16 Mar 2017

அஹமது ரிழா கான் பரேலவி நபி (ஸல்) அவர்களுக்கு தொழ வைத்தார்களா ஜவ்வாது ஹுஸைன் பரேலவிக்கு மறுப்பு.

தமிழக பரேல்வி ஜவ்வாது ரப்பானி மற்றும் அவரின் வழிகாட்டிகளின்   மறுப்பிற்கு
மறுப்பு:

ஜவ்வாது ஹுஸைன் ரப்பானி என்ற பரேலவியின் ஆடியோ இதில் உள்ளது ..



அஹமது ரிழா பரேலவி நபி ﷺ அவர்களுக்கு இமாமாக தொழவைத்த நிகள்வு நவூதுபில்லாஹ்..  இதை இங்கு கான்க ..


தமிழக பரேல்வி ஜவ்வாது ரப்பானி மற்றும் அவரின் வழிகாட்டிகளின்   மறுப்பிற்கு
மறுப்பு:

நபி (ஸல்) அவர்களுக்கு அஹ்மத் ரிளாகான் தொழவைத்தார்.
என்பதாக நாம் கூறியதற்கு மறுப்பு அளிக்க புகுந்த ஜவ்வாத் ரப்பானியின்
வாதத்திற்கு நமது பதில் மறுப்பை பார்ப்போம்!

மல்பூஜாத்தில் வரும் நிகழ்விற்கு மாற்று விளக்கம் என்ற பெயரில்  பரேல்விய
அறிஞர்களின் (ஜவ்வாத் ரப்பானி உட்பட) பொய்,திரிபு,புரட்டல் செய்கின்றனர்.
அஹ்மத் ரிளாகானின் மல்பூஜாதில் இறுதியில் வரும் வாசகம்.

   الحمد للہ یہ جنازہ
میں نے پڑھایے

அல்ஹம்துலில்லாஹ்!
இந்த ஜனாஸாவிற்கு நான்தான் தொழவைத்தேன்.

 இதன் மூலம் அஹ்மத் ரிளாகான்
ஜனாஸாவிற்கு தொழவைத்துள்ளார்.தொழுவதற்கு அண்ணலாரும் வந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் அனுமதியின்றி எவரும் தொழவைக்க அனுமதியில்லை.
ஆனால் ரிளாகான் பரேல்விக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. (அல்லாஹ்
பாதுகாப்பானாக!)

பரேல்வி அஹ்மத் ரிளாகானின் இந்த கூற்றிலே அண்ணலாருக்கு  அவமரியாதை களங்கம்
இருப்பதை ஈமானுள்ள எவரும் மறுக்கமுடியாது.

வாதமும் நமது மறுப்பும்:

நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது வேறு எவரும் தொழவைக்க கூடாதா? பாவமா?
அப்துர் ரஹ்மான் அவ்ஃப் (ரளி) அபூபக்கர் (ரளி) இருவரும் தொழவைத்துள்ளார்களே
என்பதாக பரேல்வி ஜவ்வாத் வாதம் வைத்துள்ளார்.இதையேதான் குலாம் நஸீருத்தீன்
ஸய்யாலவி பரேல்வி அறிஞரும் கூறுகிறார்.

நமது பதில்:

இதற்கு நாம் பதில் அளிப்பதை விட பரேல்விகளின் நூலிலிருந்து பதில் அளிப்பது
பொருத்தமானது.

பரேல்விகளின் ஹகீமுல் உம்மத் யார் கான் கூறுகிறார்:

 இதன் மூலம் அறிய
முடிகிறது.நபி ஸல் அவர்கள் முன்னிலையில் எவருக்கும் தொழவைப்பதற்கு
அனுமதியில்லை. (شان حبیب الرحمان)

மேலும் ஹகீமுல் உம்மத் யார் கான் கூறுகிறார்: 

நபி (ஸல்) அவர்களின் அனுமதியின்
பேரில் இமாமத் செய்ய முடியும். உ.ம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளி
அனுமதியளித்து தொழவைத்தது போன்றாகும்.
(شان حبیب الرحمان)



நபி ஸல் அவர்களின் முன்னிலையில் அண்ணலாரின் அனுமதியின் பேரில்தான் தொழவைக்க
முடியும்.ஆனால் ரிளாகான் பரேல்வி அண்ணலாரின் அனுமதியின்றி தொழவைத்துள்ளார்.

