Showing posts with label தப்லீக். Show all posts
Showing posts with label தப்லீக். Show all posts

24 Jun 2021

நபிமார்கள் பொய் கூறுவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் !


தஸ்பியதுல் அகாயித் என்ற நூலில் காஸிம் (ரஹ்) அவர்கள் நபிமார்கள் பொய் சொல்வார்கள் என்று எழுதியதாக பரேல்விகள் வழமை போல் பழிசுமத்துகின்றனர்.இது குறித்து விரிவான விளக்கத்தை இனி பார்ப்போம்
ஸர்ஸய்யித் அஹ்மத் கான் அவர்கள்,கொள்கைகள் சம்பந்தமாக தமக்கு எழும் பதினைந்து சந்தேகங்களுக்கு பதில் தருமாறு காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களிடம் கடிதம் அனுப்பினார்கள். அதில் ஒன்று தான் இவை.

கேள்வி: சொல்,செயல் அனைத்திலும் அல்லாஹ்வின் தூதர்கள் உண்மையாளர்கள்.அவசியமான (مصلحت) சமயத்தில் நபியின் பக்கம் இணைத்து சொல்வதில் குப்ரின் அச்சம் இருக்கும் போது மிக ஒழுக்ககேடான செயலாகும்.அவசியமான (مصلحت) சமயம் என்பதில் எனது கருத்து பொதுமக்கள் அவசியமாக(مصلحت)
கருதியிருப்பதை தான். சொல் அல்லது செயலை கொண்டு வருவது எதார்த்தத்தில் அனுமதியில்லை.எனினும்,அவசிய சமயத்தில் அதனை கூறுவது (தஸ்பியதுல் அகாயித் பக்கம்:5)

ஸர்ஸய்யித் ஸாஹிபின் சந்தேகத்திற்கு ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பல பக்கங்களில் பதில் தருகிறார்கள். 
அதனின் சுருக்கம் என்னவெனில் பொய் பலவகைகள் உள்ளது.ஒன்று تعریض (சமிக்ஞையாக கூறுவது)தவ்ரியா (சிலேடையாக கூறுவது) போன்றவைகள் அனைத்தும் வெளிப்படையில் தோற்றத்தில் பொய்யாக தெரியும்.எனினும் எதார்த்தத்தில் உண்மைதான்.
தெளிவான பொய்யில் விளக்கம் உள்ளது.பாதிப்புகளிலிருந்து (பொய்) நீங்கி,நன்மையாக இருந்தால் ஒரு வகையில் நன்மைகளில் உள்ளதுதான்.உதாரணமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கூறுபவர் பொய்யர் இல்லை.(ஹதீஸின் சுருக்கமான கருத்து) எனினும், ஏமாற்றுதல்,மோசடி அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல் அல்லது தேவையின்றி கூறுவது ஹராமாகும்.சில சமயங்களில் சமிக்ஞை வார்த்தைகளை கூறினால் நிலைமை சரியாகிவிடும் எனும் போது தெளிவான பொய் அனுமதியில்லை.நபிமார்கள் தெளிவான பொய்யிலிருந்து முற்றிலுமாக நீங்கி பரிசுத்தமானவர்கள்.அவர்களை பொறுத்தவரை சமிக்ஞை வார்த்தைகளை கூறுவதையும் விரும்பவில்லை.ஹள்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகில் என்னிடமிருந்து சில பேச்சுக்கள் மூடலாக வந்துள்ளது என்பதாக வெட்கம் கொண்டு ஷஃபாஅத்திலிருந்து விலகிகொள்வார்கள்.இது குறித்து விரிவாக இமாம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
(தஸ்பியதுல் அகாயித் (சுருக்கம்) பக்கங்கள்:22,23,24,25,26)


சுருக்கமான விஷயம் சமிக்கை  வார்த்தைகள் வெளிப்படையில் பொய்யாக தெரிகிறது.மேலும் தெளிவான பொய்யும் சில சமயங்களில் நன்மைகளில் உள்ளது.இதனால் இதனை (சமிக்கைஞான  வார்த்தைகளை) நபியின் விஷயத்தில் பொய்யானது, ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிராக கருதுவது சரியில்லை.எனினும்,இவை மற்ற நபிமார்களின் விஷயத்தில் கூறியதாகும்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி விஷயத்தில் அனைத்து விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதாக காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் தெள்ளத்தெளிவாக எழுதியுள்ளார்கள். ஆனால்  பரேல்விகள் நேர்மையற்று அதனை மறைத்துவிடுகின்றனர்.

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் அசலான வார்த்தைகள்.

