31 Dec 2017

பரேல்விய பித்அதி தலைவர் அஹ்மத் ரிஜாகானின் குர்ஆன் மொழிப்பெயர்ப்பில் குலறுபடியும், இதன் பேரில் பரேல்விய அறிஞரின் புலம்பலும்.

வாசகர்களே!
பரேல்விய பித்அதி ஜமாதின் தலைவர் அஹ்மத் ரிஜாகானின் குர்ஆன் மொழிப்பெயர்ப்பிற்கு இல்ஹாமே தர்ஜுமா (உள்ள உதிப்பு மொழிபெயர்ப்பு) என்று சொல்லப்படும்.இதனின் உண்மைநிலை குறித்து கன்ஜுல் ஈமானின் என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் கட்டுரை வெளியிடுவோம்!

இப்பொழுது மொழிப்பெயர்ப்பின் உண்மை நிலையை, தவறுகளை குறித்து,பரேல்விய அறிஞர் ஷைகுல் ஹதீஸ் முஸ்லிம் ஷரீபின் விரிவுரையாளர் குலாம் ரசூல் ஸயீதி அவர்கள் பட்டியலிட்டுள்ளார்.இதன் பிறகு, வாசகர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

இது உலமாயே அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அற்புதம் இல்லை.தேவ்பந்த் பெரியோர் மீது அவதூறுகளை அள்ளிவீசி காபிர் என்பதாக தீர்ப்பளித்தார்.ஆனால், பரேல்விய அறிஞரே சுட்டிகாட்டும் அளவிற்கு அவரது மொழிப்பெயர்ப்பு தள்ளப்பட்டுவிட்டது.

(1) அஹ்மத் ரிஜாகானின் மொழிப்பெயர்ப்பு  அகராதி ஆதரப்பூர்வமான ஹதீஸிற்கு எதிரானது

நம்மிடத்தில் மொழிப்பெயர்ப்பானது சரியில்லை.ஏனெனில் இந்த (ஆயத்தின்) மொழிப்பெயர்ப்பானது குர்ஆனின் அகராதி அதனின் போங்கு ஸஹீஹான ஹதீஸிற்கு எதிராக உள்ளது.இதன் பேரில் அறிவுரீதியான ஐயமும், மறுப்பும் உள்ளது.
(ஷர்ஹே ஸஹீஹ் முஸ்லிம் 7/325)

(2) அஹ்மத் ரிஜாகானின் மொழிப்பெயர்ப்பு அறிவுரீதியாக தவறான மொழிப்பெயர்ப்பு.

மெளலவி குலாம் ரஸுல் ஸயீதி இந்த மொழிப்பெயர்ப்பு குறித்து அதிகப்படியாக எழுதியுள்ளார் இந்த விரிவுரை ஸஹீஹான ஹதீஸ்களுக்கு எதிரானது.அறிவுரீதியாக ஐயம் இருக்கிறது.
(ஷர்ஹே ஸஹீஹ்  முஸ்லிம் )

இந்த விரிவுரையின் மீது அறிவுரீதியாக சந்தேகம் எழுகிறது.
(ஷர்ஹே ஸஹீஹ் முஸ்லிம் 3/100)

(3) அஹ்மத் ரிஜாகானின் மொழிப்பெயர்ப்பு  தவறு என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உண்டு.

இந்த மொழிப்பெயர்ப்பு தவறு என்பதற்கு தெளிவான ஆதாரம் உண்டு.
(ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம் 6/692)

(4) அஹ்மத் ரிஜாகானின் மொழிப்பெயர்ப்பின் அடிப்படை பலகீனமானதும் தவறாகும்.

   குலாம் ரஸுல் ஸயீதி ஸாஹிப் அதிகப்படிதியாக எழுதியுள்ளார்கள் :

   என்றாலும் இந்த தர்ஜுமாவின் பலகீனமான அடிப்படை தவறு உள்ளது.
(ஷர்ஹே ஸஹீஹ் முஸ்லிம் 7/386)

முக்கிய குறிப்பு :

மேலே குறிப்பிட்ட ஷர்ஹே ஸஹீஹ் முஸ்லீமிற்க்கான ஆதாரம் கீழே போடப்பட்டுள்ள மஆரிஃபே ரிஜா என்ற கிதேபிலே உள்ளது...👇👇

அஹ்மத் ரிஜாகானின் மொழிப்பெயர்ப்பான கன்ஜுல் ஈமானின் மீது ஸயீதி ஸாஹிபின் தீர்ப்பின் பேரில்  பரேல்விகளின் புலம்பல் :

வாசகர்களே!

