24 Dec 2017

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பவர்கள் பரேல்விகளே! தொடர் - 6


20) நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்புகிற விதத்தில் ஹராம் ஹலால்களை அருள்வார்கள்.குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றுவார்கள் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரேல்வவிகளின் ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார்கான் குஜராத்தி எழுதியுள்ளார்கள்; 

நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க சட்டங்களில் விரும்பியதை ஹலால் ஆக்குவார்கள்.விரும்பியதை ஹராம் ஆக்குவார்கள்.குர்ஆனின் சட்டங்களை மாற்றுவார்கள்
(ஸல்தனதே முஸ்தஃபா பக்கம்:27)



அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ் பாதுகாப்பானாக!

நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பெரும் அபாண்டத்தையும் பழியையும் சுமத்துகிறார்கள்.நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது விருப்பத்திற்கு ஏற்ப ஷரீஅத்தின் சட்டங்களை மாற்றுவார்கள்.விரும்புகிற விதத்தில் ஹலால் ஆக்குவார்கள்.விரும்பிகிற விதத்தில் ஹராம் ஆக்குவார்கள்.இதில்  அண்ணல் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்குகிறார்கள்! நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை தனது புறத்திலிருந்து சுயமாக உருவாக்கினார்களா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

21) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவிமார்களின் விருப்பத்தின் பேரில் ஹலாலை ஹராமாக்கினார்கள் பரேல்விகள் அண்ணலாரின் மீது பழி (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஹதீஸ் நூல்களில் வருகிற பிரபல்யமான சம்பவம் (கருத்து) அண்ணலார் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியரில் ஒருவரின் வீட்டில் தேன் சாப்பிடுவது வழக்கமாகும்.இதனால்
"ஆயிஷா ரளி அவர்களும் வேறு மனைவியரும், பெருமானார் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்கு வந்தால் வாடை வருவதாக கூறிவிடுவோம்! "என பேசிக்கொண்டார்கள். அதைப் போல் இருவரும் கூறினார்கள்.இதனால்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாடையை வெறுத்தவாறு சப்தமிட்டு கூறினார்கள் "வரும் காலங்களில் தேன் அருந்த மாட்டேன்" இதன் பேரில் அல்லாஹ் வசனத்தை அருளினான்

 يايها النبي لم تحرم ما احل الله لك

 நபியே! அல்லாஹ் உமக்கு ஹலால் ஆக்கியதை ஏன் ஹராமாக்கினீர்?

இந்த வசனமானது பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாஜிர் நாஜிர் மறைவான ஞானம் இல்லை என்பதற்கு உறுதிமிக்க தீர்க்கமான ஆதாரமாகும்.

இதற்கு பதில் என்ற பெயரில் திரிபு செய்து புரட்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அபாண்டத்தையும் இழிவையும் சுமத்துகிறார்.

அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உண்மை தெரியும்.எனினும்,அவர்களது மனைவியர்களின் திருப்தியின் பேரில் தன் மீது ஹராமாக்கி கொண்டார்கள்.
(ஜாஅல் ஹக் பக்கம்:138)




பரேல்விகளின் கொள்கை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேண்டுமென்றே  மனைவிமார்களை திருப்திப்படுத்த அல்லாஹ்விற்கு மாறுபுரிந்தார்கள். இதனின் அர்த்தம் என்ன? உண்மையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹராம் என்பதை அறிந்திருந்தும், தன்னை கண்டித்து வசனத்தை அருள்வான் என்பதை அறிந்திருந்தும், குற்றம் சுமத்திய மனைவிமார்களின் திருப்திக்காக வேண்டுமென்றே ஹலாலை ஹராமாக்கினார்கள்.அல்லாஹ் காப்பாற்றுவானாக!

22) பரேல்விகளின் அபாண்டம் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இன்னிசைக்கச்சேரி நடைபெறும் சபைக்கு வருகை தந்தார்கள் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஒரு மனிதர் கூறினார்:- 

