Showing posts with label பரேலவி பித்அதி. Show all posts
Showing posts with label பரேலவி பித்அதி. Show all posts

6 Jan 2018

அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ , பித்அதிற்க்கு உயிர் கொடுத்தவர்கள் பரேலவிகளே!

இஸ்லாமியர்களே! 
இந்தியாவில் ஆங்கிலேயர்களின்  தூய்மையற்ற பாதங்களை பதித்த பிறகு குழப்பங்களின் கதவுகள் திறந்துகொண்டன.மக்களில் சிலர் இஸ்லாத்தின் பேரில் தங்களின் மனோஇச்சையின் பேரில் நூதனங்களை (பித்அத்துகளை) திணிக்க ஆரம்பித்தனர்.சில இடங்களில் தக்லீதை விட்டு விடும் குழப்பம் தலைதூக்கியது.சில இடங்களில் பிரியம், நேசம் எனும் பெயரில் தவறான காரியங்கள்,
மார்க்கம் தடுத்தவைகள் நல்லதாக கருத ஆரம்பித்தனர்.அதுமட்டுமின்றி இணைவைப்பு பித்அத் எனும் நூதனம் நேசம் பிரியம் எனும் பெயரில் பரப்பினர்.எனினும், உண்மையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது பிரியம் என்பது அண்ணலாரின் வழிமுறையை பின்பற்றி நடப்பதில் தான் உண்டு.ஆனால் இதற்கு நேர்மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை துறந்து மார்க்கம் எனும் பெயரில் உருவாக்கிய பித்அத்துகள் சடங்கு சம்பிரதாயங்களுக்கு உயிர் கொடுத்தனர்.

அல்லாஹ்வையன்றி மற்றவர்களுக்கு ஸஜ்தா செய்வதை தடுத்தால்,
அதனை விட்டுவிடுவதற்கு பதிலாக பெரியோர்களின் கப்ருகளுக்கு ஸஜ்தா செய்கிறார்கள்.அல்லாஹ்விடமே உதவிதேட வேண்டும் என்று கட்டளையிட்டால், அல்லாஹ்வை தவிர மற்றமுள்ள  நபிமார்கள் நல்லோர்களிடம் மட்டுமே உதவி ஆரம்பித்தனர்.

இது குறித்து விரிவான விளக்கங்களை  பரேல்விய்யத் என்றால் என்ன? என்பதை
பரேல்விய அறிஞர்களின் நூல்களிலிருந்து இனி காண்போம்!

மெளலவி அப்துல் ஹகீம் ஷரப் காதிரி எழுதியுள்ளார்: 

ஒரு மனிதர் மஃரிப் தொழுகை தொழுதார்.ஸலாம் கொடுத்த பிறகு துஆ கேட்டார்.
الصلوة و السلام عليك يا رسول الله 
(மகாலாதே ஷரப் காதிரி பக்கம்:235)




இது நீண்டதொரு விஷயமாகும்.நாம் வெறும் சில முன்மாதிரிகளை காட்டவிரும்புகிறோம்.
பிரியம், நேசம் எனும் பெயரில் தங்களின் மனோஇச்சைகளை நிறைவேற்றுவதுதான் பரேல்விகளின் பழக்கமாகும்.

பரேல்விய்யத்தின் விஷயத்தில் பரேல்விய பெரியோர்கள் மிகப்பெரும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.அவர்களும் கூட மக்கள் பரேல்விய்யத்தின் பிடியில் சிக்குண்டு எல்லை மீறுவதை விளங்கியுள்ளனர்.நேரான பாதையில் இல்லை என்பதையும் புரிந்துள்ளனர்.

