Showing posts with label தேவ்பந்த். Show all posts
Showing posts with label தேவ்பந்த். Show all posts

14 Aug 2024

மௌலூது கிதாபுகளின் தேவ்பந்த் இருட்டடிப்பு செய்ததா ? அடுக்கடுக்கான ஆதாரங்கள் .

 அண்மையில் மௌலானா சுல்தான் பாகவி அவர்கள் கிதாபுகளில் செய்த இருட்டிப்பு என்ற தலைப்பில் மௌலூது குறித்து தாருல் கிதாப் தேவ்பந்து இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்று பேசிய வீடியோ காணமுடிந்தது.

👉🏻அந்த வீடியோவை இங்கே பாருங்கள்👈🏻

 அதைப்பற்றி ஆய்வு செய்த போது எனக்கு கிடைத்த தகவலை நான் பதிவு செய்துள்ளேன்.


இது வீண்விவாதம் என்றெல்லாமல் ஒரு ஆய்வு கண்ணோட்டத்தில் இல்மீ முனாகஷாவாக இதை நான் எடுத்துக் கொண்டேன். தஹ்கீகை விரும்பக்கூடியவர்கள் இதனை வாசித்து பயனடைவீர். அல்லாஹ் அதற்கு தவ்ஃபீக் செய்வானாக!

மௌலானா சுல்தான் பாக்கவி அவர்கள் கூறுவது:

அசல் பிரதியான முஹத்திஸ் இஸ்ஹாக் தெஹ்லவி அவர்களின் பிரதியில் வந்திருக்ககூடிய வாசகம்:

كنتُ أصنع طعاماً في أيام المولد صلة بالنبي صلى الله عليه وسلم


ஆனால் பிற்காலத்தில் இந்த கிதாபை அச்சிட்ட தாருல் கிதாப் தேவ்பந்து அசல்பிரதியில் இடம்பெற்ற வாசகத்திலிருந்து أيام المولد என்ற வார்தைகளை நீக்கவிட்டார்கள். 

புதிய பதிப்பில் வந்திருக்கின்ற வாசகம்:

كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم


இதில் உண்மை நிலை என்னவென்பதை இந்த கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பதிப்புகள் குறித்து அறிமுகம் : 

நம்முடைய நாட்டில் இருந்த பழைய பதிப்புகளின் வரலாறு மற்றும் அதை அச்சிட்ட பதிப்பகளின் வரலாறு குறித்து அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக  طبعة حجيرة பற்றிய தகவல்கள்.

மன்ஹஜு த் தஹ்கீக் வளர்ந்த பிறகு தஹ்கீக் உடைய உசூல்களை பின்பற்றி இன்றைய காலத்தில் ஒரு கிதாபை ஆய்வு செய்து வெளியிடுபவரை முஹக்கிக் محقق என்று அழைக்கிறோம்.


ஆனால் طبعة حجيرة உடைய காலத்தில் அந்தந்த مطبع பதிப்பகத்தில் தலை சிறந்த ஆலிம்கள் இருப்பார்கள். அவர்களின் ஆய்வின் அடிப்படையில் கிதாபுகள் அச்சிடப்படும். அவர்களுக்கு முஸஹ்ஹிஹ்  مصحح என்று சொல்லப்படுகிறது.

கையெழுத்துப் பிரதி மற்றும் அச்சுப் பிரதி இடையிலான வேறுபாடு

  • கையெழுத்துப் பிரதி என்பது மனிதன் தன் கரத்தால் சுயமே எழுதியவை. அதில் பல்வேறு கையெழுத்து வடிவங்கள் இடம் பெற்றிருக்கும். அச்சுப் பிரதி இயந்திரத்தால் வடிவமைக்கப்படுவது.

  • ஒரு கிதாப் அதன் ஏதேனும் கையெழுத்துப் பிரதியை முன்வைத்து பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு நூலாக வடிவமைக்கப்படுகிறது.

  • சில நேரங்களில் ஒரு கிதாப் இரண்டு, மூன்று கையெழுத்துப் பிரதிகளை வைத்து கூட ஆய்வு செய்து அச்சிடப்பட்டிருக்கும்.

கையெழுத்துப் பிரதிக்கு தான் முதல் அந்தஸ்து கொடுக்கப்படும். அச்சிடப்பட்ட பிரதிக்கு இரண்டாம் நிலை தான் என்பது கிதாபுகளை ஆய்வு செய்யும் முஹக்கிகீன்களின் உசூல்களில் ஒன்று.

ஒரு கிதாபுடைய نص ல் கூடுதல், குறைவு சிக்கலின் போது என்ன செய்ய வேண்டும்?

ஒரு கிதாபுடைய نص ல் கூடுதல் குறைவு சிக்கல் உள்ளது. உதாரணமாக ஒரு طبعة வில் ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றொரு طبعة  வில் அந்த வாசகம் இடம்பெறவில்லை. உடனே பழைய  طبعة வில் உள்ளதை எடுத்துக் கொள்வோம். புதிய طبعة வில் உள்ளதை விட்டு விடுவோம் என்று சொல்வது தவறான நிலைப்பாடாகும். அதைவிட அபத்தபானது பழைய طبعة வில் இருப்பது தான் சரி. புதிய طبعة  வில் பதிப்பில் தஹ்ரீஃப் அதாவது நீக்கம் செய்துவிட்டார்கள் என்று சொல்வதாகும்.

