10 Feb 2015

இஸ்லாதில் சாப்பாட்டு முறையும்,அதன் ஒழுக்கங்களும் (பகுதி-2)

இருமடங்காக உண்ணக்கூடாது:

 ஹள்ரத் ஜப்லதுப்னு ஸஹீம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நாங்கள் (விருந்தில்) பேரீத்தம் பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஹள்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களை கடந்து சென்றார்கள். அவர்கள் எங்களிடம் இரண்டிரண்டாக சாப்பிடாதீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு சேர்த்து சேர்த்து சாப்பிடுவதை தடுத்துள்ளார்கள் என்று கூறினார்கள். பிறகு ஆனால் அந்த மனிதரும் (ஒரே தட்டில் சாப்பிடும் மற்றொருவர் சேர்த்து சாப்பிடுவதற்கு) அனுமதி யளித்தால் சாப்பிடலாம்” என்று கூறினார்கள். (நூல் : புகாரி)

 ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே தட்டில் சாப்பிடும் பொழுது அனைவரின் பங்கும் அதில் இருக்கிறது. எனவே வேக வேகமாக சாப்பிடுவது அதிகமாக எடுத்து சாப்பிடுவது அவர்களின் பங்கில் பாதிப்பு ஏற்படும் என்பதினால் அப்படி சாப்பிடக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். மாறாக ஒரு தட்டில் ஒருவர் சாப்பிடும்போது எப்படி வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்) எனினும் சிறுசிறு கவளமாக சாப்பிடுவதே சிறந்தது.

 சாய்ந்து கொண்டு சாப்பிடுவது கூடாது:

 ஹள்ரத் அபூ ஜுஹைஃபா ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்” என்று கூறினார்கள். (நூல் : புகாரி)

  நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது :

ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டு குடிப்பதை வெறுத்தார்கள். (நூல் : முஸ்லிம்) 

  பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். (அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) நூல் : புகாரி-153)

 அளவோடு உண்டு வளமோடு வாழ்:

ஹள்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பை களில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும். (நூல் : திர்மிதி)

 ஹள்ரத் அபூஹுரைரா (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : உணவை சற்று ஆற வைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் மிகச் சூடான உணவில் பரக்கத் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித்)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live