28 Apr 2017

அமல்களின் சிறப்பில் பரேலவிகளின் மறுப்பிற்க்கு நமது மறுப்பு.

தேவ்பந்த் பெரியோர்கள் தங்களை குறித்து வஹ்ஹாபிகள் என்று கூறியதன் கருத்து
என்ன பரேல்விகளின் திரிபு என்ன என்பதை குறித்து நமது தளத்தில் விரிவான ஆய்வை
பார்க்கவும்.

http://ummathemuhammedhiya.blogspot.in/2016/03/17_20.html?m=1

http://ummathemuhammedhiya.blogspot.in/2017/02/blog-post.html?m=1

காசு கொடுத்து தப்லீகிற்கு இழுக்கிறார்கள் என்பதாக அபாண்டத்தை
சுமத்துகிறார்.அல்லாஹ்வின் கிருபையால் எதிரிகள் தடுத்தாலும் வளர்ந்து
கொண்டுதான் செல்லும்.நபி ஸல் அவர்களின் நேசம் என்ற பெயரில் மெளலீத் ஓதி காசை
கறக்கும் பரேல்விகளுக்கு இது பழக்கமாக இருக்கலாம்.நம்மின் மீது குற்றம்
சுமத்தும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் கற்பனைக்குள் செல்ல போவதில்லை.

தப்லீக் வேலை செய்பவர்களுக்கு நபிமார்களின் அந்தஸ்து உண்டு என்பதற்கு தினகரன்
பத்திரிக்கையில் வந்த செய்தியை ஆதாரமாக எடுத்து போட்டுள்ளார். இது நமக்கு
எதிரான ஆதாரமில்லை.மாறாக தப்லீக் அமீர் அவர்கள் சொன்னதை  ஆடியோ அல்லது
நூலிலிருந்து எடுத்து போடுங்கள் பிறகு இதனை குறித்து பார்ப்போம்

நபி ஸல் அவர்களுக்கு உர்து கற்றுக்கொடுத்தார்கள் என்கிற குற்றச்சாட்டை போகிற
போக்கில் அள்ளிவீசுகிறார்.இது குறித்து விரிவான பதிலை நமது தளத்தின் இந்த
லிங்கில் பார்வையிடவும்.

http://ummathemuhammedhiya.blogspot.in/2016/01/2.html?m=1

மெளலானா இல்யாஸ் ரஹ் அவர்களின் வாசகத்தில் செய்கிற புரட்டையும் ஹள்ரத் மெளலானா
ஸஃது தாமத் பரகாதுஹும் அவர்களின் மீதுள்ள விமர்சனத்திற்கு உள்ள மறுப்பையும்
இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்!

அடுத்து அசலான மறுப்பிற்கு வருவோம் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி சமாளிக்க முடிந்த
உதாரணத்திற்கு மட்டும் மறுப்பு என்ற பெயரில் உளறியுள்ளார்.மீதி உதாரணங்களுக்கு
பதில் சொல்லாமல் நழுவிச் சென்று விட்டார்.இதில் நாம் பதில் என்ற வகையில்
உளறுவதாக குற்றம் சுமத்துகிறார்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி பதிலளிக்காத உதாரணங்கள் வஹியை பெருமானார் ஸல் அவர்கள்
மணியோசையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார் நபி ஸல் அவர்களை தடியுடன் ஒப்பிட்டு
கூறியுள்ளார் மிர்ஆதுல் ஆஷிகினில் வருகிற வாசகம் உள்ளத்தில் கவனமின்றி
தொழுதால் தொழுகை பயனளிக்காது வீண் அசைவாகும்.இதற்கு பதில் சொல்லவில்லை.


நபிமார்கள் நல்லோர்கள் உலமாக்களை எருமை மற்றும் பாலுடன் ஒப்பிட்டுக்
கூறியுள்ளார்.இதற்கு பதில் சொல்லவில்லை.



சூபித்துவம் என்பது நெஞ்சுவலியை
போன்றது.உண்மையான சீடரின் உள்ளமானது கர்ப்பை போன்றது உண்மையான ஷைகின்
உள்ளமானது விந்துத்துளி போன்றது. இதற்கெல்லாம் பதில் அளிக்கவில்லை.