پھر دروغ صریح بھی کئی طرح پر ہوتا ہے جن میں سے ہر ایک حکم یکساں نہیں ہر قسم سے نبی معصوم ہونا ضروری نہیں اگر چہ ہمارے پیغمبر صلی اللہ علیہ وسلم سب بھی سے محفوظ رہے ہیں 

பிறகு தெளிவான பொய்யும் பல விதங்களில் உள்ளது.ஒவ்வொன்றின் சட்டமும் ஒன்றல்ல.அனைத்து வகையிலிருந்து நபிமார்கள் நீங்கியிருப்பது அவசியமில்லை.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தை விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள்.(ஆதாரம்:தஸ்பியதுல் அகாயித் பக்கம்:)

ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரேல்விய அறிஞர்களின் கருத்துக்களை இனி பார்ப்போம்!

முப்தி மஜ்ஹருல்லாஹ் எழுதியுள்ளார்:

ஸஹீஹ் புகாரி, முஸ்லிமில் அபூஹுரைரா ரளி அறிவிப்பு வருகிறது
நல்லோர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் மிக அதிகமாக இருக்கும்.இதனால் வெளிப்படையான தோற்றத்தில் உள்ள பொய்யையும் ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் தவறுசெய்தவனாக எண்ணி இஸ்திஃபாரில் ஈடுபட்டார்கள்.
(தப்ஸீரே மஜ்ஹருல் குர்ஆன் 2/978)

குலாம் ரசூல் ஸயீதி எழுதியுள்ளார்: 

ஹழ்ரத் உமர் (ரளி) கூறுகிறார்கள் :
முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு சமிக்கை வார்த்தைகள் போதுமானது.ஹள்ரத் இம்ரான் இப்னு ஹஸீன் (ரளி) கூறுகிறார்கள் முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யில் பெரிய வாய்ப்புள்ளது......

மேலும் எழுதுகிறார்: அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:ஹழ்ரத் இப்ராஹும் அலை அவர்கள் மூன்று பொய்களை மட்டும் தான் கூறினார்கள்.இந்த ஹதீஸில் பொய்யைக் கொண்டு கருத்தானது வெளிப்படையில் பொய்யாகும்.எதார்த்தத்தில் சமிக்கை வார்த்தைகள்.
(ஆதாரம்:திப்யானுல் குர்ஆன் 7/605)

ஹழ்ரத் இமாம் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.இதனின் நோக்கம் பொய்யில் சமிக்கையாக  கூறுவது,மறைத்து கூறுவது,சிலேடை அனைத்தும் நுழையும்‌.இவை நபிமார்களிடமிருந்து வெளிப்படும். எனவே நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்மொழியில் கண்ணியமான நபிக்கு பொய் எனும் வார்த்தையை பயன்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறோம்.

لم يكذب ابراهيم النبي عليه السلام قط إلا ثلاث كذبات (مسلم /٢,٢٦٦)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் நூலின் விரிவுரையில் எழுதியுள்ளார்  சமிக்ஞையாக  இருந்தால் كذب (பொய்) என்பதாக கூறுவதன் தேவை என்ன? என்பதாக கேள்வி எழுப்பினால் நவவி (ரஹ்) அவர்களின் பதில் சமிக்ஞை,சிலேடை போன்றவைகளை பொய் என்பதாக பொதுவாக கூறுவது சரிதான் என்பதை இந்த ஹதீஸிருந்து புரியமுடிகிறது.

இறுதியாக பரேல்விகள் முதலில் அவர்களின் கேடுகெட்ட கொள்கைகளை களையட்டும் !

பரேல்விய அறிஞர் அஹ்மத் யார் கான் நயீமி எழுதியுள்ளார்:

 நபிமார்கள் நாட்டத்துடன், வேண்டுமென்றே  பெரும்பாவங்கள் நுபுவ்வத்திற்கு முன்பாக பின்பாக செய்ததில்லை.ஆனால் தவறுதலாக,மறதியாக ஏற்பட முடியும்.எனினும் அதன்மீது நிலைத்திருக்கமாட்டார்கள்.
(ஆதாரம்:ஜாஅல் ஹக் பக்கம்:)


நபிமார்களிடமிருந்து  பெரும்பாவங்கள் நிகழும் என்பதாக கூறுகிறார் இதற்கு எதிராக பரேல்விகள் என்ன தீர்ப்பு தருவார்கள்?

22 Nov 2018

அமல்களின் சிறப்பு நூலில் சுமத்தப்படும் குற்றச்சாட்டும் நமது மறுப்பும் .(கபுரில் கை வெளியே வந்தது )


இமாம் ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி  (ரஹ்) அவர்களின் நிகழ்வு குறித்து ஆய்வு !


அன்னார் ஹஜ்ஜிலிருந்து திரும்பி மதீனா முனவ்வரா சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீபிற்கு வருகை தந்தார்கள்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரக்கத் பொருந்திய கரம் வெளியே வந்தது.அதனை அவர்கள்   முத்தமிட்டது.