 ஸயீதி ஸாஹிப் கன்ஜுல் ஈமானிற்கு எதிராக அளித்த தீர்ப்பின் சிகிச்சையை தாங்க முடியாத பரேல்விகளின் அறிஞர் அழுது புலம்புவதைப் பாருங்கள் :

  உள்ளத்தை உலுக்கும் விரிவுரை அழவைக்கும் விளக்கம் துடிப்பை ஏற்படுத்தும் ஆய்வு தளர்வடையச் செய்யும்  போதனை வெட்கிக்க வைக்கும் அழைப்பு தூண்டும் பிரசங்கம் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தில் புலம்பல் கவலை நோவினை தரும் புயல்காற்றை உருவாக்கியுள்ளது.
(மஆரிஃபே ரிஜா 156)



மெளலவி ஸாஹிப் குலாம் ரசூல் ஸயீதின் புறத்திலிருந்து,
பித்அத்தை புதுப்பித்த அஹ்மத் ரிஜாகானிற்கு எதிரான அவமதிப்பும் அதன் பேரில் அறிஞரின் அழுகையும்:

  அஃலா ஹஜ்ரதின் மொழிப்பெயர்ப்பிற்கு மாற்றமாக இல்மில் கலகத்தை ஏற்படுத்தி அஹ்லுஸ்ஸுன்னாவை கீழாக காட்டுவதில் மற்றும் வஹ்ஹாபிகளின் இருப்பை வலுவூட்டுதில் மிக குறைந்த காலத்தில் உறுதியான வேலை செய்துவிட்டார்.(வஹ்ஹாபிகள்) அவர்கள்  வேகமாக தொடர்ந்து முயற்சித்தாலும் ஏறத்தாழ நூறு ஆண்டுகள்  எட்டமுடியாத நோக்கத்தை.குலாம் ரஸுல் அவர்கள்
ஸயீதிக்கு (நற்பாக்கியம்) பதிலாக ஸஊதியின் செயலை வெளிப்படுத்திவிட்டார்.
(மஆரிஃபே ரிஜா 157)



பரேல்விய அறிஞரின் முறையீடு பரேல்விய வழிமுறையைச் சேர்ந்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அஹ்மத் ரிஜாகான் பரேல்வி உயர்ந்தவர்கள் என கருதுகிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக

பரேல்விய அறிஞரின் பக்கமிருந்து அஹ்மத் ரிஜாகானின் தர்ஜுமா குறித்து இல்ம் ரீதியாக தவறுகள் சுட்டிகாட்டப்படும் போது பரேல்விகள் அதனை புறந்தள்ளிவிடுகிறார்கள். அதுமட்டுமின்றி பரேல்விய மெளலவிகள் புலம்பவும் குமுறவும் ஆரம்பித்துவிடுகின்றனர்.

மஆரிஃபே ரிஜாவில் பரேல்விய அறிஞரின் கருத்து எடுத்துச் சொல்லப்படுகிறது:

பரேல்விய வழிமுறையைச் சேர்ந்தவர்கள் அஃலா ஹஜ்ரத்தை நபிமார்கள் நல்லோர்களை விட அதுமட்டுமின்றி நபிமார்களின் தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்பதாக கருதுகிறார்கள்.அல்லாஹ் பாதுகாப்பானாக அல்லாஹ் பாதுகாப்பானாக
(மஆரிஃபே ரிஜா 160)



குலாம் ரஸுல் ஸயீதின் குற்றச்சாட்டின் காரணமாக பரேல்விகளில் அதிகமானவர்கள் பரேல்விய மஸ்லகின் வழிமுறை மீது வெறுப்புகொண்டுவிட்டனர்.

   மஆரிஃபே ரிஜாவின் ஆசிரியர் குலாம் ரசூல் ஸயீதியை குறித்து முறையிடுகிறார்.இந்த காரணமாக ஜமாஅத்தில் எந்தளவிற்கு குழப்பங்கள் பரவி விட்டது.எத்தனையோ நபர்களின் உள்ளங்களில் உறுதியற்றை ஊடுருவி விட்டது அது குறித்து பார்ப்போம்!

  அல்லாமா ஸயீத் ஸாஹிப் அவர்கள் அஃலா ஹஜ்ரதின்
 ليغفر لك الله ما تقدم من ذنبك 
வசனத்தின் மொழிப்பெயர்ப்பை பரேல்விய பெரியோர்கள் சூஃபியாக்களின் மொழிப்பெயர்ப்பிற்கு தோதுவாக பொருத்தமாக மொழிப்பெயர்த்துள்ளார்கள்.இதற்கு மாற்றமான கண்ணோட்டத்தை
(ஸயீத் ஸாஹிப்) எடுத்துள்ளார்.அந்த விஷயங்கள் சிந்திப்பவர்களுக்கு முன்பாக உள்ளது.எத்தனையோ நபர்களின் உள்ளங்களில் கவலையை உண்டாக்கிவிட்டது.எத்தனையோ நபர்களின் மனதின் உறுதி குலைந்துவிட்டது.எத்தனையோ மனத்தூய்மையானவர்களை நிம்மதியற்றதாக்கிவிட்டது.
அதுமட்டுமின்றி மார்க்கத்தை விட்டும்  வெறுப்புள்ளதாக்கி விட்டது.
(மஆரிஃபே ரிஜா )