நேரடியாகவே விஷயத்திற்கு வருவோம். அத்துர்ருஸ் ஸமீன் ஃபீ முபஷ்ஷராதின் நபிய்யில் அமீன் என்ற கிதாபில்

كنت أصنع طعاماً في أيام المولد صلة بالنبي صلى الله عليه وسلم

என்ற வாசகம் 1899 ல் அஹ்மதி பதிப்பகத்தால் அச்சிடப்பட்ட நூலில் இடம் பெற்றுள்ளது.


இதே நூல் பின்னால் 1418 ல் தாருல் கிதாப் தேவ்பந்து மற்றும் 1443 ல் முஃப்தி இலாஹி பஃக்ஷ் அகாடமியில் அச்சிடப்பட்ட பிரதிகளில்  في ايام المولد என்ற வாசகம் இடம்  பெறவில்லை.  மேலுள்ள இரண்டு பதிப்பில்

كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم

என்று மட்டுமே உள்ளது.




இந்நிலையில் பழைய பதிப்பில் இடம் பெற்றதே சரி. பின்னால் அச்சிட்டவர்கள் தஹ்ரீஃப் செய்துவிட்டார்கள் என்று சொல்வது சரியல்ல. அப்படி சொல்வது இல்மீ அனுகுமுறையும் அல்ல.

இதுப்போன்ற சிக்கலில் முஹக்கிகீன்களின் சரியான அணுகுமுறை

ஒரு பதிப்பில் ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றொரு பதிப்பில் அந்த வாசகம் இடம்பெறவில்லை என்றால் அந்த مخطوطة கள் எந்த கையெழுத்துப் பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கு பிறகே அதில் நாம் விடைகாண முடியும்.

கூடுதல் வார்த்தை في ايام المولد இடம் பெற்ற பதிப்பு

1899ல் மௌலான செய்யது ளஹீரு தீன் அவர்கள் மூலமாக அஹ்மதி பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட طبعة  எந்த கையேட்டு பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் அந்த பதிப்பில் பதிவு செய்யப்படவில்லை.

கூடுதல் வார்த்தை في ايام المولد இடம் பெறாத பதிப்பு

1418ல் மௌலானா ஆஷிக் இலாஹி பரனி அவர்கள் மூலமாக தாருல் கிதாப் தேவ்பந்து பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட பதிப்பு எந்த கையேட்டு பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் அந்த பதிப்பில் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் அவர்களின் மகனார் மௌலானா அப்துர் ரஹ்மான் கவ்ஸர் பரனி அவர்களை தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டபோது தன்னுடைய தந்தை கையெழுத்துப் பிரதியை முன்வைத்தே இந்நூலை தஹ்கீக் செய்து வெளியிட்டார் என்ற தகவலை பகிரந்தார்கள்.

1443ல் மௌலானா நூருல் ஹஸன் ராஷித் காந்தலவி அவர்கள் மூலமாக முஃப்தி இலாஹி பஃக்ஷ் அகாடமியில் அச்சிடப்பட்ட கிதாப் 2 அசல் கையெழுத்துப் பிரதிகளை வைத்து அச்சிடப்பட்டது. இந்நூலுக்கு இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே இருக்கின்றன என்ற தகவலை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் ஹிஜ்ரி 1253 அதாவது ஆங்கில வருடக்கணக்கு படி 1837 ஆம் ஆண்டு முஃப்தி அப்துல் கய்யூம் பதானவி அவர்கள் மூலமாக எழுதப்பட்டது என்ற தகவல் இங்கு மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது.







ஆய்வின் இறுதி

கிதாபை ஆய்வுசெய்து அச்சிடுவதற்கான உசூல் என்ன?

  • கிதாபை தஹ்கீக் செய்யக்கூடிய ஒரு முஹக்கிக் உடைய பணி அந்த நூலின் கையெழுத்துப் பிரதிகளில் எது காலத்தால் முந்தியது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

  • அப்படி முந்திய பிரதியை தேர்வு செய்து அதில் இடம்பெற்றுள்ள نص வார்த்தைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும்.

  • ஆய்வின் போது முஹக்கிக் தன் தரப்பிலிருந்து கொடுக்கக்கூடிய விளக்கங்களை ஹாஷியாவில் தான் பதிவு செய்ய வேண்டும். நூலாசிரியரின் அசல் نص ல் அதாவது அசல் வார்த்தையில் பதிவு செய்ய முடியாது. அப்படிசெய்ய வேண்டுமானால் அதற்கென சில நிபந்தனைகள் உண்டு.

இதுதான் ஒரு கிதாபை ஆய்வு செய்து அச்சிடுவதற்கான அடிப்படை உசூல்.

  1. துர்ருஸ் ஸமீன் கிதாபுடைய அசல் கையெழுத்துப் பிரதி:

அந்த அடிப்படையில் 1837 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியே காலத்தால் முந்தியது. அந்த பிரதியை முஹக்கிக் அசலானதாக கருதி அச்சிடுவதற்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள். தஹ்கீகின் உசூல்களை பேணி அதில் இடம்பெற்றுள்ள  வார்த்தையை அப்படியே பதிவு செய்துள்ளார்கள்.

அவர்கள் தேர்வு செய்த கையெழுத்துப் பிரதியில்  ايام المولد என்ற கூடுதல் வாசகம் இடம்பெறவில்லை.மாறாக كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.


கூடுதல் வாசகம் இடம்பெறாத கையெழுத்துப் பிரதிக்கும், கூடுதல் வாசகம் இடம்பெற்றுள்ள அச்சு பிரதிக்கும் இடையே 52 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.

