابي - உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன்.
இது ஜில்பாப் என்றால் முகமூடி என்பதற்கான பலமான ஆதாரமாகும்.
(இதில் ஹிஜாப் என்றால் என்ன என்றும் தெளிவாகின்றது.
ஹிஜாப் என்றாலும் முகமூடிதான்.)



 ”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)

 ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹுத்தஆலா வின் மீது சத்தியமாக முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக சூரத்துன் நூரிலே அல்லாஹுத்தஆலா ஹிஜாபுடைய ஆயத்தை இறக்கியவுடன் அவர்களின் மேலதிகமான ஆடைகளைக் கிழித்து அதைக் கொண்டு தங்கள் முகத்தை மூடிக் கொண்டார்கள். (புஹாரி 4578) 

மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹுத்தஆலா வின் வேதத்தை உண்மைப் படுத்துவதிலும் அவன் இறக்கி வைத்ததை ஈமான் கொள்வதிலும் அன்சாரிப் பெண்களை விட சிறந்தவர்களை நான் பார்த்ததில்லை. சூரத்துன் நூரிலே அல்லாஹுத்தஆலா அவர்களுடைய ஹிமார்களைக் கொண்டு அவர்களுடைய மார்புப் பகுதிகளின் மீது போட்டுக் கொள்ளட்டும் என்ற ஆயத்தை இறக்கி வைத்ததும் அவர்களின் ஆண்கள் அவ் வசனம் இறக்கிவைக்கப்பட்ட தை விரைந்து வந்து அப் பெண்களிடம் ஓதிக் காண்பித்தார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் தமது ஆடையின் பக்கம் எழுந்து சென்றார்கள் . பஜ்ருத் தொழுகையை நபியவர்களுக்குப் பின்னால் தலையையும் முகத்தையும் மூடியவர்களாகத் தொழுதார்கள். அவர்களுடைய தலைகள் மீது காகங்கள் குந்தியிருந்ததைப் போன்று இருந்தது.
(அபுதாவுத்32/4090) 

ஜில்பாப் பற்றி :

 1.இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் உபைத் அஸ்ஷல்மான்(ரலி) அவர்கள் "ஜில்பாபை "கூறும்போது : முகத்தையும் சேர்த்து"ஜில்பாபை " கொண்டு உடல் முழுவதையும் மறைத்துக்கொள்ள வேண்டும், ஆனால் ஒரே கண்ணைத் தவிர அந்த கண் அவள் பார்பதர்காக. 
(தப்ஸீர் அல்-குர்துபி ,சூரா அல்-அஹ்ஜாப் : 59) 

2.அல்-தபரி மற்றும் அல் -முன்திரி அவர்கள் "ஜில்ஜாபை"பற்றி கூறும்போது : "ஜில்ஜாபில்" இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் குடதாஹ்(ரலி) முகத்தையும் சேர்த்து உடல் முழுவதையும் மறைத்தல் வேண்டும் ,அவளின் கண்களை தவிர என்று கூறினார்கள் ..
(ரூஹீல் மானி, அத்தியாயம் 22, பக்கம்.89)

 பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபி வழியிலும் ஆதாரங்கள் உள்ளன. அல்லாஹ் போதுமானவன் !

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live