10 Feb 2015

இஸ்லாதில் சாப்பாட்டு முறையும்,அதன் ஒழுக்கங்களும் (பகுதி-3).

உணவை நுகராதீர்கள்: 

 ஹள்ரத் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : மிருகங்கள் உணவை நுகருவதைப் போன்று நீங்கள் நுகராதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித்) 

  சாப்பிட்ட பின் விரல்களை நன்றாக சூப்புவதும் தட்டை நன்றாக வழிப்பதும்:

  ஹள்ரத் அபூ ஹுரைரா ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் ஒருவர் சாப்பிட்டு ( முடிக்கு)ம் போது விரல்களை சூப்பட்டும். ஏனெனில் அவைகளில் எதில் இறைவனுடைய பரக்கத் (அருள்) இருக்கிறதென அவர் அறிய மாட்டார். இன்னும் கூறினார்கள் “(சாப்பிட்டு முடிக்கும் போது) தட்டை (நன்றாக) வழிக்கட்டும். ஏனெனில் உங்களுடைய உணவில் எதில் பரக்கத் இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

 கைகழுவிவிட்டு,சாப்பிட்டு முடித்ததும் ஓதும் துஆ:

  ஹள்ரத் ஸஃதுப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் சாப்பிட்டு முடித்ததும் அல்ஹம்துலில்லா ஹில்லதீ அத் அமனா வஸகானா வஷஅலனா மினல் முஸ்லிமீன் (எங்களுக்கு உணவளித்து குடிப்பதற்கு நீர் அளித்து மேலும் எங்களை முஸ்லிம்களில் ஆக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்) என்று ஓதிக்கொள்ளட்டும். (நூல் : திர்மிதி)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live