மேற்கூறிய ஆய்வு இப்படியிருக்க மௌலானா சுல்தான் பாகவி அவர்கள் இந்நூலை பின்னால் அச்சிட்டவர்கள்  இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் என்று சொல்வது தவறான கருத்தாகும். அப்படி சொல்வது கிதாபை ஆய்வு செய்து வெளியிட்ட முஹக்கிக் மீது இட்டுக்கட்டடுவதாக அமைந்துவிடும்.

மேலும் அஹ்மதி பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட கிதாபில்   ايام المولد என்ற கூடுதல் வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் எந்த கையெழுத்துப் பிரதியை முன்வைத்து பதியப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் என்னுடைய ஆய்வில் கிடைக்கவில்லை. அதை ஆய்வு செய்து கண்டறிபவர்கள் தெளிவுபடுத்தவும். நிச்சயமாக நான் அதிலிருந்தும் பயன்பெறுவேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் பயனுள்ள கல்வியை வழங்குவானாக! நம்முடைய முன்னோர்களின் வழியில் பயணிக்கும் நஸீபை நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன் !

தொகுப்பு: ரியாஸ்தீன் மதராஸி
மேட்டுப்பாளையம்

24 Jun 2021

நபிமார்கள் பொய் கூறுவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் !


தஸ்பியதுல் அகாயித் என்ற நூலில் காஸிம் (ரஹ்) அவர்கள் நபிமார்கள் பொய் சொல்வார்கள் என்று எழுதியதாக பரேல்விகள் வழமை போல் பழிசுமத்துகின்றனர்.இது குறித்து விரிவான விளக்கத்தை இனி பார்ப்போம்
ஸர்ஸய்யித் அஹ்மத் கான் அவர்கள்,கொள்கைகள் சம்பந்தமாக தமக்கு எழும் பதினைந்து சந்தேகங்களுக்கு பதில் தருமாறு காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களிடம் கடிதம் அனுப்பினார்கள். அதில் ஒன்று தான் இவை.

கேள்வி: சொல்,செயல் அனைத்திலும் அல்லாஹ்வின் தூதர்கள் உண்மையாளர்கள்.அவசியமான (مصلحت) சமயத்தில் நபியின் பக்கம் இணைத்து சொல்வதில் குப்ரின் அச்சம் இருக்கும் போது மிக ஒழுக்ககேடான செயலாகும்.அவசியமான (مصلحت) சமயம் என்பதில் எனது கருத்து பொதுமக்கள் அவசியமாக(مصلحت)
கருதியிருப்பதை தான். சொல் அல்லது செயலை கொண்டு வருவது எதார்த்தத்தில் அனுமதியில்லை.எனினும்,அவசிய சமயத்தில் அதனை கூறுவது (தஸ்பியதுல் அகாயித் பக்கம்:5)

ஸர்ஸய்யித் ஸாஹிபின் சந்தேகத்திற்கு ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பல பக்கங்களில் பதில் தருகிறார்கள். 
அதனின் சுருக்கம் என்னவெனில் பொய் பலவகைகள் உள்ளது.ஒன்று تعریض (சமிக்ஞையாக கூறுவது)தவ்ரியா (சிலேடையாக கூறுவது) போன்றவைகள் அனைத்தும் வெளிப்படையில் தோற்றத்தில் பொய்யாக தெரியும்.எனினும் எதார்த்தத்தில் உண்மைதான்.
தெளிவான பொய்யில் விளக்கம் உள்ளது.பாதிப்புகளிலிருந்து (பொய்) நீங்கி,நன்மையாக இருந்தால் ஒரு வகையில் நன்மைகளில் உள்ளதுதான்.உதாரணமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கூறுபவர் பொய்யர் இல்லை.(ஹதீஸின் சுருக்கமான கருத்து) எனினும், ஏமாற்றுதல்,மோசடி அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல் அல்லது தேவையின்றி கூறுவது ஹராமாகும்.சில சமயங்களில் சமிக்ஞை வார்த்தைகளை கூறினால் நிலைமை சரியாகிவிடும் எனும் போது தெளிவான பொய் அனுமதியில்லை.நபிமார்கள் தெளிவான பொய்யிலிருந்து முற்றிலுமாக நீங்கி பரிசுத்தமானவர்கள்.அவர்களை பொறுத்தவரை சமிக்ஞை வார்த்தைகளை கூறுவதையும் விரும்பவில்லை.ஹள்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகில் என்னிடமிருந்து சில பேச்சுக்கள் மூடலாக வந்துள்ளது என்பதாக வெட்கம் கொண்டு ஷஃபாஅத்திலிருந்து விலகிகொள்வார்கள்.இது குறித்து விரிவாக இமாம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
(தஸ்பியதுல் அகாயித் (சுருக்கம்) பக்கங்கள்:22,23,24,25,26)


சுருக்கமான விஷயம் சமிக்கை  வார்த்தைகள் வெளிப்படையில் பொய்யாக தெரிகிறது.மேலும் தெளிவான பொய்யும் சில சமயங்களில் நன்மைகளில் உள்ளது.இதனால் இதனை (சமிக்கைஞான  வார்த்தைகளை) நபியின் விஷயத்தில் பொய்யானது, ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிராக கருதுவது சரியில்லை.எனினும்,இவை மற்ற நபிமார்களின் விஷயத்தில் கூறியதாகும்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி விஷயத்தில் அனைத்து விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதாக காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் தெள்ளத்தெளிவாக எழுதியுள்ளார்கள். ஆனால்  பரேல்விகள் நேர்மையற்று அதனை மறைத்துவிடுகின்றனர்.

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் அசலான வார்த்தைகள்.