அடுத்து சில பரேல்விகள் (ஜவ்வாது ரப்பானி) உட்பட அண்ணலாருக்கு ரிளாகான்
ஏற்படுத்திய அவமரியாதை உணர்ந்தும் கூட அதனை மறைப்பதற்கு அப்பட்டமாக பொய்
பேசுகின்றனர்.திரித்தலில் ஈடுபடுகின்றனர்.

பரேல்வி கவ்கப் நூரானி என்பவர் கூறுகிறார்: 

இந்த கருத்தை எப்படி எடுத்தீர்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினார்கள் அல்லது அஃலா ஹள்ரத்
அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு தொழவைத்தார்கள்.
இது அஃலா ஹள்ரதின் மீது சந்தேகமின்றி இட்டுகட்டுதலாகும். கனவு மற்றும் அஃலா
ஹள்ரதின் சம்பவத்தின் எதார்த்தம் என்னவெனில் நபி (ஸல்) அவர்கள் உண்மையான
நேசரின் மரணத்தின் பேரில் அண்ணலார் அவரின் மீது உள்ள பிரியும் கண்ணியத்தின்
காரணமாக வருகை தந்துள்ளார்கள்.உண்மையான நேசரின் ஜனாஸாவை பார்வையிட்டுள்ளார்கள்
(سفید و سیاہ)



பரேல்விகளின் (ஜவ்வாத் ரப்பானி உட்பட) இந்த வாதம் தான் பொய்யும்
புரட்டுமாகும்.நாம் ரிளாகான் மீது பொய் கூறவில்லை.திரிக்கவில்லை. உண்மையில்
இந்த செயலை செய்தவர்கள் பரேல்விகள்தான்.
நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழவில்லை மாறாக பார்வையிட்டுள்ளார்கள்.

அஃலா ஹள்ரதின் தெளிவான வாசகத்தை பாருங்கள்: 

فرمایا برکات احمد کے جنازہ کی
نماز پڑھنے

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 பரகாத் அஹ்மதின் ஜனாஸா தொழுவதற்கு.

இந்தளவிற்கு தெளிவாக இருக்கும் போது ரிளாகான் பரேல்வியை காப்பதற்கு அப்பட்டமாக
பொய்யுரைப்பது யார்? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்!

அடுத்து

  பரேல்வி வழிமுறையைச் சேர்ந்த ஹஸன் அலி ரிஜவி அஃலா ஹள்ரத்தை காப்பதற்கு
செய்யும் திரிபு:

வாக்கியத்தின் சரியான கருத்தானது ஈருலக தலைவர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு
தொழவைத்தார்கள்.நான் மக்களுக்கு தொழவைத்தேன்
(برق آسمانی بر فتنہ شیطانی)



நபி (ஸல்)அவர்கள் அஃலா ஹள்ரதிற்கு தொழவைத்துள்ளார்கள் அஹ்மத் ரிளாகான்
மற்றவர்களுக்கு தொழவைத்துள்ளார்கள்.
இந்த வாதமானது முற்றிலும் பொருந்தாது.பாரதூரமானது.

நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் இமாமாக நிற்பது அதனை வாதிடுவது தவறு
அவமரியாதை என்பதினால்தான் இவ்வாறு திரித்து கூறுகின்றனர்.

ஹஸன் அலி ரிஜ்வி பரேல்வியின் இந்த கருத்திற்கு குலாம் நஸீருத்தீன்
ஸய்யாலவியின் மறுப்பு:

நபி (ஸல்)
அவர்களின் மீது தொழுகை இப்பொழுது பர்ளு இல்லை.நபிலாகும்.ஹனஃபி மத்ஹபிலே பர்ளு
தொழுபவர் நபில் தொழுபவருக்கு பின்னால் தொழமுடியாது
(عبارات اکابر کا تحقیقی و  تنقیذی جائزہ )

அண்ணலார் ரிளாகானுக்கு பின்னால் நின்றுதான் தொழுதுள்ளார்கள் என்பதை பரேல்வி
குலாம் நஸீருத்தீன் ஸய்யாலவி பரேல்வியின் வாசகம் நிரூபிக்கிறது.மேலும் இதனை
உறுதிப்படுத்துகிறார்.