ஒரு பெரியாரின் உருஸ் நடந்தது.நான் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டேன்.எனினும் சபையில் சிறுவர்கள் பெரும்திரள் இருந்தது.ஹஜ்ரத் அக்தஸ் கூறினார்: 'இக்திபாஸுல் அன்வார்' என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.ஷைகு சுந்தா  ரஹ் அவர்களுடன் சான்றோர்கள் ஞானிகள் சபையில் இருந்தனர்.சபையில் இன்னிசைகச்சேரி சூடுபிடித்து இருந்தது.அனைவரின் மீது மெய்நிலை மீது பரவியது.முழு சபையிலும் கடுமையான சப்தமும் கூக்குரலும் எழ ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் ஆசை ஆர்வம் தேட்டம் உத்வேகம் குறைந்தது.சபையில் அமைதி நிலவியது.இதன் பேரில் அனைவரும் திகைப்புற்றனர்.
ஷைக் சுந்தா அவர்களின் பக்கம் முன்னோக்கினர்.
ஷைக்  கூறினார்கள்: இந்த சபையில் ஹஜ்ரத் பெரியோர்களின் பெரியோர் காஜா முயீனுத்தீன் அஜ்மீர்,காஜா குத்புத்தீன் புஹ்தயாரி ரஹ் போன்ற நல்லோர்கள் இருந்தனர்.சபையின் இன்பம் புத்துணர்ச்சி நல்லோர்களின் சகவாசத்தின் பரக்கத்தினால் கிடைத்தது.இப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சபையில் கலந்து கொள்ள வருகை தந்தார்கள்.எனினும் தாடி முளைக்காத  சிறுவர்களை பார்த்து திரும்பி சென்றுவிட்டார்கள்.மேலும் காஜா குதுபுல் அக்தாப் அவர்களும்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேன்மை மிக்க சகவாசத்தின் பேரில் எழுந்து சென்றுவிட்டார்கள்.
(மகாபீஸுல் மஜாலிஸ்)



பரக்கத் நிறைந்த பெருமானார் ஸல்லல்லாஹ அவர்கள் மீது எந்த அளவிற்கு அபாண்டத்தை பரேல்விகள் வீசியுள்ளார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் இன்னிசை கச்சேரி சபையில் கலந்து கொள்ள வருகை புரிந்தார்கள்.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

சிந்தித்துப் பார்க்கட்டும்! 

ஒரு புறம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  எல்லா இடங்களிலும் ஹாஜிர் நாஜிர் என்கிறார்கள்.அணுவளவு விஷயம் தெரியும்.ஆனால்,மற்றொரு புறம் இசை கச்சேரி சபையில் கலந்து கொள்ள வருகிறார்கள்.எனினும், சபையில் தாடி முளைக்காத சிறுவர்கள் இருப்பதை அறியவில்லை.வருகைக்கு பிறகுதான் அறிகிறார்கள்.

பரேல்விகளே கூறுங்கள் இந்த சம்பவம் பொய்யா? இல்லையா? புனையப்பட்டதா இல்லையா?  உண்மையென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹாஜிர்,நாஜிர் இல்லை என்பதை ஏற்கவேண்டும்.

23) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிகராக ஷைகு அப்துல்காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சிறப்பியல்புகள் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரேல்வி சூபி ஜமீலுர் ரஹ்மானின் கவிதை நூல் 'கபாலா பஹ்ஷிஷ்' 
இந்த பரேல்விகளிடத்தில்  பிரபல்யமானது. இதனின் புதிய பதிப்பு லாஹுரில் வெளியிடப்பட்டது.

சூபி ஸாஹிப் எழுதியுள்ளார் :

حسین و حسن کی آنکھوں کا تارا 
وہ خاتم ہیں اور تو نگیں غوث اعظم

வாசகர்களே!
முதலில் பரேல்விகளின் கேடுகெட்ட சிந்தனையை பாருங்கள்!

ஹஜ்ரத் ஷைக் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் சிறப்பியல்புகளை கூறுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவருக்கு சமமாக கொண்டு வந்துள்ளார்கள்.


அநியாயக்காரர்களே!
 இதுதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட நேசமா? பாசமா?
முழு சமுதாயத்தின் ஈமான், அல்லாஹ்வின் பெரும் இறைநேசர் கூட ஸஹாபாக்களில் கீழ்நிலையில் உள்ளவரின் அந்தஸ்தை அடையமுடியாது.அதுமட்டுமின்றி அவர்களின் கால்பாதத்தின் தூசிக்கு சமமாக முடியாது.எனினும், பரேல்விகளை பாருங்கள்! பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிகராக ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை கொண்டு வருகிறார்கள்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்து இவ்வாறு இருந்தால் எங்களின் ஷைகின் அந்தஸ்து இவ்விதமாக இருக்கிறது என்பதை போன்று பரேல்வி ஒப்பிடுகிறார்.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

