10 Feb 2015

3,40நாட்கள்,4மாதம் ஜமாதில் செல்வதை ஏன்? ஜிஹாத்(அல்லாஹ்வின்பாதை) என்கிறீர்கள்?.

முன்தின பதிவில் ஜமாத் செல்வது மார்க்க கல்வியை கற்பதற்க்காகவும்
,தன் சீர்திருத்தம் செய்வதற்க்காகவும் என்பதை விளக்கமாக பாத்தோம் .

 மார்க்க கல்வி கற்பதை பற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகிறது என்பதனை பார்ப்போம் !

கல்வி கற்பது ஜிஹாத் :

 ﻗﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " : ﻣﻦ ﺟﺎﺀ ﻣﺴﺠﺪﻱ ﻫــــــﺬﺍ ﻟﻢ ﻳﺄﺗﻪ ﺇﻻ ﻟﺨﻴﺮ ﻳﺘﻌﻠﻤﻪ ﺃﻭ ﻳﻌﻠﻤﻪ ﻓﻬﻮ ﺑﻤﻨﺰﻟﺔ ﺍﻟﻤﺠﺎﻫﺪ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ. " ... ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ ‏‎ 
யார் கல்வி கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் அல்லது கற்று க்கொடுக்கும் நோக்கத்தில் என் பள்ளிக்கு வருவாரோ அவர் அல்லாஹ்வி ன் பாதையில் போர்செய்யும் போராளியின் அந்தஸ்து பெறுகிரார் என்றார்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் கல்வியைத் தேடிப்புறப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளவர் ஆவார்., திரும்பி வரும் வரையில்!, (நூல்: திர்மிதி)

 அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் நமது இந்த மஸ்ஜிதுக்கு வந்து கல்வி கற்கிறாரோ அல்லது கற்றுக் கொடுக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போர் புறிபவர் போன்றாவார் மேலும் கல்வி ஈடுபாடல்லாத வேறு நோக்கத்திற்காக வருபவருக்கு உவமை யாதெனில், ஒரு மனிதரைப் போன்றது., அவருக்கு ஒரு பொருள் பிடித்தமாக இருக்கிறது., ஆனால் அதை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கப் பெறவில்லை. (ஹாகிம்)

 ஒரு மனிதன் கல்வி கற்பதற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கஷ்டமும் சுவனத்தை நோக்கிச் செல்லும் பாதையை அவன் முன்னால் திறந்து வைக்கிறது! நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்து சென்றால், சுவனத்தை நோக்கிச் செல்லும் பாதையை அல்லாஹ் அவருக்கு இலகுவாக்கிக் கொடுக்கிறான்,, (நூல்: புகாரி: முஸ்லிம்) 

  எனவே இதன் மூலம் ஜமாத்தில் செல்வதும் ஜிஹாத்(அல்லாஹ்வுடைய பாதை) தான் என விளங்கி கொள்ள முடிகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live