பதில்
அளித்தால் சிக்கிகொள்வோம் என பயந்து நழுவி சென்றுள்ளார்.

கோழிகொத்துவதை தொழுகைக்கு ஒப்பிட்டு கூறலாமா என்பதாக நாம் கேட்ட வாதத்திற்கு
பரேல்வி ஜவ்வாத் ரப்பானி நபி ஸல் அவர்கள் ஒப்பிட்டு
கூறியுள்ளார்கள். நாம் வேறு விஷயத்தில் ஒப்பிட்டு விடக்கூடாது என்பதாக
உளறியுள்ளார் .

நமது மறுப்பு :

ஜவ்வாத் ரப்பானி பரேல்வி அவர்கள் நபி ஸல் அவர்கள்
ஒப்பிடுவதுடன் மட்டும்தான் ஒப்பிடவேண்டும் என்பதாக புதிய விதியை
அறிமுகப்படுத்தியுள்ளார்
பரேல்வி அறிஞர் நபி ஸல் அவர்களை தடியுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார் இவ்வாறு நபி
ஸல் அவர்கள் தன்னை குறித்து தடியுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்களா இறைஞானப் பாதை
நெஞ்சுவலி போன்றது என்பதாக கஷ்புல் மஹ்ஜுபில் வந்துள்ளது.

நபி ஸல் அவர்கள்
இவ்வாறு ஒப்பிட்டு கூறியுள்ளார்களா நபி ஸல் அவர்கள் மற்றும் நபிமார்கள்
உலமாக்களை எருமை மாடு மற்றும் பாலுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்கள் .

நபி ஸல்
அவர்கள் இவ்வாறு ஒப்பிட்டு கூறியுள்ளார்களா சீடரின் உள்ளமானது கர்ப்பை போன்றது
ஷைகின் உள்ளமானது விந்துத்துளி போன்றது இவ்வாறு நபி ஸல் அவர்கள் ஒப்பிட்டு
கூறியுள்ளார்களா?

 பரேல்வி அறிஞர் வேம்புடன் பெருமானாரை ஒப்பிட்டு கூறியுள்ளார்
இவ்வாறு நபி ஸல் அவர்கள் ஒப்பிட்டு கூறியுள்ளார்களா உள்ளத்தில் கவனமின்றி
தொழுதால் தொழுகை பயனளிக்காது வீண் அசைவு இவ்வாறு நபி ஸல் அவர்கள்
கூறியுள்ளார்களா ?

நபியின் பேச்சை சீறிப்பாயும் தோட்டாவுடன் ஒப்பிட்டு
கூறப்பட்டுள்ளது.நபி ஸல் அவர்கள் தனது பேச்சை சீறிப்பாயும் தோட்டவுடன்
ஒப்பிட்டு கூறினார்களா?


அடுத்து அவாரிபுல் மஆரிஃபில் உள்ள வாசகத்திற்கு பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின்
அறியாமை நிறைந்த வாதம்  கரீபுத்தஃப்ஸீர்  சரியில்லாத உதாரணம் என்பதாக
உள்ளது.இதனை இருட்டடிப்பு செய்துள்ளனர் .



நமது மறுப்பு :

கரீபுத்தப்ஸீர் எதனை
குறித்து பெரியோர் கூறியுள்ளார் ?என்பதை விளக்கவேண்டும் அடுத்து கரீப்
என்பதற்கு சரியில்லை என்கிற அர்தத்தை அகராதியிலிருந்து காட்ட வேண்டும்.

அவாரிஃபுல் மஆரிஃபில் வருகிற வாசகமும் அதில் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி
தப்பித்து கொள்வதற்கு செய்யும் தந்திரமும் நமது விளக்கமும் மது போதையில்
மயக்கமடைந்தவனும் சிந்தனையின்றி தொழுபவனும் ஒன்றுதான் என்ற ஒப்பீட்டை கூறிய
பிறகு வருகிற வாசகம் .