پھر دروغ صریح بھی کئی طرح پر ہوتا ہے جن میں سے ہر ایک حکم یکساں نہیں ہر قسم سے نبی معصوم ہونا ضروری نہیں اگر چہ ہمارے پیغمبر صلی اللہ علیہ وسلم سب بھی سے محفوظ رہے ہیں 

பிறகு தெளிவான பொய்யும் பல விதங்களில் உள்ளது.ஒவ்வொன்றின் சட்டமும் ஒன்றல்ல.அனைத்து வகையிலிருந்து நபிமார்கள் நீங்கியிருப்பது அவசியமில்லை.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தை விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள்.(ஆதாரம்:தஸ்பியதுல் அகாயித் பக்கம்:)

ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரேல்விய அறிஞர்களின் கருத்துக்களை இனி பார்ப்போம்!

முப்தி மஜ்ஹருல்லாஹ் எழுதியுள்ளார்:

ஸஹீஹ் புகாரி, முஸ்லிமில் அபூஹுரைரா ரளி அறிவிப்பு வருகிறது
நல்லோர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் மிக அதிகமாக இருக்கும்.இதனால் வெளிப்படையான தோற்றத்தில் உள்ள பொய்யையும் ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் தவறுசெய்தவனாக எண்ணி இஸ்திஃபாரில் ஈடுபட்டார்கள்.
(தப்ஸீரே மஜ்ஹருல் குர்ஆன் 2/978)

குலாம் ரசூல் ஸயீதி எழுதியுள்ளார்: 

ஹழ்ரத் உமர் (ரளி) கூறுகிறார்கள் :
முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு சமிக்கை வார்த்தைகள் போதுமானது.ஹள்ரத் இம்ரான் இப்னு ஹஸீன் (ரளி) கூறுகிறார்கள் முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யில் பெரிய வாய்ப்புள்ளது......

மேலும் எழுதுகிறார்: அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:ஹழ்ரத் இப்ராஹும் அலை அவர்கள் மூன்று பொய்களை மட்டும் தான் கூறினார்கள்.இந்த ஹதீஸில் பொய்யைக் கொண்டு கருத்தானது வெளிப்படையில் பொய்யாகும்.எதார்த்தத்தில் சமிக்கை வார்த்தைகள்.
(ஆதாரம்:திப்யானுல் குர்ஆன் 7/605)

ஹழ்ரத் இமாம் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.இதனின் நோக்கம் பொய்யில் சமிக்கையாக  கூறுவது,மறைத்து கூறுவது,சிலேடை அனைத்தும் நுழையும்‌.இவை நபிமார்களிடமிருந்து வெளிப்படும். எனவே நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்மொழியில் கண்ணியமான நபிக்கு பொய் எனும் வார்த்தையை பயன்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறோம்.

لم يكذب ابراهيم النبي عليه السلام قط إلا ثلاث كذبات (مسلم /٢,٢٦٦)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் நூலின் விரிவுரையில் எழுதியுள்ளார்  சமிக்ஞையாக  இருந்தால் كذب (பொய்) என்பதாக கூறுவதன் தேவை என்ன? என்பதாக கேள்வி எழுப்பினால் நவவி (ரஹ்) அவர்களின் பதில் சமிக்ஞை,சிலேடை போன்றவைகளை பொய் என்பதாக பொதுவாக கூறுவது சரிதான் என்பதை இந்த ஹதீஸிருந்து புரியமுடிகிறது.

இறுதியாக பரேல்விகள் முதலில் அவர்களின் கேடுகெட்ட கொள்கைகளை களையட்டும் !

பரேல்விய அறிஞர் அஹ்மத் யார் கான் நயீமி எழுதியுள்ளார்:

 நபிமார்கள் நாட்டத்துடன், வேண்டுமென்றே  பெரும்பாவங்கள் நுபுவ்வத்திற்கு முன்பாக பின்பாக செய்ததில்லை.ஆனால் தவறுதலாக,மறதியாக ஏற்பட முடியும்.எனினும் அதன்மீது நிலைத்திருக்கமாட்டார்கள்.
(ஆதாரம்:ஜாஅல் ஹக் பக்கம்:)


நபிமார்களிடமிருந்து  பெரும்பாவங்கள் நிகழும் என்பதாக கூறுகிறார் இதற்கு எதிராக பரேல்விகள் என்ன தீர்ப்பு தருவார்கள்?

20 Jun 2021

" யா ரஸூலுல்லாஹ் " என்று கூறுவது பற்றி தேவ்பந்த் உலமாகளின் நிலைப்பாடும் ! பரேலவிகளின் நிலைப்பாடும் !

பரேல்விகளின் குற்றச்சாட்டு:

நாங்கள் 'யாரசூலுல்லாஹ்' கூறினால் இணைவைப்பு. தேவ்பந்திகள் 'யாரசூலுல்லாஹ்' கூறுவது
ஏகத்துவமா? நாங்கள் அலி முஷ்கில் குஷா (مشکل کشا) கூறினால் இணைப்பு. நீங்கள் கூறுவது ஏகத்துவமா?

அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாத்தின் பதில்: 

ஒருவரின் கொள்கைகளுக்கு நிலைப்பாட்டிற்கு ஏற்ப சட்டங்கள் மாறுபடும். உதாரணமாக ஷீஆக்கள் அலி (ரளி) மற்றும் ஹுஸைன் (ரளி) இருவரையும் இமாம் என்பதாக ஏற்கிறார்கள்.அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தை சேர்ந்த நாம்
அன்னார் இருவரையும் இமாம் என்பதாக ஏற்கிறோம். இரண்டும் ஒன்றா? அவர்கள் ஏற்கும் அர்த்தம் வேறு.நாம் ஏற்கும் அர்த்தம் வேறு.