அப்துல் ஹகீம் ஷரப் காதிரி எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ் மற்றும் அவனின் பிரியமான, சங்கையான அடியார்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்கிறார்கள்.லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் கலிமா தய்யிபாவின் இருபகுதியை ஏற்கின்றனர்.எனினும், அல்லாஹ்வின் பக்கம் கவனம் செலுத்தும் விஷயத்தில் அவனுடன் தொடர்பை வலுப்படுத்தும் விஷயத்தில் கவனம் காட்டுவதில்லை.இதில் வரம்புமீறியுள்ளனர்.
(சுருக்கமான கருத்து)
(மகாலாதே ஷரஃப் காதிரி பக்கம்:235)




நம்மில் (பரேல்விகளில்) அல்லாஹ்வின் பக்கம் கவனம் செலுத்துவதில்லை.அவ்வாறு இருந்தாலும் மறைமுகமாக, கருத்தளவில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த செயலானது அல்லாஹ்வின் மேன்மைக்கு ஏற்புடையதல்ல.
(மகாலாதே ஷரஃப் காதிரி 234)




லாஹுரின் ஒரு 'பரேல்விய மாத இதழில்' வெளிவந்த கட்டுரை அதனின் தலைப்பு தூதுத்துவ தொடர்பின் முக்கியத்துவமும்,அவசியமும்
இதில் கட்டுரையாளரின் கண்ணோட்டம்
  சந்தேகமின்றி கொள்கை தவ்ஹீத் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையாக உள்ளது.எனினும்,
மற்ற மதங்களுடன் இஸ்லாத்தை ஒப்பிடும் பொழுது அதனின் சிறப்பம்சம்,தனித்தன்மை தவ்ஹீத் இல்லை.மாறாக ரிஸாலத் எனும் தூதுத்துவம் தான்.

ஷரஃப் காதிரி அவர்கள் பரேல்விய கட்டுரையை விமர்சித்தவாறு கூறுகிறார்:

 یہ ایک لحظ سے لا شعور طور پر عقیدہ توحید کی اہمیت کم کرنے کے مترادف ہے
ஒரு விதத்தில் உணராமல் தவ்ஹீத் கொள்கையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு நிகரானதாகும்.
(மகாலாதே ஷரஃப் காதிரி பக்கம்:247)




எதார்த்தம் என்னவெனில்
பரேல்விகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்கள்.ஆனால் அல்லாஹ்வின் விஷயத்தில் அந்தஸ்துகளை குறைத்துவிட்டனர்.
பரேல்விகள் நபித்துவிஷயத்தில் எல்லை மீறிவிட்டனர் என்பதற்கு அதிகப்படியான சான்றுகளை பார்ப்போம்..

ஷரப் காதிரி எழுதியுள்ளார்கள்:

ஒரு மாத இதழிலில் கட்டுரை ஒன்றை
நான் படித்த பொழுது அதில் எழுதப்பட்டு இருந்தது.
  அல்லாஹ்வை திக்ரு செய்வதற்கு பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திக்ரு செய்வது சிறந்த வணக்கமாகும்.இதன் பிறகு அதில் வருகிற விஷயமானது பெரும் அபாயகரமானது .

     இந்த வணக்கத்தில் படைத்தவனும் படைப்பும் இருவரும் சரிசமம்தான்.

அடியேன் (நான்) அதனின் எடிட்டருக்கு எழுதினேன்.இதனை எழுதியவர், வெளியிட்டவர் இருவரும் தவ்பா செய்வது  அவசியமாகும்.இல்லையெனில் ஈமான் பறிபோய்விடும்.
(மகாலாதே ஷரஃபே காதிரி 254)




பரேல்விய பிரசங்கிகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியம், உயர்வை குறித்து ஆர்வத்துடனும் தேட்டத்துடனும் பயான் செய்கிறார்கள்.எனினும், அண்ணலாரின் மற்றொரு புறமான தனித்துவ அடையாளமான  அடிமைத்தனத்தை குறித்து உணராமல் புறக்கணிக்கின்றனர்.இது ஒரு போதும் பொருத்தமில்லை.
(மகாலாதே ஷரஃபே காதிரி பக்கம்:567)


பரேல்விகள் அல்லாஹ்வின் அந்தஸ்தை குறைக்கும் முயற்சியும் அகில உலக தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை பெருக்கும் முயற்சியும் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

  ஷரப் காதிரி ஸாஹிப் எழுதியுள்ளார்கள்:

கைசேதம் என்னவெனில்,
நமது பிரதான பெரியோர்கள் மட்டுமின்றி மெய்நிலை மறந்த ஞானிகளின் மண்ணறைகளின் பேரில் செலவழிக்கின்றனர்.
இன்னிசைக்கச்சேரிகள் கவிஞர்களின் பேரில் பண மழை பொழியப்படுகிறது. அவர்களின் தோற்றம் உருவம் ஷரீஅத்திற்கு ஏற்ப இருக்கிறதா? இல்லையா? தொழுகையை பேணுபவர்களா? இல்லையா? என்பதை நாம் நோக்கமாக பார்ப்பதில்லை.
நாம் தோற்றம்,குரலை மட்டும் பார்க்கிறோம்.நாம் வெளித்தோற்றத்தை,பாடலின் இனிமையை பார்க்கிறோம்.
கவிதை பாடுபவரின் பேச்சு ஷரீஅத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இணக்கமாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நாம் தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை.நமக்கு முன்பாக அல்லாஹ் இருக்கிறான்.முஹம்மது முஹம்மது அல்லாஹ் இது போன்ற மார்க்கத்திற்கு எதிரான வார்த்தைகளை கூறும்பொழுது ஆட்டம் போடுகிறோம். மேலும் ஸுப்ஹானல்லாஹ் மாஷா அல்லாஹ் கூறி புகழ்மாழை சூட்டுகிறோம்.
(மகாலாதே ஷரஃபே காதிரி பக்கம்:381)


அசலில் நமது கவிஞர்கள் பிரசங்கிகள் فاتبعوني (என்னை பின்பற்றுங்கள்) என்பதை மறைத்துவிட்டனர்.
(மகாலாதே ஷரஃபே காதிரி பக்கம்:567)

ஷரஃப் காதிரி அவர்கள் ஓர் இடத்தில் பரேல்விய அறிஞரை சுட்டிகாட்டியவாறு எழுதியுள்ளார்கள் :

இன்றைய தினம் நபிமார்களின் நபி ஹஜ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசர்கள் என்பதாக அதிகமாக வாதிடுகிறார்கள்.பிரியம் என்பது எதற்கு சொல்லப்படும்? என்பதையும் அதனின் வழிமுறை தேவைகள் என்ன? என்பதையும் அவர்கள் விளங்ககொள்ளவில்லை.தாங்கள் ஸஹாபாக்களின் வழிமுறையில் நின்று நேசத்தை ஆராய்ந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் முன்வைத்து சரியான முறையில் வழிகாட்டியுள்ளீர்கள்.
(ஷரஃபே மில்லத் பக்கம்:77)








மற்றொரு இடத்தில் எழுதியுள்ளார்கள்:

 தவ்ஹீதை விட்டு தூரமாக உள்ளார்கள். 
(ஷரஃபே மில்லத் பக்கம்:124)


கோபம் வருகிறது.தங்களை அஹ்லுஸ்ஸுன்னா என்பதாக கூறிக்கொள்பவர்களில் சிலர் அனுமதிக்கப்பட்ட அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடுதலை அனுமதி என்பதாக எண்ணாமல் இதனை தங்களின் தனிச்சிறப்பிற்குரியதாக
அடையாளச் சின்னமாக எண்ண ஆரம்பித்துள்ளனர்.யா அல்லாஹ்! உதவி செய்! என்பது மாற்றார்களின் அடையாளம் என்பதை போன்றும்
யா அலி! உதவி செய்! என்பது தங்களின் அடையாளம் என்பதாக கருதுகிறார்கள்.இவர்கள் அறியாமையால் உண்மையை மாற்றிவிட்டனர்.எதார்த்தத்தை வெளிப்படையாகவும்,
வெளிப்படையை  எதார்த்தமான தோற்றமாக விளங்கியுள்ளனர்.இது அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு எதிரானது.
(ஷரஃபே மில்லத் பக்கம்:196)




ஷரஃப் காதிரி ஸாஹிப் மறதியில் இருக்கிறார்.உண்மையில் அனைத்து பரேல்விகளின் கண்ணோட்டமும் இதுதான்.பாஜில் பரேல்வி தொடங்கி அஷ்ரப் ஸிய்யாலவி வரை இதனை குறித்து விரிவாக அறிய 'குலிஸ்தானே தவ்ஹீத்' நூலை பார்வையிடவும்!

