18 Dec 2017

அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து உதவி தேடலாமா? தொடர்:1

பரேல்விகளின் வாதமும் 
நமது மறுப்பும்:

பரேல்விகள் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து உதவி தேடுதல் கொள்கைக்கு குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லையென்பதால் ஹதீஸ்களில் இல்லாத கருத்தை திணித்து, அல்லது  பலகீனமான ஹதீஸ்களின் மூலம், அல்லது அறிஞர்களின் கருத்தை திரித்து உளறிவருகின்றனர்.

அதபுல் முஃப்ரத்தில் வருகிற அறிவிப்பு :

ஒரு நாள் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களின் கால் மரத்து சோர்வடைந்த போது உங்களின் விருப்பமான ஒருவரின் பெயர் கூறி அழையுங்கள் என கூறப்பட்டது.
உடனே யா முஹம்மதா! (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே எனக்கு உதவுங்கள்!)
என்று உரத்த குரலில் கூவினார்.கால் மறுப்பு உடனே குணமாகிவிட்டது.


இந்த ஹதீஸில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே எனக்கு உதவுங்கள்! 
என்பது அறவே இல்லை.மாறாக பரேல்விகள் இல்லாத வார்த்தையை சேர்த்து இட்டுகட்டியுள்ளனர்.

அடுத்து இந்த அறிவுப்பு ஏற்கத்தக்கதா என்பதை இனி பார்ப்போம்!

இந்த அறிவிப்பு பலகீனமானது.இதில் வரும் அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீயி இவர் பலமானவர் தான்.எனினும்,இருட்டடிப்பு செய்பவர், முதல்லிஸ் (மனனத் தன்மையில் தடுமாற்றம் உள்ளவர்) .


இவரைக் குறித்து விரிவான விஷயங்களை அறிய இந்த லிங்கை பார்க்கவும்!

http://library.islamweb.net/newlibrary/display_book.php?ID=889&bk_no=60&flag=1

அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து உதவிதேடுவது கொள்கையில் உள்ளது.இதற்கு வலுவான உறுதிமிக்க ஆதாரங்கள் தேவை.

அது மட்டுமின்றி கொள்கைகளை பொறுத்தவரையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மட்டும் போதுமாகாது.இது குறித்து விரிவான ஆய்வுகளை இன்ஷா அல்லாஹ் தனியானதொரு தொடரில் பார்ப்போம்!

பரேல்விகளின் நிலைப்பாடு 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெயர் கூறி அழைப்பது ஹராமாகும்.

பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெயர் கூறி அழைப்பது நம்மிடத்திலும் கூடாது.
(ரூஹோ கி துன்யா பக்கம்:245)





அஹ்மத் யார்கான் நயீமி எழுதியுள்ளார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யா முஹம்மத் , யா அஹ்மத் என பெயர் கூறி அழைப்பது ஹராமாகும்.
(ஷஃனே ஹபீபுர் ரஹ்மான் பக்கம்:147)


அஹ்மத் யார்கான் நயீமி 'ஜாஅல் ஹக்' என்ற நூலின் 173 ம் பக்கத்தில்
யா முஹம்மத் என்று அழைப்பது கூடாது என எழுதியுள்ளார்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை உம்மத்தும் யா முஹம்மத் என்பதாக அழைப்பது தடுக்கப்பட்டுள்ளது.
(கவ்ஸருல் ஹைராத், பக்கம்:392)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யா முஹம்மத் அழைப்பது அனுமதியில்லை.
(ஃபதாவா பரேல்வி ஷரீஃப் பக்கம்:134)


அஹ்மத் ரிஜாகான் பரேல்வி எழுதியுள்ளார்: 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை
யா முஹம்மத் அழைப்பது  ஒழுக்ககேடாகும்.
(தஜல்லில் யகீன், பக்கம்:36)


எனவே இந்த அறிவிப்பில்  பரேல்விகளுக்கும் அறவே ஆதாரமில்லை.ஏனெனில் அவர்களின் நிலைப்பாட்டின் படி இப்னு உமர் ரளி அவர்கள் தவறான செயலை செய்துள்ளார்கள் என்பதாகிவிடும்.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஆக இந்த ஹதீஸை முன்வைத்து அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து உதவி தேடுவது கூடாது என்பதற்கு நாம் அளித்த மறுப்பே போதுமானது.எனினும்,இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இது குறித்து அதிகப்படியான விளக்கங்களை பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live