கேடுகெட்டவர்களின் வாசகத்தைப் பாருங்கள்!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  குறித்து கவிதையில் மோதிரத்தை  கூறப்படுகிறது.ஷைக் (ரஹ்) அவர்கள் குறித்து விலையுயர்ந்த கல் கூறப்படுகிறது.இங்கு خاتم காதம் என்பது இறுதி என்ற அர்த்தத்தில் இல்லை.இதற்கு காரணமானது نگینہ விலையுயர்ந்த கல்  என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது மோதிரத்துடன் சேர்ந்திருக்கும்.இப்பொழுது பாருங்கள் மோதிரத்தின் அழகு அலங்காரம் என்பது அதனின் கல்தான்.விலையுயர்ந்த கல்லின்றி அழகாக பொலிவாக இருக்காது.அதே போன்று பெரியோர்களின் பெரியோர் அப்துல் காதிரி ஜீலானி (ரஹ்) அவர்கள் இன்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் சிறப்போ,அழகோ இல்லை.(அல்லாஹ் பாதுகாப்பானாக!) (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

24) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரேல்விகளிடத்தில் 'மிர்ஜா' வாக இருந்தார்கள்.
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

صورت مرزے یا ردی ساری سورت نور 
و الشمس و الضحی پڑھیا رب غفور 

அடியேன் கேட்டேன்.இதில் மிர்ஜா என்பதின் அர்த்தம் என்ன?
அதற்கு அன்னார் கூறினார்கள்.அல்லாஹ்வின் தூதர் மேற்சொன்ன மூன்று அத்தியாயங்களும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேன்மை குறித்து இறங்கியது.
(மிர்ஆதுல் ஆஷிகீன் 272)



பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்தளவிற்கு இழிவுப்படுத்தியுள்ளார்கள்.மிர்ஜா என்று அழைக்கப்படுவது யார்? என்பதை முழு உலகமும் அறிந்துள்ளது.அதுமட்டுமின்றி மிர்ஜா என்பதாக கூறவில்லை.மாறாக மிர்ஜே இவ்வாறு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும்.

25) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரேல்விகளிடத்தில் گوری
(அழகான பெண்) பழித்துரைத்தல் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

 
  ஒரு தடவை தூன்ஸவி ஷரீபில் ஹஜ்ரதின் வீட்டிற்கு அருகில் சில கிராமப்புற பெண்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்.இது போன்ற வார்த்தைகளை கூறினார்கள்  

گوری نوں دنگا چڑھاوے یار 

இதைக் கேட்டுவிட்டு ஓர்  ஆலிம் கூறினார்.அந்தப் பெண்களுக்கு வெட்கம் இல்லையா? காஜா ஸாஹிப் கூறினார் அவருக்கு அருகில் நான் அமர்ந்திருந்தேன்.நான் கூறினேன் இது வீணான பேச்சில்லை.ஒரு வகையான தரூத் அவர்  எப்படி என்று கேட்டார்? நான் கூறினேன் گوری (அழகான பெண்) என்பதன் அர்த்தம் அல்லாஹ்வின் தூதர் دنگا என்பதின் அர்த்தம் அல்லாஹ்வின் ரஹ்மத் یار என்பதின் அர்த்தம் அல்லாஹ் இதனின் முழுமையான கருத்து யா அல்லாஹ் உனது தூதரின் மீது அருள்புரிவாயாக ஆலிம் ஆச்சரியமுற்று கூறினார் நீங்கள் கூறியது புதியதொரு விளக்கம்
 (மிர்ஆதுல் ஆஷிகீன் பக்கம்:269)



26) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைகள் களங்கத்தை விட்டு தூய்மையானவர்கள் இல்லை (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்தஆலா தேவையற்று இருப்பது,சாராமல் இருப்பது போன்ற மேன்மை மிகுந்த குணத்தின் காரணமாகவும்,படைத்தல் என்ற அந்தஸ்து பரிபாலித்தல் என்ற உயர்வின் காரணமாகவும் படைப்புகளின் குறைகளை (விட்டு) நீங்கி மேன்மையானவன்.
இதில் குறை களங்கம் இருக்க வாய்ப்பில்லை.இதற்கு மாற்றமாக ஜனாப் நுபுவ்வத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .
(இபாரதே அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி ஜாயிஜா பக்கம்:11)



(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இந்த வாக்கியத்தின் இறுதியில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது எந்தளவிற்கு  அவமரியாதையும் களங்கமும், சுமத்தப்படுகிறது.அல்லாஹ் தேவையற்றவன்.இதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.எனினும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு இல்லை.ஏனெனில் அவர்களிடத்தில் குறை களங்கம் ஏற்படும் என்பதாக பரேல்விகள் வாதிக்கின்றனர்.

இப்புவியில் அல்லாஹ்விற்குப் பிறகு முழுமையான,பரிபூரணமான மனிதர் அனைத்து குறைகளை விட்டும் நீங்கி, பரிசுத்தமானவர்   பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.எனினும், கேடுகெட்டவர்களின் கொள்கை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைகள் களங்கம் உள்ளவர்கள் (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live