பரேல்விய அல்லாமா குலாம் ரஸுல் ஸயீதி எழுதியுள்ளார்கள்: 

நமது காலத்தில் பிரபல்யமான ஆய்வாளர் அல்லாமா குலாம் ஸுரூர் காதிரி எழுதியுள்ளார்கள்: நமது அஹ்லுஸ்ஸுன்னாவில் ஆய்வு ரீதியான இடத்தில் தனிநபர் வேர்பிடித்துவிட்டது.இதனால் அஹ்லுஸ்ஸுன்னா குறுகிய எல்லைக்குள் சுருங்கிவிட்டது.

மேலும் எழுதுகிறார்கள்:

எனினும்,நாம் தனிநபரான ஹஜ்ரத் ஷாஹ் அஹ்மத் ரிஜாகான் பாஜில் அவர்களுடன் எல்லைமீறி  உணர்ச்சிவசப்பட்டு தனது நிலைப்பாட்டை ஒப்படைத்து பிரபல்யத்தின் காரணமாக தங்களை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிகொண்டனர்.இதனால் ஏற்பட்ட விளைவு நாம் பெரும் ஆதாரமிக்க விஷயத்தை கூறினாலும் மற்ற மார்க்க அறிஞர்கள் அதனை நிராகரித்துவிடுகிறார்கள்.அல்லது அதனின் மதிப்பை குறைத்து விடுகிறார்கள்.இதுதான் பரேல்விய வழிமுறையின் சிந்தனையாக உள்ளது.இதுதான் பிரிவினை

மேலும் எழுதுகிறார்கள்:

பிக்ஹ் மஸாயில்களில் இந்தளவிற்கு குறுகிய நிலைப்பாடு இருக்ககூடாது.நாம் பிக்ஹே ரிஜவிய்யா அல்லது (ரிஜ்விய்யா) வழித்துறையை உண்டாக்கி மற்ற மார்க்க அறிஞர்களையும் அதன் பேரில் செல்லும்படி நிர்பந்திக்கிறோம்.ஏதேனும் மஸ்அலாவில் அஃலா ஹஜ்ரதின் கருத்திற்கு எதிரில் மற்ற மார்க்க மார்க்க அறிஞர்களின் கருத்திற்கு முன்னுரிமை கொடுத்தால் சேற்றை அள்ளிவீசி விடுகிறோம்.அவரை அஹ்லுஸ்ஸுன்னாவை விட்டு வெளியேற்றுவதுடன் அவருக்குரிய தகுதியான கண்ணியத்தை சங்கையை தருவதில்லை.சந்தேகமின்றி இந்த செயல் வரம்பு மீறுவதாகும்.

மேலும் எழுதியுள்ளார்கள்:

சுன்னத் என்பதை அஃலா ஹஜ்ரத் என்ற குறுகிய வட்டத்திற்குள் உள்ளடக்குபவர் இதன் மூலம் சுன்னத்திற்கு எந்த விதத்திலும்
சேவை புரியவில்லை.மாறாக சுன்னத்துடன் வரம்பு மீறுதலாக விரோதம் கொள்வதாக இதனை எண்ணவேண்டும்!
(ஷர்ஹே ஸஹீஹே முஸ்லிம் 7/27,28)



பரேல்விகளின் பிரபல்யமான நம்பகத்தகுந்த நூலான அன்வாரே ரிஜாவில் கல்வி கற்கும் புதிய சாரார்கள் அஹ்மத் ரிஜாகானை அறிந்துகொள்ளவில்லை.
பொதுவாக இமாம் அஹ்மத் ரிஜா குறித்து மஸ்அலா அவர் முஸ்லிம்களை காஃபிராக்குபவர்.பரேல்வியில் அவர் குப்ரை தீர்ப்பளிக்கும் இயந்திரத்தை வைத்துள்ளார்.இன்று ஆசியாவில் எத்தனையோ ஆய்வு ரீதியான பல்கலைக்கழகம் உள்ளது.அங்கு அஹ்மத் ரிஜாகானின் செயல்பாடு பெயரளவில் கூட இல்லை.
(அன்வாரே ரிஜா பக்கம்:10)




பரேல்விய நிறுவனரின் நிலை இவ்வாறு  இருந்தால் அடிமட்டத்தில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்?

