10 Feb 2015

இஸ்லாதில் சாப்பாட்டு முறையும் ,அதன் ஒழுக்கங்களும் (பகுதி-1).

நபியவர்களின் சொல்,செயல்முறைகளின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடப்பதில் தான் நமக்கு வெற்றி இருக்கிறது .முஹம்மத் (ஸல்) அவர்கள் உமிழ் நீர் துப்புவதிலிருந்து ,அரசாட்சி ஆளும் வரையிலும் ஒவ்வொரு செயல் முறையையும் நமக்கு காண்பித்து தந்திருக்கிறார்கள் .அதில் ஒன்று சாப்பிடும் முறை !

 சாப்பிடும் முன்பு இரு கைகளை கழுகுவது : 

  ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால் உளூ செய்து கொள்வார்கள். மேலும் சாப்பிட நாடினால் தங்களது கையை கழுகிக் கொள்வார்கள். (நூல் : நஸாயீ)

 பிஸ்மில்லாஹ் கூறுவது :

  ஹள்ரத் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நான் சாப்பிடும் பொழுது தட்டில் எனது கை முறையின்றி உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் ‘பிஸ்மில்லாஹ்’ கூறி உண்ணு! உனது வலது கரத்தினால் சாப்பிடு! (இங்கொன்றும் அங்கொன்றுமாக கையை உலாவாமல் ஒரு பக்கத்திலிருந்து) தட்டில் உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு” என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். (நுல் : புஹாரி)

இந்த ஹதீஸின் மூலம் மூன்று விஷயங்கள் விளங்குகிறது.
 1. பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
  2. வலது கரத்தினால் சாப்பிட வேண்டும்.
  3. தட்டில் நமக்கு அருகில் இருப்பதை சாப்பிட வேண்டும்.  

பிஸ்மில்லாஹ் மறந்து விட்டால் :

 ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் ஒருவர் உணவு உண்ண ஆரம்பித்தால் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் சாப்பிட்டுக் கொண்டுடிருக்கும் போது எப்பொழுது அவருக்கு ஞாபகம் வருகிறதோ அந்நேரத் தில் அவர் “பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு” ( ஆரம்பத்திலும் இறுதியிலும் இறைவனின் பெயர் கொண்டு இச்செயலை செய்கிறேன்) என்று ஓதிக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

 மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிடுதல் :

 ஹள்ரத் கஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடிந்ததும் அதை நன்றாக சூப்பிக் கொள்வார்கள். (நூல் : முஸ்லிம்)

 வேறு சில ஹதீஸ்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு மேலும் ஐந்து விரல்களைக் கொண்டு சாப்பிட்டதாகவும் வருகிறது. எனினும் பெரும்பாலான நேரங்களில் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிட்டதாகவே வருகிறது. அதனால் சிறுசிறு கவளமாக எடுத்துண்ண முடியும். நன்றாக அரைத்து சாப்பிடவும் முடியும்.

  தன் அருகிலுள்ள உணவிலிருந்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் :

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் உணவு வைக்கப்பட்டால் அந்த உணவின் நடுப்பகுதியில் இறைவனின் புறத்திலிருந்து பரக்கத் இறங்கிக் கொண்டேயிருக்கிற து. எனவே நடுப்பதியி லிருந்து ஆரம்பித்து விட்டால் பரக்கத் நீங்கி விடும். (நூல் : திர்மிதி)

  பல நபர்கள் சேர்ந்து சாப்பிடுவது :

 பல நபர்கள் சேர்ந்து சாப்பிடுவதின் காரணமாக பரக்கத் ஏற்படுகிறது. ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரின் உணவு இருவருக்கு போதுமானது. இருவரின் உணவு நால்வருக்கு போதுமானது. நால்வரின் உணவு 8 நபர்களுக்கு போதுமானது என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

 ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “யாரசூலல்லாஹ்! நாங்கள் (தேவையான அளவு) சாப்பிடுகிறோம். ஆனால் வயிறு நிரம்புவதில்லை” என்றார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்கள் தனித்தனியாக சாப்பிட்டிருப்பீர்கள்! என்று கூற ஸஹாபாக்கள் அதை ஆமோதித்தார்கள். உடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒன்று சேர்ந்து (ஒரே தட்டில்) சாப்பிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுங்கள் . அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான்” என்று கூறினார்கள். (நூல் : அஹமது)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live