இந்நிகழ்வை ஷைகு ஜக்கரிய்யா (ரஹ்) அவர்கள் சுயமாக புனைந்து ஒருபோதும் கூறவில்லை.மாறாக முன்னோர்களான அறிஞர்களின் நூல்களிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள்.
முன்னோர்களின் நூல்களில் சரியான அறிவிப்பாளர் தொடர்களுடன் உள்ளது.
முதலில் இந்நிகழ்வை அறிவிப்பாளர் தொடருடன்  பார்ப்போம்!

الامام عبد الكريم ابن محمد الرافعي اخبرنا شيخنا الامام الحجة القدوة ابو الفرج عمر الفاروثي الواسطي قال حج سيدنا و شيخنا السيد احمد الرفاعي عام خمس و خمسين و خمسماءة فلما وصل [سواد العينين10,11)

இனி இந்நிகழ்வின் மூன்று அறிவிப்பாளர் தொடர் குறித்து நற்சான்றை விரிவாக ஆய்வு செய்வோம்

 முதல் அறிவிப்பாளர் இமாம் அப்துல் கரீம் இப்னு முஹம்மது ராஃபியி

இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஷைகு,ஷாபியின் வழித்துறையை சார்ந்தவர்,அரபு மற்றும் அஜமிகளின் அறிஞர்,மார்க்கத்தின் இமாமாக திகழ்கிறார்கள்.

இமாம் தகியுத்தீன் இப்னுஸ்ஸலாஹ் கூறியுள்ளார்கள்:

 اظن اني لم ار في بلاد العجم مثله 

  அஜமிகளில் இவரைப் போன்றவரை நான் பார்த்ததில்லை.


இமாம் நவவி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

الرافعي من الصالحين المتمكنين كانت له كرامات كثيرةظاهرة

 இமாம் ராபியி ரஹ் அவர்கள் நல்லோர்களில் உள்ளவர்.அவர்களிடமிருந்து அதிகமான அற்புதங்கள் வெளிப்பட்டு உள்ளது.

இமாம் இப்னுஸ்ஸஃப்பார் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 

هو شيخنا امام الدين و ناصر السنة صدقا 

அன்னார் நமது ஷைகு,மார்க்கத்தின் இமாம்,உண்மையாக தீனின் உதவியாளர் (சுன்னத்தை உயிர்ப்பிப்பவர்.)
(ஸியரு இஃலாமின்னுபலா 22/252,தாரிகுல்இஸ்லாம் லித்தஹபி 13/742)

 இரண்டாவது அறிவிப்பாளர் இஜ்ஜுத்தீன் அபுல் ஃபரஜ் உமருல் ஃபாரூஸி அல்வாஸிதி

இமாம் ராஃபியி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

القدوة الحجة الامام

 முன்னோடியாக,ஆதாரப்புருஷராக,
இமாமாக திகழ்கிறார்கள்.

மற்றோர் இடத்தில் கூறியுள்ளார்கள்:

شيخنا امام الفقهاء ابو الفرج عمر الفاروثي

 நமது ஷைகு,மார்க்க விற்பன்னர்களின் இமாம் அபுல் ஃபரஜ் உமர் அல்ஃபாரூஸி
(ஸவாதுல் அய்னைன் 108)

இமாம் ஷுயூத்தி ரஹ் அவர்கள் '
'ஷரபுல் முஹ்தம்' என்ற நூலில் எழுதியுள்ளார்கள்:

الشيخ امام الفقهاء و المحدثين و شيخ اكابر الفقهاء و العلماء عز الدين عمر ابي الفرج الفاروثي الواسطي 

ஷைகு,மார்க்க மேதைகள்,மார்க்க விற்பன்னர்கள்,ஹதீஸ் கலைவல்லுநர்கள் மார்க்க விற்பன்னர்களான மூத்தவர்களின் ஷைகு இஜ்ஜுத்தீன் உமர் அபுல்ஃபரஜ் அல்ஃபாரூஸி அல்வாஸிதி

இமாம் தகியுத்தீன் அப்துர் ரஹ்மான் அன்சாரி அல்வாஸிதி கூறியுள்ளார்கள்:

العارف الكبير ولي الله العلامة السند و الثبت الفقيه المقري المحدث ابي الفرج 

பெரும் மெய்ஞானி,இறைநேசர்,பெரும் அறிஞர்,நம்பகமானவர்,பலமானவர்,ஹதீஸ்கலை வல்லுநர் அபுல்ஃபரஜ் உமர் அல்ஃபாரூஸி (திர்யாகுல் முஹிப்பீன்)

இமாம் அஹ்மத் இப்னு இப்ராஹீம் அல்ஃபாரூஸி ரஹ் அவர்கள் எழுதியுள்ளார்கள்:

 الامام الفقيه ابي الفرج عمر الفاروثي 

இமாம் மார்க்க விற்பன்னர் அபுல்ஃபரஜ் உமர் அல்ஃபாரூஸி.
 (இர்ஷாதுல் முஸ்லிமீன் 88)

 மூன்றாவது அறிவிப்பாளர் இமாம் ஷைகுல் கபீர் அஹ்மத் ராபியி

இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:

الامام القدوة العابد الزاهد 

இமாம்,முன்னோடி,
வணக்கசாலி,
உலகப்பற்றில்லாதவர்

இமாம் தாஜுத்தீன் ஸுப்கி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

شيخ العارفين احد اولياء الله العارفين و السادات المشمرين اهل الكرامات الباهرة ابو العباس بن ابي الحسن بن الرفاعي المغربي 
 
மெய்ஞானிகளின் ஷைகு,தலைவர்கள் மற்றும் ஞானிகள், இறைநேசர்களில் உள்ளவர்.வெளிப்படையாக அற்புதங்களுக்குரியவர் அபுல் அப்பாஸ் இப்னு அபூல் ஹஸன் இப்னு ரிஃபாயி அல்மஃரிபி

இமாம் இப்னு குல்கான் ,இமாம் ஜலீல் இப்னு அய்பக் ஸப்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

كان رجلا صالحا شافعيا فقيها

 நல்லோராக,ஷாபியி வழித்துறையை சேர்ந்தவராக,மார்க்க விற்பன்னராக இருந்தார்கள்.

அஸ்ஸஃப்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

الزاهد الكبير سلطان العارفين في زمانه 

மிகவும் உலகப்பற்றில்லாதவர்,அக்காலத்தின்
மெய்ஞானிகளின் அரசர்
(ஸியரு இஃலாமுன் னுபலா 21/77,தபகாதுஷ்ஷாபியிய்யா லிஸ்ஸுப்கி 6/23,
தபகாதுஷ்ஷாபியிய்யா லி இப்னி காளி ஷைபா 2/5,அல்வாஃபி பில்வஃபயாதி 7/143)

பெருமானார் ஸல்லல்லாஹு அவர்களின் கரத்தை இமாம் ஸய்யித் அஹ்மத் ரிஃபாயி (ரஹ்) அவர்கள்  முத்தமிட்டார்கள் என்ற நிகழ்வின்   அறிவிப்பாளர் தொடர் சரியானது.

ஆதார நூல்கள் :












6 May 2017

புனிதப் பெயர்களில் மோசடியும் , பரேலவி ஜந்துகளின் இரட்டை நிலையும்.

மெளலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்) அவர்களின் வம்சாவழித்தொடரில்.

காஜி பீர் பஹ்ஷ் தந்தையின் வம்வாசவழித்தொடராகும்.
பரீத் பஹ்ஷ் என்பது தாயின் வம்சாவழித்தொடரில் வருகிறது.
ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் இந்தப் பெயர்களை சூட்டுவது இணைவைப்பு என
கூறியுள்ளார்கள் இதனால் அன்னாரின் தாதா நானா இணைவைப்பாளர்களாக உள்ளார்கள்.

இந்த குற்றச்சாட்டை பரேல்வி ஹகீமுல் உம்மத் முஃப்தி யார் குஜராத்தி "ஜாஅல்
ஹக்" என்ற அவரது தக்வியதுல் ஈமான் நூலில் எழுதியுள்ளார்:  அலி பஹ்ஷ் பீர்
பஹ்ஷ் குலாம் அலி மதார் பஹ்ஷ் அப்துன்னபி ஷிர்க் என சொல்லப்பட்டுள்ளது.

எனினும் தத்கிரதுர் ரஷீத் முதல் பாகம் 13ம் பக்கத்தில் ரஷீத் அஹ்மதின்
வம்சாவழித்தொடர்.

மெளலானா ரஷீத் அஹ்மத் இப்னு அஹ்மதுப்னு மெளலானா ஹிதாயத் இப்னு காளி பீர் பஹ்ஷ்
இப்னு குலாம் ஹுஸைன் இப்னு குலாம் அலி தாயின் வம்சாவழித்தொடர் ரஷீத் அஹ்மத்
இப்னு கரீமுன்நிஸா பின்த் பரீத் பஹ்ஷ் இப்னு குலாம் காதிர் இப்னு முஹம்மத்
ஸாலிஹ் இப்னு குலாம் தேவ்பந்திகள் சொல்லட்டும்!