நாம் ஏற்பதில் அவர்கள் ஏற்பதில் வித்தியாசம் உண்டு.நாம் அதற்குரிய வரம்பிற்குள் எல்லைக்குள் ஏற்போம்! ஆனால், ஷீஆக்கள் எல்லை கடந்து வரம்பு மீறி நபிமார்களை விட உயர்ந்தவர்கள்,மேலானவர்கள் என்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
  நன்றாக கவனியுங்கள்!

கொள்கையை முன்வைத்து இரண்டிற்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது.மற்றொரு உதாரணம் வசந்தகாலம் காய்கனிகளை  விளைவிக்கிறது.இதனை நாத்திகவாதி கூறினால், 'அதனின் அர்த்தமும் தீர்ப்பும் வேறாகும்'.
'முஃமீன் கூறினால் தீர்ப்பும் அர்த்தமும் வேறாகும்'.

   ஷீஆக்களின் அசத்திய கொள்கையும், இறைநிராகரிப்பான இமாமத் நிலைப்பாடும் வழிகேடாகும்.எனவே கொள்கைகளை நிலைப்பாடுகளை முன்வைத்து தீர்ப்பு கூறப்படுகிறது. இதைப் போன்றுதான் பரேல்விகள் 'யாரசூலுல்லாஹ்' கூறுவதிலும் நாம் 'யாரசூலுல்லாஹ்' கூறுவதிலும் வித்தியாசம் உண்டு.

பரேல்விகள் 'யாரசூலுல்லாஹ்' கூறுவதானது அண்ணலார் அவர்கள் ஹாஜிர் நாஜிர், முழுமையான சுயவிருப்பம் உள்ளவர் என்ற கொள்கையின் பேரிலாகும்.இரண்டு கொள்கைகளும் அல்லாஹ்வின் தனிப்பட்ட தன்மையாக உள்ளது.ஹாஜிர் நாஜிர், முழுமையான சுயவிருப்பம் மற்றவர்களுக்கு உண்டு என்ற கொள்கையானது இணைவைப்பாகும்.

ஹாஜிர் கொள்கை:

   பரேல்விய ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார்கான் நயீமி எழுதியுள்ளார்:

அனைத்து இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் இருப்பதானது ஒருபோதும் அல்லாஹ்வின் தன்மை இல்லை.(ஜாஅல்ஹக்,பக்கம்:134)
மேலும் எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ் அனைத்து இடங்களிலும் இருக்கிறான் என நம்புவது மார்க்கமில்லாத வழிமுறையாகும்.அனைத்து இடங்களிலும் இருப்பதானது அல்லாஹ்வின் தூதரின் தன்மையாகும்.
(ஜாஅல்ஹக் பக்கம்:134)

அல்லாஹ் பாதுகாப்பானாக!

வாசகர்களே ! அல்லாஹ்வின் தனித்தன்மையை துணிச்சலுடன் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முழுவதுமாக தந்துள்ளார். ஹாஜிர் நாஜிர் தன்மையானது அல்லாஹ்விற்கு இல்லை என்பதாக பகிரங்கமாக மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி அல்லாஹ்வை ஹாஜிர் நாஜிர் என்பவர் மார்க்கமில்லாதவர்
என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.இது வெளிப்படையான பகிரங்கமான இணைவைப்பாகும்.

  பரேல்விய முனாஜிர் மெளலவி உமர் எழுதியுள்ளார்: 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணவன், மனைவி தாம்பத்திய நேரத்தில் ஹாஜிர் நாஜிராக இருக்கிறார்கள்.
(மிக்யாஸே ஹனஃபிய்யத் பக்கம்:282)

கணவன்,மனைவி இரவில் தனித்து இருக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகைதருகிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக !

  ஆக,பரேல்விகளிடத்தில்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாஜிர் நாஜிர் இல்லாத இடமேயில்லை.

பரேல்விய கொள்கை
(முக்தாரே குல்) முழுமையான சுயவிருப்பம்..!

மெளலவி அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார்:

 அல்லாஹ் பிறகு தூதர் வானம் பூமியை படைப்பாளர்.அல்லாஹ் பிறகு தூதர் சுய அதிகாரத்துடன் உலகிற்கு உணவு அளிக்கும் ஆற்றல்மிக்கவர் என்பது இணைவைப்பு இல்லை.
(ஃபதாவா ரிஜ்விய்யா 30/588)

ஆனால்
  அல்லாஹ்தஆலா கூறுகிறான் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.” ( 72:21)

ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.(15:21 )

இதற்கு எதிராக ரிஜாகான் பரேல்வி கூறுவதைப் பாருங்கள்: 

அல்லாஹ்வின் திருச்சமூகத்திலிருந்து வாங்குவது,கொடுப்பது அனைத்தின் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைகளில் உள்ளது.
(அல்அம்னு வல் உலா பக்கம்:22)

இதற்கு எதிரான குர்ஆன் வசனம்
👇👇

வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.(42:12)

பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்:

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது.அன்னார் (ஒருவரை குறித்து) நாடினால்
அவன் வாழும் போது தவ்பா வாசல் அடைக்கப்படும்.அவன் தவ்பா செய்தால் ஏற்கப்படாது.அன்னார் (ஒருவரை குறித்து) நாடினால் அவரின் மரணத்திற்கு பிறகும் தவ்பா வாசல் திறக்கப்படும்.அவருக்கு உயிர்கொடுக்கப்பட்டு முஸ்லிமாகுவார்.
(ஸல்தனதே முஸ்தபா பக்கம்:47)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க சட்டங்களின் தலைவர்.விரும்புகிறவருக்கு ஹலாலாக்குவார்கள்.ஹராமாக்குவார்கள்.விரும்புகிறவருக்கு குர்ஆனின் சட்டத்தை மாற்றுவார்கள்.(ஆதாரம்:ஸல்தனதே முஸ்தபா பக்கம்:28)

இதற்கு எதிராக அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்!

   திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.(5:17) 

மற்றோர் வசனத்தில் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான்
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 66:1)

மெளலவி அம்ஜத் பரேல்வி எழுதியுள்ளார்: 

வானங்களும்,பூமியும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கண்காணிப்பில் உள்ளது.சுவனம் நரத்தின் சாவிகள் பெருமானாரின் புனிதகரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.உணவு நலவு அனைத்து விதமான கொடைகள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் பங்கிடுகிறார்கள்.உலகம் மறுமை பெருமானாரின் கொடையின் ஒரு பகுதியாகும்.ஷரீஅத்தின் சட்டங்களும் பெருமானாரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.இதன் பேரில் விரும்புவதை ஹராமாக்குகிறார்கள்.விரும்புவதை ஹலாலாக்குகிறார்கள்.கடமைகளை விரும்பினால் மன்னித்துவிடுவார்கள்.(பஹாரே ஷரீஅத் பாகம்:1 பக்கம்:79-85)
இதற்கு எதிராக அல்லாஹ் கூறுவதை பாருங்கள்!

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.(35:2)

இப்பொழுது வித்தியாசம் நமக்கு தெளிவாக புரிந்திருக்கும்!

பித்அத்வாதிகள் நபி (ஸல்) அவர்களை 'யாரசூலுல்லாஹ்' என கூறுவது ஹாஜிர் நாஜிர் முழுமையான சுயஅதிகாரம் கொள்கையின் பேரிலாகும். அல்லாஹ்வை அன்றி மற்றவர்கள் அனைத்து இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் முழுமையான சுய விருப்பம் உள்ளவர்கள் என்பது இணைவைப்பாகும்.இதன் காரணமாக பரேல்விகள் இணைவைப்பாளர்களாக உள்ளார்கள். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் தேவ்பந்த் உலமாக்கள் யாரசூலுல்லாஹ் கூறுவது
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்  அவர்கள்
அனைத்து இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் முழுமையான சுய விருப்பம் உள்ளவர்கள் போன்ற கொள்கையின் பேரில் இல்லை. எனவே நாம் யாரசூலுல்லாஹ் என்று கூறுவது சத்தியமும் ஏகத்துவமாகும். பரேல்விகள் யாரசூலுல்லாஹ் கூறுவது இறைநிராகரிப்பு இணைவைப்பாகும்.

இவ்வாறுதான் நமது பெரியோர்கள் ஹஜ்ரத் அலி (ரளி) உடன் முஷ்கில் குஷா (مشکل کشا ) உபயோகித்துள்ளார்கள்.
அதனின் கருத்தானது சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர் என்பதாகும். ஏனெனில் ஹஜ்ரத் அலி (ரளி) அவர்களின் மரணித்திற்கு பிறகு இந்த சொல் பிரபல்யமாகிவிட்டது.அலி (ரளி) அவர்கள் உயிரோடு இருந்தால் தீர்க்க முடியாத சந்தேகத்தையும் நிவர்த்தி செய்வார்கள். 

நாம் 'முஷ்கில் குஷா'  என்பதை சந்தேகத்தை தீர்ப்பவர் என்ற கருத்தின் பேரிலாகும்.ஆனால் பரேல்விகள் உதவி செய்பவர் என்பதாக கருதுகிறார்கள்.இது இணைவைப்பாகும்.

ஹஜ்ரத் உமர் (ரளி) அவர்கள்
'ஃபாரூக்' என்று அழைக்கப்படுகிறார்.இதன் காரணம் அன்னார் சத்தியத்தை அசத்தியத்தை பிரித்தறிபவர்.
 
ஹஜ்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் 'சித்தீக்' என்று அழைக்கப்படுகிறார்.இதன் காரணம் அன்னார் உண்மையாளர்.

ஹஜ்ரத் உஸ்மான் (ரளி) அவர்கள் 'ஙனீ' என்று அழைக்கப்படுகிறார்.இதன் காரணம் அன்னார் கொடைவள்ளல்.

இவ்வாறுதான் அலி (ரளி)
அவர்களை  'முஷ்கில் குஷா' என்று கூறுவதும் தீர்க்க முடியாத சட்டத்திற்கு தீர்வு சொல்பவராக இருந்ததின் பேரிலாகும். ஆக இங்கும் வித்தியாசம் தெளிவாகிவிட்டது.பித்அத்வாதிகள் கூறுவதன் அர்த்தம் வேறு.நாம் கூறும் கூறும் அர்த்தம் வேறு.

இறுதியாக பரேல்விகள் அங்கீகரிக்கும் நூல் குற்றச்சாட்டிற்கு பதில்.!

மெளலவி ஷாஹ் மஸ்ஊத் கூறுகிறார்கள்:

யாரசூலுல்லாஹ்! என்பதை நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் என்பதின் எண்ணத்தில் சொல்வதானது இணைவைப்பை ஏற்படுத்தும்.
(பதாவா மஸ்ஊத் பக்கம்:531)

மற்றொரு பரேல்விய அறிஞர் கூறுகிறார்:

மீலாத் சபைகளில் நிற்பதானது இணைவைப்பு ஏற்படும் விதத்தில் இருந்தால் தான் கூடாது.ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மணித்துளியும் ஹாளிர் நாளிர் என்பது அல்லாஹ்வின் பண்பாகும்.
(ரஸாயிலே மீலாத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பக்கம்:567)
பரேல்விய அறிஞரின் கூற்றின்படி மீலாத் சபையில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாளிர் நாளிர் எனும் எண்ணம் இல்லாமல் மரியாதை,சங்கை எனும் வகையில் நிற்கலாம் என்கிறார்.இதே போன்றுதான் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீதுள்ள பிரியம்,நேசத்தின் பேரில் யாரசூலுல்லாஹ் என்று அழைப்பது தவறில்லை என்கிறோம்.