கவனிக்க வேண்டிய விஷயம் பரேல்விய அறிஞர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அஹ்மத் ரிஜாகான் உயர்ந்தவர் என்பதாக கருதுவதாக சுட்டிகாட்டியது தவறில்லை என்பது தெரிகிறது.இது குறித்து சிறிதும்  சந்தேகமில்லை. சந்தேகம் இருக்கத்தான் முடியுமா?

   ஏனெனில் மேலே உள்ள இறுதியான வாசகத்தை கவனியுங்கள் அஹ்மத் ரிஜாகானின் தவறுகளை சுட்டிகாட்டுவதின் காரணமாக மார்க்கத்தை விட்டு வெறுப்புவந்துவிட்டது என்கிறார்.

பரேல்விகள் தங்களின் கட்டுரையில் இதனை தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.
பரேல்விய ஜமாஅத்தை சேர்ந்தவர்களின் ஆலோசனை சபைகளில் அஹ்மத் ரிஜாகானின் கருத்துக்களை குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது.இது குறித்து பாருங்கள் :

   ஸயீத் ஸாஹிபின் பாடசாலையில் எதார்த்தமாக மற்ற உலமாக்களும் இருந்தனர்.இமாம் அஹ்லுஸ்ஸுன்னாவின் கவிஞரின் பேரில் ஆய்வு நடந்தது.அஃலா ஹஜ்ரதின் கவிதை குறித்து
کون دیتا دینے کو منہ چاہئے 
دینے والا ہے سچا ہمارا نبی
(மஆரிஃபே ரிஜா 163)


சந்தேகமும் நிவர்த்தியும்:

குலாம் ரசூல் ஸயீத் அஹ்மத் பரேல்விகளுக்கு எதிரானவரா? பரேல்விய ஜமாஅத்திற்கு தொடர்பில்லையா?

நிவர்த்தி:

குலாம் ரசூல் ஸயீதி அவர்கள் பரேல்விய வழிமுறையைச் சேர்ந்தவர்தான். இதற்கான ஆதாரத்தை  பாருங்கள்!

   குலாம் ரசூல் ஸயீதி ஸாஹிப் மதரஸா தாருல் உலூம் நயீமிய்யா இருந்தார்கள்.அஹ்மத் ரிஜாகானின் மொழிப்பெயர்ப்பை குறித்து  ஒரு (சமயம்) கூறினார்கள்
குர்ஆன் உர்துவில் இறங்கியிருந்தால் இந்த மொழிப்பெயர்ப்பில் அமைந்திருக்கும்.இந்த மொழிப்பெயர்ப்பை இமாம் தஹாவி (ரஹ்) இமாம் ராஜி (ரஹ்)
இமாம் ஷாமி (ரஹ்)
அவர்கள் பார்த்திருந்தால்,
புகழ்ந்து கூறியிருப்பார்கள்.
ஆன்மீக வளர்ச்சியை பெற்றிருப்பார்கள்.ஒழுக்கமிகுந்த மாணவராக அஃலா ஹஜ்ரத்திற்கு முன்பாக பணிந்து பாராட்டியிருப்பார்கள்.இந்த தர்ஜுமாவில் ராஜி (ரஹ்)
அவர்களின் தர்க்கவியல்,
இமாம் கஜ்ஜாலி (ரஹ்)
அவர்களின் ஞானப்பாதை,
ரூமி (ரஹ்) அவர்களின் மெய்நிலை, நுஃமான் (ரஹ்) அவர்களின் மார்க்க ஞானம், ஆலுஸி (ரஹ்)
அவர்களின் ஆழ்ந்தறிவு உள்ளது.
(மஆரிஃபே ரிஜா 157)



வாசகர்களே பாருங்கள்!
ரிஜாகானின் மொழிப்பெயர்ப்பு குறித்து எந்த அளவிற்கு வரம்புமீறி எல்லை கடந்து  வர்ணித்து நமது இஸ்லாமிய சமூகத்தின் பெரும் அறிஞர்களின் மதிப்பை குறைத்துள்ளார். அப்பொழுது கண்டுகொள்ளவில்லை.ஆனால், ரிஜாகான் பரேல்வியின் வசனத்தின்  மொழிப்பெயர்ப்பை தவறு என்பதாக சுட்டிகாட்டும்பொழுது வெகுண்டெழுவது நியாயமா? உண்மையில் பரேல்விகளின் உள்ளங்களில் இருள்படிந்துவிட்டது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live