மெளலவி ரஷீத் அஹ்மதின் வம்சாவழித்தொடரின் பெரியோர்கள் முஷ்ரிகா? முர்தத்தா?
இல்லையா? இல்லையெனில் எவ்வாறு?
முர்தத் எனில் குழந்தைகள் ஹலாலா? அல்லது ஹராமா?
(ஜாஅல் ஹக் 387)



நமது மறுப்பு:

லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் ஷைத்தான் மற்றும் அவனின்
சந்ததிகளிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மற்றும் பரேல்விகளிடம்

நமது கேள்வி: 

தந்தை அல்லது தாய் அல்லது தாதா அல்லது நானா காஃபிராகிவிட்டால்
குழந்தைகள் ஹராமாகிவிடுமா?

இமாம் புகாரி அவர்களின் மீது பரேல்விகள் என்ன பத்வா கொடுப்பீர்கள்? இமாம்
புகாரி (ரஹ்) அவர்களின் வம்சாவழித்தொடர் அபூஅப்தில்லாஹ் புகாரி முஹம்மதுப்னு
இஸ்மாயிலுப்னு இப்ராஹீமுப்னுல் முஙீரா இப்னு பர்தஜ்பா.

பர்திஜ்பா குறித்து ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நெருப்பு
வணங்கி
(ஸியரு இஃலாமின் நுபலா 12/391)




பரேல்விகளே! இமாம் புகாரி அவர்களின் மீது என்ன பத்வா கொடுப்பீர்கள்? அல்லாஹ்
பாதுகாப்பானாக! அல்லாஹ் பாதுகாப்பானாக!
அவரின் வம்சாவழித்தொடரும் ஹலாலா?  இல்லையா?

பரேல்வி அறிஞரின் இந்த குற்றச்சாட்டானது தூய்மையற்ற பேச்சு அவரின் சீர்கெட்ட
சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

ஹஜ்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் குலாம் முஹையத்தீன், குலாம்
முஸ்தஃபா இது போன்ற பெயர்களை பொதுவாக ஷிர்க் என சொல்லவில்லை.மாறாக அவர்களின்
வாசகங்களில் குறிப்பாக்கும் காரணிகள் உள்ளது.இதனை பரேல்வி ஜவ்வாத் மறைத்து
மோசடி செய்துவிட்டார். குறைந்த பட்சம் பத்து காரணிகளை கூறியுள்ளார்.

(1)நல்லோர்கள் அனைத்தையும் கேட்பார்கள் .சிரமங்களை அகற்றுவார்கள்.இதனால்
சிரமங்களின் போது அறியாமையில் அவர்களை அழைக்கிறார்கள்.

(2)இதே கொள்கையின் பெயரில் அவர்களிடத்தில் தங்களின் தேவைகளை வேண்டுகிறார்கள்

(3)அவர்களின் பேரில் நேர்ச்சை நோற்கிறார்கள்

(4)இதே கொள்கையின் பெயரில் நேர்ச்சை என்ற விதத்தில் முடி வளர்க்கிறார்கள்.

(5) அவர்களின் பெயரில் நேர்ச்சையாக கழுத்தில் ஆபரணம் அணிவித்தல்

(7) அவர்களின் நெருக்கத்தை பெரும் பொருட்டு அவர்களின் பெயரில் அறுத்து
பலியிடுகிறார்கள்.

(8)அவர்களின் பெயரில் குறிப்பான போர்வை போர்த்தப்படுகிறது.

(9)அவர்களின் பெயரில் சத்தியம் செய்கிறார்கள்

(10)அவர்களின் பெயரில் கால்களில் கொலுசு நேர்ச்சையாக அணிவிக்கப்படும்

இந்த கொள்கையுடன் துன்பங்களும் சிரமங்களும் அகல வேண்டும் என்பதற்காக தங்களின்
குழந்தைகளை அவர்களின் பக்கம் இணைத்து சொல்கிறார்கள்.குழந்தையானது பீர் பஹ்ஷ்
மாறி சிரமங்கள் துன்பங்கள் அகன்றுவிடும் என நம்பிக்கை கொண்டுள்ளனர் .

ஆக ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் பொதுவாக இப்பெயரை வைப்பதனால் மட்டும்
ஷிர்க் என சொல்லவில்லை.மாறாக அவர்களிடத்தில் இந்த அனைத்துவிதமான கொள்கைகளை
முன்வைத்து சொல்லப்படுகிறது.
المطلق على اطلاقه المقيد على تقييده  பொதுவானவை
அதனின் பொதுவான கருத்திற்கு ஏற்ப அமையும்.குறிப்பானவை அதனின் குறிப்பான
கருத்திற்கு ஏற்ப அமையும்.

انبت الربيع البقل வசந்தகாலம் காய்கனிகளை விளைவிக்கிறது.
இதனை இணைவைப்பாளர் கூறினால் அதனின் அர்த்தம் வேறு தீர்ப்பு
வேறு.இறைநம்பிக்கையாளர் கூறினால் அதனின் அர்த்தம் வேறு தீர்ப்பு வேறு.