தேவ்பந்த் பெரியோர்களின் மீது பரேலவிகள் கொடுத்த குப்ர் ஃபத்வா காழ்ப்புணர்ச்சியே ! அவதூறே! - பாகம் :1


சான்று:(1)

தேவ்பந்த் உலமாக்களின் பெயர் கூறாமல் பரேல்விகளிடத்தில் ஃபத்வா கேட்டால் (தேவ்பந்த் உலமாக்களின் வாக்கியத்தை அறியாமல் இருக்கவேண்டும்) உடனடியாக குப்ர் இல்லை என்பதாக தீர்ப்பு தருவார்கள்.

பரேல்விகளின் பெரியார் கமருத்தீன் ஸிய்யாலவி அவர்களிடத்தில் ஜைத் எனும் பெயரில் மார்க்க தீர்ப்பு கேட்டு வினா எழுப்பப்பட்டது...

ஜைத் கூறுகிறார்: காதமுன்நபிய்யீன் என்பதில் இறுதி என்பது மட்டும் பொருள் இல்லை.மாறாக,அனைத்து நபிமார்களும் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நூர்களை,பைஜ்கள்  (ஆன்மீக வளர்ச்சிகள்) பெறுகிறார்கள் என்பதாக கூறினால் ஜைதின் மீது குப்ர் உண்டாகுமா?

பதில்: ஜைதின் மீது குப்ர் ஏற்படாது.

(ஆதாரம்:அன்வாரே கமரிய்யா பாகம்:3, பக்கம்:149)

இதன்  பேரில் பரேல்விகள், ஸிய்யாலவிக்கு எதிராக கூச்சலிட்டனர் கொதித்தெழுந்தனர். இந்த வாக்கியத்தின் பேரில் தான் அஹ்மத் ரிஜாகான்,காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களை காபிர் என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

இதனால் ஸிய்யாலவி ஸாஹிப் தனது ஃபத்வாவை மாற்றிக் கொண்டார். ஹள்ரத் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் வாசகத்தில் வித்தியாசம் உள்ளது.இதனால் அவரின் மீது குப்ர் ஏற்படத்தான் செய்யும்.மேலும் நானூத்தவி (ரஹ்) அவர்களின் வாக்கியங்கள் பலதரப்பட்டது என்பதை நிரூவுவதற்கு தவறான வாதங்களை முன்வைத்தார்.அதில் ஒன்று நானூத்தவி (ரஹ்) அவர்கள் காதமுன் நபிய்யீன் பொருளில் لا نبي بعده  அண்ணலாருக்கு பிறகு நபி இல்லை என்பதை ஏற்காமல் பிடிவாதமாக இருந்தார் என்பதாக பொய்யுரைத்தார்.

ஆனால் எதார்த்தம் என்னவென்றால் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் தஹ்தீருன்னாஸில் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளார்:

காதமுன் நபிய்யீன் பொருளில் இறுதி நபி என்பதில் இஜ்மா உம்மத் உள்ளது. இந்த பொருளை ஏற்காதவர் காபிர் என தீர்ப்பளித்துள்ளார்.

ஹள்ரத் அவர்கள் காதமுன் நபிய்யீனில் இறுதிநபி என்பதை ஏற்பதுடன் அதிகப்படியான பொருளையும் கூறியுள்ளார்.மற்ற நபிமார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பைஜ்களை (ஆன்மீக வளர்ச்சிகளை) பெற்றவர்கள்.இந்த விஷயத்தை ஜைதின் பெயரில் கேட்ட போது ஸிய்யாலவி குப்ர் இல்லை என்பதாக தீர்ப்பளித்துள்ளார். தேவ்பந்த் உலமா என்றவுடன் காபிர் என்பதாக தீர்ப்பை மாற்றிவிட்டார்.

ஆகவே பரேல்விகள் தேவ்பந்த் பெரியோர்களை காபிர்கள் என்பதாக தீர்ப்பளித்தது அவதூறு, காழ்ப்புணர்ச்சி என்பது தெளிந்த நீரோடை போல்,பகலின் வெளிச்சம் போல் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சான்று:(2)

தேவ்பந்த் உலமாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிப்பவர்கள் என்பதை நிறுவுவதற்கு ஏறத்தாழ பரேல்விய உலமாக்கள் ஒரு விதியை முன்வைக்கின்றனர். அவமதிப்பின் அடிப்படை உர்ஃப் எனும் வழமை தான். இதில் இரு பரேல்விய அறிஞர்களின் கருத்துக்களை மட்டும் முன்வைக்கிறோம்.

பரேல்விய அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:

திரட்டுதல்,
பழித்தல்,குறைகூறுதல், இகழ்தல் வார்த்தைகளில் கூறியவரின் நோக்கம்,நாட்டம் கவனிக்கப்படாது.மாறாக உர்ஃப் எனும் வழமை, வார்த்தையிலிருந்து 
 உடனடியாக புரியும் பொருள்தான் (கவனிக்கப்படும்) .
(ஆதாரம்:இபாராதே அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி ஜாயிஜா பாகம்:1, பக்கம்:23)

வார்த்தைகளின் அர்த்தங்கள்....