اور غریب التفسیر میں اللہ تعالی کے اس ارشادکی فاخلع
نعلیک انک بالواد المقدس طوی یہ توضیح کی گئی ہے کہ 

அரிதான தப்ஸீரில்
அல்லாஹ்தஆலாவின் இந்த கூற்றிற்கு இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அது
என்னவெனில்..... சம்பந்தமில்லாத ஒன்றை மற்றொன்றுடன் முடிச்சுப்போட்டுள்ளார்
பரேல்வி ஜவ்வாத் ரப்பானி ஒரு வாதத்திற்கு கரீப் என்பதற்கு சரியில்லாத பொருள்
இருந்தால் غریب المثال சரியில்லாத உதாரணம் என கூறியிருப்பார்கள்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி பதில் அளித்த உதாரணத்தின் இலட்சணத்தை இனி பார்ப்போம்.....


நபி ஸல் அவர்களின் பேச்சானது துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டாவை போன்றது
என்று ஒப்பிட்டு கூறியிருப்பதை காட்டினோம் ஜவ்வாத் பரேல்வியின் பதில்
துப்பாக்கியிலிருந்து தோட்ட பாயுவதை போன்று நபியின் பேச்சு உள்ளத்தில் ஊடுருவி
தாக்கத்தை ஏற்படுத்தும்.

 நமது மறுப்பு :

உதாரணத்திற்குரிய விளக்கத்தை நாம்
கேட்கவில்லை.பெரிதாக நீட்டி முழங்கியுள்ளார்.நமது கேள்வியென்ன நபியின் பேச்சை
துப்பாக்கியின் தோட்டாவிற்கு ஒப்பிட்டு கூறலாமா நபியின் பேச்சும் துப்பாக்கி
தோட்டாவும் ஒன்றா துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டா சில சமயங்களில் குறி
தவறிவிடும் நபியின் பேச்சு சில சமயங்களில்?.....அல்லாஹ் பாதுகாப்பானாக.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் பதில்:

நபிமார்கள் தங்களை குறித்து அநியாயக்காரர் வழிகேடர் என்பதாக
கூறியுள்ளார்கள்.இதனை நாம் கூறுவது கூடாது இதைப் போன்றுதான் நபிமார்கள் தங்களை
குறித்து மனிதர் என்பதும்.அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைதான் நாம் எடுத்து
சொல்லியுள்ளோம் .

நமது மறுப்பு:

 நபிமார்கள் தங்களை அநியாக்காரர் என்று கூறியது
தனி செய்தி நபிமார்கள் தங்களை மனிதர் என்பதாக கூறுவது தனி செய்தி பரேல்வி
ஜவ்வாத் ரப்பானியின் புதிய விதியின் படி நபி ஸல் அவர்கள் ஒப்பிடுவதுடன்
மட்டும்தான் ஒப்பிடவேண்டும் எனவே நபிமார்களை  அநியாயக்காரர்கள் என்பதாக
கூறுவது தடுக்கப்பட்டது போன்று மனிதர்கள் என்பதாக கூறுவதும்
தடுக்கப்பட்டுள்ளது என்று பரேல்விய அறிஞர்  ஒப்பிடுவதை போன்று  நபி ஸல்
அவர்கள் ஒப்பீடு செய்வதை எடுத்து காட்டட்டும்!

அடுத்து நபிமார்கள் தங்களை குறித்து அநியாயக்காரர் என்பதாக
கூறியுள்ளார்கள்.இதனை நாம் கூறக்கூடாது சரி.ஏனெனில் அநியாயம் என்பது கெட்ட
குணம் இதனை நபிமார்களுடன் சேர்க்க கூடாது. மனிதத்தன்மையை அநியாயம் மற்றும்
வழிகேட்டுடன் ஒப்பிடலாமா அனைத்தும் ஒன்றா மனிதத்தன்மையின்  வேறு அநியாயம்
வழிகேடு என்பது வேறு மனிதத்தன்மையை குறித்து அல்லாஹ் ரசூல் ஸல் அவர்கள்
சிறப்பித்துள்ளார்கள் அநியாயம் வழிகேடு சிறப்பித்துகூறப்பட்டுள்ளதா சிறந்ததை
கெட்டதுடன் ஒப்பிட்டு கூறுவது அவமரியாதையா இல்லையா?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live