பரேல்விகள் பரேல்விகளின் வீட்டை பார்க்கட்டும்!

மெளலவி ரிஜாகான் பரேல்வி 'அஹ்காமே ஷரீஅத்' என்ற நூலில் எழுதியுள்ளார்:

நிஜாமுத்தீன் முஹையத்தீன் தாஜுத்தீன் இது போன்று மார்க்கத்தில் மதிப்பிற்குரிய
என்ற வகையில் சூட்டப்பட்டபெயர்கள் உதாரணமாக ஷம்சுத்தீன்,பத்ருத்தீன்,
நூருத்தீன், பக்ருத்தீன்,முஹிய்யுல் இஸ்லாம்,பத்ருல் இஸ்லாம் இது அல்லாத
அனைத்து பெயர்களையும் அனைத்து உலமாக்களும் கடுமையாக வெறுக்கிறார்கள்.மக்ரூஹ்
என்பதாக தடுக்கப்பட்டது என்பதாக கூறியுள்ளனர்.
 (அஹ்காமே ஷரீஅத் 98)



பரேல்வி அறிஞர் பீர் மெஹ்ர் அலி ஷாஹ் ஸாஹிப் வம்சாவழித் தொடரை பார்ப்போம்!

ஸய்யித் மெஹ்ர் அலி ஷாஹ் இப்னு ஸய்யித் நத்ருத்தீன் இப்னு ஸய்யித் குலாம் ஷாஹ்
இப்னு ஸய்யித் ரோஷன் தீன் இப்னு ஸய்யித் அப்துர்ரஹ்மான் நூரி இப்னு ஸய்யித்
இனாயத்துல்லாஹ் இப்னு ஸய்யித் கியாஸ் அலி இப்னு ஸய்யித் பத்ஹுல்லாஹ் இப்னு
ஸய்யித் அஸதுல்லாஹ் இப்னு ஸய்யித் பஹ்ருத்தீன் பிறகு தாஜுத்தீன்.


தாயின் வம்சாவழித்தொடரில்
ஸய்யித் ஸத்ருத்தீன் உள்ளது.

இப்பொழுது நமது கேள்வி என்னவெனில்

அஹ்மத் ரிஜாகான் கடுமையாக வெறுக்கிறார் பொதுவாக மக்ரூஹ் எனில் ஹராம் என்பதாக
தான் எண்ணப்படும். பீர்ஸாஹிபின் தாதாமார்கள் நானாமார்கள் ஹராமை ஹலால் என
எண்ணியுள்ளார்களா? ஹராமை ஹலால் என எண்ணுபவர் முஸ்லிமா? முஸ்லிம் எனில்
எவ்வாறு? அவ்வாறு இல்லையெனில் பீர் ஸாஹிப் வம்சா வழித்தொடரை குறித்து
தீர்ப்பு  என்ன?

அஹ்காமே ஷரீஅத் நூலில் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளார்:

மக்களிடம் கேட்டுப்  பார்க்கட்டும்!

தனது குழந்தைகளின் பெயர்களை  ஷைத்தான் மல்ஊன் ராபிளி கேடுகெட்ட,பன்றி  இது
போன்றவைகளை (சூட்ட)  விரும்புவார்களா?
ஒரு போதும் இல்லை.உறுதியான சொல்லானது மேற்கண்ட பெயர்களின் அர்த்தம் அசலின்
பேரில் இருக்கும்.பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு தங்களை, தங்களது
குழந்தைகளை நபி என்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்.
எந்த முஸ்லிமாவது தனது பெயரை ரஸுலுல்லாஹ் காதமுன் நபிய்யீன் அல்லது ஸைய்யிதுல்
முர்ஸலீன் வைப்பார்களா?
பிறகு முஹம்மத் நபி, நபி அஹ்மத் போன்றவைகளை ஏன் சூட்டுகிறார்கள்?
எந்தளவிற்கெனில் சில பெயர்கள் அல்லாஹ்வின் அச்சமில்லாதவர்கள்  நபியுல்லாஹ்
ரிஸாலத் கதமுன் நுபுவ்வத்தை வாதிடுவது ஹராம் தானே? இது போன்ற பெயர்களை
மாற்றுவது முஸ்லிம்களின் மீது அவசியமாகும்.
(அஹ்காமே  ஷரீஅத் 94,95)




ஆக நபி அஹ்மத் என பெயர் வைப்பது ஹராம்.இதனை மாற்றுவது அவசியம்.இந்தப் பெயரை
வைப்பது நுபுவ்வத்தை வாதிடுவது போன்றாகும்.

இப்பொழுது பரேல்விகளும், பரேல்வி ஜவ்வாத் ரப்பானி எடுத்து பார்க்கட்டும்!
அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரியின் 'தத்கிரஹ் அகாபிரே அஹ்லுஸ்ஸுன்னத்' பக்கம் 52
ல் அவர்களது ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவரை குறித்து அறிமுகம் செய்கிறார் அவரின்
பெயர் 'கவாஜா நபி அஹ்மத்'
பரேல்விகளே கூறுங்கள்!



