10 Feb 2015

தப்லீக் ஜமாத் எப்போது தொடங்கப்பட்டது?

இந்திய சுதந்திரத்திற்க்கு முன்பு இந்தியாவில் முஸ்லீம்களை விட இந்துக்கள் அதிகமாக இருக்கும் கால கட்டத்தில் முஸ்லீம்களிடத்தில் தொழுகையில்லாமல், இந்துக்களுடைய கலாசாரத்தை முஸ்லீம்கள் சிறிது ,சிறிதாக பின்பற்ற ஆரம்பித்தார்கள் .

இதனைக்கண்ட மௌலான இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலையினால் "முஸ்லீம்கள் முஸ்லீமாக வாழவேண்டும் ,அவர்களை பள்ளியின் பக்கம் ஒன்றினைக்க இணைக்கவேண்டும்" என நினைத்தார்கள் .

அதற்க்காக 1926- ல் தொடங்கப்பட்டது தான் இந்த தப்லீக் ஜமாத் . "தப்லீக் ஜமாத்" என்பதற்க்கு "நம்பிக்கையை வழுப்படுத்த வந்த சமுதாயம்" என்று பொருள் காணப்படுகிறது.1946- ல் அமெரிக்கா ,ஆசியா, மலேசியா இதைப்போன்ற நாடுகளுக்கும் தப்லீக் ஜமாத் விரிவடைந்தது.

 தப்லீக் ஜமாத் ஒரு இயக்கம் இல்லை:

 தப்லீக் ஜமாத் ஒரு இயக்கம் இல்லை ! மாறாக இதுவொரு "முழு உம்மதின் பொறுப்பு "என்று நாள்தோறும் தப்லீக் மர்கஸில் கூறப்படும் இந்த வார்த்தை தப்லீக் இயக்கம் அல்ல என்பதற்க்கு மாபெரும் சான்றாக அமைந்துக்கொண்டிருக்கிறது .மேலும் தப்லீக் ஜமாதிற்க்கென்று ஒரு கொடியில்லை ,போஸ்டர் ஒட்டி விளம்பரமில்லை ,மேடை போட்டு பிறரை கிழிக்கும் பழக்கமில்லை, காசு வசூலிக்கும் ஆட்களுமில்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live