10 Feb 2015

3,40 நாள் ,4 மாதம் என ஜமாதில் செல்லலாமா?

மார்க்க கல்வியை கற்பதற்க்காக (குர்ஆன் ஓதத்தெறியாத வயதானவர்கள் மதரஷா செல்ல முடியாது அதன் காரணமாகவும்) 3 ,40 நாட்கள் என ஜமாதில் செல்கிறார்கள் இதற்க்கு இஸ்லாதில் அனுமதியிருக்கிறதா ?

என்றால் அனுமதியிருக்கிறது. இன்னும் சிலர் (குடும்பத்திற்க்கு செய்ய வேண்டிய கடமையிருக்க) குடும்பத்தை விட்டுவிட்டு செல்கிறார்களே என்று கூறுகிறார்கள் .

 எமது பதில்: ஜமாதில் ஆயுல் முழுவதும் செல்லலாம் ஆனால், நபியவர்கள் கூறியது போல குடும்பத்திற்க்கு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதன் காரணமாக தான் 3 ,40 நாட்கள் ,4 மாதங்கள் என நேரத்தையும் ,நாட்களையும் ஒதுக்கிக் கொண்டு ஜமாத் செல்கிறார்கள்.

ஜமாத் செல்லலாம் என்பதற்க்கான ஆதாரம் :

 (நபியே) நீர் கூறும், ''பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள்'' (29:9)

 'ஒருவர் ஓர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

 ''நிச்சயமாக கல்வியைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் கல்வியேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூ தாவுத் ;, அஹ்மத்)

 கல்வியின் சிறப்பைக் கூறும் நமது முன்னோர் சிலரின் கருத்துக்களை கீழே கவனிப்போம்.

 முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ''கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை அல்லாஹ்வுக்காகக் கற்பது இறையச்சமாகும். அதனைத் தேடுவது இபாதத்தாகும். அதனை மீட்டுவது தஸ்பீஹாகும். அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாதாகும். அறியாதவருக்கு அதனைக்கற்பிப்பது ஸதக்காவாகும். அதனை அதற்குரியவர்களுக்கு அளிப்பது நற்கருமமாகும். அது (அறிவு) தனிமையின் தோழன், மார்க்கத்தின் வழிகாட்டி, இன்ப துன்பத்தின் போது உதவியாளன், நண்பர்க்கு மத்தியில் மந்திரிஇ நெருக்கமானவர்களுக்கு மத்தியில் நெருங்கியவன்இ சுவனப் பாதையின் ஒளிவிளக்கு; இதனைக் கொண்டு அல்லாஹ் சிலரை உயர்த்தி, அவர்களை நன்மையான விடயங்களுக்கு முன்னோடிகளாகவும் ஆக்கிவிடுகின்றான். அவர்களின் அடிச்சுவட்டில் பலர் செல்வர். அவர்களின் தோழமையை மலக்குகளும் விரும்புவர். மலக்குகள் அவர்களைத் தங்களது இறக்கைகளினால் தடவிடுவர். கடலில் உள்ள மீன்கள், ஏனைய ஜீவராசிகள், கரையில் உள்ள மிருகங்கள், கால்நடைகள், வானம், நட்சத்திரங்கள் உட்பட பசுமையான, காய்ந்த, உலர்ந்த அனைத்தும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றன..........

1 comments:

  1. கடைசி வரை ஜமாத் செல்ல ஆதாரம் கொடுக்கவில்லை...
    ஜமாத் செல்லலாம் என்பதற்க்கான ஆதாரம் : (நபியே) நீர் கூறும், ''பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள்'' (29:9) /// இது ஆதாரமா ???
    சுற்றி திரிய வேண்டும் என்றால் ஏதனும் டிராவல்ஸ்ஸை வைத்துக் கொண்டு அல்லாஹ்வுடைய படைப்புகளை பார்க்கலாமே!!!
    அதற்கு ஏன் ஜமாத் என்ற பெயரில் மார்க்க சாயத்தை பூசுகிறீர்கள்???
    வாழ்க்கை முழுவதையும் ஜமாத்துக்காக செல்லாம் என்று சொன்னீர்கள்...
    அல்லாஹ் உடைய தூதர் உங்களுக்கு அனுமதி கொடுத்தார்களா???
    அல்லது செய்து காட்டினார்களா???
    இப்படி நீங்களே இந்த மார்க்கத்தை கடினமாக்கி கொள்ளாதீர்கள்...

    ReplyDelete

 

makkah live

Sample Text

madina live