நபி அஹ்மத் என்று பெயர் சூட்டியதன் மூலம் அவரது பெற்றோர்கள் தனது மகனின்
நுபுவ்வத்தை வாதிடுவதை விரும்புகிறார்களா?  அண்ணலாரின் பெயருக்கு அவமரியாதை
இல்லையா?
இல்லையெனில் எவ்வாறு?
ஆமாம் என்றால் நபி அஹ்மதின் பெற்றோர் முஸ்லிமா?  ஈமானை புதுப்பிக்காமல்
நிகாஹ்ஹை புதுப்பிக்காமல் உடலுறவு கொள்வது விபச்சாரமா? குழந்தைகள் ஹராமா?
இல்லையா?

மெளலானா தபீரின் பத்வா:

 மெளலானா அவர்கள்
மெளலானா குலாம் கானிடத்தில் கூறினார் குலாமின் அர்த்தம் لونڈا எதைப்போன்று
எனில் உனது பெயர் خان لونڈا இதனால் சபையில் கூச்சல் எழுந்தது.மெளலவி குலாம்
கான் வெட்கப்பட்டு இந்நிகழ்விற்கு பிறகு தனது பெயரை குலாமுல்லாஹ் என்று
மாற்றிக்கொண்டார்.
(ஃபவ்ஜுல் மகால் 4/541) 



لونڈا ன் அர்த்தத்தை உர்து அகராதியில் பாருங்கள்!

مفعول
بد فعلی کرنے والا لڑکا 

தன்நிலை சேர்க்கை புணர்பவன்  (பைரோஜ் லுகாத் 1170)



இப்பொழுது பரேல்வி அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரியின் நூல் 'தத்கிரஹ் அகாபிரே
அஹ்லுஸ்ஸுன்னா' பாருங்கள்! பொருளடக்கம்
குலாம் அஹ்மத்,குலாமுத்தீன் குலாம், ஜான் குலாம்,ஹைதர் குலாம்,தஸ்தகீர்
குலாம், ஸுரூர் குலாம் காதிரி இதை தவிர ஏராளமான பெயர்கள் உள்ளன.




பரேல்விகள் இப்படி சொல்லக்கூடும் لونڈا வின் அர்த்தம் சிறுவர் என்றும்
உண்டு.இது போன்ற விளக்கத்தை எடுப்பதும் சரியில்லை என்பதை பரேல்வி அறிஞரின்
வாசகம் தெளிவுப்படுத்துகிறது.எனினும் நாம் கூறுகிறோம் இங்கு பல அர்த்தங்களில்
ஒன்றை எடுத்து கொண்டீர்கள்! அந்தப் பொருளானது உங்களுக்கு பொருத்தமாக
எங்களுக்கு எதிராக உள்ளது.இது போன்று நாமும் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்)
அவர்களின் கூற்றில் எங்களுக்கு தோதுவான உங்களுக்கு எதிராக உள்ளதை
எடுத்துள்ளோம்!
இதனையும் பாருங்கள்!

குலாம்நபி, குலாம் ரசூல், குலாம் முஸ்தபா போன்ற பெயர்களில்  பரேல்விய அறிஞரின்
உசூலின் பேரில் கடுமையான அவமரியாதை ஏற்படுகிறது.இதனை இங்கு சொல்ல எங்களுக்கு
தைரியம் இல்லை.

அது மட்டுமின்றி لونڈا விற்கு வேறு பெயர்கள் இருந்தாலும் மாற்று விளக்கம்
கொடுக்க முடியாது.ஏனெனில் எந்த வார்த்தையை உபயோகிப்பதனால் மிக குறைந்த பட்ச
ஒழுக்க கேட்டின் (சாயல்) வாய்ப்பு  பெறப்பட்டாலும்  அதனை பெருமானார் (ஸல்)
அவர்களின் விஷயத்தில் சொல்வது முற்றிலும் கூடாது.
(திப்யான் 275)




குர்ஆனில் எங்காவது ஓரிடத்தில் குலாம் என்ற வார்த்தை வந்துள்ளது.அதனின் பொருள்
சிறுவன் மகன் என்பதாக இருந்தால் குலாமுல்லாஹ் வின் கருத்தானது அல்லாஹ்வின்
குழந்தை என்கிற அர்தத்தினால் அல்லாஹ்வின் விஷயத்தில் பெரும்
இணைவைப்பாகும்.இதனால் ஆரம்பத்திலேயே மாற்றிவிடவேண்டும்.அவர் இணைவைப்பாளர்களின்
அணியில் வந்துவிடக்கூடாது.பிறகு மற்றவர்களின் மீது பத்வா அளிக்கட்டும்
(பவ்ஜுல் மகால் 
4/548)





அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி அவர்கள் அதே நூலின் பொருளடக்கத்தில் பெரியோர்களில்
ஒருவரை குறித்து கூறுகிறார்கள் அவரின் பெயர் குலாமுல்லாஹ் ஷர்கபூரி
பக்கம்296ல் உள்ளது.