அஃலா ஹள்ரத் அவர்களுக்கு முதலில் பெருமானார் கலந்து கொண்டது தெரியவில்லை.பிறகு
அறிந்த பொழுது அண்ணலார் தனக்கு பின்னால் தொழுததற்கு நன்றி செலுத்துகிறேன்
என்றார்கள்.
 (عبارات اکابر کا
تحقیقی و  تنقیذی جائزہ )

ஆக ரிளாகான் இமாமாக நின்றுள்ளார் அண்ணலார் முக்ததியாக நின்றுள்ளார் என்பதாக
நாம் சொல்வது பொய்யா? நாம் சொல்வது பொய் என்றால் குலாம் நஸீருத்தீன் ஸய்யாலவி
அவர்களையும் பொய்யர் என்பதாக சொல்லுங்கள்!

ஒரு வாதத்திற்கு அல்ஹம்துலில்லாஹ் என்று ரிளாகான்பரலேவி கூறியது, அல்லாஹ்வின்
அருட்கொடை என்பதை எண்ணித்தான் என ஏற்றுக்கொண்டாலும், பரலேவிகளின்  மோசடியும்
புரட்டுதலும் வெளிப்படுகிறது. ஏனெனில் மல்பூஜாதின் இரண்டாவது பாகத்தின் புதிய
பதிப்பில் அல்ஹம்துலில்லாஹ் என்கிறவாசகத்தை அமைதியாக எடுத்துவிட்டனர்.ஆக இதன்
மூலம் பரலேவிகள்,  அண்ணலாருக்குஎதிரானவர்கள் என்பதும் மார்க்க விவகாரங்களில்
மோசடிக்கும்,புரட்டுதலுக்கும் சொந்தக்காரர்கள் என்பதும் தெளிந்த நீரோடையைப்
போல் விளங்கமுடிகிறது.



வாசகத்தை நீக்குவது குறித்து பரேல்விகளின் நிலைப்பாடு:

தேவ்பந்த் வஹ்ஹாபிகள் தங்களின் பெரியோர்களின் நூல்களில் உள்ள அவமரியாதையான
வாக்கியங்களை திரிக்கின்றனர்.நீக்கிவிடுகின்றனர்.
இவர்கள் தங்களின் பெரியோர்களின் நூல்களிலிருந்து வாக்கியங்களை மாற்றுவதன்
மூலம் உறுதியாக அவர்களிடத்திலும் அந்த வாக்கியங்கள் அவமரியாதையும்
இறைநிராகரிப்புமாகும் என்பதைதான் இவர்களின் செயல்கள் நிரூபிக்கிறது.அந்த
வாக்கியங்கள் இறைநிராகரிப்பு அவமரியாதை இல்லையெனில் பிறகு அந்த வாக்கியங்களை
நீக்கும் திரிபு செய்யும் தேவை ஏன் ஏற்பட்டது?
(اکابر دیوبند کا تکفیر کا افسانہ)



லாஹுரில் ஸியானதுல் முஸ்லிமீன் மற்றும் இர்ஷாதுல் முஸ்லிமின் பெயரில்
சங்கங்கள் உள்ளது.அந்த நிறுவனத்தினர் இந்த மோசடி செய்கின்றனர்.அவர்களது
பெரியோர்களின் குஃப்ரான வாசகங்களில் மாற்றம் செய்ய
ஆரம்பித்துவிட்டனர்.வருங்கால சந்ததியினர் பழைய நூல்களில் உள்ள குஃப்ரான
வாசகங்கள் அறியக்கூடாது என்பதினாலாகும்.புதிய பதிப்புகள் இதனை தான்
உறுதிப்படுத்துகிறது.எதார்தத்தை பொய்யாக்குவது,குஃப்ரை ஈமானாக காட்டுவது
மற்றொரு பாவமாகும்.இவர்களின் செயல்களின் மூலம் இதனைதான் அறிய முடிகிறது.இன்றைய
தேவ்பந்த் உலமாக்களிடத்திலும் இந்த  குப்ரான வாசகங்கள் உறுதியாக
குஃப்ராகும்.அவ்வாறு இல்லையெனில் அவைகளை மாற்றும் தேவை ஏன் ஏற்பட்டது? (سفید و
سیاہ )