அல்லாமா ஸயீதி ஸாஹிப் எழுதியுள்ளார்:

நாம் பார்க்கிறோம் சில ஊர்களில் மீலாத் சபையின் புனிதத்தை பாழ்ப்படுத்திவிட்டார்கள்.விழாக்கள் நெருக்கடியான பாதையில் அரங்கேறுகிறது.வீடுகளின் ஜன்னல்களிலிருந்தும் பால்கனியிலிருந்தும் வாலிப பெண்கள், குடும்ப பெண்கள் விழாவில் கலந்து கொள்பவர்களின் மீது பூக்களை அது அல்லாதவைகளை தூவுகின்றனர்.ஒழுக்கமற்ற வாலிபர்கள் மானக்கேடான அருவருக்கத்தக்க காரியங்களை செய்கிறார்கள்.சபையில் பலதரப்பட்ட இன்னிசையில் திரைப்பட பாடல்கள் பதிவு செய்யப்படுகிறது.வாலிபர்கள் திரைப்பாடல்களுக்கு மோசமான ஆட்டம் போடுகிறார்கள்.தொழுகை நேரங்களிலும் விழா நடைபெறுகிறது.மஸ்ஜிதுகளை செல்கிறது.தொழுகைக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.இது போன்ற மீலாத் சபைகளால் பரிசுத்தம் கெட்டுவிடுகிறது.இதனை திருத்தம் செய்ய முடியவில்லையெனில் நிறுத்தவேண்டும்.ஏனெனில் நற்காரியங்களுடன் ஹராமான காரியங்கள் கலப்பதற்கு ஷரீஅத்தில் எந்த ஒரு அடிப்படையும் இல்லை.
(ஷர்ஹே முஸ்லிம் 3/170)


சில நடுநிலை தவறியவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொள்கை விஷயத்தில் வரம்பு மீறுகின்றனர்.தொழுகை, நோன்பு போன்ற கடமையான வணக்கங்களை பேணுவதில்லை.மீலாத் சபைகளை பேணுதலாக வேடிக்கையான நிகழ்ச்சிகளில்  பெரும்திரளாக கூடுவதுப் பேன்று அரங்கேற்றம் செய்கிறார்கள்.

பாஜில் பரேல்வி அஹ்மத் ரிஜாகான் குறித்து மெளலானா மஜ்ஹருல்லாஹ் எழுதியுள்ளார்கள்:

பாஜில் பரேல்வியின் இயற்கை சுபாவமே குறும்புத்தனமாகும்.




ஸயீத் ஸாஹிப் எழுதியுள்ளார்கள்

சாமானிய மக்களில் சிலர் வரம்புமீறி அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கு பதிலாக எல்லா காரியங்களிலும் அல்லாஹ் அல்லாதவர்களிடம் வேண்டுகின்றனர்.அவர்களையே பிரார்த்தக்கின்றனர்.அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்கின்றார்கள்
.(திப்யானுல் குர்ஆன் 1/208)



மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்கள் :

நமது காலத்தில் அறிவீனர்களில் சிலர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யாமல் தனது தேவைகளை பீர்கள், மற்றும் பெரியோர்களிடம் வேண்டுகின்றார்கள்.கப்ருகளில் சென்று தேவைகளை முறையிடுகிறார்கள்.அவ்லியாக்களின் பெயரில் நேர்ச்சை செய்கிறார்கள்.எனினும், அனைத்தையும் அல்லாஹ்விடமே முறையிட வேண்டும்.அவனின் பெயரில் தான் நேர்ச்சை செய்யவேண்டும்.துஆ, நேர்ச்சை இரண்டும் வணக்கமாகும்.அல்லாஹ் அல்லாதவர்களின் வணக்கமானது கூடாது.எனினும்,துஆவில் நல்லோர்கள் நபிமார்களின் பொருட்டால் கேட்பது கூடும்.
(திப்யானுல் குர்ஆன் 1/691,692)



ஆக பரேல்விய்யத் என்பது தலைவர்கள் தொடங்கி அடிமட்ட உறுப்பினர்கள் வரை வழிக்கேடான கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.இன்ஷா அல்லாஹ் தேவை ஏற்படுமானால் மேலும் இது குறித்து அதிகப்படியான விளக்கங்களை கொடுப்போம்!
 

makkah live

Sample Text

madina live