பரேல்விகளின் வாதப்படி அல்லாஹ்விற்கு குழந்தைகள் உண்டு
என்பதை கிறிஸ்துவர்களை போன்று ஏற்கின்றனர்.

30 Aug 2016

ஜனாஸாவிற்க்கு நேர்ந்த உண்மை சம்பவம் .

 கர்னாடக மாநிலம் பெங்களூரில் கக்களி புறா என்னும் ஊரில் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.


அக்கிராமத்தில் ஒரே ஒரு முஸ்லீம் பெண் மட்டும் வசித்து வந்தார். அந்த பெண்ணும் வப்பாதாகி விட்டார் .அந்த பெண்ணிற்க்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அந்த ஊரின் பெரியார்கள் தங்களின் மத சடங்கு படி அந்த ஜனாஸாவை அடக்கம் செய்ய முன் வந்தனர்.

தப்லீக் ஜமாதினர் 2 கஸ்து என்று பள்ளி இல்லா பகுதி உழைப்பு , 5 அமல் சரியாக நடைப்பெறாமல் இருக்கும் பள்ளில் உழைப்பு என்று பக்கத்து ஊரில் தாவா செய்வது வழக்கம்.

தப்லீக் ஜமாதினர் 2 ஆம் கஸ்திற்க்காக அந்த ஊரின் பக்கம்  சொன்ற பொழுது அந்த பெண் வப்பாதான விஷயம் தெறிய வந்தது.

(அல்லாஹ்வின் நாட்டம் தான்)

அவர்கள் அந்த பெண்ணுடைய ஜனாஸாவை வாங்கு வதற்க்கு சென்ற பொழுது அந்த பெண்ணை ஹிந்து மத சகோதர சடங்கின் படி சிவப்பு சீலை கட்டி முகத்தி மஞ்சல் பூசி நெற்றியில் குங்குமம் வைத்த வண்ணம் அந்த முஸ்லீம் பெண்ணின் ஜனாஸாவை படுக்க வைந்திருங்தார்கள்.

அந்த கோலத்தை பார்த்த ஜமாத்தார்கள் அதிர்ச்சியடைந்து போணார்கள்.

அந்த பெண் ஒரு முஸ்லீம் அந்த பெண் ஜனாஸாவை நாங்கள் எங்கள் இஸ்லாமிய முறை படி தான் அடக்கம் செய்வோம் அந்த பெண் ஜனாஸாவை எங்களிடத்தில் தாருங்கள் என்று ஜமாதார்கள் கேட்க!

அந்த ஊரார்கள் அந்த பெண் எங்கள் ஊரை சார்ந்தவர் நாங்கள் எங்கள் ஊர் முறை படி தான் அடக்கம் செய்வோம் என கூறி மறுத்து விட்டார்கள்.

 அந்த ஜமாதிலிருந்த ஒருவர் அவர்களின் முன் வந்து அந்த ஊர்காரரிடத்தில் இந்த பெண்ணை நீங்கள் உங்களின் முறைப்படி அடக்கம் செய்தால் அந்த பெண்ணின் ஆவி உங்களின் ஊரை சுற்றித்திரியும் என்று அந்த பெண்ணின் ஜனாஸாவை வாங்கு வதற்க்காக இப்படி கூறிவிட்டார்.

அந்த ஊர் மக்கள் கூடி பேசி அந்த ஜனாஸா வை ஜமாதார்களின் கையில் கொடுத்து விட்டார்கள். ஜமாதார்கள் அந்த பெண் ஜனாஸாவை அங்கிருந்து எடுத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஒர் ஊரின் பெண்கள் மதரஷாவில் ஒப்படைத்து ஜனாஸாவை குளிகச்செய்து கபணிட்டு இஸ்லாமிய முறைப் படி அடங்க்கம் செய்தார்கள்!

 அந்த பெண்ணின் ஜனாஸாவை அந்த ஊர் வழக்கப்படி அடக்கம் செய்திருந்தால் அல்லாஹ் பாதுகாப்பானக! அல்லாஹூ அஃலம்.

கஸ்து செய்வது உலகில் எங்கோ ஒரு மூலையில் உள்ள  ஒரு நபருக்கு ஹிதாயத் கிடைக்க காரணமாகிறது ! என்பதற்க்கு சாண்றாக இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது..
 

makkah live

Sample Text

madina live