ஆக, பரேல்விகள் கூறுவதன் சுருக்கம் இறைநிராகரிப்பு  அவமரியாதை இருப்பதால் தான்
வாசகம் நீக்கப்படுகிறது என்பதாக வாதிடுகிறார்கள். மல்பூஜாத்தில் வரும்
வாசகத்தின் மூலம் அண்ணலாருக்கு  அவமரியாதை ஏற்படுத்துகிறது.இதனால் தான் அதனை நீக்கிவிட்டனர்.அவ்வாறு அவமரியாதை இல்லையெனில் பிறகு ஏன் அதனை நீக்க வேண்டும்?
என பரேல்விகளின் வாதத்தை முன்வைத்து மறுப்பளிக்கிறோம்.

ஆக இந்த சம்பவத்தை குறித்து பரேல்விகளுக்கு மத்தியில் எத்தனை முரண்பாடுகள்:

(1) நபி (ஸல்) அவர்களுக்கு எவரேனும் இமாமத் செய்வது தவறு இல்லை என பரேல்வி
கூறுகிறார்.மற்றொரு பரேல்வி தவறு என்கிறார்.

(2) அபூபக்கர் (ரளி) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரளி) அவர்கள் நபி
ஸல் அவர்களுக்கு தொழவைத்தார்கள் என பரலேவிகள் வாதிடுகின்றனர். மற்றொரு பரேல்வி
ஸஹாபாக்கள் தொழவைத்த நிகழ்வு அண்ணலாரின் அனுமதியின் பேரில் என
மறுப்பளிக்கிறார்.

(3) நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் கலந்து கொண்டார்கள்.தொழவில்லை என பரேல்வி
கூறுகிறார். மற்றொரு பரேல்வி, அஹ்மத் ரிளாகானுக்கு பின்னால் நபி (ஸல்) அவர்கள்
தொழுததை ஏற்றுக்கொள்கிறார்.

(4)நபி (ஸல்) அவர்கள் ரிளாகானுக்கு தொழவைத்தார்கள். ரிளாகான் மக்களுக்கு
தொழவைத்தார்
என பரேல்வி பாரதூரமான கருத்தை முன்வைக்கிறார். மற்றொரு பரேல்வி நபி (ஸல்)
அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நபிலாகும்.ரிளாகான் பரேல்விக்கு பர்ளாகும்.
எனவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி ரிளாகான் தொழுதிருக்க முடியாது என
மறுப்பளிக்கிறார்.

(5) நபி (ஸல்) அவர்களுக்கு தொழ வைத்ததை ரிளாகான் பரேல்வி அறியவில்லை. பிறகு
தெரிந்து அல்ஹம்தும்துலில்லாஹ் என்று கூறி நன்றி செலுத்துகிறார் என பரேல்வி
முட்டுகொடுக்கிறார்.ஆனால்   பரேல்விகளே இந்த வாதங்களை  ஏற்க முடியாமல்
அல்ஹம்துலில்லாஹ் என்ற  வாசகத்தை அகற்றிவிட்டனர்.

முக்கிய குறிப்பு: 

நமது பெரியோர்களின் இரு நிகழ்வுகளை நமக்கு எதிராக
முன்வைக்கின்றனர்.இதற்குரிய பதில்கள் அந்த சம்பவங்களிலேயே உள்ளது.எனினும்
அறிந்து அறியாததைப் போன்று நடிக்கும் பரேல்விகளுக்கும்,
நடுநிலையானவர்களுக்கும்
இன்ஷா அல்லாஹ் விரைவில் பதில் அளிக்கிறோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live