இல்லை.மாறாக பொதுவான உர்ஃப் எனும் வழமையில் அதனின் கருத்து,நோக்கத்தின் பேரில் சட்டம் கொடுக்கப்படும்.
(ஆதாரம்:இபாராதே அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி ஜாயிஜா பாகம்:1, பக்கம்:25)

மற்றொரு பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்:

சிலர் மரியாதையற்ற வார்த்தைகளின் பொருளில் பலதரப்பட்ட மாற்று விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.எனினும்,ஏதேனும் மாற்று விளக்கத்தால் பொருள் சரியாகுவதுடன் பொதுவான உர்ஃப் எனும் வழமை, மொழிநடையில் அம்மொழியை சேர்ந்தவர்களிடத்தில் அந்த வார்த்தையில் இழிவு செய்வது பெறப்பட்டால் அனைத்து மாற்று விளக்கங்களும் வீணானது என்பதை புரிந்து கொள்வதில்லை.
(ஆதாரம்: அல்ஹக்குல்முபீன் பக்கம்:28)

இனி இந்த விதியை வைத்துக்கொண்டு எவ்வாறு பரேல்விகள் தீர்ப்பளித்துள்ளார்கள் என்பதை இனி பார்ப்போம்!

பரேல்விய அறிஞர் ஷரீபுல் ஹக் அம்ஜதி அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் தேவ்பந்த் உலமாக்கள் காபிர்கள் என்பதாக தீர்ப்பு எழுதியுள்ளார்:

ஏதேனும் ஒருவரை சகோதரர் என்பதில் அவருடன் சரிசமம் என்பதாக வாதிடுவதாகும். நமது உர்ஃப் எனும் வழமையில் நம்மை விட மூத்தவரை,வயதானவரை செச்சா,தாதா போன்று அழைப்பார்கள்.நபிமார்களுடன் (அடியான்) சரிசமம் என்பதாக நம்பிக்கை கொள்பவர் கட்டாயம் காபிர்.மேலும் சகோதரர் என்பதில் சரிசமம் என்பதாக வாதம் உள்ளது.இதனால் இந்த செயல் கட்டாயம் குப்ராகும்.
(ஆதாரம்:ஃபதாவா ஷாரிஹ் புகாரி 1/583)
ஆக இங்கு சகோதரர் என்பது உர்ஃப் எனும் வழமையில் சரிசமம் என்பதாக வாதிடுவதாகும் என கூறியுள்ளார்.

ஒரு பரேல்வி,ஷரீபுல் ஹக் அம்ஜதியிடத்தில் பைஹகியிலிருந்து ஒரு ரிவாயத்தை அனுப்பியுள்ளார்.

வானவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சகோதரர் என்பதாக கூறியுள்ளனர்
இது குறித்து விளக்கம் என்ன? இப்போது ஷரீபுல் ஹக் அம்ஜதியின் உர்ஃப் எனும் வழமை மாறிவிட்டது. 

இந்த ஹதீஸ் எனது பார்வையில் படவில்லை . இவ்வாறு ஹதீஸ் இருந்தால் மாற்றுவிளக்கம் தரலாம்.வானவர்கள் சரிசமம்,ஒத்தவர்கள் எனும் நிய்யத்தில் கூறவில்லை.மாறாக பிரியத்தை வெளிப்படுத்த கூறியுள்ளனர்.எவ்வாறெனில் நமது பொதுவான உர்ஃபு எனும் வழமையில் பேசுபவரை சகோதரர் என்போம்.வஹ்ஹாபிகளுக்கு மாற்றமாக அவர்கள் கூறுவது மூத்த சகோதரருக்கு செய்யும் சங்கைக்கு ஏற்ப நபிக்கு செய்யுங்கள்.இந்த வாக்கியத்தில் இழிவுப்படுத்துவது மிகைத்துள்ளது.வானவர்களுக்கு மாற்றமாக அவர்களின் சொல்லில் பிரியத்தை வெளிப்படுத்துவது நோக்கமாகும்.இத்துடன் வானவர்கள்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பை,பரிபூரணத்தை வெளிப்படுத்தும் விதமாக அல்லாஹ்வின் பிரதிநிதி என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கூறியுள்ளனர்.எனவே வஹ்ஹாபிகளின் குப்ர் சொல்லில் இது போன்ற மாற்று விளக்கங்கள் தரமுடியாது.(ஆதாரம்:ஃபதாவா ஷாரிஹ் புகாரி 1/347)
முந்தைய ஃபத்வாவில் தேவ்பந்த் உலமாக்கள் என்பதால் சகோதரர் என்பது வழமையில் சரிசமம் என்பதாக வாதிடுவது எனக் கூறி குப்ர் பத்வா அளித்துள்ளார்.இந்த ஃபத்வாவில் சகோதரர் என்பதாக அழைப்பது வழமையில் தவறில்லை என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.இந்த இரண்டு தீர்ப்பில் எது சரி? 
ஆக பரேல்விகள் தேவ்பந்த் உலமாக்களின் மீது குப்ர் பத்வா அளித்தது காழ்ப்புணர்ச்சிதான்.
அவதூறுதான் என்பது நிரூபணமாகிறது.

முக்கிய குறிப்பு: பரேல்விகளின் உர்ஃபு எனும் வழமையின் விதியில் பல்வேறு குறுக்கு கேள்விகள் உள்ளது.
முரண்பாடுகளும் உள்ளது.இதனை இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்.
 

makkah live

Sample Text

madina live